பத்திரிக்கை வைச்சாச்சு, டாஸ் போட்டாச்சு, கண்ணாடி உடைச்சாச்சு – ரசிகர்களின் அலப்பறைகள்!

துணிவு, வாரிசு ரிலீஸை ஒட்டி அஜித், விஜய் ரசிகர்கள் என்னவெல்லாம் அலப்பறைகள் பண்ணிருக்காங்கனு பாருங்க... அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?!1 min


Ajith - Vijay Fans
Ajith - Vijay Fans

ஒரு வழியா துணிவு, வாரிசு ரிலீஸ் ஆயிடுச்சு. அடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஃபைட்தான். தியேட்டர் கண்ணாடி உடைச்சாச்சு, போலீஸை அடிச்சாச்சு, பத்திரிக்கை வைச்சாச்சு, டிக்கெட்டை ஆட்டைய போட்டாச்சு, டாஸ் போட்டு பார்த்தாச்சு, வருத்தமான விஷயம் என்னனா கொண்டாட்டத்துல அஜித் ரசிகர் ஒருத்தர் தன்னோட உயிரையும் இழந்தாச்சு. இப்படி சென்னை மட்டும்மில்ல தமிழ்நாடு, கேரளா, ஆந்திரானு எல்லா தியேட்டர் முன்னாடியும் மிகப்பெரிய கலவரமே நடந்துட்டு இருக்கு. இதுக்கு இடையில சமீபத்துல ரஜினி ஃபேன்ஸ் வந்து, நாங்க அவங்களைவிட மோசம் தெரியுமானு பெருமையா வேற பேசியிருந்தாங்க. இந்த வீடியோல என்னென்ன அலப்பறைகள் ஃபேன்ஸ் பண்றாங்கனு பார்க்கலாம்.

டாஸ்ல ஜெயிச்சது துணிவு!

துணிவு, வாரிசுனு ரெண்டு படமும் ஒரே நாள் ரிலீஸ் ஆனதால, முக்கியமான தியேட்டர்கள்ல இருக்குற முக்கிய ஸ்கிரீன் எந்த படத்துக்கு ஒதுக்குவாங்கனு எல்லா ரசிகர்களும் ஆவலோடும் அதே நேரத்துல நம்ம தலைவன் படம் மட்டும் அந்த ஸ்கிரீன்ல வராமல் இருக்கட்டும், அவங்களுக்கு இருக்குன்ற வெறியோடவும் காத்திட்டு இருந்தாங்க. தியேட்டர் ஓனர்களுமே முடிவு எடுக்க முடியாமல் திணறுனாங்க. முடிவு எடுத்தப்பிறகு ஐய்யயோ அந்த ரசிகர்கள் என்னப் பண்ணப்போறாங்கனு தெரியலையேனு பயத்தோடவும் இருந்தாங்க. அந்தமான் தீவவுல ஆனந்த் பாரடைஸ்னு தியேட்டர் ஒண்ணு இருக்கு. அங்க மொத்தம் மூணு ஸ்கிரீன்கள் இருக்கு. ஒரு ஸ்கிரீன் துணிவு, இன்னொரு ஸ்கிரீன் வாரிசுக்குனு ஒதுக்கிட்டாங்க. மீதியிருக்குற அந்த ஒரு ஸ்கிரீன் யாருக்கு போணும்னு குழப்பம் வந்துருக்கு. ரசிகர்கள் எங்க தலைவன் படத்தைதான் போடணும்னு போட்டிப் போட்டு கத்தியிருக்காங்க. கடைசில ஒரு தீர்வுக்கு வரணும்னு தியேட்டர் ஓனர், டாஸ் போட்டு பார்ப்போம். தோக்குற பக்கம், ஜெயிக்கிற பக்கம் சண்டைக்கு போகக்கூடாதுனு சீமான் ஸ்டைல்ல பேசி டாஸ் போட்ருக்காங்க. அதுல தல ரசிகர்கள் எங்களுக்கு தலதான் வேணும்னு கேட்க, நீங்க தலனா நாங்க பூனு பஞ்ச் பேசி, பொதுவான இடம் ஒண்ணுல வைச்சு டாஸ் போட்ருக்காங்க. தல விழுந்ததும், அஜித் ரசிகர்கள் துள்ளிக் குதிச்சிருக்காங்க. விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தோட போய்ருக்காங்க.

