மாஸ் சீன்ஸ்

யார் என்று தெரிகிறதா.. இவன் தீ என்று புரிகிறதா.. தமிழ் சினிமா பெஸ்ட் மாஸ் சீன்ஸ்!

தமிழ் சினிமால சில டிரான்ஸ்ஃபர்மேஷன் மாஸ் சீன்ஸ்-லாம் பார்த்தா நமக்கே நாலு பேரை தூக்கிப் போட்டு மிதிக்கணும்னு தோணும். அப்படி கூஸ்பம்ப்ஸ் தரக்கூடிய, திரும்ப திரும்ப பார்க்கணும்னு தோணுற சில தமிழ் சினிமா டிரான்ஸ்ஃபர்மேஷனை இந்த வீடியோல பார்க்கலாம்.

அந்நியன்

பின்றியேடா.. எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜியை பார்த்திருக்கேன், ரஜினியை பார்த்துருக்கேன், கமலை பார்த்துருக்கேன்.. உன்னை மாதிரி நடிகனை பார்த்ததே இல்லையேடானு பிரகாஷ் ராஜை மட்டுமில்ல நம்ம எல்லாரையும் விக்ரம் நினைக்க வைச்ச சீன்னா அதுதான். அந்நியனில் அந்த சீனில் விக்ரம் நடித்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது ஷங்கரே.. பாவமா அடிவாங்குற அம்பியாக சில நிமிடம், அம்பியை விட சொல்லும் அந்நியனாக சில நிமிடம், அம்பியை அடித்தவரை பிரித்தி மேயும் அந்நியனாக சில நிமிடம், எது அந்நியன்.. எது அம்பி.. என குழப்பத்தோடு சில நிமிடம்னு இருவர்ல வர்ற கவிதைக்கே டஃப் கொடுக்குற மாதிரி அந்த சீனை அனலைஸ் பண்ணலாம். டிரான்ஸ்ஃபர்மேஷன்னா இப்படி இருக்கணும். விக்ரம் கரியர்ல ராட்சசன் மாதிரி நடிச்ச சில சீன்ஸை லிஸ்ட் பண்ணா, எப்பாவும் இந்த அந்நியன் சீனுக்கு ஃபஸ்ட் பிளேஸ்தான்.

Also Read – பணக்காரன்.. பிச்சைக்காரன்.. இளிச்சவாயன்.. மிஸ் யூ மயில்சாமி!

வடசென்னை

இன்னைக்கு வெற்றிமாறன், தனுஷ் எந்த மேடைல ஏறுனாலும், கீழ இருக்குற ரசிகர்கள் அவங்கக்கிட்ட கேக்குறது. வடசென்னை 2 எப்போனுதான். ஏன்னா, அந்தப் படம் பண்ண சம்பவங்கள் அப்படி. சரி, இதுல எங்கடா டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன் வரும்னுதான யோசிக்கிறீங்க? செந்திலை கொலை பண்ண அன்புவை உள்ள அனுப்பிடுவாங்க. கேரம்போர்டு போட்டிலாம் வைச்சு செந்திலை கொலை பண்ண பிளான் பண்ண இடத்துக்கு கூட்டிட்டு வருவாங்க. செந்தில் வந்து நின்னதும் கூட இருக்குற ஆள்கள் எல்லாரும் கத்தி எடுத்து குத்த ஆரம்பிப்பாங்க. செந்திலுக்கு அன்புவும் இன்னொருத்தரும் பாதுகாப்பா நிப்பாங்க. அந்த நேரத்துல தனுஷ் தன்னோட டிரான்ஸ்ஃபார்ம் ஆகி கத்தி எடுத்து செந்தில் கழுத்துலயே ஒரு சொருகு. வெற்றிமாறன் ஸ்டைல்ல சொல்லணும்னா.. * மரணமா இருக்கும்.

ரமணா

டிரான்ஸ்ஃபர்ன்மேஷன் சீன்னாலே ஃபைட் சீன்தான் இருக்கணும்னு இல்லேல. ஃபைட்டே இல்லாமல் பெஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் சீனா அமைஞ்சது ரமணாலதான். இறந்து போனவரோட உடம்பை எடுத்துட்டு, வேற ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போவாரு. அங்க டாக்டர் சொல்ற எல்லாத்தையும் விஜயகாந்த் செய்வாரு. அதிக பணம் கட்டுவாரு. அப்புறம் விஜயகாந்த் இறந்துபோனவரோட ஃபேமிலிகிட்ட டாக்டர் எப்படி பேசுவாங்கனு சொன்ன மாதிரியே டாக்டர் வந்து பேசுவாரு. அப்புறம், டாக்டர்கிட்ட அப்படியே மைல்டா டிரான்ஸ்ஃபார்ம் ஆகி அவங்க பண்ண வேலையெல்லாம் சொல்லுவாரு. ஆதாரங்களை காட்டுவாரு. மாஸ் சீனா இருக்கும். யோவ், ஏ.ஆர்.முருகதாஸ் இந்த மாதிரி எப்பயா திரும்ப படம் எடுப்பீங்க?

