சார்பட்டா வாத்தியார் பசுபதி தன்னோட யங் ஸ்டேஜ்ல பேசுன வீடியோ ஒண்ணு கொஞ்ச நாள் முன்னாடி செம வைரலாச்சு. பசுபதி அந்த வீடியோல, “சினிமால பத்து, பதினைஞ்சு வருஷமா இருக்குறவங்களால கமர்ஷியல் ஆக்டர்ஸ் மாதிரி சம்பளம் வாங்க முடியலை. நாங்க பார்க்குறோம். பத்து வருஷமா நடிக்கிறா அவனுக்கு என்ன இருக்குனு. எனக்கு ஃபியூச்சர் பயம் இருக்கு. என்ன பண்ணப்போறோம்னு பயம் இருக்கு. இப்படியே தியேட்டர்லயே இருப்போமா? இல்லைனா டீ விப்போமா, ரிக்ஷா இழுப்போமானு தெரியலை. ஆனால், எனக்கு சாதிக்க முடியும்ன்ற கான்ஃபிடன்ட் இருக்கு”னு ஒரு கோபம், வலியோட பேசியிருப்பாரு. தமிழ் சினிமால இன்னைக்கு முக்கியமான இயக்குநர்களா பார்க்கப்படுற வெற்றிமாறன், பா.இரஞ்சித்னு எல்லா முன்னணி இயக்குநர்களும் எழுதுற செமயான கேரக்டருக்கு ஃபஸ்ட் சாய்ஸ் இவருதான். இந்த உயரத்தை பசுபதி அவ்வளவு சீக்கிரமா தொடல. அவரோட சினிமா கரியர்லயும் பல ஏற்ற, இறக்கங்கள் இருக்கு. ஆனால், அதையெல்லாம் அழகா ஹேண்டில் பண்ணியிருக்காரு.
பசுபதிக்கு சினிமால நடிகனாகணும்னு ஆசையே இல்லை. அவரோட எய்ம் என்னவா இருந்துச்சு தெரியுமா? இன்னைக்கு வரைக்கும் அவர் நினைச்ச ஒரு விஷயம் நடக்கவே இல்லை. அது நடந்தா அவரோட ரசிகர்கள் செமயா கொண்டாடுவாங்க. அப்படி அது என்ன விஷயம்? பசுபதி எப்படி கமல்கிட்ட அறிமுகமானாரு தெரியுமா? விருமாண்டில நடிச்சதுக்கு அவங்க வீட்டுல உள்ளவங்க ரியாக்ஷன் என்ன தெரியுமா? பசுபதியோட ஃபேவரைட் நடிகர் இவங்கலாம்தானா? ஒருகட்டத்துல மனுஷன் சினிமாவை விட்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்காரு. அதுக்கு கமல் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா? பொன்னியின் செல்வன்ல பசுபதிக்கு என்ன கேரக்டர்? வடிவேலுவைப் பத்தி மனுஷன் என்ன சொல்றாருனு தெரியுமா? ஒரு படத்துல கமிட் ஆகி அந்தப் படம் புடிக்கலைனா, பசுபதி வீட்டுக்குப் போய் என்னப் பண்ணுவாரு தெரியுமா? சென்னைலயே பொறந்து வளர்ந்த மனுஷன், இப்போ சென்னையைவிட்ட 40 கி.மீக்கு அந்தப் பக்கம் இருக்காரு. ஏன்னு காரணம் கேட்டா… அதுக்கு ஒரு பதில் வைச்சிருக்காரு பாருங்க! இதெல்லாம் தெரிஞ்சுக்க வீடியோவை முழுசா பாருங்க!
