‘நான் சினிமாவுக்கு unfit..!’ – கலங்கும் நரேன்

மலையாளத்துல இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நல்ல நடிகர்கள் பக்காவான கேரக்டர் கிடைக்காமல், கோலிவுட்ல இருந்து காணாமல் போயிருக்காங்க. ஆனால், நல்ல கதாபாத்திரம் கிடைத்தும், தன்னோட நடிப்பு திறமையை நிரூபித்தும் இன்னும் கோலிவுட்டில் பெரிய பெயர் வாங்காத நடிகர், நரேன்தான். எதார்த்தமான நடிகர்… மாற்று சினிமானு வெரைட்டி காட்றவங்களோட சேர்ந்து வேலை பார்த்த நடிகர், ‘நான் சினிமாவுக்கு ஃபிட்டே ஆகாத ஆள்’னு ஃபீல் பண்ணியிருக்காரு. ஏன் தெரியுமா? கோலிவுட்டில் அவருக்கு கிடைத்த பெஸ்ட் 3 கேரக்டர்கள் என்ன? நரேனால இன்னும் முன்னணி நடிகரா எதனால வலம் வர முடியல? இதையெல்லாம் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

பெஸ்ட் கேரக்டர்ஸ்

தமிழ்ல நரேன் இதுவரைக்கும் சுமார் பத்து படம் பண்ணியிருக்காரு. அதுல அவர் பேர் சொல்லும்படி வெறும் 3 கேரக்டர்தான் அமைஞ்சிருக்கு. ‘சித்திரம் பேசுதடி’ திரு, ‘அஞ்சாதே’ சத்யவான், ‘கைதி’ இன்ஸ்பெக்டர் பிஜாய். ஆனால், நரேனோட கேரக்டர்ஸ் பத்தி பேசும்போது முதல்ல அஞ்சாதே படத்தைதான் சொல்லணும். முதல்ல குடிகாரனா, தொட்டதுக்குலாம் கோபப்பட்டு சண்டைப் போடுற கேரக்டரா அஞ்சாதே படத்துல வருவாரு. ‘கண்ணதாசன் காரைக்குடி’னு பாட்டுப் பாடி சுத்துவாரு. விருப்பமே இல்லாமல் போலீஸ் எக்ஸாம் எழுதி எஸ்.ஐ ஆயிடுவாரு. அந்தப் படம் முன்னாடி வரைக்கும் தமிழ் சினிமால போலீஸ்னா பஞ்ச் பேசிட்டு, மாஸா இருக்குறதைதான் காமிச்சிருப்பாங்க. ஏன், அதுக்கப்புறமும் ஒருசில படங்களைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் அப்படிதான் வருது. ஆனால், அஞ்சாதே படத்துல எதார்த்தமான போலீஸ் கேரக்டர், உள்ள நடக்குற குட்டி குட்டி அரசியல், போலீஸ் வேலைக்கு உள்ள வர்றவங்களோட பதற்றம் எல்லாத்தையும் கலந்து மிஷ்கின் அந்த கேரக்டரை உருவாக்கியிருப்பாரு. அந்த கேரக்டர் அவ்வளவு அழகா உருவானதுக்கு முக்கிய காரணம், நரேன்.

நரேன்
நரேன்

அஞ்சாதே’ நல்ல விமர்சனங்களை பெற்ற பிறகுதான். ‘சித்திரம் பேசுதடி’ படத்தை கவனிக்க ஆரம்பிச்சாங்க. அஞ்சாதேல ஆரம்பத்துல மட்டும் ரௌடி மாதிரியான கேரக்டர்னா… சித்திரம் பேசுதடில முழுக்கவே ரௌடி கேரக்டர் பண்ணியிருப்பாரு. வறுமையால படிச்ச வேலை கிடைக்காத சூழல்ல ரௌடியா மாறிடுவாரு. காதல்ல விழுந்து பொம்மை விக்கிற வேலைக்கு போவாரு. இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால திரும்ப ஜெயிலுக்கு போவாரு. இப்படி டிராஜெடியான சூழல்லயே சித்திரம் பேசுதடி படம் ஃபுல்லா டிராவல் பண்ணுவாரு. 

கோலிவுட்ல கைதியா என்ட்ரி கொடுத்த நரேனோட கேரக்டரை மக்கள் மத்தியில் பேச வைக்க திரும்பவும் கைதி மாதிரியான ஒரு படம்தான் தேவைப்பட்டுச்சு. அஞ்சாதே படத்துல நரேன் போலீஸா நடிச்சதைப் பார்த்துட்டுதான் கைதி படத்துல போலீஸா நடிக்க லோகேஷ் கூப்பிட்டுருக்காரு. போலீஸ் கேரக்டர் நரேனுக்கு அவ்வளவு அழகா செட் ஆகுதுன்றதுக்கு கைதி இன்னொரு எக்ஸாம்பிள். நெஞ்சிருக்கும்வரை படமும் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதைத்தவிர பள்ளிக்கூடம் படத்துல லைட்டான ஒரு கேரக்டர் பண்ணியிருப்பாரு.