விஸ்வரூபம்

டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன்ஸ பத்தி பண்ணலாம்னு ஆரம்பிச்சதே விஸ்வரூபம்ல கமலோட டிரான்ஸ்ஃபர்மேஷன் பார்த்துதான். உலக நாயகன்னா சும்மாவா? இவ்வளவு கொடூரமான சீன்களைலாம் இந்த படத்துக்கு அப்புறமாதான் அடிக்கடி பார்க்குறோம். அந்த சீனுக்கு முன்னாடி வரைக்கும் ஒரு இடத்துலகூட கமலுக்கு மாஸ் சீனோ, டயலாக்கோ, அவர் யாருனோ எதுவும் இருக்காது. அந்த சீன்லையும் அடி வாங்கி என்ன விட்ருங்கனு கதறிட்டு இருப்பாரு. என்னை எதாவது செய்றதுக்கு முன்னாடி பிரெயர் பண்ண விடுங்கனு சொல்லுவாரு. அழுதுட்டே பிரெயர் ஸ்டார்ட் பண்ணுவாரு. டக்னு டிரெயின் சவுண்ட் கேட்கும். என்னடா நடந்துச்சுனு பார்க்குறதுக்குள்ள எல்லார் சோலியும் முடிச்சிடுவாரு. அப்புறம் மெதுவா ஸ்லோமோஷன்ல காமிக்கும்போதுதான் நமக்கு அந்த சீன் புரியும். எவன் என்று நினைத்தாய்னு அந்த பாட்டு, ஃபைட்டு, கமலோட டிரான்ஸ்ஃபர்மேஷன்லாம் சேர்ந்து, அந்த மாதிரி ஒரு ஃபைட் சீன் வேணும் ஆண்டவரேனு கேட்க வைச்சிட்டாரு.

தெறி

விஜய்யோட ஃபைட் சீன் லிஸ்ட்ல, பில்டப் கொடுத்து, ஃபேன்ஸ் கொண்டாடுற அளவுக்கு மொமண்ட்ஸ்லாம் கொடுத்த சீன்ஸ்னா அது தெறில வர்ற மழை ஃபைட்தான். குழந்தைக்காக என்ன வேணும்னாலும் பண்ண தயாரா இருப்பாரு. ஆனால், யார் பிரச்னைக்கும் போகமாட்டாரு. குழந்தைக்கு ஒண்ணுனு சொன்னதும், மனுஷன் ஃபஸ்ட் வேணாம், சாரி விட்ருங்கனு சொல்லுவாரு. டேய், போய் பிள்ளையை பிடிச்சுட்டு வாங்கடா அப்டினு சொன்னதும், போட்டு பொளக்க ஆரம்பிச்சுருவாரு. செமயா இருக்கும். ஜி.வி.பி மியூசிக்கும் அதுல செம தெறியா இருக்கும். அட்லீக்கு ஃபேன்ஸ் பல்ஸ் தெரியும் ப்ரோ.

வேதாளம்

எல்லாருக்கும் நல்ல படமா சொல்ற. ஆனால், தலக்கு மட்டும் வேதாளத்தை சொல்றனு தோணலாம். அந்தப் படத்துல தலயோட டிரான்ஸ்ஃபர்மேஷன் அவ்வளவு மாஸா இருக்கும். அடிக்கிறாங்க சார், என்னை விட சொல்லுங்கனு கெஞ்சுவாரு. சுட்டுத் தள்ளுங்கடா அவனைனு சொன்னதும், டக்னு சவுண்ட் கேட்கும். பார்த்தா தல போட்டு தள்ளிடுவாரு வில்லனை. அப்போ அழுதுட்டே, அந்த சீன்ல ஈவில் சிரிப்புக்கு மாறுவார்ல வொர்த்துப்பா.

