அறிமுக நாயகன்!
வெறும் 15 நாட்கள் மட்டுமே டிரெய்னிங் எடுத்த கையோடு அருள்நிதி நடிக்க வந்த படம். முதல் ஷாட்லயே பைக்ல வர்ற சீன்ல ஆக்சிடெண்ட் ஆகி கை சிராய்ப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார் அருள்நிதி. அல்லோரும் அன்னைக்கு பேக்கப்னு நினைக்க, அடுத்த 2 மணி நேரத்துல அருள்நிதி தயாராகிவர மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பிச்சது. அன்னைக்கு ஆரம்பிச்சு 70 நாட்களுக்கும் மேல ஷூட்டிங்ல கலந்துகிட்டு முடிச்சுக் கொடுத்தார் அருள்நிதி. முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த கதைக்களத்துல ஒரு முழு நடிகனா மாறியிருந்தார் அருள்நிதி. இவரை பாண்டிராஜ் நடிகனா மாத்தியிருந்தார்னு கூட சொல்லலாம். படத்தோட இன்ட்ரோ சீன்ல சிரிச்சுகிட்டே கோயில்ல மரியாதை வாங்க வர்ற இடத்துல கேமராவுக்கான பயம் துளியும் இல்லாத ஒரு நடிப்பு அருள்நிதிகிட்ட இருந்து வெளிப்பட்டிருக்கும். முதல் படத்துலயே காதல், பயம், கோபம்னு எல்லா எக்ஸ்ப்ரசன்களையும் வெளிப்படுத்தி பின்னிப்பெடல் எடுத்துருப்பாரு மனுஷன்.

அருள்நிதியோட மைல்ஸ்டோன்னே இந்த படத்தைச் சொல்லலாம். அருள்நிதி மட்டுமல்ல, போலீஸ்காரங்க நினைச்சா என்ன வேணாலும் பண்ண முடியும்ங்குற கருத்தை அழுத்தமா பதிவு செஞ்சது. சொல்லப்போமா தமிழ்சினிமா வரலாற்றுல இந்த படத்துக்கும் ஒரு முக்கியமான இடத்தை பிடிச்ச படம். காலேஜ் ஸ்டூடண்ட் கதாபாத்திரத்தில் கச்சிதமாக இருந்தார். இந்தக் கதையை அருள்நிதி தாங்கியதில் தமிழ்சினிமாவுக்கு முழுமையான நடிகர் கிடைச்சிருந்தார்னு சொல்லலாம். அப்போ இருந்து இப்போ வரைக்கும் அருள்நிதி சினிமா பயணத்தை சிறப்பாவே வச்சிருக்கார்.
கதைக்கு முக்கியத்துவம்!
அருள்நிதி தான் தேர்வு செய்யும் படங்கள்ல கதைதான் முதல் நாயகனா இருக்குற மாதிரி பார்த்துக்குவார். இப்போ உங்களுக்கு பிளாப் படங்கள்லதானே அதிகமா நடிச்சிருக்கார்னு கேள்வி வரலாம். ஆனா ப்ளாப்க்கு காரணம், படமாக்குன விதம்தானே தவிர, கதையா இருக்காது. கதையா பிரிச்சு பார்த்தா அவ்ளோ ஸ்ட்ராங்கான கதையா இருக்கும். ஆனா, படமாக்குறப்போ எங்கயோ மிஸ் ஆகுற இடம்தான் படத்தை தோல்வியாக்கிடுது. இப்போகூட தேஜாவு தியேட்டர்ல ஓடிட்டு இருக்கு. அதோட கதையா பிரிச்சுப் பார்த்தா நேர்த்தியான முழுமையான திரில்லர் கதைதான். ஆனா எடுக்கப்பட்டவிதம் கொஞ்சம் அமெச்சூராவும், ஸ்கிரீன்பிளே ட்ரீட்மெண்ட் கொஞ்சம் சாதாரணமாவும் இருக்கும். இப்படி பல படங்களை உதாரணமா சொல்லிட்டே போகலாம். ஆனா கதையை செலக்ட் பண்றதுல எப்போவுமே அருள்நிதி கில்லிதான்.

