உலக அரசியல்ல இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் தன்னோட சினிமால பேசுனவரு, எஸ்.பி.ஜனநாதன். அதை எல்லா மக்களும் எளிமையா புரிஞ்சுக்குற மாதிரி சொல்றதுலதான் அவரோட ஸ்பெஷலே. ‘இயற்கை’ படத்தைக் காதல் காவியமா கொண்டாடுறாங்க. அந்தப் படத்துக்கு ஏன் இயற்கைனு டைட்டில் வைச்சாரு? ரஜினி அரசியலுக்கு வரமாட்டாருனு அன்னிக்கே கணிச்சிட்டாரு. ஆனால், படங்கள்ல அரசியல் அவர் பேசணும்னு நினைச்சாரு. ஏன்? பேராண்மைல சென்ஸார் போர்டு கட் பண்ண சொன்ன சீன் என்ன தெரியுமா? இதையெல்லாம் தாண்டி எஸ்.பி.ஜனநாதன் தன்னோட படங்கள்ல பேசுன அரசியல் என்ன?
இயற்கை
“எல்லா நிகழ்ச்சிகளையுமே கடவுள் வாழ்த்தோட தொடங்குவாங்க. நான் இயற்கையை வாழ்த்தி தொடங்கினேன். படத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டாங்க. எல்லா கதைகளும் இயற்கைல இருந்து உருவானதுதான?”னு எதார்த்தமான காரணத்தை டைட்டிலுக்கு எஸ்.பி சொல்லுவாரு. துறைமுகம் சார்ந்து இருக்குற மக்களோட வாழ்க்கையையும் அதுல சொல்லியிருப்பாரு. இயற்கைல அவர் பேசுன முக்கியமான அரசியல், ஆண் – பெண் உறவு சம்பந்தப்பட்டது.

முக்கோண காதல் கதையான இந்த படத்துல ரெண்டு பேரும் நல்லவங்கதான். அவ முன்னாடி அவளுக்குப் பிடிச்ச ரெண்டு பேரும் இருப்பாங்க. முடிவு எடுக்கப்போறது நான்சிதான். அந்த இடத்துலதான் எஸ்.பி ஜெயிக்கிறாரு. “சிக்மெண்ட் ஃப்ராய்டு, மனித மூளையின் ஆழத்துல செக்ஸ் தான் எல்லாத்துக்கும் பிரச்னையா இருக்குன்றாரு. அதனால, காதல் கதை தேவை”னு சொல்லுவாரு. உறவுகள் சார்ந்து பிரச்னைகள் வர்ற இந்த காலக்கட்டத்துல இயற்கை எப்பவும் முக்கியமான படம்.
ஈ
காதலுக்கு அடுத்து அவர் கையில எடுத்தது கிருமியும் விஞ்ஞானமும். மருந்துகள் கண்டு பிடிச்சதும் எலி, குரங்குகளை பயன்படுத்தி சோதனை பண்ணுவாங்க. அப்புறம் கடைசில மனுஷங்கக்கிட்ட பயன்படுத்திதான ஆகணும். படத்தோட கேரக்டருக்கு ‘ஈ’னு பேரு வைக்கிறதுல இருந்து கடைசில நெல்லை மணி காட்சி வரைக்கும் அவ்வளவு விஷயங்கள் இருக்கும். நெல்லை மணி பேசுறதுதான் அந்தப் படத்துல எஸ்.பி சொல்ல வர்ற அரசியல்.

‘பொறப்பு தெரிஞ்சா சாதி தெரியும், சாதி தெரிஞ்சா சாதித்தலைவனாய்டுவ, மதம் தெரியும் மதத்தலைவன் ஆயிடுவ, மொழி தெரியும், ஒரு மொழிக்கு சொந்தமாயிடுவ, அதுனால பொறப்பு தெரியாம இருக்குறதும் தகுதிதான்’ – இந்த டயலாக்லாம் தரம். பயோ வார் பத்தியும் சொல்லியிருப்பாரு. ஒரு டன் அணுகுண்டு செய்ற வேலையை பத்து கிராம் விஷக்கிருமி செய்யும்னு அன்niக்கே சொல்லியிருப்பாரு. மக்களின் தேவைக்காக லாபநோக்கில்லாம கண்டுபிடிக்கிறதுதான் விஞ்ஞானம்ன்றதை பிரசார நெடி இல்லாம சொல்லியிருப்பாரு.
பேராண்மை
பழங்குடி மக்கள் மீது காட்டப்படும் வன்முறை, பொதுவுடைமை தத்துவம்னு படம் முழுக்க அரசியல்தான். பொதுவா கிளாஸ கட் அடிச்சுட்டுதான் படத்துக்கு வருவாங்க. அங்கயும் கிளாஸ் எடுத்தா எப்படினு சில தியேட்டர்ல கிளாஸ் எடுக்குற சீனை தூக்கியிருக்காங்க. ஆனால், இன்னைக்கு வரைக்கும் பேராண்மைனு சொன்னதும் நமக்கு நியாபகம் வர்றது அந்த கிளாஸ் சீன்தான். கார்மல் மார்க்ஸ் கண்டுபிடிச்ச சர்பிளஸ் வேல்யூன்ற தத்துவத்தை சாக்பீஸ தூளாக்கி சிம்பிளா சொல்லியிருப்பாரு.

