லியோ விஜய்

பஞ்ச் சொல்லி பஞ்சாயத்து, கம்பு சுத்துற கதை – லியோ ஆடியோ லாஞ்ச் கேன்சலால் என்னலாம் மிஸ்ஸிங்?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரைக்கும் ராசின்றது ரொம்பவே முக்கியமானது. கூட்டணில தொடங்கி ரிலீஸ் தேதி வரைக்கும் எல்லாமே செண்டிமெண்ட் கீழதான் வரும். நாத்திகன்னு சொல்லிட்டு சுத்துற கமலோட படங்கள்கூட செண்டிமெண்ட் பார்த்து வெளிவந்தது உண்டு. அதுவும் டாப் நடிகர்கள் படங்களையெல்லாம் சும்மா அந்த மாறி சென்டிமெண்ட் பார்ப்பாங்க. பெஸ்ட் எக்ஸாம்பிள் ஒண்ணு சொல்லணும்னா.. விஜய்யோட புதிய கீதை படத்துக்கு யுவன் மியூசிக் பண்ணாரு. கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு வெங்கட் பிரபு கூட இப்போ விஜய் இணையுற படத்துக்குதான் யுவன் மியூசிக் பண்ணப்போறாரு. இத்தனை வருஷம் விஜய் படத்துக்கு யுவன் மியூசிக் பண்ணாததுக்கு முக்கிய காரணமே.. ரெண்டு பேரும் சேறும் கூட்டணி விளங்கலைன்றதுதான். விஜய்யோட ஆடியோ லாஞ்ச் நடக்காத படங்கள் ஓடலைன்றதும் அவர் படத்துக்கு இருக்குற செண்டிமெண்ட். அப்படியான 2 படங்கள் என்னென்னன்றதை வீடியோவோட கடைசில சொல்றேன். அதுக்கு முன்னாடி விஜய் ஆடியோ லாஞ்ச் ஏன் மற்ற நடிகர்களின் படங்களோட ஆடியோ லாஞ்ச்சைவிட ஸ்பெஷல்? இந்த ஆடியோ லாஞ்ச் நடக்காததால என்னலாம் ஃபேன்ஸ் மிஸ் பண்றாங்க? – இதையெல்லாம் பத்து கொஞ்சம் பார்ப்போம்.

கத்தி எடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் மியூசிக் பில்டப்லாம் கொடுப்பாங்க. அந்த மாதிரி பில்டப் தான் இந்த இசை வெளியீட்டு விழானு கத்தி ஆடியோ லாஞ்ச்ல விஜய் பேசியிருப்பாரு. மற்ற நடிகர்களோட ஆடியோ லாஞ்ச்லாம் எடுத்துப்பார்த்தா.. சில நடிகர்களோடதுல ஆன்மீகமா இருக்கும், சில நடிகர்களோடதுல அரசியலா இருக்கும், சில நடிகர்களோடது அட்வைஸா இருக்கும், சில நடிகர்களோடதுல சமூக புரட்சியா இருக்கும், சில நடிகர்களோடதுல பில்டப்பா மட்டுமே இருக்கும், சில நடிகர்களோடதுல சமூகம் பத்தின கருத்துகளா இருக்கும், சில நடிகர்களோடதுல உதவி செய்றதா இருக்கும், சில நடிகர்களோடது படத்தைப் பத்தி மட்டுமே பேசுறதா இருக்கும், சில நடிகர்களோடது பிம்பிளிக்கா பிலாப்பியா இருக்கும். ஆனால், இது எல்லாமே சேர்ந்து ஒருத்தரோட ஆடியோ லாஞ்ச்ல இருக்கு அப்டினா, அது தளபதி விஜய் படத்தோட ஆடியோ லாஞ்சா மட்டும்தான் இருக்கும். அதனாலயே விஜய் படங்களோட ஆடியோ லாஞ்ச் செம ஸ்பெஷலா இருக்கும்.

தளபதி தரிசனம்

பொதுவாகவே மிகப்பெரிய ஸ்டார்ஸையெல்லாம் அவங்க படங்களோட ஆடியோ லாஞ்ச்லதான் நம்மளால பார்க்க முடியும். இல்லைனா, விருது விழாக்கள்ல பார்க்க முடியும். கம்பேர் பண்ணி பார்த்தா ஆடியோ லாஞ்ச் தான் பெஸ்ட் வழி. ஜில்லா ஆடியோ லாஞ்ச் வரைக்கும் பத்திரிக்கையாளர்களை மட்டும் கூப்பிட்டு வைச்சு, பிரஸ் மீட் மாதிரிதான் ஆடியோ லாஞ்ச் நடந்தது. ஃபஸ்ட் டைம் அவரோட ரசிகர்கள் முன்னாடி பிரம்மாண்டமா நடந்த ஆடியோ லாஞ்ச்னா கத்தி படத்துக்கு தான். ஆனால், செம டிரெண்டான ஆடியோ லாஞ்ச்னா புலிதான். அதுக்கு காரணம் விஜய் இல்லை டி.ராஜேந்தர். விஜய்யோட லுக் அதுல பயங்கரமா பேசப்பட்டுச்சு. தெறி படத்தோட ஆடியோ லாஞ்ச் கூட்டத்துலயும் கும்பல்லயும் ஒண்ணாதான் இருந்துச்சு. இன்னைக்கும் நிறைய பேரோட ஃபேவரைட் ஆடியோ லாஞ்ச்னா மெர்சல்தான். அதைத் தொடர்ந்து சர்கார், பிகில், மாஸ்டர், வாரிசுனு எல்லா ஆடியோ லாஞ்சும் செம டிரெண்டுதான்.