அஞ்சான்

லிங்குசாமி கொஞ்சம் அதிகமா பேசாமல் இருந்தா, இந்தப் படம் நல்லா ஓடிருக்கும்னு இப்பவும் தோணும். அண்ணனை தேடி தம்பி வந்துருப்பாரு. தம்பியை வில்லனோட ஆள்கள் கீழ தள்ளிவிட்டு அடிப்பாங்க. அந்த நேரத்துல மனுஷன் தடுமாறுறதைப் பார்த்து நமக்கே ஃபீல் ஆகும். டேய், பாவம்டானு தோணும். துப்பாக்கிய தலைல வைச்சு சுடப்போகும்போது சவுண்ட் ஒண்ணு கேட்கும், வில்லன்கள் திரும்பிப் பார்த்தா துப்பாக்கிய வைச்சிருந்தவன் கீழ விழுந்துகிடப்பான். ஒரு கால் மாற்றுத்திறனாளியா இருப்பாரு. அந்தக் காலையே எடுத்து மிதி ஒண்ணு விடுவாரு. வாய்ல குச்சி, ஒரு ரூபாய் காயின் செயின்லாம் எடுத்து வெளிய போடுவாரு. ராஜு பாய்னு யுவன் பேக்ரௌண்ட்ல பின்னியிருப்பாரு. யோவ் லிங்குசாமி மாஸ்யா.

சண்டக்கோழி

விஷாலோட சண்டைக்கோழி படத்துல வர்ற ஃபைட் சீன் செம டிரான்ஸ்ஃபர்மேஷனா இருக்கும். யோசிச்சுப் பார்த்தா, லிங்குசாமி சீன்ஸாவே எவ்வளவு நல்ல சீன்களை கொடுத்துருக்காரு பாருங்க. காசியைப் பத்தி கதை கதையா பாலு கேள்விப்பட்டிருப்பான். ஆனால், பார்த்துருக்கமாட்டான். ஒருநாள் பஸ்ல போகும்போது ஒருத்தரை காசி வெட்ட வருவான். காசி யாருனே தெரியாது. அவனை தடுத்து ஓங்கி ஒரு மிதி விடுவான். பஸ்ல கண்ணாடிலாம் உடைச்சுட்டு போய் விழுவான். ரைட்டு முடிஞ்சதுனு நினைக்கும்போது. பெரியர்வர் ஒருத்தர், நீ அடிச்சது யாரு தெரியுமா? காசி. நின்னா கொன்றுவான். ஓடிடுனு சொல்லுவாரு. என்னது காசியா அப்டினு கேட்டுட்டு, பஸ்ல இருந்து இறங்க மாட்டாரு விஷால், குதிச்சு ஓடி வந்து காசியை போட்டு பிரிச்சு எடுத்துருவாரு. ரோடு முழுக்க மக்கள் பார்த்துட்டு இருப்பாங்க. ப்பா.. என்னா சீன்.

ஜிகர்தண்டா

கார்த்திக் கேரக்டரின் பிரில்லியண்ட்ஸ் எப்படிப்பட்டதுனு கிளைமாக்ஸ்ல வர்ற டிரான்ஸ்ஃபர்மேஷன்லதான் தெரியும். உள்ள எல்லாரையும் படம் பார்க்க அனுப்பிட்டு ஃபஸ்ட் ஷோ தொடங்குறதுக்காக, வெளிய கொஞ்சம் பதற்றத்தோட காத்துட்டு இருப்பான். 5, 4, 3, 2, 1-னு விரல்ல எண்ணி முடிச்சதும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அப்போ, கார்த்திக் எக்ஸ்பிரஷன் இருக்கே.. அட்டகாசம். ஆக்சுவலா ஜிகர்தண்டால ஹீரோ, சேதுனா.. வில்லன் கார்த்திக்தான். அதேமாதிரி, விஜய் சேதுபதிக்கிட்ட கதை சொல்லும்போதும், சேதுவோட ஆள்கள் வர்ற சீன் இருக்குல, அதுவும் செம டிரான்ஸ்ஃபர்மேஷனா இருக்கும்.

பாட்ஷா, சிவாஜி, அண்ணாமலைனு ரஜினியோட கரியர்ல வந்த எல்லா படங்கள்லயும் டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன்ஸ் இருந்துட்டுதான் இருக்கும். இதெல்லாம் தாண்டி சாமி படத்து ஆறுச்சாமி, டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ்னு சொல்ற விக்ரம் ஓப்பனிங் சீன், போக்கிரி படத்துல விஜய்தான் போலீஸ்னு சஸ்பென்ஸ் உடையுற சீன், ஏழுமலை படத்துல ரெயில்வே ஸ்டேஷன்ல வர்ற அர்ஜூன் சீன்னு மாஸ் சீன்ஸ சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top