மலைவாழ் மக்கள் மத்தியில இருந்து ஒருத்தன் வந்தா அவனை உயர் அதிகாரிகள் எப்படி ஹேண்டில் பண்ணுவாங்க? அவங்களை எப்படி பார்க்குறாங்க?ன்றதை எல்லாம் அப்படி சொல்லிருப்பாரு. “எல்லா நாட்டுலயும் பொண்ணு கொடுக்க மாட்டான். வீட்டுக்குள்ள விடமாட்டான். சாப்பாடு கொடுக்க மாட்டான். இப்படிலாதாம் பிரச்னை இருக்கு. ஆனால், இந்தியால மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை படிக்கக்கூடாதுனு சொன்னாங்க. படிப்பு மாற்றத்துக்கான காரணம். இதை பேராண்மை படத்துல கட் பண்ணிட்டாங்க. இது அரசியல்”னு எஸ்.பி சொல்லியிருக்காரு. பேராண்மை என்னைக்கும் நின்னு பேசும்.
பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை
டைட்டிலே எளிய மக்களுக்கானதுதான். ஒரு சமத்துவம் இருக்கு. உலகம் ஃபுல்லா பொறம்போக்கு இடம்தான் எளிய மக்களுக்கானதா இருக்கு. அதை அழகா டைட்டில்லயே சொல்லிட்டாரு. இந்திய சினிமாலயே தூக்குப் போடுற கேரக்டரை எந்த சினிமாலயும் காட்டுனது இல்லைனு நினைக்கிறேன். இந்தப் படத்துல அது நடந்துச்சு.

தூக்குத் தண்டனையை கேள்வி கேக்குற படமாகவும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சிறைக் கைதியை எப்படி அரசு ஹேண்டில் பண்ணுது, மரண தண்டனைக்கு என்னலாம் வழிமுறைகள் இருக்குனு எல்லாத்தையும் இதுல அரசியலோடு சொல்லியிருப்பாரு.
லாபம்

“விவசாயி சேத்துல கால் வைச்சதான். நாம சோத்துல கை வைக்க முடியும்” – இதைதான் எல்லா விவசாயப் படங்களும் பேசியிருக்கு. அதைத்தாண்டி அதுல அரசியல் ரீதியா நிறைய விஷயங்கள் இருக்கு. பிரிட்டிஷ்காரன் நம்மளை ஆட்சி பண்ணது இங்க இருக்குற விவசாயத்தை நம்பிதான். அங்க இருக்குற உற்பத்தியை நம்பிதான். மல்டி நேஷனல் கம்பெனிஸ் எல்லாம் விவசாயத்தையும் உற்பத்தியையும் நம்பிதான் இயங்குது, லாபம்னு சொல்றாங்களே… அப்னினா என்ன?னு விவசாயத்தோட இன்னொரு பக்கத்தை காமிச்சிருப்பாரு.
பக்கிரி
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்னு உறுதியா சொல்லியிருக்காரு. ஆனால், அவரைப் போன்ற முன்னணி நடிகர்கள் படங்கள்ல அரசியல் பேசணும்னு சொல்லுவாரு. “என்ன மாதிரி இயக்குனர்கள் வீக் ஆனவங்க. நாங்க சொன்னா கேக்க மாட்டாங்க. ஆனால், சூப்பர் ஸ்டார்ஸ் வழியா என்னோட கருத்தை சொன்னா பலபேர்கிட்ட கருத்து போகும்”னு சொல்லுவாரு. ரஜினிக்கு பக்கிரினு ஒரு கதையும் சொல்லியிருக்காரு. பொதுவா மாற்றுச்சினிமா எடுக்குறவங்க கமர்ஷியல் ஹீரோஸ பெருசா கருத மாட்டாங்க. எஸ்.பி எல்லாரையும் மதிப்பாரு. அதுக்கு காரணம் அவர்கிட்ட இருந்த பொதுவுடைமை அரசியல்தான்!
எஸ்.பி சொல்ல நினைச்சத ஷார்ட்டா சொல்லணும்னா உலகத்துல மக்களுக்கான அரசியல்னு ஒண்ணுதான் இருக்கு. அது இடதுசாரி அரசியல். வர்க்க முரண்பாடு அடிப்படையில் பிரச்னைகளை கையாண்டால்தான் சாதிய முரண்பாடுகளை களைய முடியும்னு எல்லாப் படத்துலயும் சொல்லுவாரு. அதேமாதிரி எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவரோட குரல் எப்போதும் ஒலிச்சிட்டே இருந்தது.
எஸ்.பி.ஜனநாதன் படத்துல உங்களோட ஃபேவரைட் என்ன… ஏன்னு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – இளையராஜாவை மட்டும்தான தெரியும்.. இந்த 90’ஸ் மியூஸிக் டைரக்டர்களைத் தெரியுமா?






Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.com/pt-PT/join?ref=DB40ITMB