ரஜினியோட சிவாஜி ஃபைட் சீன், கமலுக்கு ஹேராம் படம், விஜய்க்கு தெறி க்ளைமேக்ஸ், அஜித்க்கு வேதாளம் சீன் இது எல்லாமே பின்னி மில்ல எடுத்ததுதான். தமிழ் சினிமால பொதுவா ஃபைட் சீன், குறிப்பா க்ளைமேக்ஸ் ஃபைட்னாலே பின்னி மில்தான் ஒரே சாய்ஸா இருக்கும். ஏகப்பட்ட படங்கள் இங்க ஷூட் பண்ணிருக்காங்க. அப்படிப்பட்ட பின்னி மில்க்கு ஒரு பயங்கரமான வரலாறு இருக்கு. ஜாலியான் வாலிபாக் மாதிரி 7 பேரை சுட்டுக் கொண்டிருக்காங்க, ஜல்லிக்கட்டுக்காக மெரீனால போராட்டம் பண்ண மாதிரி இந்த மில்லுக்காகவும் மெரீனால போராட்டம் பண்ணிருக்காங்கனு ரத்தசரித்திரம் நிறைந்த பின்னி மில் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

அப்படியே பின்னோக்கி ஒரு 150 வருசம் போனா ஜான் பின்னி அப்படினு ஒரு ஆங்கிலேயர். பிரிட்டிஷ் கவர்மெண்ட் இருந்தப்போ இங்க வந்து நிறைய சின்ன சின்ன தொழில்கள் பார்த்துட்டு இருக்காரு. அவரு 1877-ல பக்கிங்காம் அப்படினு ஒரு தொழிற்சாலை தொடங்குறாரு. அடுத்த ஒரு 5 வருசம் கழிச்சு 1882-ல கர்னாடிக் அப்படினு ஒரு தொழிற்சாலை தொடங்குறாரு. இது ரெண்டும் சேர்த்து பி & சி மில் அப்படிங்குற பேரு அப்போ வடசென்னையோட ஒரு அடையாளமாவே இருந்துச்சு. இதுதான் பின்னாடி ரெண்டும் சேர்ந்து பின்னி மில் ஆச்சு. ஒரு காலத்துல சென்னைல ரொம்ப ஃபேமஸா இருந்த கன்னிமாரா ஹோட்டல்தான் அப்போ இந்தக் கம்பெனியோட ஹெட் ஆபிஸ். அந்த காலத்துலயே இந்த தொழிற்சாலைல 20 ஆயிரம் பேர் வேலை பார்த்திருக்காங்க. தொழிற்சாலை, அதுல வேலை பார்க்குறவங்களோட குடியிருப்புனு சேர்த்து 250 ஏக்கருக்கு மேல இருக்கும். இந்த மில்லுக்கு இன்னொரு பெரிய சிறப்பு என்னென்னா இந்த தொழிலாளர்கள்லாம் சேர்ந்து லேபர் யூனியன் ஆரம்பிச்சாங்க. இந்தியாலயே முதல் தொழிற்சங்கம் இவங்க ஆரம்பிச்சதுதான். இந்த யூனியனோட முக்கிய நிர்வாகிகள்ல ஒருத்தர்தான் திரு.வி.க.
ஸ்மூத்தா போயிட்டு இருந்த இந்த மில்லுல ஒரு பிரச்னை வருது. 1920-ல சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பிக்குது. முதல்ல கர்நாடிக் மில்லுல வேலை பார்த்தவங்க வேலை நிறுத்தம் பண்றாங்க. அவங்களுக்கு ஆதரவா பக்கிங்காம் மில் வேலையாட்களும் சேர்ந்துக்குறாங்க. அதுவரைக்கும் ஓகே. ஆனா ஒரு கட்டத்துக்கு மேல இது ஜாதி பிரச்னையா மாறுது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வேலை நிறுத்தம் வேணாம்னு முடிவு பண்ணி திரும்ப வேலை செய்ய ஆரம்பிக்குறாங்க. ஆதிக்க சமூகத்தை சேர்ந்த மக்கள் வேலை நிறுத்தம் வேணும்னு போராட்டம் பண்றாங்க. இந்த ரெண்டு தரப்புக்கும் நடுவுல பிரச்னை பெருசாக ஆரம்பிக்குது. எப்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தப்போ மெரினால மக்கள் கூடி போராட்டம் நடத்துனாங்களோ அதே மாதிரி இந்த பிரச்னைக்காகவும்1921 ஜூலை மாசம் பொதுமக்கள் பெரும் அளவுல மெரினால கூடி தங்களோட ஆதரவை வெளிப்படுத்துறாங்க. ஆகஸ்ட்ல போராட்டம் தீவிரமாகுது. இரண்டு தரப்பும் கடுமையா மோதிக்கொள்ள காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துறாங்க. இதுல 7 உயிர்கள் போகுது.
Also Read – ZOHO பத்தி ஊழியர்கள் என்ன சொல்றாங்க… இன்ட்ரஸ்டிங் கதைகள்!
இப்படியான போராட்டங்களுக்கு அப்பறமும் இந்த மில் தொடர்ந்து நடந்துகிட்டுதான் இருந்தது. பக்கிங்காம் கால்வாய் இந்த மில்லுக்கு நடுவுல ஓடிட்டு இருந்தது. அதுல படகு சவாரி இருந்தது. மில்லுக்குள்ள சரக்கு ஏத்திட்டு வர்றதுக்கு ரயில் ஓடிட்டு இருந்தது. இப்படி ரயில், படகு, லாரினு எந்நேரமும் பரபரப்பா இருந்தது இந்த மில். இவங்களுக்கு தேவையான மின்சாரத்தை இங்கயே உருவாக்கி, அவங்களோட தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை அப்போ இருந்த கவர்மெண்டுக்கும் தனியாருக்கும் வித்திருக்காங்க. அப்போ ராணுவத்துக்குத் தேவையான துணிகளை உற்பத்தி பண்ணாங்க இந்த மில். ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் மீட்டர் துணி இங்க உற்பத்தியாகுமாம். ராணுவத்துக்குனு தனியா க்ளோத்திங் ஃபேக்டரி ஆரம்பிச்சப்பறம் இந்த மில்கிட்ட இருந்து துணி வாங்குறதை நிறுத்திட்டாங்க. இங்க நெய்யுற போர்வைகள் ரொம்ப ஃபேமஸா இருந்தது. மலையூர் மம்பட்டியான் படத்துல தியாகராஜன் போட்டுட்டு வர்ற போர்வை பின்னி மில்ல உருவானதுதான்.