தளபதியை பார்க்குறதுக்காகவே கூட்டங்கள் அவ்வளவு கூடிச்சு, போலீஸ்கிட்ட அடியும் வாங்கிச்சு, சென்னையே ஸ்தம்பித்துச்சு. தளபதி தரிசனம்னா சும்மாவா? அப்டினு நீங்க கேக்கலாம். தளபதி அன்னைக்கு என்ன டிரெஸ் போட்டுட்டு வரரோ, அடுத்த சில பல மாதங்களுக்கு அந்த சிம்பிள், நீட் ஷர்ட், பேண்ட்தான் எல்லா கடைகள்லயும் டிரெண்டிங்க்ல இருக்கும். அதைப் பார்த்து பல செலிபிரிட்டிகள், அவர் நிறைய பேருக்கு இன்ஸ்பைரிங்கா இருக்காரு. சரியா டிரஸ் பண்ண மாட்றாரு.. இனிமேல் அவர் ஒழுங்கா டிரெஸ் பண்ணிட்டு வரணும்னுலாம் சொல்லுவாங்க. அதாவது சும்மா வந்து நின்னுட்டு போனாலே தளபதி கண்டெண்ட்தான். அதுனால, ஒவ்வொரு ஆடியோ லாஞ்ச்லயும் எல்லாருக்கும் முக்கியம் தளபதி தரிசனம் மட்டும்தான். அந்த தரிசனத்தால உண்டாகுற பவர் இன்னைக்கு விஜய்கிட்ட மட்டும்தான் இருக்கு. ரஜினிக்கு கூட கம்மியாயிடுச்சுனு சொல்லலாம். அதுனால தளபதி தரிசனத்தையும், அவரோட காஸ்டியூமையும் இந்த தடவை ரொம்பவே ரசிகர்கள் மிஸ் பண்ணுவாங்க.

தளபதி குட்டிக்கதைகள்

ரஜினி வேணும்னா குட்டிக்கதை சொல்ல ஆரம்பிச்சு டிரெண்டை ஸ்டார்ட் பண்ணி வைச்சிருக்கலாம். ஆனா, அந்த டிரெண்டை புடிச்சு ஸ்ட்ராங்க் ஃபவுண்டேஷன் போட்டு அந்த களத்துல இறங்கி சிக்ஸர் அடிக்கிறது தளபதி விஜய் தான். எனக்கு தெரிஞ்சு புலி படத்தோட ஆடியோ லாஞ்ச்ல இருந்துதான் குட்டி ஸ்டோரிலாம் விஜய் சொல்ல ஆரம்பிச்சாரு. புலி ஆடியோ லாஞ்ச்ல பில்கேட்ஸ் பத்தின கதை ஒண்ணு சொல்லுவாரு. அவர் சின்ன வயசா இருக்கும்போது நிறைய பேர் அவரைப் பத்தி குறை சொல்லிட்டே இருப்பாங்களாம். அவரும் அதெல்லாம் சரி பண்ணிட்டே வந்தாராம். இன்னைக்கு பில்கேட்ஸ் உலகத்துலயே முக்கியமான பணக்காரர், குறை சொன்னவங்கலாம் அவர் கம்பெனி ஊழியர்கள். இந்த கதைக்கு ஏகப்பட்ட கிளாப்ஸ் விழுந்துச்சு.

முன்னாள் அதிபர் மாவோ ரோட்டுல போய்ட்ருக்கும்போது, ஒரு சின்ன பையன் அவரோட படங்களை வைச்சு வித்துட்டு இருந்ததைப் பார்த்துருக்காரு. உற்று கவனிச்சுப் பார்க்கும்போதுதான் எல்லா படமும் அவரோட படமாவே அவருக்கு தெரிஞ்சுது. ரொம்ப கர்வப்பட்டார். அந்தப் பையனைக் கூப்பிட்டு, என்னதான் என்மேல உனக்கு இவ்வளவு பாசம் இருந்தாலும், மற்ற தலைவர்களோட படங்களையும் விக்கணும்னு அந்த பையன்கிட்ட சொல்லியிருக்காரு. அதுக்கு அந்த பையன், மற்ற தலைவர்கள் படங்கள் எல்லாமே வித்துடுச்சு, உங்க படங்கள் மட்டும்தான் விக்கலைனு சொல்லியிருக்கான். கர்வம்லா இல்லாமல் நீங்க உயரணும்.