சென்னைல வண்ணாரப்பேட்டைல பொறந்து வளர்ந்த மனுஷன்தான், பசுபதி. அவர் வளர்ந்த காலத்துல இந்தியா ஃபுல்லா பிரேக் டான்ஸ் ரொம்ப ஃபேமஸ். சென்னைலயும் பசங்கலாம் எங்கப் பார்த்தாலும் பிரேக் டான்ஸ்தான் ஆடிட்டு இருப்பாங்க. அதைப் பார்த்து பசுபதியும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிருக்காரு. இதனால், படிப்புப் பாதிலயே நின்னுப் போச்சு. வீட்டுல உள்ளவங்களும் தண்ணி தெளிச்சு விட்டாங்களாம். இவருக்கு எப்படியாவது பெரிய டான்ஸர் ஆகணும்னு ஆசை. ஆனால், என்னப் பண்ணனும்னு தெரியலை. அப்படி, டான்ஸ்லாம் ஆடிக்கிட்டு இருக்கும்போது ஒருநாள் ஒரு பையன் இண்ட்ரோ ஆயிருக்காரு. அவரு டான்ஸ்னா புடிக்குமா? என்கூட வா அப்படி கூட்டிட்டுப் போய், டான்ஸ்ல இருக்குற இன்னொரு ஃபார்மை அறிமுகப்படுத்தியிருக்காரு. என்ன இது என்னலாமோ பண்றாங்க, ஆனால், நல்லா இருக்குனு பசுபதி நினைச்சிட்டு, அவங்கக்கூட சேர்ந்து அதை கத்துக்குறாரு. அப்போதான் அதுக்குப் பேரு தெருக்கூத்துனு அவருக்கு தெரிய வந்துருக்கு. அப்படியே கூத்துப்பட்டறை அறிமுகம் கிடைச்சு, அவரோட குரு முத்துசாமி அவருக்கு ஆக்டிங், டான்ஸ், டைரக்ஷன்னு எல்லா வித்தையும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சிருக்காரு.
கூத்துப்பட்டறை ஆசிரியர் முத்துசாமியோட மோட்டிவ் என்னனா… ஒரு நடிகனை உருவாக்குறது என் வேலை இல்லை. ஒரு நல்ல மனுஷனை உருவாக்கணும். அவன் இந்த சொசைட்டிக்கு என்ன தேவையோ அதை ரொம்ப அழகா செய்வான். அப்டின்றதுதான். அதுக்காக மனுஷன் அவர்கிட்ட நடிக்க வர்றவங்க கட்டமைச்சு வைச்சிருக்குற எல்லாத்தையும் உடைச்சு விடுவாறாம். பசுபதிக்கு ஒரு கம்ஃபர்ட்சோன்ல இருந்து வெளிய வர கத்துக்கொடுத்தது முத்துசாமிதானாம். பசுபதியை தமிழ்நாட்டுல இருக்குற எல்லா கிராமத்துக்கும் போய் அங்க இருக்குற கிராமியக் கலையை கத்துட்டுவானு அனுப்பி வைப்பாறாம். ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் பண்ணும்போது ஒருநாள் எல்லாரையும் கூப்பிட்டு குடிக்க வைச்சு நடிக்க வைச்சாறாம். தி.நகர்க்கு போய் அங்க சும்மா மணிக்கணக்குல நின்னு கூட்டத்தை வேடிக்கை பார்க்க சொல்லுவாறாம். மவுண்ட்ரோடுல நடிக்க சொல்லுவாறாம். மனுஷங்களை கவனிக்க சொல்லுவாறாம். ஒருநாள் பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போய் எல்லாரும் கிளாஸ் எடுத்துக்கோங்க. ஆனால், குடிக்கக்கூடாதுனு சொல்லி அங்க நடக்குற விஷயங்களை கவனிக்க வைப்பாறாம். ஒருநாள் பார்க்கு கூட்டிட்டுப் போய் ஒரு ரௌண்ட் அடிக்க சொல்லிட்டு திரும்பாம 360 டிகிரி நடக்குற விஷயங்களை கவனிக்க சொல்லுவாறாம். இப்படிதான் கொஞ்சம் கொஞ்சமா செதுக்கி பசுபதி, நாஸர் மாதிரி பல நடிகர்களை உருவாக்கியிருக்காரு. பசுபதி பண்ற கேரக்டர்லாம் ஏன் அவ்வளவு இன்டன்ஸா இருக்குனு இப்போ தெரியுதா?
