`வெரைட்டி பெர்ஃபார்மர்’ நடிகை மீனா கதை!

மீனா மெச்சூரிட்டியான நடிப்பை வானத்தைப்போல, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, ரிதம், த்ரிஷ்யம்னு பல படங்கள்ல அசால்ட்டா செஞ்சு காட்டிட்டு போனார். அஜித்துடன் ‘ஆனந்தப் பூங்காற்றே’, சிட்டிசன் மாதிரி படங்களில் மெச்சூர்டான கேரக்டரும் பண்ண முடியும், அதேசமயம், விஜய்யுடன் ‘சரக்கு வைச்சிருக்கேன் இறக்கி வைச்சிருக்கேன்’ என்று ஒரேயொரு பாடலுக்கு குத்தாட்டமும் போட முடியும் என காட்டிய வெரைட்டி பெர்ஃபார்மர்தான் மீனா.

மீனா
மீனா

நடிகை மீனா

ஆந்திராவுல இருக்கிற ராஜமுந்திரியில ஒரு ஸ்டார் நடிகரோட ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு. அங்க ஷூட்டிங் நடக்குறதைக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டமா கூட ஆரம்பிச்சிட்டாங்க. சரி நாம தலையைக் காட்டினா மக்கள் சாந்தமாவாங்கனு நினைச்சு, அந்த நடிகர் வெளிய வந்து கையசைக்கிறார், கூட்டம் ஆர்ப்பரித்து வரவேற்பு கொடுத்தது. அடுத்ததாக அந்த படத்தோட நடிகை என்ட்ரி கொடுத்து கையசைக்க ஒட்டுமொத்த கூட்டமும் கத்த ஆரம்பிக்கிறது. அந்த நடிகைக்கு வந்த சத்தத்தைக் கேட்டு அந்த ஸ்டார் நடிகர் ஆச்சர்யப்படுற அளவுக்கு சத்தம். அந்த நடிகை பேர் மீனா. விண்ணைப்பிளக்குற அந்த சத்தத்துல அந்த நடிகை படபடப்பா நிற்கிறாங்க, ஏன்னா பக்கத்துல இருக்கிற ஸ்டார் நடிகர் நம்ம சூப்பர்ஸ்டார் ஆச்சே. ஆனா, சூப்பர் ஸ்டார் கோவமெல்லாம் படலை. பரவாயில்லயே இங்க நீங்க இவ்ளோஒ பேமசா இருக்கீங்களே’னு சொல்லி வாழ்த்திட்டு போனார். அப்போ நடிகை மீனாவுக்கு வெறும் 17 வயசுதான். அப்போவே அவங்க தெலுங்கு மக்களோட கனவுக்கன்னியா இருந்தவங்க. அப்படி ஆரம்பிச்சு, மலையாளம், தமிழ்ல அவங்க செஞ்ச சாதனைகளைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

நடிகர் விஜயகுமார் தயாரித்து, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில், சிவாஜியின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘நெஞ்சங்கள்’. 82-ம் வருஷம் வெளியானது இந்தப் படம். அப்போ, இந்தப் படத்தை பெரிசா யாரும் கவனிக்கலை. அதுக்கப்புறமா ரஜினி படமான எங்கேயோ கேட்ட குரல் படத்துல அவருக்கு மகளாகவும் அவர் நடிச்சார். அதே சின்ன பொண்ணு 84-ம் வருஷம் ரஜினிகாந்த் கெளரவ நடிப்புல ஒரு படத்துல நடிச்சார். ஆனா, இந்த படம் பார்த்துட்டு எல்லோரும் கொண்டாடுனது, மீனாவைத்தான். வசனம் பாதி பேச, மீத வசனங்களை அவங்க கண்களே பேசியது. அன்னைக்கு பொண்ணா நடிச்ச மீனா வளர்ந்து பெரிய நடிகை ஆவங்க அப்படின்னோ, அதுவும் ரஜினிக்கே ஜோடி ஆவாங்கன்னோ யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அவ்ளோ ஏன் மீனாவே அப்படி நினைச்சிருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு தன்னோட நடிப்பால அன்னைக்கு மக்கள் மனசுல இடம்பிடிச்ச அந்த சின்ன பொண்ணு நடிகை மீனா.

