ஃபேமஸ் வில்லன் நடிகர்களா ஏராளமான பேர் கோலோச்சுக்கிட்டிருக்க நம்ம தமிழ் இண்டஸ்ட்ரியில.. இன்னொரு வகையான ஆக்டர்ஸும் இங்க இருக்காங்க. அவங்களோட பேர் கூட வெளியில தெரியாம, நடிச்ச ஒரு சில படங்கள் மூலமா அவங்க முகம் மட்டும் ஸ்ட்ராங்கா நம்ம மனசுல பதிய வைக்கிற அளவுக்கு டேலண்ட் கொண்டவங்க இங்க ஏராளம. அதுல வில்லன் நடிகர்கள்ல நம்ம மனசுல பதிஞ்ச.. அதேசமயம் அதிக பரிச்சயமில்லாத நடிகர்கள் சிலரைப் பத்திதான் இப்போ நாம பாக்கப்போறோம்.
ஜிவி சுதாகர் நாயுடு
நம்ம ஊர்ல ஜி.வின்னு சொன்னா ஜி.வி பிரகாஷைத் தான் தெரியும். ஆனா தெலுங்கு இண்டஸ்ட்ரில அப்படி இல்ல.. அங்க ஜி.வின்னு சொன்னா இவரைதான் சொல்லுவாங்க. குருவி படத்துல கடப்பா ராஜாங்கிற ரோல்ல டெரரா நடிச்சு கவனம் ஈர்த்த இவரோட பேர் ஜிவி சுதாகர் நாயுடு.
1998-ல வெளியான தெலுங்கு சினிமாவோட ஒன் ஆஃப் த கல்ட் கிளாசிக் படமான அந்தப்புறம் படம் மூலமா சினிமா உலகத்துல எண்டிரி ஆன ஜிவி சுதாகர் நாயுடு, அதுக்கப்புறம் தெலுங்கு சினிமாவுல தவிர்க்க முடியாத ஒரு வில்லன் நடிகரா மாறிப்போனாரு. அந்தப்புறம் படத்தோட பைலிங்குவல் வெர்சனா தமிழ்லயும் ரிலீஸ் ஆனப்போ ஜிவிக்கு இங்கயும் ஒரு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிச்சுது. தெலுங்கு அளவுக்கு இங்க அவர் பிஸியாகலைன்னாலும் தொடர்ந்து தவசி, பச்சக்குதிர, போக்கிரி, குருவின்னு தமிழ்ல அப்பப்போ நடிச்சுக்கிட்டுதான் இருந்தாரு. இவருக்கு இன்னொரு ஸ்பெசல் இருக்கு.. இவர் ஒரு டைரக்டரும்கூட. நடிகராக சினிமாவுக்குள்ள நுழைஞ்ச இவர், பின்னாடி தெலுங்குல நடிகர் நிதினை வெச்சும் நடிகர் ஜகபதி பாபுவை வெச்சும் இரண்டு படங்களை டைரக்ட் பண்ணியிருக்காரு. அதுமட்டுமில்லாம 2014-ல நடந்த MP எலெக்சன்ல காஜூவாகா – ங்கிற தொகுதியில காங்கிரஸ் சார்பா போட்டியுமிட்டிருக்காரு இந்த ஆந்திர ஜிவி.
முகேஷ் திவாரி
அடிக்கடி வருவேன் அப்படிங்கிற மீம் அடிக்கடி சோசியல் மீடியாவுல ஷேர் ஆகுறதை நாம பார்த்திருப்போம். ஆனா அதுல இருக்குற நடிகர் பேர் உங்கள்ல பலபேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இவர் பேர் முகேஷ் திவாரி. இவர் ஒரு பாலிவுட் நடிகர். மத்திய பிரதேசத்துல பிறந்த இவர் பேஸிக்கா ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். இவரோட டேலண்ட் பிரபல பாலிவுட் டைரக்டரான ராஜ்குமார் சந்தோஷி கண்ணுல பட , இவருக்கு 1998-ல ராஜ்குமார் சந்தோஷி டைரக்ட் பண்ண ‘சைனா கேட்’ங்கிற படத்துல அறிமுகமாகுற வாய்ப்பு கிடைக்குது. அந்தப் படத்துல அவர் நடிச்ச ஜகீராங்கிற ரோல்ல தன்னோட அட்டகாசமாக நடிப்பை வழங்குன முகேஷ் திவாரிக்கு உடனே தொடர்ந்து நிறைய ஹிந்தி பட வாய்ப்புகள் குவிய ஆரம்பிக்குது இப்படி ஓப்பனிங்கே அசத்தலா பாலிவுட்ல எண்டிரியான இவருக்கு. அடுத்த ரெண்டு மூணு வருசத்துலயே இவருக்கு இந்தியாவுலேர்ந்தும் வாய்ப்புகள் வர ஆரம்பிக்குது. தமிழ் ரசிகர்கள் பலருக்கும் இவரை போக்கிரி படத்துலேர்ந்துதான் தெரியும். ஆனா இவர் தமிழ்ல 2001-ல வெளியான சேரனோட பாண்டவர் பூமி படத்துலேயே வினு சக்கரவர்த்தி மகனா நடிச்சிருப்பாரு. ஆனா அதுக்கப்புறம் இவரைத் தேடி தமிழ் வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில, போக்கிரி படம் மூலமா டைரக்டர் பிரபுதேவாதான் அவருக்கு அழகான ஒரு கம்பேக் கொடுத்திருந்தாரு. இன்ஸ்பெக்டர் கோவிந்த்கிற அந்த கேரக்டர்ல அவரைப் பார்த்தாலே எரிச்சல் வர்ற மாதிரி இருக்கும்.அதுதான் அவர் எப்படிப்பட்ட ஒரு நடிகர்ங்கிறதுக்கு சாம்பிள் பீஸ். தொடர்ந்து கந்தசாமி, பூஜை, அனேகன் போன்ற தமிழ் படங்கள்ல நடிச்ச இவர் ரீசண்டா திரிஷா நடிச்ச மோகினி படத்துல ஒரு ரோல் பண்ணியிருந்தாரு.
