`காதல்னாலே எவர்கிரீன்தானே பாஸ்; வயசெல்லாம் இருக்கா’ – தமிழ் சினிமாவின் `மூத்த’ காதலர்கள்!

காதலை ஏன் உலகமே கொண்டாடுது தெரியுமா? ஏன்னா, எவனுக்கும் எந்த வேலையும் இல்லை. அப்டினு நினைக்கிறீங்களா? உண்மையை அப்படி பட்டுனு போட்டு உடைச்சிடக்கூடாது. நான் ஒரு விளக்கம் சொல்றேன் கேளுங்க. அந்தக் காதல் அளவுக்கு சந்தோஷமான உணர்வைத் தரக்கூடிய விஷயம் வேற இல்லைன்றதுனாலதான். எப்படி? வேலையில்லாதவன்தான் காதல் பண்ணிக்கிட்டு திருவான்றது எவ்வளவு உண்மையோ… அதே அளவுக்கு காதல் தவிர சந்தோஷமான உணர்வை தரும் விஷயம் வேற இல்லைன்றதும் உண்மை. நீங்களே நினைச்சுப் பாருங்க… ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அம்மா, அப்பா, கூடப்பிறந்தவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் இருப்பாங்க. எல்லாரும் போனதுக்கு அப்புறமா? அந்த டைம்ல நமக்குள்ள ஒரு வெறுமையான உணர்வு வரும். அந்த உணர்வைத் தாங்கிப் புடிச்சு கைதாங்கலா நம்மள கூட்டிட்டுப் போற ஒரு விஷயம்னா அது காதலாதான இருக்க முடியும். கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும், காலம் அருகினில் தானோ’னு நினைக்காத அல்லது ஏங்காத காதலர்களே இருக்க முடியாது. பாடுறதுக்கு நல்லாதான் இருக்கும். வாழ்ந்துபாரு டங்குவாரு அந்துப்போகும்னு நீங்க நினைக்கலாம். ஆனால், உலகத்தின் ஆகச்சிறந்த காதலர்களுக்கு உதாரணம் இலக்கியத்துலயோ சினிமாலயோ இல்லை. நம்மளோட வீட்டுலதான் இருக்காங்க. ஆமா, நம்ம தாத்தா - பாட்டி, அம்மா - அப்பா அவங்கதான் அந்தக் காதலுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவங்களோட பிரதிபலிப்பைதான் சினிமாக்கள்லையும் இலக்கியத்துலயும் நம்மளால பார்க்க முடியுது. அப்படி, தமிழ் சினிமாவில் வயதாகியும் `மாயநதி இங்கே மார்பில் வழியுதே… தூய நரையிலும் காதல் மலருதே’னு பாட்டுப் பாடி சுத்தின காதல் ஜோடிகளைதான் இந்த கட்டுரையில பார்க்கப்போறோம்.

