வாணி போஜன்

சீனியர் க்ரஷ் லிஸ்ட் நடிகை.. வாணி போஜன் எங்க மிஸ் பண்றாங்க?

வாணி போஜன் – சின்ன வயசுல இருந்தே ஏர்லைன்ஸ்ல வேலைக்கு போகணும்னு நினைச்சு, அங்கயும் வேலைக்கு போய், அதுக்கப்புறம் மாடலிங், டெலிவிஷன், சினிமா, வெப் சீரிஸ்னு கலக்கிட்டிருக்காங்க. இன்னைக்கு கேரெக்டர் ரோல் பண்ணனும்னாலும், ஹீரோயினா பண்ணணும்னாலும் 100 சதவிகிதம் செட் ஆக கூடியவங்க. இன்னைக்கு அதிகமான இயக்குநர்களோட சாய்ஸூம் வாணிபோஜனாவே இருக்கு. ஆனா கடந்த 10 வருஷத்துக்கும் மேல பீல்டுல இருந்தாலும், நிலையான இடம் இன்னும் கிடைக்கலை. அதுக்குக் காரணம் என்ன? வணிபோஜனுக்கு  இருக்கிற ப்ளஸ் என்ன… மைனஸ் என்ன அப்படிங்குறதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

வாணி போஜன்

ப்ளஸ்!

வாணிபோஜனைப் பொறுத்தவரைக்கும் எந்த கேரெக்டருக்கும் செட் ஆக கூடியவங்க. குடும்பப் பாங்கான கேரெக்டர்லயும் நடிக்க முடியும், கவர்ச்சியான கேரெக்டர்லயும் நடிக்க முடியும். ஒரு கேரெக்டர் என்ன டிமாண்ட் பண்ணுதோ அந்த கதாபாத்திரத்துக்கு ஏத்த நடிப்பையும் வாணி போஜன் கொடுப்பாங்க. போல்டான கதாநாயகியாவும் வாணிபோஜன் நடிக்க முடியும். அதுக்கான சரியான உதாரணம், தெய்வமகள் சீரியல்ல நடிச்ச சத்யாங்குற கேரெக்டர். அதுக்கப்புறம் அதுமாதிரியான கேரெக்டர்கள் இன்னும் இவங்களுக்கு கிடைக்கலைனே சொல்லலாம். டான்ஸ், நடிப்புனு ஆல் ஏரியாவுலயும் வாணிபோஜன் கில்லிதான். அதேபோல கதை செலக்ட் பண்றதுலயும் ரொம்பவே கவனமா இருக்காங்க. ஆனா தேர்வு செய்ற கதைகள் ஸ்கிரீன்ல வரும்போது எங்கயோ மிஸ் ஆகுது. ஆனாலும், அவங்களுக்கு செமயா அமைஞ்ச படம், ஓ மை கடவுளே. மீரா சின்ன கேரக்டர்தான். மாலாக்கா மாதிரி பலரோட மனசுலயும் பதிஞ்ச கேரக்டர். கதை சொல்ல போற சீன்லாம் செம. போயும் போயும் பொண்ணா இருந்தாலும் பரவால்லனு சான்ஸ் கொடுத்தானு சொல்லும்போதே போயும் போயும் பொண்ணானு ஒரு ஆட்டிடியூட் காட்டுவாங்க பாருங்க. மாஸ். அப்படியே கட் பண்ணா.. நீ எப்படி இந்த இன்டஸ்ட்ரீல படம் பண்றனு பார்க்கலாம்னு சவால் விட்டதும்.. திரும்பி மிடில் ஃபிங்கர காமிப்பாங்கல்ல.. இன்னும் மாஸ். இவ்வளவு போல்டா காமிப்பாங்க. அந்த சீன்லயும் விழுந்துருவோம். ஆனால், அதையும் தூக்கி சாப்பிடுற மாதிரி அடுத்து பாட்டு ஒண்ணு வரும். அந்தப் பாட்டுல வர்ற வரிகள் போலதான்.. ஹையோ ஹையோ கொல்லுறாளே!

Also Read – “இதெல்லாம் யோசிக்கவே முடியாத காம்போ…” – கோக் ஸ்டுடியோ ஸ்டோரீஸ்!

