சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய ஒரு சூப்பர் ஹீரோ படம் ‘மின்னல் முரளி’. லுங்கியும் வேட்டியும் கட்டிக்கொண்டு சண்டைப் போட்டுக்கொள்ளும் எதார்த்தமான சூப்பர் ஹீரோக்களாக சேட்டன்கள் வடிவமைத்த இந்த பாத்திரங்கள் ரெகுலர் சூப்பர் ஹீரோ படங்களிலிருந்து விலகி வேறொரு பரிணாமத்தைத் தந்தது. அதேமாதிரி தமிழில் நம்ம ஊர் மாஸ் ஹீரோக்களை வைத்து எதார்த்தமான ஒரு சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கலாமென்றால் அதை யார் இயக்கலாம் அதில் என்ன புதுமை செய்யலாம் என ஒரு சின்ன கற்பனை
விஜய் சேதுபதி – சிம்புதேவன் (காமெடி, பேண்டஸி சூப்பர் ஹீரோ)

எதார்த்தம் என்றால் தற்போதைய கோலிவுட்டிலிருந்து முதலில் நம் நினைவுக்கு வருவது விஜய் சேதுபதி. ஃபேண்டசி வகைப் படங்களை ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனரஞ்சகமாக தந்தவர் சிம்புதேவன். இந்த இருவரும் சேர்ந்து ஒரு சூப்பர்ப் சூப்பர்ஹீரோ படமொன்றை முழுக்க முழுக்க காமெடியும் ஃபேண்டஸியும் கலந்து செய்தால் தாறுமாறாக இருக்காது?
சிம்பு – நெல்சன் (டார்க் காமெடி சூப்பர் ஹீரோ)

நிரம்பி வழியும் திறமைகளுக்கு சொந்தக்காரர் சிம்பு. டார்க் காமெடி ஸ்பெஷலிஸ்ட் நெல்சன். இந்த இருவரும் சேர்ந்து டார்க் காமெடி பேக்டிராப்பில் ஒரு சூப்பர்ஹீரோ படம் அமைத்து, எப்படி வேட்டி கட்டிய சூப்பர் ஹீரோக்கள் என புதுமைப் படைத்தார்களோ அதுபோல, டார்க் காமெடி செய்யும் சூப்பர் ஹீரோக்கள் என புதுமை செய்யலாம். நெல்சனின் பாத்திர வடிவமைப்புக்கு பல்லைக் கடித்துக்கொண்டு பேசும் சிம்புவின் பாணியும் பக்காவாக பொருந்தும்.
தனுஷ் – வெங்கட்பிரபு

எஸ் தனுஷ்தான். ஏன் ஒல்லியாக, பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் ஒரு சூப்பர்ஹீரோ இருக்கக்கூடாதா..? ‘மாநாடு’ மாதிரியான ஒரு ஸ்பெஷல் திரைக்கதை அமைத்து அதன் பின்னணியில் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்.. அதில் ஹீரோ தனுஷ் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்..?
சூர்யா – ரஞ்சித்

ரஞ்சித் படம் என்றால் நிச்சயம் அதில் காத்திரமான ஒரு அரசியல் பார்வை இருக்கும். அழுத்தமான அரசியல் பேசும் ஒரு சூப்பர்ஹீரோ பாத்திரம் வடிவமைக்கப்பட்டு அதில் சூர்யா நடித்தால் நிச்சயம் இன்னொரு ‘ஜெய்பீம்’நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அஜித் – லோகேஷ் கனகராஜ்

ஹீரோக்களின் டெம்ப்ளேட் அம்சங்களை தொடர்ந்து உடைத்துவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஒரு சார்மிங்கான சூப்பர்ஹீரோவாக அஜித், இயல்பாக.. தவறுகளை செய்து பின் மனம் திருந்தக்கூடிய பைக் சாகசங்கள் செய்யாத ஒரு எதார்த்தமான கேர்கடரில் நடித்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் ஸ்பெஷலாகத்தான் இருக்கும்.
விஜய் – மிஷ்கின்

தமிழில் முதன்முறையாக சூப்பர்ஹீரோ கான்செப்டைக் கொண்டு படம் இயக்கியவர் மிஷ்கின்தான். அந்தவகையில் மீண்டும் அவர் தனக்கேயுரிய பாணியில் ஒரு சூப்பர்ஹீரோ படமொன்றை விஜய் நடிப்பில் இயக்கினால் எப்படி இருக்கும்..? குனிந்த தலை, மிகக் குறைவான பேச்சு, கால்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துதல் என மிஷ்கினின் கதாபாத்திரமாக விஜய் திரையில் தோன்றி சாகசங்கள் செய்தால் செம்மையாக இருக்காது?
இவற்றுள் எந்த காம்போ உங்களுக்கு மிகப் பிடித்திருக்கிறது என்பதையோ அல்லது நீங்களே ஒரு காம்போ செட் செய்தோ கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்களேன் பார்க்கலாம்.
Also Read – `மரணமில்லா மார்க்கபந்து’வாக கிரேஸி மோகன் ஏன் கொண்டாடப்பகிறார்… 4 விஷயங்கள்!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Your article helped me a lot, is there any more related content? Thanks!