பேய் மாதிரி நடிக்கக் கத்துக்கிட்டாரு. நைட்டுலாம் பஸ் இருக்காது… நடந்தே வீட்டுக்குப் போவாறாம். அலையன்ஸ் ஃபிரான்ஸே, ரஷ்யன் சென்டர் இங்கயெல்லாம் ஓடி ஓடிப்போய் பல மணி நேரம் நின்னுக்கிட்டே படம் பார்ப்பாறாம். அப்பக்கூட எதாவது புக்கை படிச்சிட்டுப் போவாராம். நடிப்பை அவ்வளவு நுணுக்கமா கத்துக்கிட்டாலும் அவருக்கு நடிக்க வரணும்னு ஆசை இல்லை. ஃபஸ்ட் டான்ஸர் கனவு, இப்போ டைரக்ஷன் கனவு. நாஸர், கூத்துப்பட்டறைல பசுபதியோட சீனியர். பசுபதி நடிக்கிறதைப் பார்த்துட்டு அவரை சினிமாக்கு கூப்பிட்ருக்காரு. இல்லை நான் டைரக்டர் ஆகப்போறேன்னு சொல்லியிருக்காரு. அதுக்கு நாஸர், டைரக்டர் ஆனால், மக்கள் நீ சொல்றதை கேக்க மாட்டாங்க. ஆனால், நடிகன் ஆனேன்னா கேப்பாங்க. சர்வைவலுக்கு நடிப்புக்கு வந்தா நீ தப்பிச்சிரலாம்னு மண்டையக் கழுவி கூட்டிட்டுப் போய்ருக்காரு. இருந்தாலும், அரை மனசோடதான் நடிக்கப் போய்ருக்காரு. அந்த டைம்லதான் மருதநாயகம் பிளான் நடந்துருக்கு. நாஸர், கமல்கிட்ட பசுபதியை கூட்டிட்டுப் போய் பையன் நல்லா நடிப்பான். ஒரு கேரக்டர் கொடுங்கனு சொல்லியிருக்காரு. நாஸர் சொன்ன ஒரே காரணத்துக்காக அவரை நம்பி ஒரு முக்கியமான கேரக்டரை கொடுத்துருக்காரு. அந்தப் படம் உன் முதல் படமா ரிலீஸ் ஆனா ரொம்ப நல்லாருக்கும்னும் சொல்லியிருக்காரு. ஆனால், படம் ட்ராப். மருதநாயகம்ல பசுபதிக்கு கிடைச்ச கேரக்டர்ல முதல்ல நடிக்க இருந்தது, நெப்போலியன். அதை சொல்லி நெப்போலியன் ஃபீலும் பண்ணியிருப்பாரு.
முதல் படமே ட்ராப் ஆன விரக்தில மனுஷன் இருந்தப்போதான், நாஸர் இவங்களுக்காகவே ‘மாயன்’ படம் எடுத்தாரு. ஆனால், அந்தப் படம் யாருக்கும் அவ்வளவு பெயர் வாங்கிக்கொடுக்கல. அப்புறம் கன்னத்தில் முத்தமிட்டால், தூள், இயற்கை, அருள் படங்கள்லயெல்லாம் நடிச்சாரு. இருந்தாலும் நல்ல நடிகன்யா அப்டினு பசுபதிக்கு பெயர் வாங்கிக்கொடுக்கல. ஆனால், கமர்ஷியலா வரவேற்பு கிடைச்சுது. அப்போ அவரு ரொம்ப பெரிய ஆர்டிஸ்ட் இல்லை. அந்த நேரத்துலதான் விருமாண்டி படத்துல ‘கொத்தாளத்தேவர்’ கேரக்டர் அவரைத் தேடி வந்துருக்கு.
