Feel Good Scenes

எல்லாரும் கடவுள்தான்.. தமிழ் சினிமாவின் பெஸ்ட் ஃபீல் குட் சீன்கள்!

தமிழ் சினிமாவின் ஃபீல் குட் சீன்ஸ் | எவ்வளவு ஜாலியான ஆளா, நம்ம இருந்தாலும், சில சமயங்கள்ல நம்ம பேச்சை நம்ம மனசு கேட்காது. மனசு கொஞ்சம் டல்லா இருந்துச்சுனு வைங்க. தமிழ் சினிமால வந்த இந்த சீன்களை கொஞ்சம் போய் பாருங்க. அப்படியே வடிவேலு தில்லாலங்கடி பண்ற மாதிரி இதமா இருக்கும். அப்படியான ஒரு பத்து சீன்களை இந்த வீடியோல பார்க்கலாம்.

அன்பே சிவம் – கமல் படம்னாலே எதாவது ஒரு இடத்துல நம்மள டச் பண்ணிடுவாரு. அதுவும் அன்பே சிவம் கடவுள் சீன், சொல்லவே வேணாம். ட்ரெயின் ஆக்ஸிடன்ட்ல அடிபட்ட பையன் திடீர்னு சீரியஸாகி இறந்துடுவான். மாதவன் அழுதுட்டே, “என்ன மாதிரி டிசைன் இது. ட்ரெயினை கௌக்க வைச்சு, சின்ன பையன சிக்க வைச்சு, சாகுற நிலைமைக்கு கொண்டு போய், கிடைக்க முடியாத பிளட் குரூப் கிடைக்க வைச்சு, பிழைக்க வைச்சு, இப்போ வழில திடீர்னு சாகடிச்சா, என்ன கொடுமை இது. ச்சே, என்ன மாதிரி கடவுள் இது? நான் உங்கள மாதிரி இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்குனு” அவர் சொல்லும்போது கமல், “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைனு யார் சொன்னது? ரொம்ப நாளாவே கடவுள் நம்பிக்கை இருக்கு”னு சொல்லுவாரு. மாதவன், யார் கடவுள்னு கேட்டதும் கை காமிச்சு, “முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே, அதுதான் கடவுள்”னு சொல்லுவாரு. என்ன இந்த பணிவுனு கேட்டா, நானும் கடவுள்தான்னு டக்னு ரிப்ளை கொடுப்பாரு. அப்படி யார் சொன்னானு கேட்டா, மலை மேல பொட்டிக்கடை வைச்சிருக்குற அம்மா சொன்னாங்க. அன்னைல இருந்து நானும் கடவுள்னு சொல்லுவாரு. கண்ணு கலங்கும். உலகத்தையும் இந்த மனிதர்களையும் நேசிக்கணும்னு தோணும்.

பண்ணையாரும் பத்மினியும் – இந்தப் படத்தையெல்லாம் அடிச்சுக்க இன்னொரு படம்லாம் வராது தெரியும்ல. படமே ஃபீல் குட்டான் படம். மனசுல உள்ள பாரமெல்லாம் இறக்கி வைச்சு ஃபீல், படம் பார்த்து முடிச்சதும் வரும். அதுல பிளஸ்ஸே, பண்ணையாருக்கும் செல்லமாளுக்கும் உள்ள அந்த இளமையான காதல்தான். நைட்டு செல்லம்மா தூங்க போகும்போது, செல்லம்மா, “யோவ், இப்படி விளையாட்டுதனமாவே இருக்கியே, எனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா, நீ எப்படியா இருப்ப”னு கேப்பாங்க. “சொல்லுயா, எனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா தாங்குவியா?”னு கேட்டுட்டு, “அதெல்லாம் நீ தாங்குவ, நீ எப்படிப்பட்ட ஆளு”னு கேட்டு கண்ணீர் விடுவாங்க. “உன்னை என்னை மாதிரி வேற யாராலயும் பார்த்துக்க முடியாது. தெரியும்ல”னு சொல்லுவாங்க. செல்லம்மா எழும்பி பார்த்தா,  பண்ணையார் தூங்கிடுவாரு. இவங்களும் தூங்கிடுவாங்க. அப்புறம், பண்ணையார் மெல்ல எழும்பி செல்லம்மா பக்கத்துல வந்து உட்கார்ந்து அவங்களையே பார்த்துட்டு இருப்பாரு. காதல்னா சும்மாவா!

