மாஸ்டர்… போன ஏப்ரலுக்கு வெளியாக வேண்டிய படம். கொரோனா வச்சி செய்ததில் பத்து மாதங்கள் தாமதமாகி பொங்கலுக்கு ஃபைனலி வாத்தி கம்மிங். கையில் பாட்டிலும் கருப்பு கண்ணாடியுமாக தளபதி விஜய்யின் சூப்பர் கூல் லுக், ‘அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கேன்’ விஜய் சேதுபதியின் வில்லத்தனம், லோகேஷ் கனகராஜின் வேற லெவல் ட்ரீட்மெண்ட், ரசிகர்களின் வெறித்தன வெயிட்டிங் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது மாஸ்டர் ரிலீஸூக்கு. 50% இருக்கைனாகூட மாஸ்க் போட்டுக்கிட்டு குடும்பத்தோட போகலாம்னு பாத்தேன். 100% – னா நோ நெவர் என்று முன் ஜாக்கிரதையாளர்கள் சானிட்டைஸ் செய்துகொண்டிருக்க இன்னொரு பக்கம், FDFS பாக்க கொரோனா வார்டிலிருந்து கெளம்பி வந்துட்டேன் தலைவா… என மீம்ஸ் பறந்துகொண்டிருக்கிறது. பல மாசங்களுக்கு அப்பறம் தியேட்டர்ல படம் பாக்கப்போறீங்க. மாஸ்டர் பாக்குறதுக்கு முன்னாடி சில முன் தயாரிப்புகள் பண்ணிட்டு போனீங்கன்னா இந்த மூவி எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல்ல இருக்கும்.
-
1 நம்மவர்
இந்த படத்தில் விஜய் ஃப்ரொஃபஷர். காலேஜ்ல சாந்தணு, அர்ஜூன் தாஸ் கேங்லாம் இருக்குனு தகவல்கள் வந்ததுமே, ' எப்பா இது நம்மவர் படம்ப்பா' என்று யூடியூப் தம்ப்நெயிலில் ரெட் கலர் வட்டம் போட்ட டீட்டெயிலிங் வீடியோக்கள் ட்ரெண்ட் ஆகின. 1994-ல் கமல்ஹாசன் கதை எழுதி நடித்த படம், 'நம்மவர்'. 'Life is very short nanba. Always behappy' என்று 2கே ஸ்டூடண்டுகளுக்கு விஜய் பாடம் எடுத்தால், 'சொர்க்கம் என்பது நமக்கு. சுத்தம் உள்ள வீடுதான்' என்று 90ஸ் ஸ்டூடண்டுகளுக்கு பாடம் எடுத்தார் வாத்தியார் கமல். காலேஜில் ரௌடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் கரண் கேங்குக்கும் அந்த காலேஜூக்கு புதுசா வரும் வாத்தி கமலுக்குமான டிஸ்யூம் டிஸ்யூம்தான் படம். அதே காலேஜில் இன்னொரு ஃப்ரொபஷர் ஹீரோயின் கௌதமி. மாஸ்டர் டீசர் வெளியான போது, 'ஒருவேளை அந்தக் கதைதானோ? ஒரு வேளை அந்தக் கதை இல்லையோ?' என்று ஒரே கன்ஃப்யூசன். எதுக்கும் மாஸ்டர் பார்க்க போறதுக்கு முன்னாடி நம்மவரை பாத்திடுங்க. அதுதானா இல்லையானு நீங்களே கன்ஃபார்ம் பண்ணிடுங்க.