கமல் கதை சொல்லி எப்படி இருக்குனு கேட்ருக்காரு. நல்லா இருக்குனு பசுபதி சொன்னதும். அடுத்தவாரம் ஷூட்டிங்க்கு வந்துருனு சொல்லியிருக்காரு. அந்தப் படத்தோட அணுகல் முறையே ரொம்ப வித்தியாசமா இருக்கும். அதுல கமல்க்கு எதிர் கேரக்டர் ரோல்ல நடிச்சு கொத்தாளத்தேவராவே வாழ்ந்துருப்பாரு. யாருயா இந்த மனுஷன் இப்படி நடிக்கிறான்னு மொத்த தமிழ்நாடும் திரும்பி அவரை பார்க்க வைச்சுது. அந்தப் படம் பார்க்க சத்யம் தியேட்டருக்கு குடும்பத்தைக் கூட்டிட்டுப் போய்ருக்காரு. அப்போ ஆடியன்ஸ்லாம் படம் பார்த்துட்டே பசுபதியோட கேரக்டரை அசிங்கமா திட்டியிருக்காங்க. உடனே, பசுபதியைப் பார்த்து “உனக்கு இதெல்லாம் தேவையா”னு கேட்ருக்காங்க.
நாடகத்துல இருந்து சினிமாவுக்கு வந்ததும் அதை எப்படி ஹேண்டில் பண்றதுனு ரொம்ப திணறியிருக்காரு. கமலும் நாஸரும் ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்குற மாதிரி ஃப்ரேம், எங்கப் பார்த்து பேசணும்னுலாம் கத்துக்கொடுத்துருக்காங்க. பொன்னியின் செல்வன் நாவலை நாடகமா போடும்போது, அதுல ஆதித்ய கரிகாலன் கேரக்டர்ல பசுபதி நடிச்சிருக்காரு. பசுபதி தீவிரமான சிவாஜி ஃபேன். அப்புறம் கமல் ஃபேன். சிவாஜியோட கண்ணம் நடிச்சதயெல்லாம் நாஸர்க்கிட்ட அடிக்கடி பேசுவாறாம். டைரக்ஷன் பண்ணனும்ன்ற அவரோட ஆசை இன்னைக்கு வரைக்கும் நிறைவேறல. ஒருவேளை அவர் படம் எடுத்தா ரசிகர்களுக்குலாம் கொண்டாட்டமாதான இருக்கும். அதுவும் அவர் படத்துல சிவாஜியை நடிக்க வைக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்ருக்காரு. அதேமாதிரி வடிவேலுவையும் அவருக்கு ரொம்ப புடிக்கும். அவரை காமெடியன்னு சொல்லி நல்ல கேரக்டரை தமிழ் சினிமா மிஸ் பண்ணிடுச்சுனு இண்டர்வியூலயெல்லாம் ரொம்ப ஃபீல் பண்ணுவாரு. அதேமாதிரி ஜாக் நிக்கல்சனையும் அவருக்கு ரொம்ப புடிக்கும். அதே சிரிப்பு அதே கண்ணு வைச்சிட்டு வேற ஒண்ணை படத்துக்குபடம் பண்ணுவாரு.
தமிழ் சினிமால ரொம்பவே கம்மியாதான் படம் நடிச்சிருக்காரு. ஏன்னா, பிடிச்ச கேரக்டர்ல மட்டும்தான் நடிப்பேன்னு பிடிவாதமா இருப்பாரு. ஹீரோ, வில்லன், காமெடியன் அப்டிலாம் இல்லை. எல்லாரும் நடிகன் அவ்வளவுதான். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதை அவன் பண்ணனும். நடிக்கும்போது அவன் வெளிய தெரியக்கூடாது. அந்தக் கேரக்டர் தெரியணும். அதுதான் நடிப்புனு சிம்பிளா நடிப்புக்கு ஒரு டெஃபனிஷன் சொல்லுவாரு. அவரோட ஃபஸ்ட் இம்ப்ரஷன் ஸ்கிரிப்ட். க
தை சொல்லிக் கேட்டா டைரக்டர் இன்புட் வந்துரும்னு ஸ்கிரிப்ட்தான் படிப்பாறாம். பசுபதி புடிக்காத படத்துல தெரியாம மாட்டிக்கிட்டாவீட்டுக்கு வந்து அழுவாராம். நிறைய தடவை இது நடந்துருக்காம். நடிப்பு சொல்லிக்கொடுத்தா எனக்கு நடிப்பு வராது. அப்படி சொல்லிதந்தா கை கொடுத்துட்டு நீங்களே நடிங்கனு வந்துருவேன்னுவாரு. விருமாண்டிக்கு அப்புறம் நெகட்டிவ் ரோலே வந்ததால கடுப்பாகி சினிமாவை விட்டுப் போயிடலாம்னு முடிவு பண்ணி கமல்கிட்ட சொல்லியிருக்காரு. “எல்லாம் சரியாகும்”னு சொல்லிட்டு பத்து நாள்ல மும்பை எக்ஸ்பிரஸ் படத்துல ஒரு கேரக்டர் கொடுத்துருக்காரு.
