சந்திரமுகி

தமிழ் சினிமாவின் மைல்ஸ்டோன் – சந்திரமுகி 1 ஏன் ஸ்பெஷல்?

ஒவ்வொரு ஹீரோவுக்கும் தங்களோட ரசிகர்கள் மட்டுமில்லாம, எல்லோருமே எப்போதுமே ரசிச்சு பாக்குற மாதிரி ஒரு சில படங்கள் அமையும். அப்படி ரஜினிக்கு அமைஞ்ச ஒரு படம்தான் சந்திரமுகி. அதனாலதான் அந்தப் படம் அப்படியொரு ரெக்கார்ட் பிரேக் படமாவும் தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல்ஸ்டோன் படமாவும் இன்னைக்கு வரைக்கும் நிலைச்சு நிக்குது. அப்படி சந்திரமுகி இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு எதெல்லாம் காரணமா அமைஞ்சுதுன்னும் ரஜினியோட தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜூக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு கனெக்சன் இருக்கு அது என்னங்கிறதையும் இந்த வீடியோவுல பார்த்திடலாம். 

கதை

முதல்ல இந்தப் படத்தோட கதை. ‘பாபா’ தோல்விக்குப் பிறகு, ஒரு சின்ன கேப் எடுத்துக்கிட்ட ரஜினி, 90-களில் நடிச்சதுபோல எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஒரு படத்துல நடிக்கனும்னு முடிவு பண்றாரு. அதுக்கேத்தமாதிரி ஒரு கதையைத் தேடிக்கிட்டிருந்தப்போதான் சந்திரமுகியில நடிச்சா நல்லாயிருக்கும்னு முடிவு பண்றாரு. அதுவரைக்கும் ரஜினியை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்ட கதைகள்ல மட்டுமே அவர் நடிச்சுக்கிட்டிருந்த நிலையில, ரஜினிக்கு ஈக்குவலா மத்த சில கேரக்டர்களுக்கும் இம்பார்ட்டண்ட் இருக்கும்படியும், அதேசமயம் ரஜினிக்கு தேவையான அந்த மாஸும் படம் ஃபுல்லா இருக்கும்படியான சந்திரமுகி கதை படத்தோட வெற்றிக்கு பெரிய பலம்னுதான் சொல்லனும். இதை நல்லா புரிஞ்சுகிட்ட ரஜினி அதனாலதான்.. வழக்கமா தன்னோட படங்களுக்கு வைக்கிற டைட்டில்களான அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா,பாபான்னு தன்னோட கேரக்டர் பெயரையோ அல்லது தளபதி, மன்னன், எஜமான், மாதிரி அவரைக் குறிப்பிடுற பெயரிலயோ டைட்டில் வெச்சுக்கிட்டிருந்த நிலையில ‘சந்திரமுகி’ ங்கிற.. அந்தக் கதைக்கு பொருத்தமான ஒரு டைட்டிலை வைக்க அனுமதிச்சார்னா பாத்துக்கோங்க. அதுமட்டுமில்லாம ‘சந்திரமுகி’ க்கு அப்புறம்தான் தமிழ்ல, முனி, யாவரும் நலம், ஈரம், மாதிரியான படங்களும் அந்த படங்களும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவுல பேய் பட சீஸன் உருவாச்சு. அந்த வகையிலயும் சந்திரமுகியோட கதை ஸ்பெசல்தான்