கராத்தே ராஜா
கில்லி படத்துல இவரை வெச்சு நம்மாளுங்க சோசியல் மீடியாவுல இன்னொரு வெர்சன் ஸ்கிரீன்ப்ளேவே ரெடி பண்ணி இவரை வைரல் ஆக்கிவிட்டாங்க. இவரோட ஒரிஜினல் பேர். நடராஜன். முதன்முதலா நேருக்கு நேர் படத்துல சூரியா ஃப்ரெண்டா நடிக்க ஆரம்பிச்ச இவருக்கு அடுத்தடுத்து சிட்டிசன் மாதிரியான படங்கள்ல ரொம்ப சின்ன சின்ன ரோல்கள்தான் வந்துக்கிட்டிருந்துச்சு. அந்த டைம்லதான் கமல் டைரக்ட் பண்ணி நடிச்ச ‘விருமாண்டி’ படத்துல கமலோட ஃப்ரெண்டா நடிக்குற வாய்ப்பு இவருக்கு வந்துச்சு. அப்போதான் கமல் இவரோட கராத்தே திறமையையும் மனசுல வெச்சு, இவரோட பேரை ‘கராத்தே ராஜா’-னு அந்தப் பட டைட்டில்ல போடுறாரு. அதுலேர்ந்து தொடர்ந்து கில்லி, கஜினி, திருப்பாச்சி, வசூல்ராஜானு ஏகப்பட்ட படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாரு. ஆனா அந்தப் படங்கள் எல்லாத்துலயும் சொல்லி வெச்ச மாதிரி ஒரே அடியாள் கேரக்ட்ரா பண்ணிக்கிட்டிருந்தப்பதான் இவருக்கு போக்கிரி மூலமா ஒரு டர்னிங் பாயிண்ட் கிடைச்சுது. அந்தப் படத்துல அவர் நடிச்ச ‘கெ-ளரி’ லவ் சீன் மூலமா இவருக்கு காமெடியும் வரும்ங்கிறது ஃப்ரூப் ஆச்சு. தொடர்ந்து சுறா மாதிரியான படங்கள்ல காமெடி கலந்த வில்லன் ரோல்கள்ல நடிக்க ஆரம்பிச்சாரு. இவரோட இன்னொரு ஸ்பெசல் என்னனா 2008-ல மக்கள் டிவியில வீரப்பன் வாழ்க்கை வரலாறா வெளியான ‘சந்தனக்காடு’ சீரியல்ல வீரப்பனா நடிச்சது இவர்தான்.
பாபி
இவரையும் நாம பல படங்கள்ல பாத்திருப்போம். இவரோட பேரு பாபி. தனது கட்டுமஸ்தான உடம்பை மூலதனமா வெச்சு சினிமாவுல நடிக்கனும்னு நினைச்ச இவர் முறையா சண்டைப் பயிற்சி கத்துக்கிட்டவர். தொடர்ந்து ஃபைட்டராகவும் டூப் நடிகராகவும் பல படங்கள்ல நடிச்ச இவருக்கு, கில்லி படத்துல பிரகாஷ்ராஜ்கூட விளையாட்டா சண்டை போட்டு, பிரகாஷ்ராஜோட வர்மகலையால பாதிக்கப்படுறவரா நடிச்சது திருப்புமுனையா அமைஞ்சுது. அதைத்தொடர்ந்து, டைரக்டர் பேரரசு இவருக்கு சிவகாசி படத்துல பல்லாக்கு பாண்டிங்கிற ஒரு ரோல்ல நடிக்க வெச்சாரு. அந்த வாய்ப்பை மிகச் சரியா இவர் பயண்படுத்திக்கிட்டதால தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பிச்சுது. அதுல குறிப்பா சிங்கம் படத்துல பூந்தமல்லி சுந்தரா நடிச்சதும் போக்கிரி படத்துல ரவுடி தம்பாவா நடிச்சதும் இவருக்கு அடையாளமா மாறி அந்த டைம்ல ரொம்ப ஃபேமஸா இருந்தாரு. எந்த அளவுக்குன்னா டைரக்டர் ஷங்கர் சிவாஜி பண்ணும்போது, ரஜினிகூடவே வர்ற ரவுடி கேங்குக்கு யாரெல்லாம் போடலாம்னு ஒரு டிஸ்கசன் வந்தப்போ.. ‘யோவ் அந்த பல்லாக்கு பாண்டிய மறக்காம போட்டுங்கய்யா’ னு ஷங்கரே ஸ்பெசிஃபிக்கா இவரைப் பத்தி சொல்லியிருக்காருன்னா பாருங்க.
சரி.. இவங்கள்ல யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. யாருக்கெல்லாம் கம்பேக் கிடைச்சா ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்கிறீங்க..?