ஒரு டாக்டர் காரை சர்வீஸ் பண்றதுக்காக மெக்கானிக் ஷெட்டுக்கு போய்ருக்காரு. அந்த மெக்கானிக் வேலை எல்லாம் பார்த்துட்டு டாக்டர்கிட்ட, கிட்டத்தட்ட நீங்க செய்யுற அதே வேலையைதான் நானும் செய்யுறேன். வால்வுகளை பிரிக்கிறேன், பாகங்களையெல்லாம் வெட்டுறேன், ஒட்டுறேன், அடைப்புகளை எல்லாம் சரி செய்யுறேன், அது என்ன உங்களுக்கு மட்டும் அளவுக்கு அதிகமான புகழ்? அளவுக்கு அதிகமான பணம்?னு கேட்ருக்கான். அதுக்கு அந்த டாக்டர், தம்பி நீ இப்போ சொன்ன எல்லாத்தையும் வண்டி ஓடிட்டு இருக்கும்போது பண்ணு தெரியும்னு சொல்லியிருக்காரு.

ஒரு மன்னர் தன்னோட பரிவாரத்தோட, தன்னோட சிப்பாய்களோட பல ஊர்களைத் தாண்டி போய்கிட்டு இருந்தாரு. அப்போ ஒரு சிப்பாய் எலுமிச்சைப் பழச்சாற்றை ரெடி பண்ணி மன்னருக்கு கொடுக்குறாரு. மன்னர் அதை டேஸ்ட் பண்ணிட்டு கொஞ்சம் உப்பு போட்டுக் கொடுங்கனு கேட்குறாரு. ஆனால், உப்ப அந்த சிப்பாய்கிட்ட இல்லை. அப்போ கூட்டத்துல ஒருத்தர், அந்த கடைத் தெருவுல போய் உப்பு எடுத்துட்டு வானு சொல்றாரு. அப்படிலாம் போய் எடுத்துட்டு வரக்கூடாது, என்ன விலையோ அதுக்குள்ள காசைக் கொடுத்து வாங்கிட்டு வரணும்னு சொல்றாரு. உடனே அவரு என்னங்க கொஞ்சம் போல உப்பு எடுத்துட்டு வர்றதுலாம் பெரிய விஷயமா? அப்டின்றாரு. கொஞ்சம் போல உப்புதான். நானே காசு கொடுக்காமல் எடுத்துட்டா, மன்னரே காசு கொடுக்காமல் எடுத்துட்டாருனு சொல்லி, பின்னாடி வர்ற பரிவாரம் மொத்த ஊரையும் கொள்ளையடிச்சுடும்னு சொன்னாராம். அதுதான் மன்னர்கள்.

விஜய் சொன்ன கதைகளை இப்படி சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம். நிறைய கதைகள் புரூடானுலாம் சொல்லுவாங்க. ஆனால், கேட்க நல்லாருக்குல?! அந்தக் கதைகளை நாங்க ரொம்பவே இந்த முறை மிஸ் பண்றோம். கண்டிப்பா தரமான குட்டி ஸ்டோரி ஒண்ணை சொல்லியிருப்பாரு ஆடியோ லாஞ்ச் நடந்திருந்தா…

Also Read – விஜய்க்கே ஆட்டநாயகன் இவர்தான்… யார் இந்த டென்ஸல் வாஷிங்டன்?

தளபதி பஞ்ச்கள்

உண்மைக்கு விளக்கம் கொடுத்தா தெளிவாகும். அதுவே வதந்திக்கு விளக்கம் கொடுத்தா உண்மையாகும்.

எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்க தெரியும். பொய்யா ஒருத்தரை நேசிக்க தெரியாது.

நீங்க எப்பவுமே அடுத்தவங்க தொட்ட உயரத்தை இலக்கா வைச்சுக்காதீங்க. நீங்க தொட்ட உயரத்தை அடுத்தவங்களுக்கு இலக்கா வைங்க.

அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் கூட ஆசையா பழகுவாங்க. அன்பா இருந்தா பழகுற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க.

உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்குமாம்.

உண்மையா இருக்கணும்னா சில நேரத்துல ஊமையா இருக்கணும்.

விஜய் சொல்ற இந்த பஞ்ச்களே பல பஞ்சாயத்துகளை கிரியேட் பண்ணும். அந்த பஞ்ச்களை இந்த தடவை கேட்க முடியாது.

பைரவா, பீஸ்ட் இந்தப் படங்களுக்கு ஆடியோ லாஞ்ச் நடக்கலை. ரெண்டு படமும் எதிர்பார்த்த அளவு போகலை. அப்போ இந்த படமும்.. அப்டினு சோஷியல் மீடியால நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. எது எப்படியோ ஆடியோ லாஞ்ச் நடக்காததால பல கண்டண்ட் இந்த தடவை மிஸ் ஆயிடுச்சுன்றதுதான் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top