கபாலி

கபாலி படம் முழுவதுமே காதல்' அசரீரி மாதிரி குமுதவல்லியின் குரல்ல ஒலிச்சிக்கிட்டே இருக்கும்.கபாலிடா’, கால் மேல கால் தூக்கி போடுவேன்டா, ஸ்டைலா, கெத்தா’னு மாஸா வசனம் பேசுறதா இருக்கட்டும்.பறவையை பறக்கவிடு வாழ்வா சாவானு அது முடிவு பண்ணட்டும், என் வாழ்க்கைல இன்னும் நான் என்னெலாம் கொடுமைகளை பார்க்க வேண்டியது இருக்கோ’னு வாழ்க்கைக்கான தத்துவம் சொல்றதா இருந்தாலும் அதுக்குப் பின்னாடி குழுதவல்லி கொடுத்த அழுத்தமான உந்துதல் கபாலியின் குரல்ல வெளிப்படும். அந்த உந்துதல் இருக்குல அதுதான் காதல். எதை சொல்லியும் வெளிப்படுத்த முடியாத அந்தக் காதலை குறைந்தபட்சம் இப்படி சொல்லித்தான் வெளிப்படுத்த முடியும். ஏற்கெனவே, சொன்னேன்ல… காதல் ரொம்ப இளைமையிலேயும் அதைவிட அதிகமா முதுமையிலேயும்தான் தேவைப்படும். அந்த முதுமைல கபாலி, குமுதவல்லியை ரொம்பவே மிஸ் பண்ணுவாரு. அதை அவ்வளவு அழகா ரஜினி வெளிப்படுத்தியிருப்பாரு. ஒவ்வொரு சீன்லயும் ஒவ்வொரு வசனத்துலயும். கடைசீல, இத்தனை வருஷம் எங்கயோ தூரமா இருந்தவ. இப்போ இங்கயோ எங்க பக்கத்துல இருக்கா. என்ன நினைச்சு தூங்கிட்டு இருப்பா. என்னை பார்த்ததும் எப்படி ரியாக் பண்ணுவா? என் ஹார் பீட் எனக்கே கேக்குது’னு கபாலி பேசுற டயலாக்களுக்கு எல்லாம் அந்த வயதான காதலர்களின் காதலை அப்படியே ஆரம்பித்த காலத்துக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டுபோற சக்தி இருக்கு. அவ்வளவு அழகு. அவங்களோட தவிப்பைப் பார்க்கும்போது இடையில அவங்க பிரிஞ்சிருக்கவே கூடாதுனு நம்மள நினைக்க வைக்கும்.உன் கருப்புக்கலர அப்படியே எடுத்து என் உடம்பு ஃபுல்லா பூசிக்கணும்’னு குமுதவல்லி பேசுற டயலாக்ல இருந்து கடைசில குமுதவல்லியைப் பார்க்கும்போது அவ உடைஞ்சு அழுறது வரைக்கும் அந்தக் காதல் கொஞ்சம்கூட நரைச்சுப் போய்ருக்காது. முடில இருந்து மனசு வரைக்கும் எதையும் நரைத்துப்போக வைக்காத சக்தி காதலுக்குதான் இருக்கு.

காலா

காலா
காலா

முதுமைல… இளமை காலத்துல கிடைக்காத காதலை நினைச்சு ஃபீல் பண்ற மொமண்ட் எல்லாருக்குமே இருக்கும். ஆனால், அதையும் கடந்து ஒரு காதல் வாழ்க்கை எல்லாருக்கே அமையும். அது நாம நினைக்கிறதைவிட ரொம்ப நல்லாவே அமையும். அதுக்கான சின்ன உதாரணம்தான் காலா – செல்வி காதல். `என்னை நம்புற செல்விக்கு ஒரு சின்ன அளவுக்குக்கூட அவநம்பிக்கை வராம பார்த்துக்கணும். அவளுக்கு நான்தான் உலகமே. நான் மட்டும்தான்’னு சொல்றதுலாம் காலா, செல்வியை எந்த அளவுக்கு காதலிக்கிறாருன்றதுக்கான வெளிப்பாடுதான். அதையும் தாண்டி இரண்டு பேருக்கும் இடையில வர்ற குட்டி குட்டி சண்டை, புள்ளைங்க மத்தியில புருஷனை விட்டுக்கொடுக்காம பேசுறதுலாம் அந்த வயதுக்கான கியூட்னஸ் நிரம்பிய காட்சிகள். காலா கண்ணு முழுக்க செல்விதான். இன்னும் சொல்லணும்னா செல்வி இல்லைனா காலா இல்லை.

