முத்துராமன் – கார்த்திக் – கெளதம் கார்த்திக் என மூன்று தலைமுறைகளாக நடிக்கும் குடும்பத்தின் நவரச நாயகனான கார்த்திக்கை ஏன் நாம் கொண்டாடுகிறோம்… ஐந்து காரணங்கள் இதோ…
-
1 கெமிஸ்ட்ரி
பொதுவாக ஒரு நடிகருக்கு எதாவது ஒரு நடிகையுடனோ அல்லது ஒரு சில நடிகைகுளுடன்தான் கெமிஸ்ட்ரி செட்டாகும். ஆனால், கார்த்திக்குக்கு அப்படி இல்லை. பல படங்கள் நடித்த நடிகையுடன் இருக்கும் அதே கெமிஸ்ட்ரிதான் முதல் முறையாக நடிக்கும் நடிகையுடனும் இருக்கும். அந்தளவுக்கு கெமிஸ்ட்ரி கிங்காக இருந்தார்.
-
2 காமெடி
கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடிக்கும் போதும் சரி, பிஸ்தா மாதிரியான படங்களில் தனியாக காமெடி காட்சிகளில் நடிக்கும் போதும் சரி, தனக்கென தனி முத்திரை பதித்துவிடுவார். நவரசத்தில் முக்கியமான ரசமான காமெடியில் கார்த்திக் கில்லி.
-
3 வாய்ஸ் & மாடுலேஷன்
கார்த்திக் என்றதும் நமக்குள் ஒலிப்பது அவரது மாடுலேஷனில் அவர் பேசிய வசனங்கள்தான். அந்த குரலும், மாடுலேஷனும் தனித்துவமாக இருந்ததே கார்த்திக்கை நாம் கவனித்ததற்கான காரணமாக இருந்தது. அந்தக் குரலில் அவர் பாடல்களும் பாடி அசத்தியது கூடுதல் சிறப்பு.
-
4 கிராமத்து கதாபாத்திரங்கள்
கார்த்திக்கிற்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததற்கு மிக முக்கியமான காரணியாக இந்தக் கிராமத்து கதாபாத்திரங்கள் அமைந்தன. ‘கிழக்கு வாசல்’, ‘தெய்வ வாக்கு’ என பல படங்களில் அவர் நடித்த கிராமத்து கதாபாத்திரங்கள்தான் மக்கள் மனதில் அவரை சிம்மாசனம் போட்டு அமர வைத்தது. பின் நாளில் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கும் இதுதான் காரணமாக இருந்தது.
-
5 துணிச்சல்
தமிழ் சினிமாவில் இருந்த, இருக்கும் நடிகர்கள் பலரும் தங்களுக்கென ஒரு பாணியைப் பிடித்துக்கொண்டு அதிலேயே பயணிப்பார்கள். அந்த பாணி எடுபடாமல் போகும் போதுதான் புதிதாக எதாவது ஒரு பாணியைக் கையில் எடுப்பார்கள். ஆனால், கார்த்திக் அவரது கரியரில் பல துணிச்சலான முயற்சிகளை எடுத்திருக்கிறார். இதை அவரது கரியரின் தொடக்கத்திலேயே செய்ததால்தான் அவர் இன்று வரை கொண்டாடப்படும் நடிகராக இருக்கிறார். கார்த்திக்கின் கரியரின் துவக்கத்தில் சில படங்கள் சரியாக போகாததால் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார். அதன் பிறகு மெளனராகம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும் கதாபாத்திரத்தில் நடித்து அதிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருப்பார்.
0 Comments