உறியடி

லோகேஷின் ஃபேவரைட் உறியடி…. அப்படி என்ன ஸ்பெஷல்?

உறியடி 2லல சின்னதா 2டி, சூர்யா பெயர்கள் இருக்குறது ரொம்ப பெருமையா இருக்குனு டீசர் லாஞ்ச்ல சூர்யா சொல்லுவாரு. ஏன்னு பார்த்தா விஜய்குமாரோட பேச்சு, இண்டர்வியூ, படம் எல்லாத்துலயும் அவ்வளவு உண்மை இருக்கும். ஒரு கிரைம் த்ரில்லருக்கு நிறைய ட்விஸ்ட் இருக்குறதுதான் அழகு. உறியடில வர்ற எல்லாவித ட்விஸ்ட்டுகளையும் ரொம்பவே கஷ்டப்பட்டு எழுதினேன். ஸ்கிரிப்ட் எழுதி முடிக்க மட்டும் ஒரு வருஷம் ஆச்சு. சில விஷயத்தால உறியடியை தியேட்டர்ல பெருசா ரிலீஸ் பண்ண முடியலை. அந்தப் படம் மூலமா எனக்கு கிடைச்ச எல்லா விருதுகளும் மீம் கிரியேட்டர்ஸுக்குதான் கொடுக்கணும். அவர் சொல்றது உண்மைதான்.. இன்னைக்கு வரைக்கும் உறியடி படம் பத்தி சோஷியல் மீடியால எதாவது மீம் வந்துட்டுதான் இருக்கு. ரொம்பவே அழகா உணர்ந்து பல அதை உறியடி விஜயக்குமார் பேசியிருப்பாரு.
நான் பெரிய நடிகர் இல்லை.. பெரிய இயக்குநர் இல்லை.. எந்த மீம் பேஜ் அட்மினையும் தெரியாது. என்ன காரணதுக்காக அவங்க என்னை சப்போர்ட் பண்ணனும்? படம் நல்லாருந்துனா அவங்கதான் அவ்வளவு தூரம் சப்போர்ட் பண்றாங்க.. இல்லைனா, அவங்கதான் கழுவி ஊத்துறாங்க. இல்லைனா, எங்கள மாதிரி ஆள்கள்லாம், நல்ல சுயேட்சை வேட்பாளர்கள் மாதிரி காணாமல் போயிடுவாங்க. லெனின், சினிமாதா ரொம்ப பவர்ஃபுல்லான கலைனு சொல்லுவாருனு அதை குறிப்பிட்டு சமூக நீதி பேசக்கூடிய படங்களை மட்டும்தான் டைரக்ட் பண்ணுவேன். அப்படியான வாய்ப்புகள் வரலைனா நான் படம் பண்ண மாட்டேன்னு சொல்லுவாரு. இப்படி சொல்லவே தனி கட்ஸ் வேணும்.


சாதி மாதிரியான விஷயங்களை எடுத்து படம் பண்றது ரொம்பவே காம்ப்ளிகேட்டடான விஷயம். கொஞ்சம் பிசகுனாலும் வரக்கூடிய விளைவுகள் பயங்கரமானதா இருக்கும். அதை பக்காவா உறியடி 1ல விஜயகுமார் பண்ணியிருப்பாரு. சாதிய சுழல்ல சிக்குற மாணவர்களை வைச்சு சாதி அமைப்புகள் அரசியலுக்கு எப்படி திட்டமிடுறாங்கனு தெளிவா எடுத்துட்டுப் போய்ருப்பாரு. கடந்த 10 வருஷங்கள்ல வந்த தெளிவான பொலிட்டிகல் த்ரில்லர் படங்கள்ல உறியடி முக்கியமானது. நல்லா நியாபம் இருக்கு. அந்தப் படம் வந்தப்போ அவ்வளவு பேர் சோஷியல் மீடியால மிஸ் பண்ணதீங்கன்னாங்க.

Also Read – யுவன் ஷங்கர் ராஜா – மதன் கார்க்கி, முதல் பாடலின் செம சீக்ரெட் தெரியுமா?


