நடிகர்கள் அரசியலுக்கு வர்றது ரைட்டா தப்பாங்கிற டிஸ்கசன் பலகாலமா நம்ம ஊர்ல நடந்துக்கிட்டிருக்கு. ஆனாலும் அப்போ எம்.ஜி.ஆர் தொடங்கி இப்போ ரீசண்டா விஜய் வரைக்கும் பல நடிகர்கள் சினிமாவுல இருந்து அரசியலுக்கு போய்க்கிட்டுதான் இருக்காங்க. அதேசமயம் இன்னொருபக்கம் ஆச்சர்யமா அரசியல்ல இருந்து சினிமாவுக்கு வரதும் நடக்கத்தான் செய்யுது. ஆமாங்க இந்த வீடியோவுல அரசியல்ல இருந்து சினிமாவுக்கு வந்து நடிச்ச சில பிரபலங்கள் பத்திதான் இப்போ நாம பாக்கப்போறோம்
தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தையாக கர்ஜிக்கும் தொல் திருமாவளவன் சினிமாவுல நடிச்சிருக்கிறாரு. 2007-ல, ரவிச்சந்திரன்வங்கிறவரு டைரக்ட் பண்ண, ‘அன்புத்தோழி’ படம்தான் திருமாவளவன் முதன்முதலா திரையில தோன்றுன படம். படத்துல ‘கருப்பு’ங்கிற கேரக்டர்ல, ஒரு புரட்சிப்படை இயக்கத் தலைவரா நடிச்சிருப்பாரு திருமா. அந்த டைம்ல அவர் ஒரு கன் வெச்சுக்கிட்டு டெரிஃபிக்கா போஸ் கொடுத்து வெளியான போஸ்டர்கள்லாம் ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு. அதுக்கப்புறம் மன்சூர் அலிகான் டைரக்ட் பண்ணி ஹீரோவா நடிச்ச, ‘என்னைப் பார் யோகம் வரும்’ ங்கிற படத்துல ஒரு சிங்கர் ரோல்லயும், மின்சாரம்ங்கிற படத்துல சி.எம் ரோல்லயும் நடிச்சிருப்பாரு திருமா. இதுக்கு இடையில ஒரு முழுநீள ஹீரோவா ஒரு படத்துல நடிக்கவும் திருமா ப்ளான் பண்ணாரு. இயக்குநர் களஞ்சியம் டைரக்சன்ல ஸ்டார்ட் ஆன அந்தப் படத்துக்கு‘கலகம்’ அப்படின்னுகூட டைட்டில் வெச்சாங்க. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை அது மெட்டீரியலைஸ் ஆகலை.
நாஞ்சில் சம்பத்

துப்புனா தொடைச்சிக்குவேன்னு அசால்டா திமுக, அதிமுக, மதிமுக, அமமுகன்னு பல கட்சிகள்ல இருந்து அரசியல் பண்ணிக்கிட்டிருந்த நாஞ்சில் சம்பத்தை ஆர்.ஜே.பாலாஜி தன்னோட எல்.கே.ஜி படம் மூலமா சினிமாவுல அறிமுகப்படுத்துனாரு. அழகு மெய்யப்பன்ங்கிற ரோல்ல அவர் நடிச்ச விதமும் அவரோட தோற்றமும் பாக்க ஃபன்னியா இருக்க, அடுத்தடுத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, செம்பி, மெடிக்கல் மிராக்கள்னு இன்னமும் பிஸியா நடிச்சுக்கிட்டிருக்காரு.
Also Read – இந்த விஷயங்கள்லாம் உங்ககிட்ட இருக்கா? அப்போ, நீங்களும் சீமான்தான்..!
ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சினிமாவுல நடிச்சிருக்கிறாரு. 1995-ல முரளி, ரோகினி நடிப்புல வெளியான தொண்டன் அப்படிங்கிற படம்தான் ராமதாஸ் நடிச்ச படம். அந்தப் படத்துல குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்துற ஒரு கொடூர முதலாளிக்கு எதிரா போராடி உயிர் தியாகம் செய்ற டாக்டர் சஞ்சீவி ராம் அப்படிங்கிற ரோல்ல நடிச்சிருப்பாரு ராமதாஸ். கொஞ்சம் கேமரா ஃபியர் அவர் முகத்துல தெரிஞ்சாலும் அவர் வர்ற சீன்லயும் சரியும் அவரோட டயலாக்ஸ்லயும் சரி நக்கலுக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருக்கும்.
மு.க.ஸ்டாலின்