-
2 Fight Club
'ப்ரோ ஆக்சுவலா பவானியும் ஜேடியும் ரெண்டு பேரு இல்ல ஒரே ஆளு ப்ரோ'
டீசர் வெளியானதிலிருந்து உலக சினிமா ஆர்வலர்கள் உருட்டும் கான்ஸ்பிரசி தியரி இதுதான். ஜேடி அதாவது விஜய் பகலில் பாடமெடுக்கும் வாத்தியார். 'பவானி' அதாவது விஜய் சேதுபதி இரவில் பொளந்தெடுக்கும் ரௌடி . ரெண்டுமே ஒரே ஆளுதான் 'Alternate Ego' என்று அறிவியல் பாடமெடுத்தார்கள். டீசரை நல்லா பாத்திங்கன்னா விஜய் சேதுபதி போர்சன்லாம் நைட்ல இருக்கும் விஜய் போர்சன்லாம் பகல்ல இருக்கும். ரெண்டு பேருக்குமே முகத்தில ஒரே மாதிரி காயம் இருக்கும் என்று எக்குத்தப்பாக கிளப்பிவிட்டார்கள். 1999 ஆண்டு பிராட் பிட் நடித்து David fincher இயக்கத்தில் வெளிவந்த 'Fight Club' படத்தின் கான்சப்ட் தான் இது. மாஸ்டர் போறதுக்கு முன்னாடி எதுக்கும் இந்த படத்தையும் ஒரு பார்வை பாத்து வச்சிக்கோங்க. அப்படியே Alternate Ego-னா என்னங்கறைதையும் கூகுள் பண்ணி பாத்துக்கோங்க. ஒருவேளை நிஜமாவே இதான் கான்சப்டா இருந்து நமக்கு புரியாம போயிடுச்சுனா. -
3 விக்ரம் வேதா
ஹீரோவா நடிக்கிறது விஜய் சேதுபதிக்கு நடிகைகளுக்கு முத்தம் கொடுக்கிற மாதிரினா வில்லத்தனமா நடிக்கிறது ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி. அது அவருக்கு கை வந்த கலை. 'எப்படி பார்த்தாலும் நீயும் நானும் ஒண்ணுதான சார்' என்று நக்கலும் கெத்தும் கலந்த வில்லனாக விக்ரம் வேதாவில் மிரட்டியிருப்பார் விசே. 'அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்' என்று மாஸ்டர் டீசரில் விஜய் சேதுபதி காட்டிய ஆங்கிரி மாடுலேசன். செம ட்ரீட்டு இருக்கு என்று விஜய் ரசிகர்களையே குஷியாக்கியிருக்கிறது. விஜயும் விஜய் சேதுபதியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சிகள் எப்படி இருக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்கள் ஒரு சாம்பிளாக விக்ரம் வேதாவை பார்த்துக்கொள்ளலாம். வார்ம் அப்பாக இருக்கும்.
-
4 ஆயிரத்தில் ஒருவன்
டேய் இதுக்கும் மாஸ்டர் படத்துக்கும் என்னடா சம்பந்தம்னு நீங்க கேட்கலாம். ஆக்சுவலா ஒரு சம்பந்தமும் இல்ல. ஆனா கிட்டத்தட்ட 10 மாசமா தியேட்டர்ல படம் பாக்காம மாஸ்டர் படம் வரட்டும் பாத்துக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்திருப்பீங்க. கொரோனா டைம்ல தியேட்டர் போகிறது கொஞ்சம் ரிஸ்க்தான். தியேட்டர் சீட்லாம் சரியா சானிட்டைஸ் பண்ணிருப்பாங்களா, டெம்பரேச்சர் செக் பண்ணி அனுப்புவாங்களா? அவ்ளோ நேரம் மாஸ்க் போட்டு படம் பாக்குறதுக்கு எப்படி இருக்கும்? இப்படி பல சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கும். அதுக்கெல்லாம் ஒரு ட்ரையலா இப்போ தியேட்டர்ல ஓடிட்டு இருக்குற ஆயிரத்தில் ஒருவனுக்கு போய் தியேட்டர்கள் எப்படி இருக்குனு செக் பண்ணிக்கலாம். கூட்டமும் குறைவா இருக்கும், ஏற்கனவே பாத்த படம். அதுனால எதாவது சரியில்லனா அப்படியே ரிட்டர்ன் ஆகிடலாம். அந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கு ஓக்கேன்னா தைரியமா மாஸ்டர் புக் பண்ணிடலாம் பாருங்க.
-
5 ஒன்லி ஃபார் விஜய் ஃபேன்ஸ்
இதெல்லாம் நாங்க சொல்லிதான் நீங்க பண்ணனும்னு இல்ல. படம் ஆரம்பிக்குறதுக்கு முதல் நாள்ல இருந்தே டீசர், ஆடியோ லாஞ்ச், சாங்க்ஸ்னு ரிப்பீட் மோடுல மாஸ்டரை ஓடவிடுங்க. அந்த எனர்ஜியோட மாஸ்டரை என்ஜாய் பண்ணுங்க. முக்கியமா மாஸ்க் போட்டு படம் பாருங்க.
0 Comments