கண்டிப்பா நீங்க வரணும்!

வாரிசு, துணிவு படங்களைப் பத்தி வழக்கம் போல கலவையான விமர்சனங்கள்தான் வந்துட்டு இருக்கு. பொதுவா விஜய் ரசிகர்கள் கூட்டத்துல அஜித் ரசிகர் மாட்டுனாலோ, அஜித் ரசிகர்கள் கூட்டத்துல விஜய் ரசிகர்கள் மாட்டுலோ, மவனே சங்குதான். ஆனால், இப்படிலாம் இருக்கக்கூடாதுனு விஜய், அஜித்தே சான்ஸ் கிடைக்கும்போதுலாம் சொல்றாங்க. பெரும்பாலும் ரசிகர்கள் கேக்குறதில்லை. ஆனால், பட்டுக்கோட்டைல விஜய் ஃபேன் ஒருத்தர் பண்ண சம்பவம் அஜித் ஃபேன்ஸை நெகிழ வைச்சிருக்குனே சொல்லலாம். விஜய் மக்கள் இயக்கத்தோட பட்டுக்கோட்டை பகுதி தலைவர், ஆதி ராஜாராம். இவரு வாரிசு படத்தை அஜித் ஃபேன்ஸ் எல்லாரும் வந்து பார்க்கணும்னு பத்திரிக்கை வைக்கிற மாதிரி பூ, பழம், வெத்திலை பாக்குலாம் வாங்கிட்டுப் போய் ஒவ்வொரு அஜித் ரசிகரையா அழைப்பு விடுத்துட்டு வந்துருக்காரு. என்ன இவங்கலாம் திருந்திட்டாங்க போலயேனு ஒரு நிமிஷம் நமக்கே கொஞ்சம் ஷாக்காதான் இருந்துச்சு.

துணிவாக கொள்ளையடித்த ரசிகர்கள்!

அஜித், விஜய் படங்களுக்குலாம் ஒருவாரம் டிக்கெட் கிடைக்கிறது பெரிய சவாலாவே இருக்கும். அதுவும் முதல் நாள் முதல் காட்சினா நினைச்சே பார்க்க வேணாம். இப்படித்தான் துணிவு, வாரிசுக்குலாம் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலைஞ்சிட்டு இருக்காங்க. ட்விட்டர்லயெல்லாம் துணிவு, வாரிசு டிக்கெட் ஹெல்ப்னு கேம்பைன் மாதிரி ரன் பண்ணிட்டு இருக்காங்க. இந்த நிலையில் அஜித்தோட துணிவு படத்துக்கான டிக்கெட்டை ரசிகர்கள் கொள்ளையடிச்ச சம்பவம் பரபரப்பை கிளப்பிச்சு. வேலூர்ல உள்ள அஜித் தலைமை நற்பணி மன்றத்துல துணிவு டிக்கெட்டை விற்பனை பண்ணிட்டு இருந்துருக்காங்க. ஒருநாள் நிர்வாகிகள் அலுவலகத்தைப் பூட்டிட்டு வீட்டுக்குப் போய்ருக்காங்க. காலைல வந்து பார்க்கும் போது, ஆஃபீஸ் பூட்டை உடைஞ்சு கிடைக்குறதைப் பார்த்து ஷாக் ஆகியிருக்காங்க. உள்ள வந்து பார்த்தா, துணிவு படத்தோட 150 டிக்கெட்டு, கொஞ்சம் பணம் எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டு போய்ருக்காங்க. எனக்கு என்ன டவுட்டுனா திருடிட்டு போனது அஜித் ஃபேனா? விஜய் ஃபேனா?

தியேட்டர் அலப்பறைகள் – சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க!

