விஜய் - அட்லீ - லோகேஷ் கனகராஜ்

விஜய்கிட்ட இருந்து பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ் வாங்குனது.. அட்லீயா? லோகேஷா?

ராமராஜன் குடிச்சோ, இல்லைனா புகை பிடிச்சோ நடிக்க மாட்டாரு.. கோடி ரூபாய் கொடுத்தாலும் வில்லனா ராஜ்கிரண் நடிக்க மாட்டாரு.. சொந்தக்குரல்ல மோகன் நடிக்கவே மாட்டாரு.. பெண்களை தொட்டு இதுவரைக்கும் டி.ஆர் நடிச்சதில்லை.. இதை கொஞ்சம் எக்ஸ்டண்ட் பண்ணனும்னா சிவகார்த்திகேயன் இப்போலாம் குடிக்கிறது, புகைபிடிக்கிறதுலாம் பண்ண மாட்டாரு.. ஜிகர்தண்டா டபுள் X முன்னாடி வரைக்கும் ராகவா லாரன்ஸ் பேய் படம் தவிர வேற எதுலயும் நடிக்க மாட்டாரு.. குறைஞ்சது 10 ரோல் இல்லாமல் விக்ரம் நடிக்க மாட்டாரு.. கருத்து சொல்லாமல் சமுத்திரகனி நடிக்கமாட்டாரு.. பைக் ரேஸ் இல்லாமல் அஜித் நடிக்க மாட்டாரு.. அதேமாதிரி விஜய்யும் படங்கள்ல நடிக்க மாட்டாரு.. ரசிகர்கள் முன்னாடி மட்டும்தான் நடிப்பாருனு மீம் ஒண்ணுல போட்ருந்தாங்க.

நெல்சன், லோகேஷ், அட்லீனு கடைசி பத்து வருஷங்கள்ல அவரை டைரக்ட் பண்ண டைரக்டர்ஸை எடுத்துட்டு யார் விஜய்யை நல்லா நடிக்க வைச்சாங்கனு ரேங்க் பண்ண சொன்னா.. முதல்ல வர்றது அட்லீதான். அடுத்தது லோகேஷ், நெல்சனை இந்த லிஸ்ட்ல வைக்க தேவையில்லைனே சொல்லலாம். ஏன்னா.. அவரோட ஸ்டைலே சும்மா சந்தமா இருந்து சம்பவம் பண்றதுதான். அட்லீயோட மிகப்பெரிய பிளஸ்ஸே செண்டிமெண்ட் சீன்கள்ல அழுகவிட்ட அந்த சீனை மெருகேத்துறதுதான். என்னதான் ஏ.ஆர்.முருகதாஸோட கத்தி படத்துல என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்ராதீங்கனு கத்தி சொல்றது பிளஸ்ஸா இருந்தாலும், அங்கயும் மேனரிஸத்துல அந்த கேரக்டர்ல விஜய் அப்படியே இருப்பாரு. தெறிலதா விஜய் தன்னோட கிளீஷேவைலா விட்டு வெளிய வந்து எதாவது பண்ணனும்னு பண்ணியிருப்பாரு.

தெறில எக்ஸாம்பிள்க்கு சீன் சொல்லணும்னா.. வில்லன்கள் விஜய் குடும்பத்தை கொல்ற சீன். ஃபஸ்ட் டைம்ல அந்தப் படத்தைப் பார்க்கும்போது விஜய் ரொம்ப நாளுக்கு செமயா நடிக்கிறாரேனு தோணும். இன்னொன்னு அந்தப் படம் பார்த்துட்டு வந்து நிறைய பேர் சொன்னது, தப்பித்தவறிகூட தெறி படம் பார்த்துடாதீங்க அப்புறம் நீங்களும் விஜய் ஃபேன் ஆயிடுவீங்கன்றதுதான். புலில விஜய்யோட நடிப்பைப் பார்த்து அவரோட ஃபேன்ஸே கொஞ்சம் கடுப்பாய்ட்டாங்கதான். ஆனால், தெறி எல்லாத்துக்கும் பதில் சொல்ற மாதிரி அமைஞ்சுது. அழுதா அது நல்ல நடிப்பா? கத்துனா அது நல்ல நடிப்பா? இப்படிலாம் கேள்வி கேட்கலாம். கண்டிப்பா இல்லை, ஆனா தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை ரிப்பீட் இல்லாமல், ஒரிஜினாலிட்டியோட எப்படி பண்றாங்கன்றதுதா நல்ல நடிப்புனு தெரிஞ்ச அறிவுல சொல்லலாம்.