அப்புறம் கொஞ்சம் இடைவெளி சிறிய இடைவெளி. எண்பது முடிந்து தொந்நூறுகளின் தொடக்கம். 91-ம் ஆண்டு, வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலமா தன்னோட வருகையை அழுத்தமா பதிவு செஞ்சார். கிராமிய மண் வாசம் வீசும் அந்தக் கதையில் சோலையம்மாவாகவே தெரியும்படியான நடிப்பைக் கொடுத்தார்.

மீனா ஹீரோயினா நடிச்ச முதல் தமிழ்படம் என் ராசாவின் மனசிலே கிடையாது. அது என்னனு யோசிச்சு வைங்க. அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.

இதன் பிறகு தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும், ‘பர்தா ஹை பர்தா’ என்னும் இந்திப் படத்திலும் நாயகியாக நடித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘எஜமான்’ படத்தில் நடித்தார். ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் இந்தப் படத்தில் அவருக்கு மனைவியாக நடித்ததால் திரையுலகம் பரபரத்தது. ஏவிஎம் தயாரித்த இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தமிழிலும் மீனாவை முன்னணி நடிகையாக மாற்றியது. அடுத்த ஆண்டு விஜயகாந்துடன் ‘சேதுபதி ஐபிஎஸ்’, ரஜினியுடன் ‘வீரா’, சரத்குமாருடன் ‘நாட்டாமை’, சத்யராஜுடன் ‘தாய் மாமன்’ என அந்தக் காலகட்டத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்தார். முத்துவுக்கு முன்னர் வந்த நாட்டாமை படத்தின் மூலம் பி அண்ட் சி சென்டர் ஆடியன்ஸ்களை அதிகமாக அள்ளியிருந்தார்.

மீனா
மீனா

கடல் கடந்த வெற்றி!

ரஜினிகாந்துடன் மீனா நடித்த மூன்றாம் படமான ‘முத்து’ இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இன்றுவரை ஜப்பானில் மீனாவுக்கென்று ஒரு பெரும் ரசிகர் படை உள்ளது. 90-களில் தமிழ். தெலுங்கு, மலையாளம். கன்னட மொழிகளில் அனைத்து முன்னணி நாயக நடிகர்களுடனும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்தார் மீனா. 1996-ல் கமல் ஹாசனுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த ‘அவ்வை ஷண்முகி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற நட்சத்திரங்களுடன் வெற்றிப் படங்களில் நடித்தார்.

நடிப்பில் தனித்துவம்!

மீனா வெறும் கமர்சியல் ஹீரோயினாக மட்டும் இருக்கவில்லை. நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தும் கதைகளையும் தேர்வு செய்திருக்கிறார். 1997-ல் சேரன் இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’ ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தார் மீனா. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வெளியான இவ்விரண்டு படங்களிலும் அவருடைய நடிப்புத் திறமை எல்லோராலும் பாராட்டப்பட்டது. இரண்டு படங்களுக்காகவும் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை வென்றார். 2000-ம் வருடம் ஒரே ஆண்டில் மீனா நடித்த ‘வானத்தைப் போல’, ‘பாளையத்து அம்மன்’, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘ரிதம்’, ‘மாயி’ என மீனா நடித்த படங்கள் அவரை மிகத் திறமை வாய்ந்த நடிகையாக நிலை நிறுத்தியது. இதில் ‘ரிதம்’ கணவனை இழந்து மகனுடன் தனித்து வாழும் தாயாக நடித்திருந்தார். ஒரு காட்சியில் ரமேஷ் அரவிந்த், மீனா பேசிக் கொண்டிருக்கும்போது, ரமேஷ் அரவிந்த் சொல்வதைக்கேட்டு, லேசாகக் கண் கலங்குவார், மீனா. உங்க கண்ல ‘மை’ கலையுது என்று ரமேஷ் அர்விந்த் சொல்ல, ‘பரவாயில்ல’ என்று மெல்லியதாகச் சிரிப்பார். அந்த பரவாயில்லங்குற வசனத்தை கண்ணும் கூடவே சேர்ந்து பேசும். அப்படியொரு தேர்ந்த நடிப்பு மீனாவுடையது. மீனாவின் திரை வாழ்வில் மிக முக்கியமான படமும்கூட.

