Thalapathy 67

விக்ரமைவிட உக்ரமா இருக்கும்.. தளபதி 67 அலப்பறைகள்!

வாரிசு கலெக்‌ஷனைப் பார்த்தே இப்படி ஷாக் ஆகுறீங்களே, அடுத்து எங்க லோகி பாய் எடுக்குற படம்லாம் இண்டஸ்ட்ரீ ஹிட்டாகி, பான் இந்தியா அளவுல பாக்ஸ் ஆஃபீஸை பறக்கவிட போகுது அதெல்லாம் பார்த்து போய் சேர்ந்துராதீங்கடானு சோஷியல் மீடியால வார்னிங்கை போட்டு ரூட்டு கொடுத்துட்டு இருக்காங்க நம்ம தளபதியன்ஸ்.

தளபதி 67 கூட்டணி
தளபதி 67 கூட்டணி

* இந்த தடவை 50 – 50லாம் இல்லை. 100% என்னோட படம்னு லோகேஷ்..

* விஜய் என் வாயை அடிச்சு குழப்பிட்டாரு. படம் இண்டரஸ்டிங்கா வருதுனு மிஷ்கின்..

* லோகேஷ் யூனிவர்ஸ்ல படம் வர்றதுனால. நான் ஒருவேளை வரலாம்னு ஃபகத் ஃபாஸில்..

* விக்ரமைவிட உக்ரமா இருக்கும்னு ரத்னகுமார்..

இப்படி பேசி பேசி நமக்கே ஹைப் ஏத்தி, நீங்க படமே எடுக்கலைனாலும் பரவால்ல. படத்துக்கான அப்டேட் மட்டும் சொல்லுங்கன்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க. எல்லார் மண்டைலயும் ஓடுறது தளபதி 67 அப்டேட்தான். இன்னும் சிலர், ஒருபடி மேல போய், கதைலாம் எழுத ஆரம்பிச்சிட்டாங்ஜ. அதுவும் அந்த மூணாவது கதை செம மேட்டரா இருக்கு.

கைதி டில்லி இருக்காருல அவரும் விஜய்யும் ஜெயில் மேட், விக்ரமின் வெறித்தனமான ஸ்டூடன்ட்தான் விஜய், அதெல்லாம் இல்லைங்க. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் ரீமேக்தான் தளபதி 67. எல்லாமே வதந்தி, ரோலக்ஸவிட கொடூரமான கேங்க்ஸ்டராதாங்க நடிக்கிறாருனு எக்கச்சக்கமா உருட்டுராங்க. லோகி, கேங்ஸ்டர் படம்னு சொன்ன, இப்போ காலேஜ் பையன் லுக்ல தளபதி சுத்துறாருனு இன்னொரு குரூப். நமக்கே, அவரை நிம்மதியா படம் எடுக்க விடுங்கடான்ற ஃபீல் வந்துருச்சு. இதுக்கு இடையில எடிட்டர்ஸ் வேற. ஏன்டா, இப்படி பண்றீங்க? என்ன மாதிரி கதையெல்லாம் சுத்துது? இப்படி கிளப்பி விடுறது நியாயமா?

கதை 1 – முன்னால மிகப்பெரிய கேங்ஸ்டரா வாழ்ந்தவர், விஜய். ஆனால், அந்த பழைய கேங்ஸ்டர் லைஃபை தூக்கி எறிஞ்சுட்டு குடும்பத்தோட வாழ்ந்துட்டு இருக்காரு. பல வருஷம் கழிச்சு அவரோட அண்ணனே அவரை பழி வாங்க வராரு. அவரை எப்படி சமாளிச்சு மாஸா வெளிய வராருன்றதுதான் கதை. இந்தக் கதைல விஜய் பார்ல மது விற்பனையாளரா வேலை பார்க்குறாரு. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தோட கதையை கொஞ்சம் தழுவி மாஸ் எலிமென்ட்ஸ கூட்டி ஃபேன்ஸ்க்கு ஏற்ற மாதிரி செமயான பேக்கா லோகேஷ் இந்தக் கதையை ரெடி பண்ணியிருக்காரு.

கதை 2 – விஜய் தன்னோட ஃபேமிலியோட அமைதியா வாழ்ந்துட்டு இருக்காரு. மனைவியா திரிஷாவும் மகளா பிக்பாஸ் ஜனனியும் நடிக்கிறாங்க. 50 வயசான விஜய் ரெஸ்டாரண்ட் ஒண்ணு வைச்சிருக்காரு. அதுல விஜய் கூடவே மிஷ்கின் இருக்காரு. அவர் ரெஸ்டாரண்டுக்கு ஒருநாள் ரவுடி கும்பல் ஒண்ணு வருது. அவரோட மகளை டீசிங் பண்றாங்க. அதைத் தொடர்ந்து நிறைய பிரச்னைகளை விஜய் சந்திக்கிறாரு. சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலில இருக்குற விஜய், இப்படிலாம் பிரச்னை வர்றப்ப அதை எப்படி கையாள்றாரு. ரவுடி கும்பலை எப்படி போட்டு பொளக்குறாருன்றரதுதான் கதை. சமூக கருத்து இந்தப் படம் முழுக்க இருக்குதான். அதேநேரம் விஜய் கெட்டப்லாம் மாஸா செதுக்கியிருக்காராம்.