நம்ம முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் படங்கள்லயும் சீரியல்களயும் நடிச்சவருதாங்க. 1987-ல கலைஞர் கதை வசனத்துல உருவாகி, கார்த்திக், சீதா நடிச்ச ‘ஒரே ரத்தம்’ ங்கிற படம்தான் ஸ்டாலினுக்கு முதல் படம். நந்தகுமார்ங்கிற படித்த பட்டியலின இளைஞர் கதாபாத்திரத்துல பல புரட்சிகரமான வசனங்களை பேசி நடிச்சிருப்பாரு ஸ்டாலின். அதுக்கப்புறம் 1988-ல வெளியான ‘மக்கள் ஆணையிட்டால்’ அப்படிங்கிற படத்துலயும் குறிஞ்சி மலர், சூர்யா அப்டிங்கிற ரெண்டு சீரியல்கள்லயும் நடிச்சிருக்காரு. ஆனா அதையெல்லாம் பாக்கும்போது அரசியல் கைவந்த அளவுக்கு அவருக்கு நடிக்க வரலையோன்னுதான் தோணுச்சு.
பழ கருப்பையா

இவரை ஏன் லிஸ்ட்ல சேர்த்தீங்க அப்படிங்கிற அளவுக்கு உங்கள்ல பல பேருக்கு இவரை ஒரு நடிகராதான் முதல்ல பரிச்சயம் ஆகியிருக்கும். அதாவது நடிக்க வந்ததுக்கப்புறம் அரசியலுக்கு வந்த பிரபலம்னு நீங்க இவரை நினைக்கலாம். ஆனா அதான் இல்லை, தன்னோட இளம் பிராயத்துலேர்ந்தே திமுக,அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள்ல பயணிச்ச இவர் முதன்முதலா சினிமாவுல நடிச்சது 2008-ல வெளியான ‘திருவண்ணாமலை’ படத்துல. அப்புறம் தொடர்ந்து ‘அங்காடிதெரு, சர்க்கார், ஆக்சன்ன்னு பல படங்கள்ல நடிச்சதும் இல்லாம, இன்னமும் பீஸியா நடிச்சுக்கிட்டும் இருக்காரு
ஜேகே ரித்தீஷ்

அதிமுக கட்சி நிர்வாகியா தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி அப்புறம் திமுகவுக்கு வந்த ஜே.கே.ரித்தீஷ் 2007-ல நடிகர் சின்னி ஜெயந்த் டைரக்சன்ல உருவான காணல் நீர்ங்கிற படம் மூலமா ஹீரோவா சினிமாவுல அறிமுகமானாரு. தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம்னு கொஞ்சம் ஒரு டைப்பான படங்கள்ல நடிச்சுக்கிட்டிருந்தவருக்கு ஒரு பெரிய கேப்புக்கு அப்புறம் 2019-ல வெளியான எல்.கே.ஜி படமும் அந்தப் படத்துல இவர் நடிச்ச கதாபாத்திரமும் ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்துச்சு. ஆனா படம் வெளியான அடுத்த சில மாசத்துலயே ஜே.கே. ரித்தீஷ் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துபோய்ட்டாரு.
சு.திருநாவுக்கரசர்

எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அரசியலில் பயணித்துவரும் திருநாவுக்கரசும் சினிமாவுல நடிச்சிருக்காரு. அதுவும் ஹீரோவா. 1990-கள்ல அரசியல் பிசிக்கும் நடுவுல சினிமா டிஸ்டிர்பியூசன்லயும் ஈடுபட்டு வந்த திருநாவுக்கரசர், 1992-ல வெளியான அக்னிப்பார்வைங்கிற படம் மூலமா ஹீரோவா ஆனாரு. சிவாஜியை வெச்சு தங்கபதக்கம் மாதிரியான பல ஹிட் படங்களை தந்த டைரக்டர் பி.மாதவன்ந்தான் இந்த படத்தை டைரக்ட் பண்ணியிருப்பாரு. இதுல இவருக்கு பேரா பண்ணது சரண்யா பொன்வண்ணன், படத்துக்கு மியூசிக் இளையராஜா.. லுக் வைஸ் ஒரு பக்கா ஹீரோ மெட்டீரியலா இவர் தெரிஞ்சாலும் இவர் நடிச்ச முதல் படம் பெருசா போகலையோ என்னவோ திரும்பவும் நடிக்கனும்னு அவருக்கு தோணலைபோல.
சரி.. நீங்க சொல்லுங்க.. இதுல எந்த அரசியல் பிரபலம் நடிச்ச படத்தை நீங்க முன்னாடியே பார்த்திருக்கீங்க. இதுல யாரோட நடிப்பு ரொம்ப சூப்பரா இருந்துச்சு.. யாரோட நடிப்பு ரொம்ப காமெடியா இருந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க!
0 Comments