ஜோதிகா

ஜோதிகாவோட பங்களிப்பு சந்திரமுகி வெற்றிக்கு பெரிய பலமா இருந்துச்சுன்னுதான் சொல்லனும். படம் முழுக்க சும்மா டம்மியா வந்துக்கிட்டிருந்த ஜோதிகா, கடைசி அரை மணி நேரத்துல அவங்கதான் மொத்த படமேங்கிற மாதிரி சும்மா பூந்து விளையாடியிருப்பாங்க. பர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்கும்போதெல்லாம், ‘முழுசா சந்திரமுகியா மாறி நிக்கிற உன் மனைவி கங்காவை பார்’ னு ரஜினி சொல்லி நெக்ஸ்ட் ஷாட்ல ஜோதிகா ஃப்ரேம்ல எண்டிரி ஆகி ‘ராரா..’ னு கண்ண உருட்டி பாத்தப்போ தியேட்டர்ல ஆடியன்ஸ்லாம் கதிகலங்கிட்டாங்க. அந்தவகையில படத்தப் பத்தியும் ஜோதிகா கேரக்டர் பத்தியும் எதுவுமே தெரியாம ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ இந்த எக்ஸ்பீரியன்ஸ் ஃபீல் பண்ணவங்கள்லாம் நிஜமாவே லக்கி. அப்படி உங்கள்ல யாராவது சந்திரமுகிய ஃபர்ஸ்டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்தவங்க இருந்தீங்கன்னா இதைப் பத்தி கமெண்ட்ல சொல்லுங்க. அந்த அளவுக்கு ஜோதிகா அந்த கேரக்டர்ல மிரட்டியிருப்பாங்க. அப்போ ஒரு பேட்டியில ஜோதிகாவே சொன்னாங்க, ‘சந்திரமுகி’ பாத்துட்டு வந்து எங்க அம்மா அன்னைக்கு நைட் என்கூட படுத்து தூங்க பயந்துட்டாங்க. அப்படிதான் அவங்களோட பர்ஃபாமென்ஸூம் டெரிஃபிக்கா இருந்துச்சு. 

திரைக்கதை

எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் மலையாளத்துல ஃபாசில் டைரக்சன்ல மோகன்லால், ஷோபனா நடிப்புல மணிச்சித்திரதாழ்ங்கிற ஒரு கிளாசிக் படத்தை கன்னடத்துல விஷ்ணுவர்தன்  நடிப்புல ஒரு பக்கா மாஸ் படமா மாத்தி ‘ஆப்தமித்ரா’ ங்கிர பேர்ல ரீமேக் பண்ணி ஹிட் கொடுத்திருப்பாரு பி.வாசு. அதைப் பாத்துட்டு ரஜினி வாசுவை கூப்பிட்டு தமிழ்ல ரீமேக் பண்ண படம்தான் ‘சந்திரமுகி’.  ஒரு கிளாசிக் படத்தை மாஸ் கமர்சியல் படமா மாத்துன பி.வாசுவோட திரைக்கதையும் சந்திரமுகி வெற்றிக்கு முக்கிய காரணம். ஒரிஜினல் மலையாள வெர்சன்ல, ஹீரோ மோகன்லால் இண்டர்வல் பிளாக் கிட்டதான் வருவாரு, ஆனா அதை பி.வாசு படத்தோட ஆரம்பத்துலேர்ந்து ஹீரோ கதைக்குள்ள இருக்குற மாதிரியும் அந்த போர்சன்களையெல்லாம் கதைக்கு எந்த விதத்திலும் ஸ்பீடு பிரேக்கரா இருந்திடாத வகையில காமெடியாவும் கொண்டுப்போயிருப்பாரு. அந்த ஸ்கீரின்பிளே படத்தோட பெரிய ப்ளஸ். படத்துல லகலன்னு ரஜினி சொல்றதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. ஆப்தமித்ராவுல விஷ்ணுவர்தன் வேட்டையனா வரும்போது ‘ஹாலா ஹாலா’னு சத்தம் போட்டுட்டுதான் வருவாரு. ஆனா அதை ரஜினி, லகலகன்னு மாத்துனாரு. இந்த லகலகங்கிறது ரஜினி தன்னோட சின்ன வயசுல பாத்த ஒரு மராத்தி டிராமாவுல வந்த வில்லனோட மேனரிஸம். அதை அத்தனை வருசமா ஞாபகம் வெச்சிருந்து சந்திரமுகில யூஸ் பண்ணவும் பெருசா ஒர்க் ஆகி, அதுக்கப்புறம் வந்த பல படங்கள்லயே அதி ரீகிரியேட்ட்டும் பண்ணாங்க. அதுமட்டுமில்லாம சந்திரமுகிங்கிற டைட்டிலும் ரஜினி சொன்னதுதான். ஆப்தமித்ராவுல அந்த டான்சர் பேரா ‘நாகவல்லி’தான் இருந்திருக்கு. அப்போ ரஜினிதான் ராயலா ஒரு பேர் வெக்கலாம்னு சொல்லிதான் சந்திரமுகின்னு பேர் வெச்சாரு. 