த்ரில்லர் ஜானர்!
பாட்டு முக்கியமில்லை, டான்ஸ் தேவையில்லைனு ஓரமா வச்சிட்டு கதையோட்டத்துல இவர் நடிச்ச டிமாண்டி காலனி கொடுத்த ஹிட். க்ளைமேக்ஸ்ல அருள்நிதியோட முகத்துல காட்ற எக்ஸ்ப்ரஷன்ஸ் முழுநடிகனுக்கான அடையாளத்தைக் கொடுத்தது. த்ரில்லர் பக்கம் நோக்கி இவரோட பாதையை திருப்பிச்சு. த்ரில்லர் ஜானர்னு சொன்னாலே அருள்நிதி பேர்தான் முன்னால வந்து நிற்கும். அந்த அளவுக்கு த்ரில்லர் ஜானருக்குள்ள முழுசா தன்னோட இயல்பான மேனரிசத்தையே நடிப்பா மாத்துறதுல அருள்நிதி கில்லாடி. அதுக்காக த்ரில்லர் மட்டும்தான் நடிப்பாரானு கேட்டா அதுவும் இல்ல. டிமாண்டி காலனிக்கு அப்புறமாத்தான் நாலுபோலீசும் நல்லா இருந்த ஊரும்ங்குற காமெடி படம் நடிச்சார். நகைச்சுவை போலீஸா நடிப்புல வெளுத்துஆங்கியிருப்பார். அதுக்கப்புறம் மலையாள ரீமேக்கான ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13னு த்ரில்லர் வகையறாவுக்குள்ள சிக்கினவர், களத்தில் சந்திப்போம்ல ஜீவாகூட சேர்ந்து மறுபடியும் ஜாலியா ஒரு படம் பண்ணார். ஆனா மறுபடியும் டிபிளாக், தேஜாவு, டைரி, டிமாண்டி காலனி-2னு த்ரில்லர் பக்கம் போக ஆரம்பிச்சிருக்கார்.
தான் நடிக்க வந்து 12 வருஷத்துல 14 படங்கள் மட்டுமே முடிச்சிருக்கார் அருள்நிதி. ஆனா அதுக்குள்ளயே காலேஸ் ஸ்டூடண்ட், போலீஸ், கிராமத்து இளைஞன், டிரைவர், மனநலம் பாதிக்கப்பட்டது போன்ற கதாபாத்திரம், வாய்பேச முடியாத இளைஞன்னு நிறைய கதாபாத்திரங்கள் பண்ணியிருக்கார். ஆனா, எல்லாமே ஒண்ணுக்கொன்னு சம்பந்தமே இல்லாத கதாபாத்திரமாவே இருக்கும். ஒன்னு இன்னொரு படத்துல ரிப்பீட் ஆகாம பாத்துக்குவார் அருள்நிதி. சொல்லப்போனா தனக்கான இமேஜ்ங்குற வட்டத்துக்குள்ள சிக்காதவர் அருள்நிதி.

தன் தாத்தா முன்னாள் முதல்வர், இப்போதும் அரசியல் பின்புலம் இருக்குனு இருக்குனு எந்த இமேஜூம் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டார். இவர் கொடுக்குற பேட்டிகள்ல பேச்சுகூட ரொம்ப ஹம்பிளாதான் இருக்கும். அதேபோல தான் நடிக்கப்போற கதையில இருக்குற எல்லா கதாபாத்திரங்களை பத்தியும், அதோட குணங்கள் பத்தியும் முழுசா கேட்குற பழக்கமும் அருள்நிதிக்கு இருக்கு.
அருள்நிதி பத்தி உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
0 Comments