வெங்கட்பிரபு - விஜய்

வெங்கட் பிரபு – தளபதி காம்போ.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

லியோ படத்துக்கப்புறம் தளபதி விஜய் நடிக்கப்போற படத்தை வி.பினு செல்லமா அழைக்கப்படுற டைரக்டர் வெங்கட் பிரபு டைரக்ட் பண்ணப்போறது நம்ம எல்லோருக்குமே தெரியும். பாட்ஷா படத்துல ரஜினி ‘எனக்குன்னு ஒரு இது இருக்கு’-னு சொல்றமாதிரி நம்ம வெங்கட் பிரபுவுக்கும் ஒரு சில இது இருக்கு. அவரோட படங்கள்ல ஹீரோ மாறலாம் கதைக்களம் மாறலாம் ஆனா இப்போ நாம பாக்கப்போற இந்த விசயங்கள் கண்டிப்பா அவரோட படத்துல எப்போதும் இருக்கும். அது என்ன மாதிரியான விசயங்கள்.. ஒருவேளை இதெல்லாம் தளபதி68-ல இருக்க வாய்ப்பிருக்காங்கிறதையும் இப்போ நாம பாக்கப்போறோம்.

விஜய் - வெங்கட்பிரபு

டார்க் காமெடி

நெல்சன் புண்ணியத்துல டார்க் காமெடிங்கிற ஒரு ஃப்ளேவர் அதிகமா புழக்கத்துல இருந்தாலும் டார்க் காமெடின்னு ஒரு டர்ம் இருக்குங்கிறதை நாம தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே அதைத் தொடர்ந்து தன்னோட படங்கள்ல பயன்படுத்த ஆரம்பிச்சவரு வெங்கட் பிரபு. சரோஜால ஹீரோ & கேங் தெரியாமப்போய் ஒரு கொடூரமான வில்லன் கேங்க்கிட்ட போய் மாட்டிக்கிறாங்கங்கிறது ஒன்லைன். இப்படிப்பட்ட ஒன்லைன் பாக்குற நமக்கு எவ்வளவு பதட்டத்தைத் தரணும், அதையே வெங்கட்பிரபு ஃபுல் லென்த் காமெடி ட்ரீட்டா ஸ்கிரின்பிலே பண்ணியிருப்பாரு. அதேசமயம், அந்த சீக்குவென்ஸூக்கான சீரியஸூம் குறையாம இருக்கும். ஒரு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில விக்னேஷ் சிவன், நெல்சன்லாம் எங்களுக்கு டார்க் காமெடி பண்றதுக்கு முன்னோடியே வெங்கட்பிரபுதான்னு சொல்லியிருப்பாங்க. அந்த அளவுக்கு டார்க் காமெடியில வெங்கட் பிரபு பெரிய வஸ்தாது.

பிரேம்ஜி

பிரேம்ஜி

ஸ்கிரிப்ட் இல்லாமகூட  வி.பி ஷூட்டிங் கிளம்புவாரு. பிரேம்ஜி இல்லாம கிளம்பமாட்டாரு. அவங்க ரெண்டு பெருக்கும் நடுவுல அப்படி ஒரு அக்ரீமெண்ட் இருக்கு. அதாவது, வெங்கட்பிரபு டைரக்ட் பண்ற படத்துல, ஒண்ணு பிரேம்ஜிக்கு நடிக்க ரோல் கொடுக்கனும் அப்படி ரோல் இல்லன்னா பிரேம்ஜிதான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ணனும் இதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற ஒப்பந்தம். அதுகேத்தமாதிரி வெங்கட்பிரபுவோட எல்லா படத்துலயும் பிரேம்ஜிக்கு ரொம்ப முக்கியமான ரோலதான் அவர் கொடுத்துக்கிட்டு வர்றாரு. அப்படி அவர் நடிக்காத படங்கள்லான மன்மதலீலை, பார்ட்டி ரெண்டு படத்துக்கும் பிரேம்ஜிதான் மியூசிக் பண்ணது. அப்போ டீல் படி பிரேம்ஜிக்கு தளபதி 68-ல நடிக்க ரோல் கொடுத்தாகணும்ல.

யுவன் ஷங்கர் ராஜா

யுவனும் வெங்கட்பிரபுவும் பேசிக்காவே நல்ல வேவ் லெந்த் இருக்குறதால அந்த காம்பினேசன்ல வர்ற ஆல்பம் எல்லாமே எப்போ கேட்டாலும் ஃப்ரெஷ்ஷாவே இருக்கும். இந்த காம்போவுல வர்ற பாட்டுகள் ஒரு பக்கம் ஹிட் ஆகுதுன்னா.. தீம் மியூசிக்ஸ் அதைவிட பெருசா ஹிட்டடிக்கும். அதுக்கு உதாரணமா சென்னை-28, கோவா, மங்காத்தா, மாநாடுனு எல்லா படங்களையும் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த காம்பினேசனோட மியூசிக் ஒவ்வொரு படத்துலயும் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும். அடுத்து தளபதி 68-ல நிச்சயமா இந்த காம்பினேசன் அட்டகாசம் பண்ணும். சரியா 20 வருசம் கழிச்சு இப்போதான் விஜய்கூட சேர்ந்து ஒர்க் பண்றதால நிச்சயம் ஃபேன்ஸுக்கு செம்ம ட்ரீட் இருக்கும்.