ரோகினி முக்கியமான தியேட்டர். அந்த தியேட்டர்ல மெயின் ஸ்கிரீன்ல யாரு படம் போடப்போறாங்கன்றது அந்த ரசிகர்களுக்கு கெத்தான ஃபீலிங்கைக் கொடுக்கும். இன்னொன்னு அஜித், விஜய் படங்கள் தனித்தனியா வந்தாலே தியேட்டரை பதம் பார்த்துருவாங்க. சேர்ந்து வந்தா சம்பவம் எதுவும் நடக்காமலயா இருக்கும். காலைலயே அவங்க பேனரை இவங்க கிழிக்க, இவங்க பேனரை அவங்க கிழிக்கனு கூத்தா பண்ணிட்டு இருந்தாங்க. ஒருக்கட்டத்துக்கு மேல போலீஸ் வந்து அவங்களை தடியடிலாம் நடத்தி கட்டுப்படுத்த ஆரம்பிச்சாங்க. இருந்தாலும் அவங்களை அடக்கலாம் முடியலை. போலீஸ் மேலயே கை வைச்ச வீடியோக்கள்கூட சமூக வலைதளங்கள்ல வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. பேனர் சம்பவம் ஒருபக்கம் போக, இன்னொரு பக்கம் கூட்டமா நின்னு தள்ளியே கண்ணாடி கதவுகளை உடைச்சுட்டாங்க. பாக்ஸர்ஸ், ஃபேன்ஸ்னு ஏகப்பட்ட பேருக்கு கண்ணாடி உடைஞ்சதுல காயம் ஏற்பட்ருக்கு. அந்த வீடியோலாம் பார்க்கும் போது, நமக்கே சல்லி சல்லியா நிறுக்கீட்டீங்களேடானு தோணுது. தியேட்டர் ஓனர்லாம் எங்க உட்கார்ந்து அழுதுட்டு இருக்காரோ, பாவம். இதேமாதிரி சேலம்லயும் ஒரு தியேட்டர்ல கண்ணாடியெல்லாம் உடைச்சு சம்பவம் பண்ணியிருக்காங்க.

Also Read – துணிவுல மிஸ்ஸே ஆகல.. பேங்க் கொள்ளை படங்களில் இடம்பிடிக்கும் 8 விஷயங்கள்!

ரசிகர்களின் அலப்பறைகள் – என்னடா தொங்குறீங்க!

காஞ்சிபுரத்துல பாபு தியேட்டர்ல அஜித்தோட துணிவு படத்துக்கு 30 அடில கட் அவுட் வைச்சிருக்காங்க. அதுக்கு பாலாபிஷேகம், பூசணிக்காய் உடைக்கிறதுனு எல்லாமே ரசிகர்கள் பண்ணியிருக்காங்க. அல்டுமேட்டா, இன்னொரு ரசிகர் முதுகுல அலகு குத்தி கிரேன் வழியா மேல போய் அந்த கட் அவுட்டுக்கு மாலை போட்ருக்காங்க. அஜித்தே போய், இதெல்லாம் பண்ணாதீங்கனு சொன்னாலும், அதை சொல்ல நீங்க யாருனு கேப்பாங்க போல.

துணிவு கட்-அவுட்டுக்கு மாலை ரசிகர்களின் அலப்பறைகள்
துணிவு கட்-அவுட்டுக்கு மாலை – ரசிகர்களின் அலப்பறைகள்

மாலை மட்டும் 7 லட்சம்!

பெங்களூரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள், நாங்கலாம் எவ்வளவு பெரிய ஃபேன்னு தெரியுமானு நிரூபிக்க அவரோட பெரிய கட் அவுட்டுக்கு 7 லட்சம் செலவில் மாலை ஒண்ணு வாங்கி போட்ருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடியும் அதாவது கிட்டத்தட 10 வருஷம் முன்னாடி, அவ்வளவு ரூபாய் செலவு பண்ணி மாலைலாம் அவர் கட் அவுட்டுக்கு வைச்சதா சோஷியல் மீடியால செய்திகள்லாம் வருது.

