மறக்குமா நெஞ்சம்… 2’கே கிட்ஸ்க்கு லவ் டுடேனா, 90’ஸ் கிட்ஸ்க்கு சிவா மனசுல சக்தி!

லவ் டுடே பயங்கரமா யூத் ஃபுல்லான ரகளையான படம்னு 2கே கிட்ஸ்லாம்  கொண்டாடிட்டு இருக்காங்க. இந்த மாதிரி 90ஸ் கிட்ஸ்க்கு ஒரு படம்னா அது 2009-ல வெளிவந்த சிவா மனசுல சக்தி படம்தான். இந்தப் படம் பிடிக்காதவங்களே இருக்க முடியாது. 12 வருசம் கழிச்சு இன்னமும் ஏன் சிவா மனசுல சக்தி படம் பலருக்கும் ஃபேவரிட்டா இருக்குங்குற 4 காரணங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

Siva Manasula Sakthi
Siva Manasula Sakthi

* டாம் & ஜெர்ரி லவ்

ஹீரோவும் ஹீரோயினும் எலியும் பூனையுமா சண்டை போட்டுட்டு இருக்குற மாதிரியான படம் எப்பவும் ஹிட் அடிச்சிருக்கு. இன்னைக்கு நேத்து இல்ல அன்பே வா, தில்லானா மோகனாம்பாள் காலத்துல இருந்து அப்படித்தான். ஒரு டிரெய்ன்ல சக்தியை மீட் பண்ற சிவா, அவகிட்ட ‘நான் ஆர்மில இருக்கேன். எப்பவாச்சும்தான் ஊருக்கே வரமுடியும்’னு ஃபீல் பண்ணுவான்.. அதுக்கு சக்தி ‘நான் ஏர்ஹோஸ்டஸ் வானத்துல  போற ஃப்ளைட் சவுண்டை வச்சே அது என்ன ஃப்ளைட்னு சொல்வேன்’னு சீன் போடுவா.. கடைசில பார்த்தா ரெண்டுமே பக்கா உருட்டா இருக்கும். அது தெரிய வர்றப்போ என்னெல்லாம் கலாட்டா நடக்குதுனு ஆரம்பத்துல இருந்து கடைசி வரை செம ஜாலியா போற படம்தான் சிவா மனசுல சக்தி. சிவாவும் சக்தியும் க்ளைமேக்ஸ் வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் வம்பிழுத்துட்டு சண்டை போட்டுட்டு இருப்பாங்க. அலைபாயுதே சக்திக்கு அப்பறம் பிரபலமானது இந்த சக்திதான். செமயா அந்த கேரக்டரை அனுயா ஹேண்டில் பண்ணியிருப்பாங்க. படத்தோட பெரிய பிளஸ் ஜீவாதான். குட்டி குட்டி ரியாக்‌ஷன்கூட ரசிக்கும் படியாதான் இருக்கும். வாட்ச் மேனுக்கு முத்தம் கொடுக்குறது. சட்டையில்லாமல் கெத்தா உட்கார்ந்துருக்குறது. போலீஸ்கிட்டயே காசு வாங்கிட்டு போறது. பைக்கு உர்… உர்ருனு முறுக்குறதுனு அடிச்சு துவம்சம் பண்ணியிருப்பாரு அந்த கேரக்டரை. ஷக்தி – சிவா சண்டையும் லவ்வும் சேர்ந்து செம்ம ஃபீல் குட் படமா நம்மள செமயா என்டர்டெடின் பண்ணிச்சு.

* காமெடி அன்லிமிட்டட்!

எஸ்.எம்.எஸ் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சீரியஸான சீன் ஒண்ணுகூட நியாபகம் இருக்காது. அப்படியே இருந்தாலும் காமெடிக்கான டெம்ப்ளேட்டாதான் மனசுல பதிஞ்சு இருக்கும். ஷக்தி சண்டை போட்டுட்டு போகும்போது சிவா கத்திட்டு இருப்பாரு. அப்போ, சந்தானம், “நல்லவங்க பேச்சு ரீச் ஆகும். ஆனால், என்ன கொஞ்சம் லேட் ஆகும்”னு பஞ்ச் போட்டு முடிப்பாரு. இப்படி சீரியஸா சீன் தொடங்குனாகூட காமெடியாதான் முடியும். ஃபைட் சீனைக்கூட காமெடியாதான் முடிப்பாங்க. அம்மாக்கூட சண்டை போடுற சீன்கூட அப்படிதான். சந்தானம் காமெடில எஸ்.எம்.எஸ் ஒன் ஆஃப் தி பெஸ்ட். “அவ போய் ஆறு மாசம் ஆகுது”, “ஐயயோ பயமா இருக்கு கடிச்சிறாத”, “மட்டன் குஷ்காவா”, “இங்கிலீஷ் புக்கு பொம்மைதான பார்க்குற”, “ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி”, “இவர்தான் என் பைக் டிரைவர்”னு படத்துல உள்ள எல்லா வசனமும் இன்னைக்கும் நாம பயன்படுத்துறதுதான். ஜீவானு சொன்னாலே எல்லாருக்கும் “மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்”தான் நியாபகம் வரும். ஷக்திக்கு ஃபோன் பண்ணி சடை, வடைனு ஷக்தியை கலாய்க்கிறதுலாம் அல்டிமேட். அந்த சீனை பார்த்துட்டு நம்ம கிரஷ்க்குலாம் ஃபோன் பண்ணி கலாய்ச்ச காலங்கள் இருக்கு. “மருதநாயகத்துல இருந்து பாட்டு போடுங்க”னு சொல்றதுலாம் வேறலெவல். இப்படி சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்.  

