2கே கிட்ஸுக்கான இந்த யுகத்துல இப்போ ஒரு படம் ஆரம்பிக்கிற நேரத்தில் இருந்து அந்தப் படம் உருவாகுற தருணங்கள்; அதுக்கான புரமோஷன்கள் என அனைத்தையுமே கண்ட்டெண்டுகளாக மாற்றி நமக்கை பழக்கப்படுத்திட்டாங்க. ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு அதாவது கிட்டத்தட்ட சில்வர் ஜூப்ளியை நெருக்கும் படங்கள் அல்லது சில்வர் ஜூப்ளியைக் கடந்த படங்கள் எப்படி ஆரம்பிக்கப்பட்டது; அதன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம் என்ன; இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்; படத்துக்கு வந்த விமர்சனம்; படத்தைப் பற்றி தெரியாத தகவல்கள் என பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த வாய்ப்பை உங்களுக்கு கொடுக்குற இந்த முயற்சியை எங்களுக்கான ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு, நாங்க ஆரம்பிச்சிருக்கிற நிகழ்ச்சிதான் இந்த சில்வர் ஜூப்ளி. இந்த சீரிஸில் முதல் எபிசோடில் நாம பார்க்கப்போகிற படம்தான், அண்ணாமலை.
90’ஸ் அண்ட் 2கே கிட்ஸுக்கு ரஜினி படம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினி என வரும் சிக்னேசர் டைட்டில் கார்டுதான். அந்த டைட்டில் கார்ட் போடப்பட்ட முதல் படம் அண்ணாமலைதான். இந்த ஐடியாவை கொடுத்தது இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் சிக்னேசர் டைட்டில் கார்ட் மாதிரி சூப்பர் ஸ்டாருக்கும் பண்ணலாம் என ஒரு ஐடியா தோன்றியதும் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். `சார்… அதெல்லாம் வேணாம்’ என மறுத்திருக்கிறார் ரஜினி. ஆனால், இந்த ஐடியா வொர்க் அவுட்டாகும் என நினைத்த சுரேஷ் கிருஷ்ணா, இதனை பாலசந்தரிடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் இந்த ஐடியா பிடித்துப்போக குரு சொன்னால் மறுக்கவா முடியும் என ஓகே சொல்லிவிட்டார் ரஜினி. ஈசியாக சுரேஷ் இந்த ஐடியாவை சொல்லிவிட்டாலும் அப்போது தமிழ் சினிமா இருந்த டெக்னாலஜியில் இதனை செய்துகாட்டுவதில் சிக்கல்கள் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் இதற்கான வேலை செய்து இந்த அவுட்புட்டை கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காக ஒரு பிஜிஎம்மையும் தேவா இசையமைத்தார். இதுதான் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டாரின் சிக்னேசர் கார்ட்.
Also Read – பிரபுவைக் கலாய்க்க வைரமுத்து எழுதிய வரி… `டூயட்’ சக்ஸஸ் சீக்ரெட்ஸ்!
இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய ஹைலைட் மொமண்ட்… படத்தின் வசனங்கள், நீளம் ஆகியவை குறித்து எழுந்த வசனங்கள்… பாம்பு சீன், சவால் விடுற சீன் எடுக்கப்பட்ட பின்னணி, இயக்குநர்கள் மாற்றம் பற்றிய விமர்சனம்னு ரஜினியின் அண்ணாமலை படம் பத்தின பல சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிஞ்சுக்க நம்ம Tamilnadu Now யூடியூப் சேனல்ல வெளியாகியிருக்க `சில்வர் ஜூப்ளி’ சீரிஸின் முதல் எபிசோடை மறக்காம பாருங்க…!