இந்தியா சுதந்திரத்துக்கு அப்பறம் பல பேர் கை மாறுன இந்த பின்னி மில்லை 1996-ல மொத்தமா நிறுத்திடுறாங்க. அப்போ ஒரு பெரிய வெள்ளம் வந்ததுல இந்த மில் பாதிக்கபடுது. இதைக் காரணம் காட்டி மிசின்லாம் போயிடுச்சு இனிமே இந்த மில்லை நடத்துறது கஷ்டம்னு சொல்லி மொத்தமா நிறுத்துறாங்க. இந்த மில் தொழிலாளர் குடியிருப்புல தங்கியிருந்த வீடுகளையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அந்த தொழிலாளர்களுக்கு வித்தாங்க அந்த மில் நிர்வாகம். முன்னாடி பெரம்பூர்ல அந்த மில் இருந்த இடத்துலதான் இன்னைக்கு SPR City ங்குற அடுக்குமாடி குடியிருப்பு இருக்கு. இதுதான் இன்னைக்கு சென்னைலயே உயரமான பில்டிங். சீக்கிரமே 5000- கடைகளோட Marketing of India-ங்குற ஒரு மிகப்பெரிய மால் வரப்போகுது. இதுவும் வந்துடுச்சுனா இந்த மாதிரி ஒரு மில் இருந்த சுவடே இல்லாம போயிடும். இந்த பின்னி மில்லோட மீனம்பாக்கம் விங்தான் இப்போ ஷூட்டிங் ஸ்பாட்டா மாறிடுச்சு. ஃபைட் சீன் எடுக்கணும்னாலே தமிழ் டைரக்டர்களோட முதல் சாய்ஸ் இதுவாதான் இருக்கு.






Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/join?ref=P9L9FQKY
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.
Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.