பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்தநாள் இன்று. சுஜாதாவின் முதல் கதை சிவாஜி என்ற பத்திரிக்கையில் 1953-ம் ஆண்டு வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கட்டுரைகள், திரைக்கதைகள், வசனங்கள் எனப் பல துறைகளில் சுஜாதா முத்திரை பதித்துள்ளார். அவரைப் பற்றிய சின்ன மேஷ்அப்தான் இந்த கட்டுரை.
-
1 அது புலியே இல்லை!
கேள்வி : ஒரு புலி நம்மளை திங்காம, சாந்தமாப் பார்த்தா என்ன அர்த்தம்?
பதில் : அது புலி இல்லைனு அர்த்தம். -
2 கடவுள் இருக்காரா... இல்லையா?
கேள்வி : கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?
பதில் : கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை! -
3 இந்தியன்
தான் செய்யறது தப்புன்னே உறைக்காத அளவுக்கு உங்களுக்கு தப்பு பழகிப்போச்சுடா!
-
4 உள்ளம் கேட்குமே
நாம நம்ம மனசு என்ன சொல்லுதோ அதுபடி கேட்போம். ஹார்ட் ரூலர்ஸ். பட், ப்ரியா, அவ புத்தி என்ன சொல்லுதோ அதுபடிதான் கேட்பா.. மைன்ட் ரூலர்
-
5 அந்நியன்
தப்பென்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜ்னு? விளைவோட சைஸைப் பாருங்க.. எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!
-
6 மெமரீஸ்
எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய கல்லூரிப் புகைப்படம் ஒன்றைப் பற்றி பகிர்ந்தவை... ``அடையாளமற்ற, முகமற்ற சுமார் 100 இளைஞர்கள், வாழ்வின் விளிம்பில் மாரத்தான் ஓட்டம் போலப் புறப்பட்டோம். இன்று 55 ஆண்டுகள் கழிந்த பின் பலர் சிறந்தோம்; சிலர் இறந்தோம்; அமெரிக்கா சென்றோம்; கார்கள் தயாரித்தோம்; கவிதைகள் எழுதினோம்; டாக்டர்களானோம்; ஹோட்டல்கள் வைத்தோம்; வெள்ளைக்காரிகளை மணந்தோம்; ராணுவத்தில் சேர்ந்தோம்; எழுத்தாளர் ஆனோம்; பாரத தேசத்தின் குடியரசுத் தலைவர் ஆனோம்... ஒரு சேரத்தான் புறப்பட்டோம் மாரத்தான் போல!”
-
7 சுஜாதாவின் கட்டளைகளில் இரண்டு
|) மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.
||) ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது. -
8 மெக்ஸிகோ சலவைக்காரி!
சுஜாதா தன்னுடைய நாவல்கள் மற்றும் கட்டுரைகளில் சொல்கிறேன்.. சொல்கிறேன்.. என்று கடைசி வரை சொல்லாமல் போன நகைச்சுவை ஒன்று உள்ளது. அந்த நகைச்சுவையின் தலைப்பு `மெக்ஸிகோ சலவைக்காரி!’ அவர் இறந்த பிறகும் பலர் இந்த தலைப்பின் கீழ் நகைச்சுவையை சொல்லி வருகின்றனர். உங்களுக்கு தெரியுமா அந்த ஜோக்?!
-
9 சுஜாதாவோட எந்த புக் படிக்கலாம்?
|) என் இனிய இயந்திரா
||) கற்றதும் பெற்றதும்
|||) புறநானூறு: ஓர் எளிய அறிமுகம்
-
10 சுஜாதா ஜோக்ஸ்
சிவப்பு விளக்கு பகுதியில் மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா..? - நிறையவே உண்டு பச்சை விளக்கு எரிந்தவுடன் சென்றுவிடுவேன்...
0 Comments