சில்லு கருப்பட்டி – இந்தப் படத்துல நிறைய சீன்ஸ் புடிக்கும். ஆனால், குறிப்பிட்டு சொல்லணும்னா ரெண்டு சீன். ஒண்ணு, பார்ன் & ஸ்டஃப் பத்தி பேசும்போது, மியா கலீஃபா படம்லாம் புடிக்குமானு கேப்பாங்க. அதுக்கு மணிகண்டன் யாரையெல்லாம் பார்ன்ல பார்ப்பேன்னு டக் டக்னு பெயர் சொல்லுவாரு. ஹீரோயின் அதை பார்த்துட்டு ஷாக் ஆகி, யூனியன் மினிஸ்டர்ல 10 பெயர் வரிசையா சொல்லுங்கனு கேப்பாங்க. சிரிப்பாங்க. பார்ன் பார்க்குறதால அவங்கள கேவலமா பேசாமல் நார்மல சக மனுஷங்களைப் பத்தி பேசுற மாதிரி மணி பேசுவாரு. கியூட்னு சொல்லி முடிப்பாங்க. அதேமாதிரி காக்கா கதை சொல்றது. ஒரு நாள் கால்ல அடிபட்டு பறக்க முடியாமல் இருந்துச்சு. வெட்னரி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனேன். கொஞ்சம் நாள்ல சரியாச்சு. அதுல இருந்து அது கண்ணுக்கு மின்னுற மாதிரி எதாவது கிடைச்சா, எங்கிட்ட வந்து கொடுக்கும். நான் இங்க இல்லைனாலும் வந்து வைச்சுட்டுப் போகும். இதெல்லாம் அன்கண்டிஷனல் லவ் தெரியுமா!

Also Read – உறியடி, ஜில் ஜங் ஜக்.. கமல் படங்கள் மட்டுமில்ல, லோகேஷ் கனகராஜ் ஃபேவரைட் படங்கள்

வேட்டையாடு விளையாடு – கமல் தன்னோட ஃப்ளேஷ்பேக்லாம் ஜோதிகாக்கிட்ட சொல்லிட்டு, “அப்பா, அம்மா, வேலை, அக்கா, தங்கச்சி, அவங்க குழந்தைங்க எல்லாம் என்னை இயங்க வைக்குதுனு சொல்லிட்டு, அப்புறம் காலம், காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும். நீங்க போய் சந்தோஷமா படுத்துக்கோங்க. எதைப் பத்தியும் நினைக்காதீங்க. காலைல எல்லாம் சரியாயிடும். நான் அப்படிதான் டெய்லி நினைச்சுக்குவேன்”னு டயலாக் சொல்லுவாரு. நம்ம பக்கத்துல நின்னு நமக்காக சொல்ற மாதிரி இருக்கும். நைட்டு தூக்கம் வராம, கண்டதையெல்லாம் நினைச்சிட்டு இருக்கும்போது இந்த சீனைப் பாருங்க. பெட்டரா ஃபீல் பண்ணுவீங்க.

சூரரைப் போற்று – கல்யாணம் ஆனப்பிறகு மரத்தடில உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க. பொம்மி 15,000 கடனா தறியானு சூர்யா கேப்பாரு. ரெஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் மட்டும் கொடு, கண்டிப்பா சக்ஸஸ் ஆயிடுவேன் அப்டினு சொல்லுவாரு. பொம்மி செம கடுப்பாகி பேசாமலேயே வரும். வந்துட்டு கடைக்குள்ள போறதுக்கு முன்னாடி, “மாறா 15 இல்லை 20,000 தறேன். பெரிய விஷயம் பண்றதைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க. கொஞ்சம் பெரிய மனுஷன் மாதிரியும் நடந்துக்கோங்க. எங்கிட்ட எதுக்கு இந்த வரட்டு கௌரம்”னு வெட்டி முறிச்சு மூஞ்சுக்கு நேரா சொல்லுவாங்க. சூர்யா அப்படியே கட்டிப்புடிச்சு, கண்ணத்துல முத்தம் வைச்சுட்டு போவாரு. செம ஃபீலா இருக்கும். ஈகோவை தூக்கிப்போட்டுட்டு போய் பேசுங்க பயபுள்ளைகளா!  