Also Read – பழசுதான்.. ஆனால், தூசி தட்டி எடுத்தா.. யார் இந்த படங்களோட ரீமேக்ல நடிக்கலாம்?

பாடல்கள்

சந்திரமுகியோட அவ்வளவு பெரிய சக்ஸஸுக்கு படத்தோட மியூசிக்குக்கும் பெரிய பங்கு இருக்கு. அதுவரைக்கும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவான்னு இவங்களே மாறி மாறி ரஜினி படங்களுக்கு மியூசிக் பண்ணிக்கிட்டிருந்த நிலையில இந்த படத்துக்கு வேறொரு மியூசிக் டைரக்டர்னதும் ரஜினி ரசிகர்களே கொஞ்சம் ஷாக் ஆகிதான் போனாங்க. என்னதான் வித்யாசாகர் அப்போ அவர் ரன், திருமலை, கில்லின்னு கலக்கிக்கிட்டிருந்தாலும் ரஜினி படத்துக்கு தாங்குவாரான்னு கொஞ்சம் ஃபேன்ஸ் மத்தியில டவுட் இருக்கதான் செஞ்சுது. ரஜினியும்கூட வித்யாசாகரை ஃபர்ஸ்ட் மீட் பண்ணப்போ, ‘சார் மூணு பாட்டை மட்டும் ஹிட் பண்ணிட்டீங்கன்னா போதும்’னு சொல்ல, ‘சார் ஆறு பாட்டையுமே ஹிட் பண்ணிடலாம் விடுங்க..’ னு கூலா சொன்ன வித்யாசாகர் அதே மாதிரி ஆறு பாட்டையும் அசால்டா ஹிட் கொடுத்தாரு. தேவுடா தேவுடா, அத்திந்தோம், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு வெரைட்டியா அவர் கொடுத்த பாட்டு எல்லாமே அப்போ ஒலிக்காத இடமே இல்ல. அதுலயும் கிளைமேக்ஸ்ல அவ்வளவு முக்கியமான ஒரு ப்ளேஸ்மெண்ட்ல வர்ற ‘ராரா’ சாங்கெல்லாம் தியேட்டர்ல ஆடியன்ஸை ஃபீரிஸ் ஆகி உட்கார வெச்சுது. சந்திரமுகி – 2 படத்துக்கூட முதல்ல மியூசிக் டைரக்டரா கமிட் ஆனது வித்யாசாகர்தான். இதை அவரோட கான்செர்ட்க்கு வந்த பி.வாசுவே மேடையிலயே சொல்லியிருந்தாரு. ஆனா ஏனோ அப்புறம் அவர் அந்த படத்துல இல்லை.  

இப்படி சந்திரமுகில வர்ற பாம்பை தவிர்த்து படத்துல வந்த வடிவேலு, நயன்தாரா, பிரபு, சாமியார் கேரக்டர், அந்த அரண்மனை, தோட்டா தரணியோட செட் & உடை அலங்காரம்னு பல காரணிகள் சந்திரமுகியோட வெற்றிக்கு பெரும் பங்கு வகிச்சுதுன்னுதான் சொல்லனும்.

சரிடா.. வீடியோ ஆரம்பத்துல சந்திரமுகிக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கும் ஏதோ கனெக்சன்னு சொன்னியே அது என்னன்னு கேட்குறீங்களா.. சொல்றேன். சந்திரமுகி பாத்தீங்கன்னா கடைசி வரைக்கும் ஒரு ஹாரர் படம் மாதிரி போய் கடைசியில ஒரு சைக்காலஜி படமா முடிஞ்சிருக்கும். அதுக்கப்புறம் அதே பேட்டர்ன்ல கார்த்திக் சுப்புராஜ் தன்னோட முதல் படமா எடுத்த படம்தான் பீட்சா. அதுலயும் கடைசி வரைக்கும் ஒரு ஹாரர் படம் மாதிரியே போய் கடைசியில ஒரு ஹீய்ஸ்ட் படமா முடிச்சிருப்பாரு.  இதுதான் நான் சொன்ன கனெக்சன். இந்த டைப்ல வேற எதுவும் படம் தமிழ்ல வந்திருக்கான்னு தெரியல

சரி.. சந்திரமுகி படத்துல உங்களுக்கு பிடிச்ச விசயம் என்ன.. கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top