ஒரு காலத்துல தமிழ்நாட்டோட கனவுக்கன்னிகளா இருந்து அப்பறம் தலைமறைவான ஹீரோயின்கள் அப்படினு போன நூற்றாண்டுல நாம ஒரு வீடியோ பண்ணிருந்தோம். திடீர்னு பார்த்தா ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே திரண்டு வந்து அந்த வீடியோவுக்கு ஆதரவு கொடுத்திருக்கு. கிட்டத்தட்ட 83 லட்சம் பேர் லட்சுமி மேனன், பிந்து மாதவி, ஶ்ரீதிவ்யா, மடோனானு இந்த ஹீரோயின்களை எல்லாம் மிஸ் பண்ணிருக்காங்க. ஏன்யா இந்த நாலு பேர் மட்டும்தான் இருக்காங்களானு நிறைய பேர் சண்டைக்கு வந்ததால இதோ அடுத்த பார்ட்.
ரீமா சென்

பூப்போல் பூப்போல்னு மின்னல் வெளிச்சத்துல மழைல டான்ஸ் ஆடுன ரீமா சென்னை பார்த்து ஜொள்ளுவிட்டது மாதவன் மட்டுமல்ல. நம்ம பயலுக எல்லாருமேதான். ஆடி வந்தா அல்வாக்கடை, அசைந்து வந்தா மளிகைக் கடைனு ஒரு காலத்துல ரகரகமா ரசிக்க வைச்சாங்க ரீமா. ஜேஜே, எனக்கு 20 உனக்கு 18, கிரினு குட்டி குட்டி கேரக்டர்லயா நடிக்க ஆரம்பிச்சதுல ரொம்ப வருத்தத்துல இருந்தப்போ.. திடீர்னு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன்ல இவங்க காட்டுன டிரான்ஸ்ஃபர்மேசன் ஆயிரம் ஃபயர். கடைசியா 10 வருசத்துக்கு முன்னாடி சட்டம் ஒரு இருட்டறைல தலையா காட்டுனாங்க ரீமா.. அதுக்கப்பறம் ஆள் அப்ஸ்காண்டாகிட்டீங்களே ஏம்மா.. மே மாசம் பாட்டையே பன்னிரண்டு மாசமும் கேட்டுக்கிட்டு இருக்கோம். சீக்கிரம் ஒரு ரீ என்ட்ரீ தாம்மா!
மீரா ஜாஸ்மின்

அவ கண்ணு இருக்கே அப்படி ஒரு கண்ணு… நடந்து வராளா மெதந்து வராளேனு தெரியாது அப்படினு பாய்ஸையெல்லாம் பித்துப் பிடிக்க வச்ச தாவணி போட்ட தீபாவளிதான் மீரா ஜாஸ்மின். ரன் படத்துல பஸ் சீன்ல ஃபர்ஸ்ட் டைமா மீரா ஜாஸ்மினை பாத்தப்போவே மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்தது. சண்டைக் கோழி படத்த உங்களுக்காகத் தான் பார்த்தோம். ஆனா சண்டைக்கோழி பாட்டுக்காகத்தான் ஆயுத எழுத்து படத்தையே பார்த்தோம்னு சிம்பு கணக்கா சொல்லிட்டு திரிஞ்சதெல்லாம் ஒரு காலம். அதையெல்லாம் போக்கிரி விஜய் பாடிலாங்குவேஜ் மாதிரி புல்லரிச்சு போய் பார்த்துட்டு பெண் சிங்கம், இளைஞன், விஞ்ஞானினு வாரிசு விஜய் பாடிலாங்குவேஜ் மாதிரி கொடுத்தப்போகூட சிரிச்சுக்கிட்டே சகிச்சுக்கிட்டோம். ஆனாலும் 2014க்கு அப்பறம் தமிழ்க்கு வணக்கத்தை போட்டுட்டு எண்டே ஸ்டேட்டு கேரளமானுனு அங்கிட்டே செட்டில் ஆகிட்டாங்க மீரா.
Also Read – சும்மா அதிரும்… தமிழ் சினிமாவில் பின்னிப் பெடலெடுத்த டபுள் ஹீரோ படங்கள்!
சதா

