-
1 அவா எல்லாம் இல்லேன்னா ஏதுங்கானும் புவா...
``பசங்களா நீங்க ஏன் தூர நிக்கிறீங்க கிட்ட வாங்கோ''
``டேய் அவா வேற வர்ணம் டா''
``அவாளும் வரணும்ங்கிறதுதான் என்னோட எண்ணம்''
``அவா வேற ஜாதி டா''
``அவா அவாங்றியே... அவா யாருடா... இந்த ரோட்டப்போட்டது அவா, இந்த வீட்டக்கட்டுனது அவா, ஏன் ஓட்டுப்போடுறது அவா, உங்க ட்ரெஸ்ஸ தொவச்சுக்கொடுக்குறது அவா, தம்கட்டி ட்ரெயினேஜ்குள்ள சுத்தம் பண்றது அவா, அரிசி கோதும ரவா... இதையெல்லாம் வெளைய வெக்கிறது அவா... மொத்தத்துல அவா எல்லாம் இல்லேன்னா ஏதுங்கானும் புவா..."
-
2 "திடீர் சாமியா?"
"அது எப்டி டா பொது மக்கள் போற பாதையில திடீர் சாமியா? அதுக்கு நாலு ஏக்கர்ல கோயிலா? அதுக்குள்ள கொழந்தைங்க படிக்கிற கோவில் வருதே அதை என்ன பண்ணப்போற?"
-
3 ``200 பெரியார் இல்ல... 400 பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது டா"
-
4 அது வேற ப்ளாஸ்டிக் இது வேற ப்ளாஸ்டிக்யா
"அது வேற ப்ளாஸ்டிக் இது வேற ப்ளாஸ்டிக்யா... ஆகா... தமிழக அரசே மொதல்ல இவனுங்களுக்கு இந்த வித்தியாசத்த சொல்லிக் கொடு. இல்லேன்னா 6 கோடி ஜனத்தொகைய 8 கோடியா ஏத்திடுவானுங்க. இவனுங்க அறியாமையும் ப்ளாஸ்டிக் மாதிரிதானா, அத அழிக்கவே முடியாதா?!"
-
5 ``சாதா காக்காவ சொன்னா அண்டங்காக்காக்கு கோவம் வர்றத பாரே!"
-
6 ``எல பிப்ரவரி 30-ஓட இந்த ஒலகம் அழியப்போவுதுலா.."
-
7 ``இந்த எழவுக்குதான் மனுசப் பதர்களோட பேச்சை நிப்பாட்டி 500 வருஷம் ஆச்சு.. எல பறவை, பன்னி இதுகளோடதான் நான் பேசுறது.."
-
8 "எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டேன்!"
-
9 "கவர்மெண்டு மரம் வள மரம் வளங்குது.. அதையெல்லாம் விட்டுபுட்டு இந்த புதர்கள வளக்குறீகளேய்யா!"
-
10 "டோண்ட் வொர்ரீ... பி ஹேப்பீ..."
விவேக்கின் எவர்க்ரீன் டாப் 10 பன்ச்!
நடிகர் விவேக் தன்னுடைய நகைச்சுவை வசனங்களின் வழியாக சமூக கருத்துக்களை பேசி வந்தார். அவ்வகையில் அவர் பேசிய சமூகம் தொடர்பான வசனங்களும் கூடவே நகைச்சுவை வசனங்களும் இங்கே. 1 min

0 Comments