அண்ணாமலை ரஜினி

அண்ணாமலை படத்தில் இருந்து டைரக்டர் வஸந்த் ஏன் விலகுனாரு?

ரஜினியோட அண்ணாமலை படத்தை டைரக்ட் பண்றதுல இருந்து ஏன் வஸந்த் விலகுனாருன்ற கேள்விக்கு பல வருஷமா பதில் கிடைக்கவே இல்லை. அந்தப் படத்துல வொர்க் பண்ணவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்தை வைச்சிருக்காங்க. இன்னைக்கும் அந்தக் கேள்வி அவரை துரத்திட்டுதான் இருக்கு. சாதாரண சினிமா ரசிகன்ல தொடங்கி ஃபேமஸ் டைரக்டர்ஸ் வரைக்கும் இந்த கேள்வியை அவர்ட்ட இப்பவும் கேக்றாங்க.

எக்ஸாம்பிள் சொல்லணும்னா வசந்தபாலன்..!

வசந்தபாலன் சில வருஷங்களுக்கு முன்னாடி வஸந்துக்கு ஃபோன் பண்ணி.. ஏன் சார் சூப்பர்ஸ்டார் ரஜினி  நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் முடிவில் இருந்து பின்வாங்குனீங்க? அதுவும் படத்தின் செட் உட்பட அனைத்தும் முடிவாகி படப்பிடிப்பு துவங்க இருக்கும் சில நாள்களுக்கு முன்பு ஏன் விலகினீங்கனு கேட்ருக்காரு. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்துட்டு.. இன்னைக்கு இருக்குற வஸந்தை உனக்கு புடிச்சிருக்குலனு பதில் கேள்வி கேட்ருக்காரு. வசந்தபாலன் ஆமானு சொன்னதும். அதுக்குதான்னு ரிப்ளை பண்ணிட்டு ஃபோனை கட் பண்ணியிருக்காரு. இதைத் தவிர பெருசா எங்கயும் அவரு பேசவே இல்லை.

வஸந்த விலகுனதுக்கு காரணம் என்னவா இருக்கும்னு பிரமிட் நட்ராஜன் ஒரு ரீஸன் சொல்லுவாரு. அந்த காரணத்தையும் வஸந்த் இப்ப சொன்ன காரணத்தையும் இணைச்சா.. உண்மைதான் போலனு தோணும்.

பிரமிட் நட்ராஜன் அப்படி என்ன சொல்லுவாரு?

அண்ணாமலையை கதையை வஸந்த் பிரியப்பட்டு தேர்ந்தெடுத்து டிஸ்கஷன்ல கலந்துகிட்டு எல்லாமே பண்ணாரு. எந்த விதமான ஸ்ட்ராங்கான காரணமும் இல்லாமல் படப்பிடிப்பு தொடங்க இருந்த மூணு நாளைக்கு முன்னாடி அவர் விலகுனாரு. அவரோட பெர்சனல் விஷயமா நான் எடுத்துகிட்டேன். இருந்தாலும் என்னுடைய காரணம்.. பாலசந்தர் சாரோட பல குணாதிசயங்கள் வஸந்த்கிட்ட உண்டு. கதை சொல்றதுல இருந்து வேலை வாங்குறது வரைக்கும் எல்லா செயல்லயும் பாலசந்தரோட பாதிப்பு இருக்கும்.

ஒருதடவை பாலசந்தரோட மேஜர் சந்திரகாந்த் டிராமாக்கு எம்.ஜி.ஆர் தலைமை தாங்குறாரு. அந்த டிராமா புடிச்சுப்போய் அவரை ரொம்பவே புகழ்ந்து பாராட்டுறாரு. அவர்கூட நான் மூணு படம் பண்ணப்போறேன்னு ஸ்டேஜ்ல சொல்றாரு. அவர்கூட பத்து படம் பண்ணுவேன்னு சொல்லல.. ஒரு படத்தோட நான் நிறுத்தவும் விரும்பலைன்றாரு. அவருக்குள்ள என்ன உணர்வு வந்துச்சுனா.. எம்.ஜி.ஆர், சிவாஜிகூடலாம் படம் பண்ணா.. அவங்க பெயர்லதான் படங்கள் பேசப்படும். ஆனால், பாலசந்தர் படங்கள்னுதான் என்னோட படங்கள் பேசப்படணும்னு அவருக்கு ஆசை. அதுனால எல்லார்கிட்ட இருந்தும் யார் மனதும் நோகாதபடி விலகுறாரு.

Also Read – மொக்கை படங்களும் ஹிட்டாகும்… மேலூர் கணேஷ் தியேட்டரின் ‘ஜில்ஜில்’ சீக்ரெட்!

பாலசந்தருக்கு என்ன தோணுச்சோ.. அதுதான் வஸந்துக்கும் காரணமா இருக்கும்னு எனக்கு தோணுதுனு நட்ராஜன் சொல்லுவாரு. அவர் பேசுறதுலாம் கேக்கும்போதும்.. வஸந்த் காரணத்தை சொல்லும்போதும்.. அவரோட படங்களை பார்க்கும்போதும்.. இதுதான் காரணம்னு ஒரு முடிவுக்கு நாம வரலாம். 

1 thought on “அண்ணாமலை படத்தில் இருந்து டைரக்டர் வஸந்த் ஏன் விலகுனாரு?”

  1. Do you mind if I quote a few of your postgs
    as long as I provide credit and sources back to your blog?
    My blog site is in the exact same area of interest aas yours and my users would certainly
    benefit from some of tthe inforkation youu provide here.
    Please let me know if this okk with you. Cheers!

    Also visit my web site; Veda

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top