கோடம்பாக்கம், வடபழினி ஏரியாக்கள்ல, எத்தனையோ பேர் நல்ல கதைகளை வைச்சுட்டு சுத்துறாங்க. ஆனால், வாய்ப்பு விஜய்யோட பையனுக்குதான் கிடைக்குது. எல்லாமே நெப்போட்டிஸம்னு நிறைய பேர் சொல்றதை கேட்க முடியுது. இதைப் பத்தி கடைசி பார்ப்போம். அதுக்கு முன்னாடி ஜேசன் சஞ்சய்யோட 2,3 ஷார்ட் ஃபிலிம்ஸ் வந்துருக்கு. அதெல்லாம் எப்படி இருக்கு? ரிவியூ பண்ணுவோம்.

பிரேமம் மூலமா ஃபேமஸான டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் ஒருநாள் விஜய்யை மீட் பண்ணனும்னு போய் அவரோட பையனுக்கு கதை சொல்லியிருக்காரு. விஜய்க்கு அந்தக் கதை ரொம்ப புடிச்சுப் போய், தன்னோட பையன் அக்சப்ட் பண்ணிக்கணும்னு நினைச்சிருக்காரு. ஆனால், படிக்கணும்.. டைம் வேணும்னு கொஞ்சம் நாள் டைம் கேட்ருக்காரு. விஜய் சொல்றதைப் பார்த்தா அவருக்கு நடிக்கதான் விருப்பம்போலனு நம்மலாம் நினைச்சோம். ஆனால், சமீபத்துல வந்த அனௌஸ்மென்ட்ல பாதி பேர் காண்டாயிருக்காங்க. விஜய் ஃபேன்ஸ் செலிபிரேட் பண்றாங்க. அப்போதான், சஞ்சய் டைரக்ட பண்ண படத்தையும், அவரே டைரக்ஷன் பண்ணி நடிச்ச படத்தையும் பார்த்தேன். ஜங்ஷன் கிட்டத்தட்ட வெளியாகி 4 வருஷம் இருக்கும். கதையா பார்த்தோம் அப்டினா இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாமேனு தோணும். காலேஜ்ல ராக்கிங் பண்ண பையன் ஒருத்தனை ரிவெஞ்ச் எடுக்கப்போறதுதான் கதை. சஞ்சய்யோட நடிப்பும் அதுல சுமாராதான் இருக்கும். ஒரு விஷயம் என்னனா, டைரக்ஷன்ல செமயா பண்ணியிருப்பாரு.

புல் தி ட்ரிகருன்ற படம்தான் இன்டர்நேஷனல் லெவல்ல பேசப்பட்டுச்சு. அதோட ஃபஸ்ட் லுக் போஸ்டரே செம இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. கிட்டத்தட்ட 13 நிமிஷம் அந்தப் படம் ஓடும். ஒரு கொலை நடக்கும். அந்தக் கொலையை யாரு பண்ணியிருப்பாங்கனு தேடுறதுதான் கதை. மர்டர் மிஸ்ட்ரி ஜானர்ல படத்தோட மியூசிக், எடிட்டிங், கேமரா வொர்க்னு எல்லாமே தரமான சம்பவமா இருக்கும். பக்காவான இங்கிலீஷ் படமா அவ்வளவு அழகா அந்தப் படத்தை சஞ்சய் எடுத்துருப்பாரு. அவரோட மேக்கிங் ஸ்டைல் ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுது. சிரினு ஷார்ட் ஃபிலிம் ஒண்ணு பண்ணியிருப்பாரு. தமிழ்லதான் இருக்கும். செம இன்ட்ரஸ்டிங்காவே இருக்கும். நான் இன்விசிபிள் ஆகணும்னு சஞ்சய், சிரிகிட்ட கேப்பாரு. இன்விசிபிள் ஆகிடுவாரு. அதுக்கப்புறம் பயங்கர லூட்டி அடிப்பாரு. திடீர்னு ஸ்டாஃப் ரூமுக்குள்ள போய் மார்க்லாம் மாத்துவாரு, அவரோட இன்விசிபிள் டைம் முடிஞ்சிருக்கும். ஃபன்னா இருக்கும். இப்படி ஷார்ட் ஃபிலிம்ஸ்ல தரமான பல சம்பவங்களை பண்ணிருக்காரு. லைகா புரொடக்ஷனோட முதல் தமிழ் படம் கத்தி. நிறைய விமர்சனங்கள் வந்துச்சு லைகா மேல. விஜய்யும் லைகால படம் அதுக்கப்புறம் பண்ணவே இல்லை. ஆனால், இப்போ விஜய்யோட பையனோட முதல் படத்தை லைகா நிறுவனமே தயாரிக்குது.