பசுபதினு சொன்னதும் இப்போ விருமாண்டிக்கு அப்புறமா சார்பட்டா பரம்பரைதான் நியாபகம் வரும். படத்துல பாக்ஸிங் வீரர்களுக்கான உடல்மொழி, இரிடேட்டிங்கா இருக்குற மைண்ட், தொட்டதுக்குலாம் கோவப்படுற ஆளா செமயா நடிச்சிருப்பாரு. சின்ன வயசுல சென்னையில நிறைய பாக்ஸிங் ஆள்களை பார்த்ததால வருக்கு அந்த கேரக்டர் ரொம்ப ஈஸியா வந்திடுச்சாம். அதைவிட்டா வெயில் படத்துல முருகேசனா கலக்கியிருப்பாரு. உருகுதே மருகுதேனு ரொமான்ஸ் பண்றதா இருக்கட்டும், வாழ்க்கைல கடைசி வரை ஜெயிக்க முடியாத ஒருத்தனா நடிக்கிறதா இருக்கட்டும் அவ்வளவு அழகா அந்தக் கேரக்டரை ஹேண்டில் பண்ணியிருப்பாரு. அப்புறம் ஈ படத்துல புரட்சியான ஒரு ரோல். பயோ வார்க்கு எதிரா அவர் பேசுற வசனங்கள், ஜீவாக்கும் அவருக்குமான உரையாடல் எல்லாம் தரமா இருக்கும்.
அரவான் படத்துல வேம்பூர் கொம்பூதியா நடிச்சிருப்பாரு. களவாடுற உத்தி, பசி, அடிவாங்குறது, குழப்பத்தோட இருக்குறதுனு பல உணர்வுகளை அசால்ட்டா காட்டியிருப்பாரு. திருப்பாச்சில பட்டாசு பாலுவா வந்து உடல்மொழிலயே வில்லத்தனம் பண்ணியிருப்பாரு. அப்புறம் அசுரன்ல சின்ன கேரக்டரா இருந்தாலும் செமயா பண்ணியிருப்பாரு. இப்படி மனுஷன் பண்ண எல்லா கேரக்டர்ஸும் மிரட்டலாதான் இருக்கும். மஜால தப்பு தப்பா இங்கிலீஷ் பேசுறது, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துல சுகர் பேஷண்ட்ரா நானுனு காமெடி பண்றதுலயும் மனுஷன் அடிபொலிதான்.
வெற்றிமாறனோட இயக்கத்துல பொல்லாதவன் படத்துலயே கிஷோர் கேரக்டர்ல இவரைதான் முதல்ல நடிக்க கேட்ருக்காங்க. ஆனால், மறுத்துட்டாரு. தியாகராஜா குமாரராஜா இயக்கத்துல வந்த ஆரண்ய காண்டம் படத்துல பசுபதி கேரக்டரையும் மறுத்துருக்காரு. அதை நினைச்சு அப்புறம் ஃபீலும் பண்ணிருக்காரு. சென்னையோட அவ்வளவு கனெக்ட் இருந்தாலும் மனுஷன் இப்போ பெரிய பாளையத்துல வாழ்றாரு. யாரு கதை சொல்லணும்னாலும் அங்க வர சொல்லிருவாரு. சென்னைல பறவைகள் சத்தம் இல்லை, அமைதியா இருக்க முடியலைனு அங்க குடும்பத்தோட போய் செட்டில் ஆயிட்டாரு. விவசாயமும் பண்ணிட்டு இருக்காரு. இப்படி ஒரு நடிகன் தமிழ்நாட்டுல இருக்குறது நம்ம எல்லாருக்குமே பெருமைதான?!
பசுபதி நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் கேரக்டர் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: சித் ஸ்ரீராம் பற்றிய இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?