அன்ஃபிட் ஃபார் சினிமா

நரேனோட சினிமா கரியர் கிராஃப்ல ஏற்ற இறக்கங்கள் எல்லாம் இல்லை. இறக்கங்கள் மட்டும்தான் அதிகமா இருக்கு. நிறைய படங்கள் நரேனை கைவிட்ருக்கு. ஒவ்வொரு படமும் கைவிடும்போது அடுத்து என்னனு நினைச்சு மனுஷன் டிப்ரஷனா இருந்த நாள்தான் அதிகம். சித்திரம் பேசுதடி, அஞ்சாதேனு மிஷ்கின்கூட நரேன் சேர்ந்த படங்கள் ரெண்டுமே ஹிட்தான். மூணாவது தடவையா முகமூடில சேர்ந்தாங்க. அந்தப் படம் அவரை கைவிட்ருச்சு. அந்தப் படம் மட்டுமில்ல, தம்பிக்கோட்டை, கத்துக்குட்டி, ரம், யுடர்ன் அப்டினு தமிழ்ல நரேன் பண்ண எந்த கேரக்டரும் சரியா வொர்க் அவுட் ஆகலை. 

நரேன்
நரேன்

“எனக்கு எக்ஸ்பிரஷன்ஸ் வராது. நான் ரொம்ப சாஃப்ட்டான ஆள். உண்மைய சொல்லணும்னா. சினிமாவுக்கு அன்ஃபிட் ஆன ஆள் நான். ஆனால், சினிமா மேல எனக்கு பேஷன் இருக்கு. அதனாலதான் ட்ரை பண்ணிட்டே இருக்கேன்”னு மனுஷன் ஃபீல் பண்ணி சொல்லுவாரு. தமிழ்ல மட்டுமில்ல கேரளாலயும் பெரிய வரவேற்புலாம் நரேனுக்கு இல்லை. அடூர் கோபாலகிருஷ்ணன் படத்துல அறிமுகமாகியிருந்தாலும், இன்னைக்கும் ஒரு நல்ல கேரக்டருக்காக, நல்ல ஓப்பனிங்க்காக, நல்ல இன்னிங்ஸ்க்காக, ஃபார்ம்க்காக மனுஷன் தவிச்சிட்டுதான் இருக்காருனு சொல்லலாம். விக்ரம், நரேனுக்கு ஒரு நல்ல பிரேக் கொடுக்கும்னு நம்புவோம்.

நரேன் எங்க தோக்குறாரு?

அஞ்சாதே படம்தான் நரேனுக்கு பிளஸ் & மைனஸ். அந்தப் படத்துல போலீஸ் கேரக்டர அவ்வளவு நேர்த்தியா பண்ணியிருப்பாரு. அதனாலயே அவருக்கு தொடர்ந்து போலீஸ் கதைகள் வர ஆரம்பிச்சுது. டஜன் கணக்குல போலீஸ் கதைகளை ரிஜெக்ட் பண்ணிட்டே இருந்துருக்காரு. மலையாளத்துல காதல், காமெடினு வெரைட்டி காட்டி அதுல சில படங்கள் வொர்க் ஆகவும் செய்துருக்கு. ஆனால், அதுவும் கொஞ்சம் நாள்கூட நீடிக்கலை. ஒரு சாதாரண ஆளா, கேரக்டர் ரோல்ல நடிக்கணும்னு நரேனுக்கு ரொம்ப ஆசை. ஆனால், அவரோட அந்த போலீஸ் லுக் டைரக்டர்கள் மைண்ட்ல பதிஞ்சதால வேற கேரக்டர் எதுவும் அவருக்கு கிடைக்கல. அப்படியே கிடைச்சாலும் ரொமான்ஸ், காமெடி கேரக்டர்லயெல்லாம் அவரை ஏத்துக்க மக்கள் தயாராகவும் இல்லை. போலீஸ் கேரக்டரை தவிர்த்துட்டு பார்த்தா ரக்கர்ட் லுக்ல அவர் செட் ஆயிடுவாரு. இதுதான் அவர்கிட்ட இருக்குற பெரிய பிரச்னையா பார்க்குறாங்க. 

நரேன்
நரேன்

ஒருசில வருஷத்துக்கு முன்னாடி ஒரு பேட்டில சொல்லிருந்தாரு, அஞ்சாதேக்கு அப்புறம் கிட்டத்தட்ட 40 ஸ்கிரிப்ட் கேட்டு பூக்கடை ரவினு ஒரு படத்துல நடிக்க கமிட் ஆகியிருக்காரு. அது ட்ராப் ஆயிடுச்சு. அதுமட்டுமில்ல அவர் சைன் பண்ண 20 படங்கள் மேல தொடர்ந்து ட்ராப் ஆகியிருக்கு. ‘என்னோட லைஃப்ல என்ன நடக்குது’னு ஸ்டக் ஆகி யோசிச்சிருக்காரு. லக் மேல நரேனுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், உழைப்பு மேல நம்பிக்கை இருக்கு. அந்த உழைப்பு அவருக்கு இன்னும் நல்ல கேரக்டர்களை கொடுக்கட்டும். ஒரு நல்ல நடிகன் சவுத் இந்தியாலயும் இருக்காரு. ஆனால், அவரை ஒரு குறிப்பிட்ட கேரக்டரக்குள்ள மட்டுமே அடக்கிட்டாங்கன்றதுதான் வருத்தமான விஷயம்.

Also Read: சித்தார்த் அபிமன்யு.. தமிழ் சினிமாவின் செம ஸ்பெஷல் வில்லன். ஏன்!?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top