மெர்சல், தெறிக்கு அப்புறம் விஜய்க்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த ஃபேன்ஸுக்கான படம். அதுலயுமே நான் நல்லா நடிப்பேன்.. மாஸ் மட்டும் இல்லை.. கிளாஸாவும் நடிக்கத் தெரியும்னு காமிச்சிருப்பாரு. எக்ஸாம்பிள்கு லவ் சீன் சொல்லாம். ஐஸ்ஸ பார்த்து கண்ணடிக்கிறதுலாம் பியூர் விஜய்யோட மேஜிக் பெர்ஃபாமென்ஸ். அதுலயும் விஜய்யோட கிளீஷேக்கள் இருந்துச்சு. அதை தன்னோட கியூட்னஸால எப்படி மறைச்சாருன்றதுதான் மேஜிக்னு சொல்ல வர்றேன். இதுவரைக்கும் நீங்க பார்க்காத விஜய்ண்ணாவை நான் காமிக்கப்போறேன்னு லோகேஷ் நிறைய தடவை சொல்லியிருக்காரு. உண்மையாவே ஃபேன்பாய் மோட்ல நின்னு அதை செய்தது அட்லீதான். தெறி, மெர்சலைவிட அதுக்கு பக்காவான எக்ஸாம்பிள் பிகில். மைக்கேல் கேரக்டரை விட்ருங்க. ராயப்பன் கேரக்டரை அவ்வளவு மாஸா பண்ணியிருப்பாரு. ஃபஸ்ட் இண்ட்ரோலயே வயசானவனா நின்னு திக்கு வாய் பெர்ஃபாமென்ஸ்லாம் பண்ணி நடிகன்யா நீ நடிகன்னு சொல்ல வைச்சிருப்பாரு. சாகும்போதுகூட அவரோட ரியாக்‌ஷன்லாம் பக்காவா இருக்கும், இப்படி நடிங்களேன்னு இருக்கும்.

Also Read – விஜய்யின் வில்லன், அஜித்தின் முன்னோடி.. வெள்ளிவிழா நாயகன் மோகன் சீக்ரெட்ஸ்!

பொதுவாவே சினிமால சிவாஜி, கமல் எல்லாம் ஓவர் பெர்ஃபாமென்ஸ் பண்றாங்கனு சொல்லுவாங்க. அவங்ககிட்ட எதார்த்தமான நடிப்பு இல்லைனும் சொல்லுவாங்க. என்னைக்கேட்டா எதார்த்தம்னு ஒண்ணு இல்லவே இல்லை. எல்லா ஆக்டர்ஸும் அக்டிங்கும் ஓவர் ரேட்டட் தான். பாசிட்டிவான பார்வைல தான் இதை சொல்றேன். காக்கா முட்டை எடுத்துக்கோங்க.. எவ்வளவு எதார்த்தமா நடிக்கிறாங்கள்லனு சொல்லுவாங்க. ஆனால், அந்த ஆக்டிங்கும் ஓவர்ரேட்டட்தான். அதே மாதிரி மாஸ் படங்கள்ல நடிக்கிற நடிகர்களை ஓவர் ஆக்டிங்க்னு சொல்லி ஒதுக்குறதும் தப்புதான்.

லோகேஷ் அன்யூஷுவல் விஜய்யை காமிச்சாரு. அதுவே அவரோட ரசிகர்களுக்குலாம் புதுசாவே இருந்ததால அதை அக்சப்ட் பண்ணிட்டாங்க. லெட்டர் படிக்கிற சீனை கோட் பண்ணி விஜய்யோட ஆக்டிங் பத்தி நிறைய போஸ்ட் போட்ருந்தாங்க. அதுக்கு முன்னாடியே குடி போதைல வர்ற எக்ஸ்பிரஷன், அடி வாங்குறப்போ விழுற எக்ஸ்பிரஷன் எல்லாமே சும்மா தரமான சம்பவமாதான் இருக்கும். அட்லீயை கம்பேர் பண்ணும்போது விஜய்யோட நடிப்பு மாஸ்டர்ல கொஞ்சம் கம்மியாதான் வாங்கியிருப்பாரு. லியோலயும் திரிஷாகூட இருந்து அழும்போது அவரோட நடிப்பைப் பார்த்தா நீ எனக்கொரு இன்னொரு அம்மா மோட்தான் நியாபகம் வரும். புதுசா தோணுனது எல்லா இடத்துலயும் பார்த்திபனா விஜய்யை கேரி பண்ணிகிற விஷயம்தான். எல்லா இடத்துலயும் பார்த்திபனா தன்னை கேரி பண்ணிட்டு வந்து லியோனு ஓப்பன் அப் ஆகுற இடத்துல இன்னும் கொஞ்சம் வேற எதாவது நடிப்பை சொல்லி வாங்கியிருக்கலாமானு தோணும். இந்தக் கதை மட்டும் அட்லீகிட்ட கிடைச்சிருந்தா பின்னியிருப்பாருனும் தோணும்.ஃபைனலி அட்லீயா.. லோகேஷானு பார்த்தா.. அட்லீதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top