Siva Manasula Sakthi
Siva Manasula Sakthi

* செம்ம ஃப்ரெஷ் யுவன்

யுவனோட பெஸ்ட் ஆல்பம்ல சிவா மனசுல சக்தியும் ஒண்ணு. இன்னொரு ஸ்பெஷல், இந்தப் படத்துல வந்த எல்லா பாட்டையும் நா.முத்துக்குமார்தான் எழுதியிருப்பாரு. எம்.ஜி.ஆர் இல்லைங்க, நம்பியார் இல்லைங்க. நாங்க எல்லாம் நடுவுலங்க. இதுதான் முதல் இண்ட்ரோ பாட்டு. படத்தோட ஸ்டார்டிங்லயே சொல்லிட்டாங்க. நம்மள ரெப்ரஸன்ட் பண்ற மாதிரியான படம்தான் எஸ்.எம்.எஸ்னு. அதுலயே ஃபுல் அடிக்க மாட்டோங்க. பீர் அடிக்க மாட்டோங்க. நங்க எல்லாம் குவாட்டர் ஃபேனுங்க, லைட் ஹவுஸ் போய் லைட் அடிப்போம் வரிகள் செம ஃபன்னா இருக்கும். அடுத்து, எல்லாருக்கும் புடிச்ச ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’. எப்பவுமே காதல் பிரிவு பாடல்கள் லிஸ்ட்ல இந்தப் பாட்டுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. இந்தப் பாட்டுல பெஸ்ட்டான ஒரு லைன் மட்டும் சொல்லவே முடியாது. ஒவ்வொரு வரியும் அட்டகாசம்தான். எதார்த்தமா இந்தப் பாட்டைக் கேட்டால் காதல் பண்ணாதவன்கூட ஃபீல் பண்ணுவான். ஒரு அடங்காப்பிடாரி மேலதானே ஆசை வைச்சேன், எப்படியோ மாட்டிக்கிட்டே… குட்டி செவுத்துல நான் முட்டிக்கிட்டேன், தித்திக்கும் தீயேனு எல்லா பாட்டுமே வேறவேற ஜானர்ல யுவன் போட்ருப்பாரு. எனக்கு ரொம்ப ஃபேவரைட்டான பாட்டு, ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய். ஷக்தி லவ் பண்றானு தெரிஞ்சதும் கிரீட்டிங் கார்டுலாம் மேல தூக்கிபோட்டு சிவா ஒரு டான்ஸ் போடுவாரு பாருங்க. ப்பா, அப்படி இருக்கும். படத்துல ரீரெக்கார்டிங்குமே அடிபொலி ரகம்தான். சக்தி மனசுல சிவானு போட்டு இடைவேளை போடுவாங்க. அதுவே செம ஐடியா.

Siva Manasula Sakthi
Siva Manasula Sakthi

* ஜாலி சர்ப்ரைஸ்

ஆர்யா திடீர்னு சர்ப்பிரைஸா வருவாரு. டைட்டில் பார்க்ல வேலை பார்க்குற மாப்ள. ஆரம்பத்துல வில்லன் மாதிரி தெரிவாரு. ஆனால், போகபோக என்னயா செம ஜாலி மாப்ளயா இருக்காறேனு தோணும். ஷக்தியை சிவா எந்த அளவுக்கு புரிஞ்சு வைச்சிருக்காருனு, ஆர்யா வந்த பிறகுதான் ஷக்திக்கே தெரியும். ஷகிலா வர்ற சீனும் வேறலெவல் விசில் சீன்தான். ஆக்சுவலா அந்த சிச்சுவேஷனைவிட, ஊர்வசி, சந்தானம்லா சிரிக்கிறது தான் சூப்பரா இருக்கும். கிளைமாக்ஸ் செம ஜாலியான கிளைமாக்ஸ். வீட்டோட போய் பொண்ணு கேட்க போவாங்க. குட்டி பாப்பா கால்லயெல்லா விழுவாரு. “நான் என்ன கட்சியா நடத்துறேன். என் கால்ல விழுற”னு, அன்னைக்கு மனுஷன் டயலாக் வைச்சிருக்காரு. ரெண்டு வீட்டுக்காரங்களும் இருக்கும்போது, “உங்க பொண்ணுக்கும் எனக்கும் மேட்டர் ஆயிடுச்சுனு” சிவா சொல்லும்போது தங்கச்சி மட்டும் ஷாக் ஆவாங்க. உடனே, ஊர்வசி, “எவ்வளவு பெரிய மேட்டர்லாம் சாதாரணமா டீல் பண்னிருக்க. இதுக்கெல்லாம் போய் என்னத்துக்கு அழுதுகிட்டு?”னு மேட்டருன்ற வார்த்தையை வைச்சு விளையாடியிருப்பாங்க. ஞான சம்பந்தம் வர்ற டிராக்குமே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். “உங்க மேட்டரை பத்தி பொண்ணுக்கிட்ட பேசுறேன்,  ஆம்பளைங்க அழுதா எனக்கு தாங்காது, அப்புறம் நானும் சேர்ந்து அழுதுருவேன்”னு அவர் பேசுறதுலாம் செம ஜாலியா இருக்கும். இப்படி கிளைமாக்ஸ கண்டிப்பா எதிர்பார்த்துருக்கமாட்டாங்க. சென்டிமென்டா முடிச்சிருந்தா, சாதாரண படமா போய்ருக்கும். கிளைமாக்ஸ்தான் படத்துலயே செம சர்ப்ரைஸ்.

இயக்குநர் ராஜேஷ், ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, ஞான சம்பந்தம், யுவன், நா.முத்துக்குமார்னு எல்லாருக்குமே கரியர்ல முக்கியமான படம் சிவா மனசுல சக்தி. எத்தனை வருஷம் ஆனாலும், இந்த காம்போ நமக்கும் ஸ்பெஷல்தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top