தல பாதி.. தளபதி பாதி..!

சென்னைல வண்ணாரப்பேட்டைல உள்ள பாரத் தியேட்டர்ல தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பா 11 வகை சிறு தானியத்தை வைச்சு அஜித், விஜய் ஃபேன்ஸ்க்கே டஃப் கொடுக்கும் விதமா ரெண்டு பேரோட முகத்தையும் பாதி பாதியா வைச்சு ஒரே முகம் மாதிரி டிசைன் பண்ணிருக்காங்க. அதேமாதிரி நிறைய தியேட்டர்கள்ல ரெண்டு பேரும் ஒரே பைக்ல வர்ற மாதிரி, தல ரசிகர்கள் வாரிசுக்கு பாராட்டு தெரிவிக்கிற மாதிரி, தளபதி ரசிகர்கள் துணிவுக்கு பாராட்டு தெரிவிக்கிற மாதிரிலாம் போஸ்டர் பார்க்க முடிஞ்சுது.

அஜித் ரசிகர் உயிரிழப்பு!

எல்லாருமே பயப்படுறது இந்த விஷயங்களுக்காகதான். ஆபத்தான முறைல கட் அவுட்டுக்கு ஏறி பால்ல அபிஷேகம் பண்றது, உயரமான இடங்கள்ல ஏறி ஆடுறது, வேகமா பைக் ஓட்டிட்டுப் போறதுனு நெஞ்சை கொஞ்சம் நேரத்துக்கு பதறவைக்கிற பல விஷயங்களை செலிபிரேஷன்ற பேர்ல பண்றாங்க. யாருக்கும் எந்தவித ஆபத்தும் வராமல் இருக்கணும்ன்றதுதான் எல்லாரோட விஷ் ஆகவும் இருக்கு. ரோகினி தியேட்டர்ல படம் பார்க்க அஜித் ரசிகர் ஒருத்தர் வந்துருக்காரு, செலிபிரேஷன்ற பேர்ல லாரி மேல ஏறி நின்னு டான்ஸ் ஆடியிருக்காரு. அங்க இருந்து குதிக்கும்போது பலத்த காயம் ஏற்பட்ருக்கு. மருத்துவமனைல சிகிச்சை பலனின்றி இறந்துருக்காரு. எவ்வளவு பெரிய இழப்பு இது? யாராலயாவது அவங்க குடும்பத்துக்கு பதில் சொல்ல முடியுமா? கொண்டாட்டம் கவனமா இருக்கணும் ரசிகர்களே!

நாட்டுல எவ்வளவு பிரச்னைகள் வேணும்னாலும் இருக்கலாம். ஆனால், இன்னைக்கும் இன்னும் சில் நாள்களுக்கும் மிகப்பெரிய பிரச்னையா இருக்கப்போறது. வாரிசு ஜெயிச்சுதா? துணிவு ஜெயிச்சுதா? அப்டின்றதும். பாக்ஸ் ஆஃபீஸ்ல எது ஹிட் ஆச்சுன்றதும்தான். சரி, உங்களுக்கு என்ன படம் புடிச்சுதுனு கமெண்ட்ல சொல்லிட்டு போங்க. 

Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos


Like it? Share with your friends!

555

What's Your Reaction?

lol lol
12
lol
love love
8
love
omg omg
40
omg
hate hate
8
hate
Ram Sankar

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
‘எனக்கு எது தேவையோ அதான் அழகு’ – அயலி சீரீஸின் 10 ‘நச்’ வசனங்கள்! கே.எல் ராகுல் – அதியா ஷெட்டி திருமணம் பரிசுகளின் லிஸ்ட்! Thunivu Vs Varisu – பொங்கல் வின்னர் மீம்ஸ் கலெக்‌ஷன்! Netflix Pandigai – நெட்ஃபிளிக்ஸ் அறிவித்த 15 தமிழ் படங்கள்! வெயிட் லாஸ் ஜர்னியில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!