போபால் விஷவாயு தாக்குதல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் எல்லாத்தையும் நினைவு படுத்துற மாதிரி எடுக்கப்பட்டது உறியடி 2. விஷவாயு வெளியேறி மக்களை தாக்குதனால என்னலாம் பிரச்னைகள் நடக்குது, அதை அரசியல் கட்சிகள்.. கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி சாதகமா மாத்துறாங்கனு தெளிவா விஜய்குமார் பேசியிருந்தாரு. குறிப்பிட்டு ரெண்டு படத்துலயும் ஒரு சீன்னு சொல்லவே முடியாது. அவ்வளவு எஃபெக்டிவா ஒவ்வொரு விஷயமும் இருந்துச்சு.


தாபால தாத்தா ஒருத்தர் சாப்பிட வருவாரு. வேற சாதின்றதால உள்ள விடாமல் வெளிய நிப்பாட்டுவாங்க. அதை எதிர்த்து கேள்வி கேப்பாங்க. திருநங்கை ஒருத்தங்க பஸ்ல டிராவல் ஆகும்போது யாரும் அவங்க பக்கத்துல உட்காரமாட்டாங்க. பெண்களை ரெண்டு பேர் உரசிட்டு இருப்பாங்க. உட்காருங்கனு சொல்லியும் கேட்க மாட்டாங்க, நைட்டு நின்னு பேசிட்டு இருக்கும்போது.. போலீஸ் காரர் மாதிரி ஒருத்தர் வந்து டேய் இங்க வாடான்னுவாரு, சொல்லுடான்னுவாரு லெனின், வந்தா மரியாதையா கூப்பிடுங்க. அதென்ன வாடா போடானு சொல்லுவாரு.. உண்மைலயே இதெல்லாம் சின்ன விஷயம் ஆனால், பேசணும்.


நம்ம சாதிப்பெயரை சொன்னால் நாம மட்டும்தான் தலைவர்னு எல்லாருக்கும் தோண வைக்கணும். வேற எவனையும் வளரவிட்டுடக்கூடாது. வளர்ந்தா ஓட்டு பிரியும், எங்க சாதிக்காரங்களை அடிச்சதுக்கு திருப்பி தான அடிச்சாங்க. முதல்ல அடிக்கலையே? இப்படி அரசியல்வாதிகள் பேசுற வசனங்கள்… வெறும் சில நூறு அரசியல்வாதிகள்.. கோடிக்கணக்கான மக்களோட வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்குறாங்க, அரசியல்ல நம்ம தலையிடனும் இல்லை அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும், காத்து எல்லாருக்கும் பொதுவானது.. அதை எப்படி ஒருத்தன் தன்னோட ஆதாயத்துக்காக பயன்படுத்தலாம், எங்களுக்கு கடும் தண்டனையை விட உடனடி தண்டனைதான் வேணும் இதெல்லாம் பக்கா மாஸ் வசனங்கள்.


உறியடில வன்முறைகள் அதிகமா இருக்குது, மாணவர்கள் மத்தில அதை தூண்டுறாங்க, குடிச்சுட்டு சண்டை போட்டுட்டு சுத்துறதுலாம் கல்ட் கிளாசிக் படமானும் ஏகப்பட்ட பேர் எழுதி தள்ளுனாங்க. அவங்களுக்குலாம் சொல்றது வன்முறை, வசனங்கள், தாபா விஷயங்கள் மூலமா எவ்வளவு அரசியல், சமூகநீதிலாம் பேசியிருக்காங்க. அதெல்லாம் கண்ணுக்கு தெரியலை. இத்துணூண்டு ஈ செத்துது கண்ணுக்கு தெரியுதானு கேட்க தோணுது. சோஷியல் மீடியால யாரோ சொன்னதுதான்.. சாதி பத்தின படங்கள் எல்லாம் ஆரம்பத்துல இருந்து அதை பிரைஸ் பண்ணிட்டே வந்து, கடைசில தப்புனு சொல்லுவாங்க. உறியடில ஆரம்பத்துல இருந்தே அந்த பிரச்னைகளை சொல்லுவாங்க. அதுனாலயே அதை கிளாசிக்கா கொண்டாடலாம். அக்கினி குஞ்சொன்று கண்டேன் பாட்டுலாம் வரும்போது சிலிர்க்கும்.
வாழ்க்கைல என்னடா எய்ம்? ஜாலியா இருக்கணும் சார்.. ஜாலியாதான் சார் இருக்கணும்! டெம்ப்ளேட் வைரல். உண்மையாவே ஜாலியா இருக்கணும்னா என்ன மாதிரி பிரச்னைகள் எல்லாம் சாதாரண மக்கள் சந்திக்கிறாங்கனும் அரசியல் ரீதியா பேசுனது செம!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top