விஜய் - யுவன்

பார்ட்டி கேங்

வெங்கட் பிரபுவோட பார்ட்டி கேங்க் ரொம்ப பெருசு. சிவா, அரவிந்த் ஆகாஷ், வைபவ், ஜெய், விஜய் வசந்த், அஜய்னு  பெரிய கேங்க்தான் வெங்கட்பிரபுவின் நண்பர்கள் பட்டாளம். இவங்களோட இருக்கும்போது கிடைக்கிற வைப்தான் தனக்கு எனர்ஜி தருதுன்னு வெங்கட்பிரபு  அடிக்கடி சொல்வாரு.அதுக்கேத்தமாதிரி தன்னோட ஸ்கீர்ன்பிளேல இவங்களுக்கு எப்படியும் ஒரு நல்ல ரோல் இருக்குற மாதிரி பாத்துப்பாரு.  அப்படி இல்லன்னாலும் அட்லீஸ்ட் ஒரு கேமியோ ரோல்லயாச்சும் இவங்கள்ல ஒருத்தர் வர்ற மாதிரி பாத்துப்பாரு. வெங்கட்பிரபு தன்னோட நடிகர்களுக்கு ஸ்கீர்ன்பிளேவுல சரிசமமான இடமும் அதை படமாக்கும்போது நடிகர்களுக்கு இவர் கொடுக்குற ஃப்ரீடமும் எல்லாப் படத்துலயும் இருக்கும் அதை நிச்சயம் தளபதி 68-லயும்  எதிர்பாக்கலாம். இதனால ஒரு அட்டகாசமான கேஸ்டிங் அதுல இருக்கும்ங்கிறதுல எந்த டவுட்டும் இல்ல.

கங்கை அமரன் பாட்டு

கங்கை அமரன் பாட்டு இல்லாத வெங்கட்பிரபு படம் இருக்காது. மாநாடு படம் தவிர்த்து வெங்கட்பிரபுவோட எல்லா படத்துலயும் ரீசண்டா வந்த கஸ்டடி உட்பட எல்லா படத்துலயும் பாட்டு எழுதியிருக்காரு கங்கை அமரன், அதுவும் அந்தப் பாட்டெல்லாம் ஏதோ ஏனா தானோ பாட்டு கிடையாதுங்க.. ஜல்சா பண்ணுங்கடா, சரோஜா சாமான் நிக்காலோ, கோடான கோடி, இதுவரை இல்லாத உறவிது, வாலிபா வா வா, விளையாடு மங்காத்தா, இது எங்க பல்லேலக்கான்னு கங்கை அமரன் தன் மகனுக்கு எழுதுன பாட்டுக்கள்ல 90 % சதவிகிதம் சூப்பர் ஹிட் பாட்டுகள்தான். அந்தவகையில நிச்சயம் தளபதி 68-லயும் ஒரு சூப்பர் ஹிட் பாட்டை கங்கை அமரன் எழுதி நாம கேட்கப்போறோம்னு இப்போவே அடிச்சு சொல்லலாம்.  

Also Read – லோகேஷ்.. விஜய்.. அனிருத்… லியோ-வுக்கு என்னென்ன சவால்கள் இருக்கு?!

வில்லன் கேரக்டர்ஸ்

வெங்கட்பிரபு படத்துல வில்லன் கேரக்டர்ஸ் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். அதுவும் அவரோட வில்லன் கேரக்டர்ஸ் ரெண்டு விதமா இருப்பாங்க. மாநாடு எஸ்.ஜே.சூர்யா, மங்காத்தா அஜித், சரோஜா சம்பத்னு ஒருபக்கம் ஓப்பனா டெட்லியா வில்லன் கேரக்டர்ஸ் இருக்கும்னா.. இன்னொருபக்கம் முக்கியமான டைம்ல ட்விஸ்ட் அடிக்கிற அதுவரைக்கும் நல்லவன் மாதிரி தெரிஞ்ச ஒரு வில்லன் கேரக்டரும் அவரோட பெரும்பாலான படத்துல இருக்கும். மங்காத்தா அர்ஜூன், சரோஜா ஜெயராம், மாநாடு ஒய்.ஜி.மகேந்திரன் இதெல்லாம் ஒரு நார்மல் கேரக்டர் வில்லனா ட்விஸ்ட் ஆகி பெருசா ஒர்க் ஆன கேரக்டர்ஸ். அந்தவகையில தளபதி68-லயும் நிச்சயம் அப்படி சுவாரசியமான வில்லன் கேரக்டர்களையும் சில எதிர்பாக்காத டிவிஸ்டுகளையும் நாம எதிர்பாக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top