காமெடி இஸ் சீரியஸ் பிசினஸ்னு சொல்லுவாங்க. திரைப்படங்களுக்கு எந்த அளவுக்கு கதை, நடிகர்கள், இசைன்னு பல விஷயங்கள் முக்கியமோ அதேபோல ரசிகர்களை என்டர்டெய்ன் பண்ண காமெடியும் காமெடியான்ஸும் ரொம்ப முக்கியம். தன்னோட கரியர்ல 5 முதல்வர்களோட நடிச்சவங்க தொடங்கி இப்போ இருக்க ட்ரெண்டுக்கு ஏற்றபடி யூடியூப் சேனல் வச்சிருக்க வுமன் காமெடியன்ஸும் கோலிவுட்ல இருக்காங்க. அப்படி, தமிழ் சினிமாவில் கலக்கிய வுமன் காமெடியன்ஸ் பற்றிதான் பார்க்கப் போறோம்.
மனோரமா
சின்ன வயசுல இருந்தே மேடை நாடகங்கள்ல நடிச்சிட்டு வந்த மனோரமா, 5,000 நாடகங்கள் நடிச்சு இருக்காங்களாம். இவங்க நடிப்பு பார்த்து முதல் முதல்ல கண்ணதாசன், `மாலையிட்ட மங்கை’ படத்துல அறிமுகப்படுத்தினார். அதுக்கு பிறகு சொல்லவே வேண்டாம் தமிழ் சினிமாவின் பெண் சிவாஜின்னு பேர் வாங்கிட்டாங்க. அது மட்டும் இல்லாமல் ஆச்சின்னு செல்லமா ரசிகர்கள் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
களத்தூர் கண்ணம்மா, எதிர் நீச்சல், பட்டிக்காட பட்டினமா, கண்காட்சி -ன்னு பல ஹிட் படங்கள் வந்துச்சு. இது வரை 6 மொழிகள்ல 1,000 மேற்ப்பட்ட படங்கள்ல நடிச்சு கின்னஸ் ரெக்கார்ட் பண்ணி இருக்காங்க ஆச்சி. இவங்க நடிச்ச ஜில்ஜில் ரமாமணி கேரக்டர் இன்னமும் நம்ப மனசுல அப்படியே ஒட்டிக்கிட்டு இருக்கு. திரைத்துறைக்கு வந்த ஷார்ட் டைம்ல மொத்தமா 5 முதல்வர்களோட ஆச்சி நடிச்சு தூள் கிளப்பிட்டாங்க.

கோவை சரளா
இவங்க பேர் சொன்னதும் நமக்கு கூடவே ஞாபகம் வருவது வடிவேலுதான்..ஏன்னா ஸ்கிரீன்ல ரெண்டு பேரும் அந்த அளவுக்கு மாத்தி மாத்தி திட்டி, அடிவாங்கி அதகளம் பண்ணி இருப்பாங்க. இவங்க ரெண்டு பேரையும் ஜோடியா வெச்சு அத்தனை மீம் டெம்ப்ளேட்ஸ் இருக்கு. கோவை சரளாவும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் சினிமாவில் காலடி எடுத்துவெச்சு இருக்காங்க. ’முந்தானை முடிச்சு’ படம் மூலமா சினிமாவுக்கு வந்த சரளா, சரவெடி மாதிரி முன்னணி காமெடியன்ஸ் கூட நடிச்சு தள்ளிட்டாங்க.
இவங்க வடிவேலு கூட நடிச்ச ’விரலுக்கேத்த வீக்கம்’, ’காலம் மாறிப்போச்சு’ உள்ளிட்ட படங்களோட காமெடிலாம் இப்போ பார்த்தாலும் அந்த அளவுக்கு சிரிப்பு வரும்.
’டேய் ராகவா’- ன்னு அவங்க கூப்பிடுற அந்த ஸ்லாங்க்கு அத்தனை ஃபேன்ஸ் இருக்காங்க. கோவை சரளாவோட பாடி லாங்குவேஜை அடிச்சிக்க இப்போ வரை தமிழ் சினிமாவுல யாரும் இல்லை.

