பம்மல் கே சம்பந்தம் படத்துல கமலுக்கு வயித்துக்குள்ளா பாட்டு கேக்குற மாதிரி ‘நாயகன் மீண்டும் வரான்’னு எல்லார் மண்டைக்குள்ளயும் ஓடிட்டு இருக்கு. எங்க பார்த்தாலும் விக்ரம் வைப்ஸ்தான். ‘எவன்டா அவன் கோஸ்ட்டு… கையில சிக்குனா ரோஸ்ட்டு’னு தேடிட்டு திரியுற ஃபகத். ‘மூணு பொண்டாட்டிகூட அடிச்சேன் டாவு… ரோலக்ஸ் கைல மாட்டுனா சாவு’னு பயந்து நடுங்குற விஜய் சேதுபதி. ‘போதைப் பொருளை காப்பாத்தணும்னா ஏஜெண்டுகளை அனுப்புவேன்.. பேரனைக் காப்பத்தணும்னா நானே வருவேன்’னு பால் காய்ச்சியே மாஸ் காட்டுற கமல். இப்படி மூணு மெயின் ப்ளேயர்ஸூம் வெறித்தனமா ஆடுன இன்னிங்ஸ்தான் விக்ரம். இந்த மூணு பேருல யார் ரியல் வின்னர்? தெரிஞ்சுக்கலாம் வாங்க.
‘எலேய் ஆண்டவர்கூட இப்ப வந்தவங்களையா கம்பேர் பண்ற… லெஜெண்டுடா அவரு’னு பழைய விக்ரம் செட்டு கமல் நற்பணி மன்ற ஆட்கள் அருவாளைத் தூக்கலாம். அங்கிள் நடிப்பை கம்பேர் பண்ணல. அதுல நம்மவர் லெஜெண்டுதான். படத்துல அவங்க கேரக்டரை மட்டும்தான் வச்சி பார்க்கப்போறோம்.
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம். நீங்க இன்னும் விக்ரம் பார்க்கலைனா இதுல நிறைய ஸ்பாய்லர்ஸ் இருக்கலாம். வேணாம்னு நினைச்சா இப்பவே எஸ் ஆகிடுங்க.
கமல்
ரொம்ப நாளைக்கு அப்பறம் பெட்டர் மாக்ஸ் லைட் விலைக்கு போன மாறி பல வருசம் கழிச்சு ஒரு கமல் படத்தை கொண்டாடுறாங்க. பதட்டத்துல என்ன பண்றதுனு தெரியாம விக்ரம் டீமுக்கு கார், பைக்னு வாங்கிக் கொடுத்து அசத்திட்டு இருக்காப்ல. இவர் இருக்குற வேகத்துக்கு படம் பார்த்த நம்ம அக்கவுண்ட்லகூட ஆளுக்கு 500 ரூவா போட்டாலும் போடுவார்னு நெட்டிசன்லாம் ரவுசு காட்டுறாங்க. ஏஜெண்ட் விக்ரம் அலைஸ் கர்ணனா வர்ற கமலுக்கு ஃபர்ஸ்ட் ஹாஃப்ல விடிஞ்சா ஜே.டி இருட்டுனா லேடினு சுத்துறதைத் தவிர ஒரு வேலையும் இல்ல. ஆனா இண்டர்வல்ல வாரி துன்னுட்டு போயிடுவேன்னு சொல்றதுல ஆரம்பிச்சு செகண்ட் ஆஃப்ல மாஸோ மாஸோ கொல மாஸூ. அதுவும் அந்தப் ‘பெரியப்பா’வை இழுத்துட்டு வர்றப்போ முகத்துல காட்டுற எக்ஸ்பிரசன் முன்னூறு நாயகனுக்குச் சமம். இப்படி ஒரு கமலைப் பார்த்து எத்தனை நாளாச்சுனு இன்னொசண்ட் கமல் ஃபேன்ஸ் கண்ணீரும் கம்பலையுமா வர, இதெல்லாம் எங்காளு ஆளவந்தான்லயே பண்ணிட்டாரு பந்தா காட்டுறாங்க இண்டலெக்சுவல் கமல் ஃபேன்ஸ்.
விஜய் சேதுபதி:
இவர் வீட்டுக்கு பாம் வச்சா பயந்து நடுங்குறாப்ல, படம் முழுக்க, ‘எலேய் ரோலேக்ஸ் கைல சிக்குனா என்ன ஆவ தெரியுமா’னு பயந்து நடுங்குறாப்ல. ஒரே ஒரு டாஸ்க்கு கல்யாணத்துல ஒருத்தரை காப்பத்துறது அதையும் சொதப்பிடுறாப்ல, ஹேய் மேன் ஊருக்குள்ள உன்னை பெரிய டான்னு சொன்னாய்ங்கனு பார்த்துட்டு இருக்க வேண்டியதா இருந்தது சந்தனம் கேரக்டர். விஜய் சேதுபதிக்கு இந்த படத்துக்கு மேனரிசத்துக்காக ஒரு ட்ரெய்னர்லாம் வச்சதா சொன்னாங்க. ஒருவேளை ஒரிஜினல் லோக்கல் டான்லாம் இந்த மாதிரி கோக்குமாக்காதான் திரிவாங்க போல. நாம என்னத்த கண்டோம்.
ஃபகத் ஃபாசில்
‘எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது உங்களுக்கு இருந்தா மீறப்படும்’ அப்படினு கண்ணுல திமிரோட திரியுற அமர் கேரக்டர்ல ஃபகத். சீக்ரெட் வேலை பார்க்குறது பொண்டாட்டிக்குத் தெரியாம, சீக்ரெட் பொண்டாட்டி இருக்குறது வேலை பார்க்குற இடத்துக்கு தெரியாம பேலன்ஸ் பண்றாரு. மாஸ்க் போட்ட கோஸ்ட்டை தேடி ஃபர்ஸ்ட் ஆஃப்ல பறந்து பறந்து சுத்துனவரு, செகண்ட் ஆஃப்ல அந்த சம்பவத்துக்கு அப்பறம் அவரே மாஸ்க்கை போட்டுட்டு நாந்தாண்டா கோஸ்ட்டுனு ரிவஞ்ச் எடுக்குறது வாரே வாவ்.
சரி இப்போ இந்த மூணு பேர்ல யார் வின்னர்? விக்ரமா, சந்தனமா, அமரா?!
மூணு பேருமே இல்ல. ரியல் வின்னர் லோகேஷ்தான். ஆக்ஷன் Burst-ல இருந்து அங்கங்க வச்ச டிவிஸ்ட் வரைக்கும் சூப்பரா வொர்க் பண்ணிருந்தாரு லோகேஷ். இப்படி மூணு கேரக்டர்களை உருவாக்கி ஒவ்வொருத்தருக்கும் ஒரு முழு கேரக்டர் ஆர்க் கொடுத்து செம படம் கொடுத்த லோகேஷ்க்கு கமல் கார் இல்ல, கப்பலே வாங்கித் தரலாம். கைதியும் விக்ரமும் ஒண்ணாகுற இடம், சூர்யாவோட ரோலக்ஸ் கேரக்டர் தர்ற அடுத்த பார்ட்டுக்கான லீடுனு தமிழ்ல ஒரு லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கிரியேட் பண்ணி வருங்காலத்துல செம எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கப் போறார்னு தெரியுது. வெல்டன் ப்ரோ.
Also Read – சுவாதியை பரமன் கொல்வதுதான் சுப்ரமணியபுரம் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்டா… 4 தகவல்கள்; ஒரு வதந்தி!