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும்
பண்ணையாரும் பத்மினியும்

நம்மளோட தாத்தா பாட்டியோட காதலை எந்தவிதமான வசனங்களும் இல்லாமல், அவங்க அன்றாட வாழ்க்கைல பேசுறதை வைச்சு எடுத்தா எப்படி இருக்கும்? அப்படியான படைப்புதான் பண்ணையாரும் பத்மினியும்’. முருகேசன் - மலர்விழி காதலை விட... பண்ணையார் - செல்லம்மா காதலுக்கு நம்ம நெஞ்சைப் பொளந்து இதயத்தை எடுத்துக்கொடுக்கலாம். ஆமா, அவங்க காதலுக்கு நம்ம ஏன் இதயத்தை எடுத்துக்கொடுக்கணும்? கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். மன்னிச்சிடுங்க. படத்துலயே எனக்கு ரொம்ப புடிச்ச சீன் என்ன தெரியுமா?யோவ், இப்படி விளையாட்டுத்தனமாவே இருக்கியே… நாளைக்கு எனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா. நீ எப்படியா இருப்ப? சொல்லுயா… எனக்கு எதாவது ஆச்சுனா தாங்குவியா? நீயெல்லாம் தாங்குவ. உன்னை என்னை மாதிரி யாராலயும் பார்த்துக்க முடியாது தெரியும்ல?’ அப்டினு பேசுவாங்கள்ல அந்த சீன்தான். உடம்புலாம் அப்படியே புல்லரிச்சு, கண்ணீர் வரும். குசும்பு, கிண்டல் எல்லாமே இரண்டு பேருக்கும் போட்டிப்போட்டுதான் இருக்கும். அப்புறம் அவங்களோட அன்றாட வாழ்க்கையை `உனக்காக பொறந்தேனே எனதழகா’ பாட்டுல அழகா காமிச்சிருப்பாங்க. அந்தப் பாட்டுல வர்ற ஒவ்வொரு ஃப்ரேம்லயும் காதல் நிரம்பியிருக்கும். குறிப்பா, வாசல்ல உட்கார்ந்து மழைய ரசிச்சுக்கிட்டே பேசுவாங்கள்ல. அந்த ஃப்ரேம். இன்னைக்கும் ஊர்ப்பக்கம் போனா வயசான கணவன் – மனைவி அப்படி உட்கார்ந்துதான் பேசிட்டு இருப்பாங்க.

ஓகே கண்மணி

ஓகே கண்மணி
ஓகே கண்மணி

இந்தப் படத்தோட பேரை சொன்னதும் நமக்கு முதல்ல நியாபகம் வர்றது. ஆதியோ தாராவோ இல்லை. கணபதி அங்கிளும் பவானி ஆண்டியும்தான். மணிரத்னம் காதல் படம் எடுத்தா அதுல இளைஞர்களோட காதல் காட்சியைவிட அவங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி வைக்கிற வயதானவங்களுக்கு இடையேயான காதல் காட்சி நம்மள சீக்கிரம் அந்தக் காட்சிக்கு அடிமையாக்கிடும். லைஃப் சர்க்கிள் ஒண்ணு சொல்லுவாங்க… `சின்ன புள்ளையா இருக்குற நாம கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வயசானதுக்கு அப்புறமா திரும்பவும் அதே குழந்தைத்தனத்துக்கு திரும்பி… ஏன், திரும்பவும் குழந்தையாவே மாறிடுவோம்’ அப்டினு. அந்த குழந்தைத்தனமான ஸ்டேஜ்க்கு போறப்போ நம்மளோட துணைதான் நமக்கு அம்மா, அப்பா எல்லாமே. அப்படி பவானி ஆண்டிக்கு அம்மா, அப்பா எல்லாமே கணபதிதான். சான்சே இல்லை. கணபதி – பவானி மாதிரி இன்னொரு Pair இந்த உலகத்துல அமையுறதுக்கு. இந்த Pair-க்காகவே மணிரத்னத்துக்கு ஹேட்ஸ் ஆஃப் கொடுக்கலாம்.