ஊர்வசி
கவிதா ரஞ்சனி தான் ஊர்வசியோட நிஜ பெயர், ஹீரோயினா அறிமுகமாகி, பின்னாடி காமெடி மட்டும் இல்லாம டிவி ஹோஸ்ட், ஸ்கிரிப்ட் ரைட்டர், தயாரிப்பாளர்னு பல அவதாரங்கள் எடுத்தவர். ’முந்தானை முடிச்சு’ படத்துல ஒரு கலாட்டா கேரக்டரா நடிச்சு அத்தனை பேர் மனசுலையும் இடம் பிடிச்சாங்க. ஊர்வசி கேரளாவை சேர்ந்தவாங்க, அதனால மலையாள சினிமாவிலும் ஒரு ரவுண்டு அடிச்சுடாங்க.
தமிழ்ல இவங்க நடிச்சதுல பலருக்கு ஃபேவரைட் சீன்னா, அது வாமனன் பட பொட்டேட்டோ காமெடி சீன்தான்…”This is Potato” -னு அவங்க சொல்லும்போதே மரண சிரிப்பு வரும். ரீசன்ட்டா வந்த மூக்குத்தி அம்மன் படத்துல ஆர்.ஜே பாலாஜி கூட சேர்ந்து காமெடில பிச்சு உதறி இருப்பாங்க. இப்போ திரும்ப அதேபோல வீட்ல விசேஷம் படத்திலும் அந்த மாதிரி ஒரு ஊர்வசியப் பார்க்க எல்லாரும் வெயிட்டிங்னு சொல்லாம்.

ஆர்த்தி
ஜோடியா காமெடி பண்ண வந்த ஆர்த்தி இப்போ இது தான் டிரெண்ட்னு ஒரு யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. Harathi Ganesh-ங்கிற பேர்ல இவங்க வெச்சு இருக்க சேனல்ல அவங்களோட சேட்டையெல்லாம் போஸ்ட் பண்ணிட்டு வர்றாங்க.
ஆர்த்தி 6 மாச குழந்தையா இருக்கும்போதே நடிக்க வந்துட்டாங்க. அதுக்கு பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை-ன்னு 2 இடத்துலையும் மாஸ் பண்ண ஆரத்திக்கு நிறைய விமர்சனங்களும் வந்துச்சு. ஆனால், எல்லாத்தையும் சமளிச்சு இப்போ ஜாலியா யூடியூப் ஷார்ட்ஸ்ல கலக்கிட்டு இருக்காங்க.

ஜாங்கிரி மது மிதா
ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மதுமிதாவுக்கு அந்த படம் நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது. அந்தப் படத்துல சாந்தானம் ஜாங்கிரி -ன்னு கூப்பிட்டதே இவங்களுக்கு அடையாளமாவும் அமைச்சிருச்சு. அதன் பிறகு ராஜா ராணி, ஜில்லா, காக்கி சட்டை, ஹலோ நான் பேய் பேசுறேன் போன்ற படங்கள்ல அவங்க ஸ்லாங்ல பேசி வேற லெவல் காமெடி பண்ணிருப்பாங்க. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ், கலைஞர்-னு எல்ல முன்னணி சேனல்லயும் முத்திரை பதிச்சிட்டாங்க.
இது மட்டும் இல்லாம பிக்பாஸ் 3-வது சீசன்ல ஒரு போட்டியாளராவும் கலக்குனாங்க.

வித்யுலேகா ராமன்
நீதானே என் பொன் வசந்தம் படத்துல சமந்தாவுக்குத் தோழியா நடிச்சு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வித்யுலேகா , தமிழ் மட்டும் இல்லாம நிறைய தெலுங்கு படங்களையும் நடிச்சுட்டாங்க. முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கியவர். அதன் பிறகு ரன் ராஜா ரன் படத்துக்காக Edison Award for Best Comedian Female விருதையும் ஜெயிச்சாங்க.
இவங்களுக்கும் அறிமுகமான புதுசுல நிறைய body shaming விமர்சனங்களை எதிர்க்கொண்டார். ஆனால், விமர்சனங்களை பெருசா பொருட்படுத்தாம பின்னாடி இருந்து பொறுமையா வெயிட் லாஸ் பண்ணி கெத்து காட்டுனாங்க. இப்போ குக் வித் கோமாளில பெஸ்ட் குக்கா கலக்கிட்டு இருக்காங்க வித்யு.

உங்களோட ஆல்டைம் ஃபேவரைட் வுமன் காமெடியன் யாருனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க..!
Also Read : சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் காத்து அடைக்கிறாங்க? – Chips கண்டுபிடிச்ச கதை!
0 Comments