சுபாஷ்கரன் பேசும்போது, ஜேசன் சஞ்சய் தான் எங்களோட அடுத்த படத்தை டைரக்ட் பண்றாரு. யுனிக்கான, எல்லாரையும் ஈர்க்கக்கூடிய படமா இருக்கும்னு சொல்லியிருக்காரு. ஜேசன் ஷார்ட் ஃபிலிம்ஸ்லாம் பார்த்தா த்ரில்லர் ஜானர் படங்கள்தான் அவரோட ஃபேவரைட் மாதிரி தெரியுது. சோ, இந்தப் படமும் த்ரில்லர் ஜானர்ல இருக்கும்னு எதிர்பார்க்கலாம். ஜேசன் விஜய்யும், “லைகா நிறுவனம் மாதிரி பெரிய பேனர்ல படம் பண்றது எனக்கு பெருமையா இருக்கு. திறமையாளர்கள் பலரையும் ஊக்குவிக்கிறாங்க. என்னோட ஸ்கிரிப்ட் அவங்களுக்கு புடிச்சிருக்குன்றதை நினைக்கும்போது மகிழ்ச்சியா இருக்கும்.
டைரக்ட் பண்ண நிறைய ஃப்ரீடம் கொடுத்துருக்காங்கனு தெரிவிச்சிருக்காரு. மேக்கிங்கா பங்கமா பண்ற சஞ்சய், கதையாவும் பெஸ்ட்டா பண்ணா நல்லாருக்கும். ஜேசன் சஞ்சய், லண்டன்ல ஸ்கிரீன் ரைட்டிங்க்ல பி.ஏ, டொரண்டோ ஃபிலிம் ஸ்கூல்ல டிப்ளமோ இப்படி சில படிப்புகளை முடிச்சிருக்காரு. ஸ்கிரீன் பிளே, டைரக்ஷன்ல மட்டுமில்ல தயாரிப்பும் சஞ்சய் படிச்சிருக்காரு. ஒவ்வொரு ஃபிலிம் மேக்கரும் இந்த தயாரிப்பு விஷயங்களையும் தெரிஞ்சுக்க வேண்டும்னு சுபாஷ்கரன் குறிப்பிட்டு பேசியிருக்காரு.

சஞ்சய்க்கு முன்னாடி ஏகப்பட்ட சவால்கள் இருக்குனு சொல்லலாம். விஜய்க்கு அவரோட பையன் நடிப்புல கலக்கணும்னு ஆசை. ஆனால், அவர் டைரக்ஷனுக்கு வந்துட்டாரு. அப்பாவோட நம்பிக்கை, டைரக்ஷன்தான் என்னோட பேஷன்னு சொன்னது, அப்பா வழியை விட்டுட்டு தாத்தா வழியை தேர்ந்தெடுத்தது எல்லாத்துக்கும் மேல விஜய் பையன் படம் எடுக்க வந்துட்டாரு.. அந்தப் படம் எப்படி இருக்கும் அப்டின்ற எதிர்பார்ப்பு எல்லாருக்குமே இருக்கும். கொஞ்சம் சறுக்குனாலும் ஏகப்பட்ட பின்விளைவு ஏற்படும். வாரிசு நடிகர்கள் மேல இருக்குற எதிர்பார்ப்பு குறையும். பிரஸ் மீட்ல கண்டிப்பா, உங்க அப்பாவை வைச்சு எப்போ படம் எடுக்கப்போறீங்கன்ற கேள்வி வரும். அதையும் சமாளிக்கணும். அதுனால சஞ்சய்க்கு இந்த முதல் படம் கத்தி மேல நடக்குற பந்தயம் மாதிரிதான்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.