விஸ்வரூபம் படத்தை யாராலும் மறக்க முடியாது. படத்துக்கு அந்த சமயம் ஏகப்பட்ட பிரச்னைகள் வந்தது. இதனால் கமல் படத்தை DTH-ல் ரிலீஸ் பண்ணப்போறேன்னு சொன்னார், இஸ்லாமியர்களுக்கு எதிரான படம்னு சில அமைப்புகள் போராட்டம் பண்ணினார்கள். படத்தை வெளியிட அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு தடை விதித்தது. `படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால், நல்ல சினிமாவை வரவேற்கும் நாட்டுக்கு நான் போயிடுவேன்’னு விரக்தி தாங்காம கமல் ஒரு ஸ்டேன்மென்ட் விட்டார்… அப்புறம் ஒரு வழியாக சில காட்சிகளை திருத்தம் மற்றும் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. கமலோட மிக முக்கியமான ஒரு படமா விஸ்வரூபம் அமைஞ்சது. இந்தளவுக்கு விஸ்வரூபம் ஏன் முக்கியம். அதற்கான 4 காரணங்கள் பத்திதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
-
1 அரசியலை வைத்து செய்யக்கூடிய அரசியல்
பின்லேடனை கொன்று அது டிவியில செய்தியாகக் காட்டப்படும். அதே ஸ்கிரீனில் கீ்ழே துண்டு செய்தியாக `The President declares new policies’னு சொல்லி பெட்ரோல் விலையை 3 சதவீதம் ஏத்தியிருப்பாங்க. பொதுவா இந்த மாதிரி பரபரப்பான சூழலைப் பயன்படுத்தி மக்களோட அத்தியாவசியப் பொருள்களோட விலையை ஏத்துவாங்க. உலக அரசியல்ல ஆரம்பிச்சு உள்ளூர் அரசியல் வரைக்கும் இதுதான் கான்செப்ட். ஜெயம் ரவிகூட தனி ஒருவன் படத்துல சொல்லுவார்ல, `ஹெட்லைன்ஸ்ல வந்த செய்திக்கும் 12-வது பக்கத்துல வர்ற ஒரு சின்ன பெட்டி செய்திக்கும் சம்பந்தம் இருக்கு’ன்னு. அந்த மாதிரி. சின்ன சின்ன விஷயத்துலகூட தீவிரவாதம் பேசியிருப்பாங்க. மம்மூ கேரக்டர் ஊஞ்சல் ஆடுற காட்சியில இருந்து தன்னைத்தானே மனித வெடி குண்டா மாத்திக்கிட்டு செத்தும் போவார். பின்லேடன் மாதிரி இருக்க ஒருத்தரை படத்துல நடிக்க வெச்சு அந்தக் காட்சிக்கான தாக்கத்தைக் கூட்டியிருப்பார்.
-
2 வசனங்கள்
* `அப்பா இல்லாத பசங்க ரொம்ப உஷாரா இருப்பாங்க உன்ன மாதிரி. தமாஷ்’,
`அப்பா யாருன்னே தெரியாத பசங்க அதவிட உஷாரா இருப்பாங்களோ.. உங்கள மாதிரி. தமாஷ்’
* 5 லட்சம் எப்போ வேணாலும் கிடைக்கும் ஆனா தமிழ் பேசுற தீவிரவாதிங்க கிடைக்கிறது கஷ்டம்.
* மொதல்ல இங்கிலீஷ்காரன் அப்புறம் ரஷ்யாக்காரன், பிறகு தாலிபான் அடுத்து அமெரிக்கன் இப்ப நீங்கனு ஒரு பாட்டி சொல்வாங்க. அப்ப ஷ்ஷ்ஷ்னு சொல்வாங்க. அப்ப ங்கொம்மா வாய பொத்துனு சொல்வாங்க. முன்னாடி வால் மொளச்ச குரங்குகளானு ஆணாதிக்கத்த குறிக்கிற மாதிரி சொல்லிட்டு போவாங்க. இப்படி படம் நெடுக வசனங்கள் வந்துட்டேதான் இருக்கும்.
-
3 காட்சிகளின் தாக்கம்
நடுக்கம் வர்ற விஷயங்களையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் டீல் பண்ணிருப்பாங்க. அமெரிக்க கைதிகள் ஒரு கிராமத்துல இருப்பாங்கனு நினைச்சு அந்த ஊரையே NATO சூறையாடி வெச்சிருக்கும். அப்ப ஒரு பெரியவர் முதுகு ஃபுல்லா காயத்தோட நொண்டி நொண்டி நடந்து வருவார். ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வர்ற அவரோட எலும்பு தெரியற அளவு மேக்கப் பண்ணிருப்பாங்க. ஜிகாதிகள் எதுக்குமே தயங்க மாட்டாங்க என்பதற்கு படத்துல எக்கச்சக்க உதாரணங்கள் இருந்தது. வேர்ஹவுஸ் உள்ள இருந்த ஆளுங்க சீசியம் எனும் தனிமத்தை நேரடியாகத் தொட்டதால் கேன்ஸரால பாதிக்கப்பட்டிருப்பாங்க. அதுல இருந்து ஒருத்தரை க்ளைமாக்ஸ்ல அமெரிக்காவின் எஃப்.பி.ஐ சுடுவாங்க. ஒரு சொட்டு பயம் கூட இல்லாம சிரிச்சுட்டே பாமை வெடிக்க வைப்பார்.
-
4 குறியீடு
ஒருத்தரை தூக்குல போட்டு தண்டனை கொடுக்குறப்ப குரான் வாசிச்சாங்கங்கிறதுதான் படத்துக்கு வந்த மெயின் பிரச்னை. அந்த தண்டனை ஆக்ச்சுவலா கமலுக்குக் கிடைக்க வேண்டியது. இந்த காரணத்துனாலதான் அழிக்கவே முடியாத பாவம் என் நெத்தியில எழுதியிருக்குனு சொல்லுவார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த சமயம் ராகுல் போஸ் கமல்கிட்ட பேசிட்டே புறாக்களை எட்டி உதைப்பார், போக புறாக்களோட கால்ல நியூக்ளியர் ரேடியேஷன் கொண்ட தனிமங்களை மாட்டிவிட்டு அமெரிக்காவுல விடுறதா சொல்வார். ஜிகாதிகளுக்கு அமைதியே பிடிக்காதுங்கிறதுக்குதான் சமாதான சின்னமான புறாவை இவ்வளவு குரூரமான விஷயத்துக்கு பயன்படுத்துவாங்க. இப்படி விஸ்வரூபம் படத்தைப் பற்றிய விஷயங்களை பேசிக்கிட்டே போகலாம்.
0 Comments