திருச்சிற்றம்பலம் – தனுஷ் ரொம்ப நாள் கழிச்சு செமயான ஃபீல் குட் படம் கொடுத்துருக்காரு. ஒவ்வொரு சீனும் ஃபீல் குட்டாதான் இருக்கும். மாடில தனுஷ் உட்கார்ந்து ஃபீல் பண்ணிட்டு இருப்பாரு. ஷோபனா சரியா போய் உட்கார்ந்து ஆறுதல் சொல்லுவாங்க. தோள்ல கைப்போட்டி தட்டிக்கொடுத்து, தனியா விடணுமானு கேப்பாங்க. ஆமானு சொல்லுவாங்க. செம சீன் அதெல்லாம். அதைப் பார்த்து நம்ம ஃப்ரெண்ட்ஸும் நமக்கு தட்டிக்கொடுப்பாங்கனு நினைப்போம். ஆனால், நமக்கு கிடைக்கிறதுலாம் ஆலன் வகை ஃப்ரெண்ட்ஸ்தான்.

உத்தம வில்லன் – கமல் படங்கள்தான் ஃபீல்குட்னு சொன்னா நிறைய நியாபகம் வந்துட்டே இருந்துச்சு. உத்தம வில்லன் படம் எத்தனை பேர் பார்த்துருப்பீங்கனு தெரியலை. ஆனால், அதுல வர்ற அப்பா சீன், தமிழ் சினிமால வேற யார் படங்கள்லயும் பார்க்க முடியாத சீன். ப்ரெயின் டியூமர்னு பையன்கிட்ட சொன்னதும், நீங்க இப்படிலாம் விளையாடலாமானு வந்து கேப்பான். வந்து உட்கார்ந்து பையன்கிட்ட கோல் என்னனு கேப்பாரு. “ஸ்கிரீன் பிளே எழுதணும். கோடம்பாக்கத்துல இருக்க எல்லாத்துக்கும் நீங்க யாருனு காட்டணும்”னு பையன் சொன்னதும் ஜிப்ரான் மியூசிக் போடுவாரு. அப்படியே அழுகை தோண்டை கவ்வும். டைம் இல்லடா, எல்லார்கிட்டயும் பேசுங்கடானு சொல்லும். அதேமாதிரி லெட்டர் படிக்கிற சீன். சான்ஸ்லெஸ் சீன்.

மயக்கம் என்ன – கிளைமாக்ஸ். எவ்வளவோ காட்சிகள் செமயா செல்வராகவன் எடுத்துருக்கலாம். ஆனால், இந்த கிளைமாக்ஸ் எப்பவும் மாஸ். ஃப்ரெண்ட்ஸ்க்குலாம் தேங்ஸ் சொல்லிட்டு நடந்து வருவாரு. கொஞ்சம் நின்னு யோசிச்சு திரும்ப வந்து, மனைவி பத்தி பேசுவாரு. “ஹாய் யாமினி, யாமினி என்னோட மனைவி. இந்த அவார்ட், கை தட்றது எல்லாம் என்னோட வொய்ஃப்க்குதான் போய் சேரணும். அவ இரும்பு மனுஷி. தன்னந்தனியா போராடி என்னை இங்க நிக்க வைச்சிருக்கா. எத்தனை வருஷம், எவ்வளவு வலி நிறைய தாங்கியிருக்கா. உங்களோட சேர்ந்து நானும் அவளுக்கு கைதட்றேன்”னு சொன்னதும் நம்ம கண்ணுலயே, ஏதோ, நம்மளே ஜெயிச்ச மாதிரி ஃபீல் ஒண்ணு வந்து கண்ணீர் வரும். வேற லெவல்யா!  

தமிழ் சினிமால இன்னும் எக்கச்சக்கமான ஃபீல் குட் சீன்ஸ் இருக்கு. அதெல்லாம் ஒரு வீடியோல சொல்ல முடியாது. பாட்காஸ்ட் பண்ணா பல மணி நேரம் போகும். அதேமாதிரி, மலையாள சினிமாலயும் அவ்வளவு சீன்கள் இருக்கு. உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top