தளபதி 67 கூட்டணி
தளபதி 67 கூட்டணி

கதை 3 – மும்பைல மிகப்பெரிய கேங்ஸ்டரா விஜய் இருக்குறாரு. அவரோட கதவை ஒருநாள் ஒருத்தங்க ஓங்கி தட்றாங்க. அப்போ, கையில துப்பாக்கி எடுத்துட்டு யாருனு விஜய் கேக்குறாரு. டக்னு கதவை திறந்ததும், கமல் நிக்கிறாரு. உடனே, விஜய், சீனியர் நீங்க எப்போ மும்பை வந்தீங்க. சொல்லவே இல்லை. சுட்ருப்பேன்னு பேசுறாரு. என்ன விஷயம்னு விஜய் கேட்டதும், மும்பைல ஒரு பெரிய கேங்ஸ்டர் இருக்கான். அவனை கொலை பண்ணனும்னு சொல்றாரு. அதுக்கு விஜய், இப்போ யாரையும் கொலை பண்றதில்லைனு ரிப்ளை பண்றாரு. அவன் பேரு ரோலக்ஸ்னு சொன்னானு கமல் கேட்க, எப்போ ஆரம்பிக்கலாம்னு விஜய் கொலவெறியோட சொல்ல, படம் ஆரம்பிக்குது. என்னடா, ஸ்கிரீன் பிளே, டயலாக், ஸ்டோரி போர்டுலாம் ரெடி பண்ணி எழுதி வைச்சிருக்கீங்க? ஆனால், கதை கேட்க நல்லாதான் இருக்கு.

கதை 4 – ஒரு சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையை விஜய் வாழ்ந்துட்டு இருக்காரு. எதிர்பாராத விதமாக அவர் வாழ்க்கைல நடக்கக்கூடாது அசம்பாவிதங்கள் நடக்குது. அப்போ, அவர் கொலையும் பண்ணிடுறாரு. அந்தக் கொலையைப் பத்தி அந்த செத்த ஆளோட கேங்குக்கு தெரிய வருது. அப்போ ஃப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகுது. கொன்னவனே மிகப்பெரிய கேங்ஸ்டர்தான். அவன் இன்னும் சாகலையானு கேக்குறாங்க. அவனை கொல்ல ஆள்கள் வர்றாங்க. அவங்களை கொன்னுட்டு திரும்ப எப்படி சாதாரண வாழ்க்கைக்கு விஜய் திரும்பி வராருன்றதுதான் கதை. பக்காவா, பாட்ஷா ஸ்டைல்ல இந்தப் படம் இருக்கப்போகுதாம்.

Also Read – சென்னை மவுன்ட் ரோடில் 2K கிட்ஸ் அறிந்திடாத தியேட்டர்கள்!

விஜய்யோட ஹேர் ஸ்டைல் பார்த்தீங்களா காலேஜ் ஸ்டூடண்டா ஃப்ளாஷ்பேக்ல வருவாருனு நினைக்கிறேன். இல்லைங்க, ஸ்டைலிஷான கேங்ஸ்டருங்கனு இன்னும் எக்கச்சக்கமான கதைகள் சுத்திட்டு இருக்கு. எல்லாம் கேட்கும்போது என்னென்ன சொல்றாங்க பாருங்கனுதான் தோணுது. இவங்கள்லாம் ஒருபக்கம் இப்படி சொல்ல, இன்னொரு பக்கம் லோகேஷ் படங்களோட கோ ரைட்டர் ரத்னா, விக்ரமைவிட அடுத்தபட ரொம்ப உக்கிரமா இருக்கும்னு ரைமிங்க்லலாம் இண்டர்வியூ கொடுத்து ஹைப் ஏத்தி விடுறாரு. ஹெச்.வினோத் சொன்ன மாதிரி, இவ்வளவு கதைகள் சொல்லும்போது எதாவது கொஞ்சம் கண்டிப்பா உண்மையான கதைக்கு மேட்ச் ஆயிடும். அப்போ, அன்றே கணித்தார்னு அவங்கவங்க பேர் போட்டுப்பாங்க. எதுக்கு?

ஒரு படைப்பாளிக்கு எந்தவிதமான அழுத்தமும் இருக்கக்கூடாது. அப்போதாம் அவங்க நினைச்சதை எடுக்க முடியும். அவங்க நினைச்ச மாதிரி அவுட் புட் கொடுக்க முடியும். ஆனால், இன்னைக்கு எல்லா டைரக்டர்ஸும் பிரஷர் குக்கர்ல வேலை பார்த்த மாதிரிதான் வேலை பார்க்குறாங்க. அதுவும் முன்னணி நடிகர்கள்னு வந்துட்டா சொல்லவே வேணாம். ஒரு விஷயம் நாம எல்லாரும் புரிஞ்சுக்கணும். எண்ட் ஆஃப் தி டே, அவங்க படத்தை எடுத்து பாக்கெட்ல வைச்சுட்டு சுத்தப் போறது இல்லை. ஃபஸ்ட் லுக், செகண்ட் லுக், டீஸர், டைட்டில் அனௌன்ஸ்மெண்ட், ஃபஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர், ஆடியோ லாஞ்ச் அப்படி இப்படினு அப்டேட்டுகளை கொடுத்துட்டேதான் இருக்கப்போறாங்க. அதுவரைக்கும் அவங்கவங்க வேலையை பார்த்துட்டு அமைதியா இருந்தா, பிரஷர் இல்லாமல், அவங்க.. அவங்க வேலையை பார்ப்பாங்க.

தளபதி 67 கூட்டணி
தளபதி 67 கூட்டணி

லோகேஷ் ஏற்கனவே சொன்ன மாதிரி 100% அவரோட படமாதான் இருக்கப்போகுது. ஃபைட்டு, பி.ஜி.எம், கதை, டயலாக்ஸ்னு எல்லாமே சும்மா பட்டாஸா இருக்கப்போகுது. அதுனால, அமைதியா உங்க வேலையை பாருங்க. படம், அனௌஸ்மெண்ட்லாம் வரும்போது பட்டய பிரிச்சிடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top