உன் போல் அழகி பிறக்கவும் இல்லை.. இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளைனு தமிழ்நாடே கொண்டாடுன பேரழகி சதா. ஜெயம் படமே ஒரு கவிதை மாதிரிதான் இருக்கும். எல்லாக் கவிதைலயும் ‘பின்னிட்டடா.. கவிஞன்டா நீ’னு நம்மளை உற்சாகமாக்குற மாதிரி ஒரு வரி இருக்கும்ல அதுதான் சதா. நீ அடி நான் பார்க்கணும்னு பெர்மான்ஸ்லயும் வெயிட் காட்டினவங்க.. நீங்க நடிக்க நாங்க பார்க்கணும்னு பார்த்து பார்த்து ரசிக்க சதா மாதிரி இன்னொரு நடிகையை டார்ச்லைட் அடிச்சு தேடினாலும் கிடைக்க மாட்டாங்க. உன்னாலே உன்னாலே சுஜாதா மாதிரி ஒரு முன்னூறு ரோல்ல நடிப்பாங்கனு எதிர்பார்த்தா 2018க்கு அப்பறம் ஆளையே காணோம். என்ன பாஸ் உங்க ஆளு திருவிழான்னாதான வரமாட்டாங்க.. இப்போதான் திருவிழாவே இல்லையே வரச்சொல்லுங்க அப்படினு சதா ரசிகர் மன்ற ஆட்கள்ட்ட விசாரிச்சோம். பாஸூ வர்ற ஜூன் 3-ஆம் தேதி 20 Years of Jayam வருது. அன்னைக்கு ‘இந்த கொலுசொலிக்கு 20 வயது’னு மன்றத்துல இருக்குற 3 லட்சம் உறுப்பினர்களும் மொத்தமா இன்ஸ்டாகிராம்ல ஸ்டோரி வைக்கப்போறோம்னு ஒரு இன்சைடு இன்ஃபர்மேசன் சொல்றாரு. நீங்களும் சதா ஃபேனா இருந்தா மறக்காம இந்த கேம்பெயின்ல கலந்துக்கோங்க.
ப்ரியாமணி

நீ கொன்னாக்கூட குத்தமில்லனு ஊருக்குள்ள சண்டியரா திரிஞ்ச பருத்திவீரன்களையெல்லாம் பாடாப்படுத்துன பிரியாமணியை மறக்க முடியுமா? கண்களால் கைது செய்த கட்டழகி.. மலைக்கோட்டையை மயங்க வைத்த தேவதை… பனாரஸ் பட்டுகட்டிய பாதுஷா.. கடைசியா சாருலதா படத்துல டபுள் டிரீட் கொடுத்த பிரியாமணி அதுக்கப்பறம் மலையாளம், கன்னடம், ஹிந்தினு பான் இந்தியா போனாலும் Rest of Tamilnadu மோடுல இந்தப் பக்கம் வராமலே இருக்காங்க. சென்னை எக்ஸ்பிரஸ்ல கும்தாவா ஒரு குத்தாட்டம் போட்டவே ‘ப்ரியூ நீ என்ன வேலை பார்க்குற தெரியுதா’னு திகைச்சு போன நம்ம பசங்க ஃபேமிலிமேன்ல அந்த எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர்லாம் பாத்துட்டு டேய் வீரா வலிக்குதுடானு கதறுனாங்க. அதுல ஒரு ப்யூட்டி என்னன்னா நான் அறியாத வயசுல இருந்தப்போ பருத்திவீரன்ல பார்த்தது.. இப்போ ஃபேமிலிமேனா இருக்கேன் ஃபேமிலி மேன்ல ப்ரியாமணியை பார்த்துட்டு இருக்கேன் அப்படினு எங்க ஆபிஸ்ல ஒருத்தர் பேசிட்டு இருந்தார்.
அசின்

இந்த மலபார் பொண்ணை யெல்லோ சுடிதார்ல பார்த்ததுல இருந்து சென்னை செந்தமிழை மறந்து சுத்துன காலங்கள் ஞாபகம் இருக்கா? இன்னைக்கு எத்தனை ஜிமிக்கி பொண்ணுங்க வந்தாலும் விஜய்க்கு சூப்பர் ஜோடினா அது அசின்தான்ங்குறதை இந்தியா துணைக்கண்டத்துலயே யாரும் மறுக்க முடியாது.
இவங்க பீக்ல இருந்தப்போ கமல்கூட ஒரு தசாவதாரம், விஜய்கூட சிவகாசி, போக்கிரி, காவலன், அஜித்கூட வரலாறு, ஆழ்வார், விக்ரம்கூட மஜா, சூர்யாகூட கஜினி, வேல் இப்படி டாப் ஹீரோக்களோட சேர்ந்து மாஸ் பெர்பாமன்ஸ்லாம் கொடுத்தாங்க. காவலன் படத்துக்கு அப்பறம் டப்புனு காணாம போயிட்டாங்க. கஜினி படத்துல வர்ற மாதிரி உண்மைலயே ஒரு மொபைல் கம்பெனி ஓனரை கல்யாணம் பண்ணி மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. இத்தனை வருசமா எட்டிக்கூட பார்க்காம இருக்குறதுக்கு கண்டிப்பா நீங்க சாரி கேட்டே ஆகணும் அசின்.. அதுவும் எங்க தமிழ்நாட்டு ஸ்டைல்ல கேட்டாதான் ஏத்துக்குவோம்.
வேற யாரெல்லாம் நீங்க மிஸ் பண்றீங்கன்னு கமெண்டுகளை தட்டிவிடுங்க.
Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos
0 Comments