மீனா
மீனா

பலம்!

இவர் வசனம் பேசும்போது எப்போதுமே க்ளோசப் ஷாட் கண்டிப்பாக இருக்கும். வசனம் பேசும்போது அதற்கேற்ற முக பாவனையும் இருக்கும். குறிப்பாக சொல்லப்போனால், வசனத்தை கண்ணும் பேசிக் கொண்டிருக்கும். அதுதான் மீனாவின் பலம். இதை காதல், குடும்ப பாசம், கண்டிப்பு என எத்தனை சிச்சுவேஷன்கள் வந்தாலும் அத்தனையிலும் வித்தியாசப்படுத்தி கண் அசைவைக் கொடுப்பது மீனாவின் பாணி. அதேமாதிரி குழந்தைத்தனமான பாணியை ஆரம்பத்தில் கடைபிடிச்ச மீனா, முதிர்ச்சியான நடிப்பு, நடனம், கவர்ச்சினு ஒரு நாயகிக்கு தேவையான எல்லா திறமைகளையும் வெளிப்படுத்தினார். மெச்சூரிட்டியான நடிப்பை வானத்தைப்போல, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, ரிதம், த்ரிஷ்யம்னு பல படங்கள்ல அசால்ட்டா செஞ்சு காட்டிட்டு போனார். அஜித்துடன் ‘ஆனந்தப் பூங்காற்றே’, சிட்டிசன் மாதிரி படங்களில் மெச்சூர்டான கேரக்டரும் பண்ண முடியும், அதேசமயம், விஜய்யுடன் ‘சரக்கு வைச்சிருக்கேன் இறக்கி வைச்சிருக்கேன்’ என்று ஒரேயொரு பாடலுக்கு குத்தாட்டமும் போட முடியும் என காட்டிய வெரைட்டி பெர்ஃபார்மர்தான் மீனா.

Also Read – பாடகி, நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் – எஸ்.பி.சைலஜாவின் சினிமா பயணம்!

செகண்ட் இன்னிங்ஸ்!

 இடையில் கொஞ்சகாலம் படங்களோட எண்ணிக்கையை குறைத்துக் கொண்டார். ‘உதயநானு தாரம்’, ‘கருத்த பக்‌ஷிகள்’ ‘கதா பறையும்போல்’, படங்கள் மூலமா விருதுகளை அள்ளினார், மீனா. அடுத்ததா த்ரிஷ்யம் மூலமா அழுத்தமான நடிப்பை பதிவு பண்ணார். இங்க தன்னோட செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிச்சார்னுகூட சொல்லலாம்.

குறையாத Magnetic force!

மீனா
மீனா

1990-களின் ஆரம்பத்திலேயே தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறந்த நடிகைக்கான மாநில அரசுகளின் விருதுகளையும், ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பல முறை வாங்கியிருக்கிறார். இருந்தாலும் அதன் பின்னர்தான் அவருடைய நடிப்புத் திறமை அதிக கவனம் பெறும் வகையிலான ரோல்கள் அமைந்தன. அதையெல்லாம் அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அதே நேரம் வயது அதிகரித்துக் கொண்டே இருக்க அழகு மட்டும் குறையவில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கண்ணழகி மீனாவின் கண்களில் இருக்கும் அந்த காந்த சக்தி இன்னும் குறையவே இல்லை. இன்றைக்கு மீனா நடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவரின் இடத்தை எவரும் இன்னமும் பிடிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அவங்க ஹீரோயினா நடிச்ச முதல் தமிழ்படம் என் ராசாவின் மனசிலே கிடையாது. ஒரு புதிய கதை படத்தில்தான் முதல் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் என் ராசாவின் மனசிலே ரெண்டாவது படம்.

மீனாவோட படங்கள்ல எனக்கு ரொம்பவே புடிச்சது, பொற்காலமும், ரிதமும்தான். உங்களுக்கு எந்த படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top