மலேசியா டு அம்னீஷியால கிராமத்துல இருந்து வந்து கணவனே கண்கண்ட தெய்வம்னு வாழ்ற கேரக்டர்ல வாணி போஜன் நடிச்சு அசத்தியிருப்பாங்க. ரெண்டு கேரக்டருமே, அப்படியே ஆப்போசிட்டா இருக்கும். என்னால சிட்டி கேர்ள் கேரக்டர்ல போல்டாவும் நடிக்க முடியும் கிராமத்துல இருந்து வந்த் பொண்ணு கேரக்டர்ல நடிச்சு உங்கள நம்ப வைக்கவும் முடியும்னு நடிப்புலயே சொல்லியிருப்பாங்க. ஆனால், அதுக்கப்புறம் நிறைய பேர் செங்களம் பத்திதான் பேசுறாங்க. அதுலயும் அவங்க கேரக்டர் ஒண்ணும் அவ்வளவு சிறப்பா இல்லை. சினிமாவைப் பொறுத்தவரை இன்னைக்கு கியாரண்டி நாயகிகள் லிஸ்ட்ல இருந்தாலும், நட்சத்திர நாயகிக்கான எல்லா தகுதிகளும் இவங்களுக்கு இருக்கு. நல்ல கதை அமைஞ்சா நிச்சயமா சினிமாவுல வாணிபோஜனுக்கு ஒரு பிரேக் கிடைக்கும். அது மாதிரி கதைகள் இன்னும் இவங்களுக்கு அமையலை. வாணிபோஜனுக்கு அளவான நடிப்பு அதாவது மீட்டர் பிடிச்சு நடிக்க தெரியும், மிகை நடிப்பு எப்பவுமே வாணிபோஜன்கிட்ட இருக்காது. அதே மாதிரி வாய்ஸ்ம், டயலாக் டெலிவரியும் மிகப்பெரிய ப்ளஸ்தான்.

வாணி போஜன்

மைனஸ்!

ஆரம்பக் காலக்கட்டங்கள்ல டெலிவிஷன்ல இருந்து பெரிய திரைக்கு வந்ததால இவங்களை அதிகமான படங்களுக்கு ஹீரோயினா நடிக்க வைக்க இயக்குநர்கள் தயங்குறாங்க. இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ரீச் பண்ண முடியாத இடத்துக்கு அப்பப்போ வாணிபோஜன் போயிடுறாங்க. அப்படினு நாம சொல்லலை, சினிமா வட்டாரத்துல இப்படி ஒரு பேச்சும் போயிட்டிருக்கு. நல்ல கதைகளுக்கு வெயிட் பண்றதுல தப்பில்ல, ஆனா ஸ்கோப் கம்மியா இருந்தாலும், அதுல கமிட்டாகி இவங்களோட கரியரை இவங்களே கம்மி பண்ணிக்கிறாங்களோனு தோணுது. இப்போ சமீபத்துல ரிலீஸான செங்களம் வெப்சீரிஸ்ல கூட இவங்களுக்கு ஸ்கோப் இருந்தது. ஆனா இயக்குநர் அதை சரியா ஹேண்டில் பண்ணலயோனு தோணுது. ஏன்னா கூட வந்த பொண்ணுக்கு வெயிட் ஏத்திட்டு, இவங்களோட கேரெக்டர் டம்மியா இருந்த மாதிரி ஒரு ஃபீல் இருந்தது. இப்படித்தான் எல்லா படங்களும் இவங்களுக்கு அமையுது. கதை கேட்கும்போதே எக்ஸிகியூசன்லயும் இப்படி இருக்கணும்னு ஒத்துக்கிட்டு பண்றது நல்லது. எல்லா ரோலும் கிட்டத்தட்ட ஒண்ணு மாதிரி இருக்கு. கேரக்டர்களும் டக்குனு நியாபகத்துக்கு வர மாட்டேங்குது. ஹீரோயின் கேரக்டர் சஸ்டெயின் ஆகணும், ஃபேன் பேஸ் கிரியேட் ஆகணும்னா வாட்ஸ் அப்ல வைக்கிற மாதிரியான சீன்ஸ் அவங்களுக்கு அமையணும். இல்லைனா, சிறப்பான பாடல்கள் அமையணும். இல்லைனா, ஆரம்பத்துல வந்த ஃபேன் பேஸ் அப்படியே குறைஞ்சுரும். ஓ மை கடவுளே படத்துக்கு அப்புறம் இவங்களுக்கு சரியான பாடலோ, வாட்ஸ் அப்ல வைக்கிற மாதிரியான கியூட்டான சீன்களோ அமையவே இல்லைனு சொல்லலாம். அதுவும் இவங்களுக்கு பெரிய மைனஸ்தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top