சில்லு கருப்பட்டி

சில்லு கருப்பட்டி
சில்லு கருப்பட்டி

கபாலி, காலா, பண்ணையாரும் பத்மினியும், ஓகே கண்மணி இப்படி எல்லாப் படத்துலயும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்னனா, வயதான அந்தக் காதல் கணவன் – மனைவிக்குள்ள இல்லைனா, ஏற்கெனவே லவ் பண்ண பொண்ணு மேல வரும். ஆனால், இந்த சில்லுக்கருப்பட்டிக் காதல் சுத்தமா யாருனே தெரியாத இரண்டு பேருக்கு இடையில வரும். இன்னும் சொல்லணும்னா, அந்தக் காதலை வயதானவங்களுக்கு இடையில வர்ற காதல் மாதிரியே காட்டியிருக்க மாட்டாங்க. இளம் வயசுல நம்மள அறியாம ஒண்ணு வரும்ல, அப்படிதான் அதை டீல் பண்ணியிருப்பாங்க. ஹாஸ்பிட்டல்ல ஒளிஞ்சு ஒளிஞ்சு சைட் அடிக்கிறது. யஷோதாவைப் பார்த்த உடனே யூரின் டெஸ்ட்க்கு கொடுக்க வைச்சிருந்தத ஒளிச்சு வைக்கிறதுனு அதகளம் பண்ணியிருப்பாரு. மனைவியோட மரணம்… அதுல இருந்து மீள்றதே மிச்ச வாழ்க்கையா மாறிப்போற காலத்துல, அதையே வசனமா வைச்சு திரும்ப ஒரு காதலை கிரியேட் பண்ணதெல்லாம் வேறலெவல். இளைஞர்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு காதல் உலகம் இருக்கு. அந்த உலகத்துல நரச்ச முடி உள்ளவங்க ஒருத்தர்கூட கிடையாது. அதை எனக்கு சொன்னது. சில்லுக்கருப்பட்டிதான்.

ப.பாண்டி

ப.பாண்டி
ப.பாண்டி

இன்னைக்கும் எதார்த்தத்துல ஒரு பேச்சு இருக்கு. `பேரன், பேத்தி எல்லாம் எடுத்தவங்கள வாழ்ந்து முடிச்சவங்க’னு சொல்லுவாங்க. அதாவது, இனி அவங்களுக்கு மரணம் மட்டும்தான் மீதி இருக்குன்ற அர்த்தத்துல சொல்லுவாங்க. அதை எப்படி பொதுவான சொல்லாடலா பயன்படுத்த முடியும்ன்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அது தனிப்பட்ட விருப்பம்தான! அப்படி தன்னோட ஃபஸ்ட் லவ்வ தேடி போற ஒரு ஆளோட கதைதான் ப.பாண்டிதான். இதெல்லாம் எதார்த்தமா? எங்கயாவது நடக்குமா?னு நீங்க யோசிக்கலாம். ஆனால், நினைச்சுப்பாருங்க... நடந்தா எப்படி இருக்கும்? அந்த உணர்வுகளை அழகாவெண்பனி மலரே’ பாட்டுலயும் சொல்லியிருப்பாங்க. புள்ளைங்க, பேரனுங்கதான் நமக்கு வாழ்க்கையேனு இருக்குற நிறைய பேருக்கு அவங்களுக்குனு ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு ஏன் தோணலன்ற கேள்வியை அழுத்தமா இந்தப் படத்துல பதிவு பண்ணியிருப்பாங்க. காதலுக்கு வயசு என்னைக்கும் தடையில்லைனும் பளார்னு சொல்லியிருப்பாங்க. அந்த ஃபீல்லாம் வயசாகி ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்மளோட முதல் காதலியை சந்திக்கும்போதுதான் வருமோ என்னமோ!

கே.டி

கே.டி
கே.டி

ப.பாண்டி மாதிரியான ஒரு படம்தான், கே.டி. ஆனால், படம் முழுவதும் அந்தக் காதல் டிராவல் ஆகாது. ஆனால், வயதான கருப்புதுரையும் வள்ளியும் சந்திக்கிற அந்த சில நிமிடங்கள் இருக்குல… அதுதான் அந்தப் படத்தின் மகத்தான நிமிடங்களா இருக்கும். அந்தப் படம் பார்த்த பெரும்பாலான பேருக்கு அந்தக் காதல் காட்சிகள்தான் மனசுல பதிஞ்ச காட்சிகளா இருக்கும். டௌவல் கொடுக்கும்போது வர்ற கூச்சம், நெல்லிக்காய் சாப்பிட்டுட்டு கொடுக்குற ரியாக்‌ஷன், நம்ம காலம் முடிஞ்சிருச்சுனு அட்வைஸ் பண்ற சீன் எல்லாம் ரொம்பவே உணர்வுபூர்வமான ஒன்றா இருக்கும்.

இந்த லிஸ்ட்ல உங்களுக்குப் பிடிச்ச படம் எதுனு மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: தமிழ் சினிமா கற்றுக்கொடுத்த காதல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top