ரூம் போட்டு யோசிப்பாங்களோ… வித்தியாசமான விளம்பர முயற்சிகள்!

தங்களுடைய பிராண்டின் பெயர் வெளியே தெரிவதற்காக Redbull நிறுவனம் இங்கிலாந்தின் தெருக்கள் முழுக்க ஒரு வித்தியாசமான வேலை செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுடைய விற்பனை எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

Red Bull

உலகம் முழுக்க 100 பில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான Red Bull energy drink, 1994-ம் ஆண்டு முதன் முதலில் லண்டனில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டார்கள். பெரிய பெரிய மார்கெட்டிங் ஏஜென்சிகள் எல்லாம் நாளிதழ் விளம்பரங்கள், சுவற்றில் விளம்பர பலகைகள் வைக்கலாம் எனப் பலரும் ஐடியாக்கள் சொல்ல. நிறுவனமோ வேறு ஒரு பிளானுக்காகத் தெருத் தெருவாக குப்பைத் தொட்டிகளைத் தேடி அலைந்தது. லண்டனில் பிரபலமான உணவகங்கள், பார்கள் இருந்த தெருக்களில் அமைந்துள்ள குப்பைத் தொட்டிகளில் நள்ளிரவு நேரமாகப் பார்த்து Red bull நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே காலியான red bull கேன்களைக் கொட்டிவிட்டு வந்திருக்கிறார்கள். காலையில் அந்தத் தெரு வழியாகச் செல்பவர்கள். “ஓ இந்த red bull-ஐ நிறையப் பேர் குடிக்குறாங்கப் போலவே, நாமளும் குடிச்சிப் பார்ப்போம்”னு வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்படித்தான் red bull லண்டனில் பிரபலமானது.

Red bull
Red bull

இப்படி வித்தியாசமாக வழக்கமான விளம்பரங்களாக இல்லாமல், அடித்து நொறுக்கி தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்துவதற்குப் பெயர் Guerilla Marketing. அத்தகைய சில கொரில்லா மார்க்கெட்டிங் உத்திகளைத் தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம். 

ஒரு பிரபலமான சர்வதேச சினிமா விருது வழங்கும் விழாவில் பல ஹாலிவுட் பிரபலங்களைத் தாண்டி, ஒரு பிராண்டைச் சேர்ந்த ஒரு பெண் அதிகமாக சோஷியல் மீடியாவில் வைரலானார். அது என்ன பிராண்ட், யார் அந்த பெண், என்ன நடந்தது எனத் தெரியுமா? கடைசி வரை முழுசா பாருங்க, இந்தக் கேள்விகளுக்கானப் பதில் கிடைக்கும். 

மார்க்கெட்டிங் உத்திகளில் Product Placement என ஒரு விஷயம் உண்டு. பல ஹாலிவுட் சினிமாக்களில், சில நொடிகள் முதல் நிமிடங்கள் வரை பிரபலமான பல பிராண்டுகளை போகிற போக்கில் காட்சிப்படுத்துவார்கள். நம்ம ஊர் சந்திரமுகி படத்தில் ரஜினி மாட்டு வண்டியில் வரும் போது பின்னால் விளம்பர பேனர்களில் கங்குலி டாட்டா டொக்கோமோ விளம்பரத்தில் சிரித்துக்கொண்டிருப்பார். நீங்க இப்போ நேரா யூ-ட்யுப் போய் “why this kolaveridi?” பாட்டை வீடியோவோட பாருங்க, அந்தப் பாட்டில் எத்தனை பிராண்டுகள் உங்க கண்களுக்குத் தெரியுதுன்னு எண்ணி கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம். 

ஹாலிவுட்ல இது பல கோடிகளில் புழங்கும் ஒரு பிஸினஸ். The Matrix படம் வெளியான போது அப்போது அறிமுகமான Nokia மாடல் போனைப் பயன்படுத்தித்தான் matrix உள்ளே நுழைவதும் வெளியேறுவதுமாக இருப்பார்கள். படம் ஹிட்டானதைப் போலவே Nokia 7110 மாடல் போனும் அப்போது ஹிட்டடித்திருக்கிறது. 

Dhanush
Dhanush

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் Bond girl யார் என்ற அறிவிப்புக்கு ஒரு கூட்டம் காத்துக்கிடந்தால், பான்ட் சில்லு சில்லாக நொறுக்கப்போகும் கார் எது என்பதைப் பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும். அமெரிக்கர்கள் பயன்படுத்தும் பல பொருள்கள் இப்படி Product placement ஆக பல படங்களில் இடம்பெறும். ஐ-போன் மட்டும் இந்த product placement-களில் ஒரு வித்தியாசமான நடைமுறையை எழுதப்படாத கட்டளையாக வைத்திருக்கிறார்கள்.  நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்கள் கட்டாயமாக ஐ-போன் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அது.

I Phone

இந்த புராடகட் பிளேஸ்மெண்ட்களில் அடுத்தகட்டமாக ஒரு சம்பவம் நடந்தது. 2019-ம் ஆண்டு Golden Globe Award விழாவில் Fiji Water இது போன்ற Product placement ஒப்பந்தத்தில் இருந்தது. பொதுவாகவே Fiji Water நிறுவனம் அதீதமான விளம்பரங்களில் ஈடுபடுவதைவிட, Product Placement-களில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். அங்கங்கே பிரபலங்களுக்கு குடிநீர் வழங்குவதும் இவர்கள் பொறுப்புதான். இதற்காக அழகழகான சில பெண் மாடல்கள் கைகளில் Fiji Water பாட்டில்களுடன் நின்றிருந்தார்கள். கண்ணைக் கவரும் நீல நிற உடையில் இந்த மாடல்கள் வலம் வருவார்கள். இதில், மோனா லிசா புண்ணகையுடன், இறக்கைகள் இல்லாமல் மண்ணிற்கு இறங்கிவந்த ஒரு தேவதையைப் போல இருந்த Kelleth Cuthbert என்ற ஒரு பெண் மாடல் தானாகவே சில அடிகள் தள்ளி நின்றார். அவ்வளவு தான் ட்விட்டர் முழுக்க #FijiGirl என்ற ஹேஷ்டேக் உலக டிரெண்ட் ஆனது. பல ஹாலிவுட் பிரபலங்களை விட அந்த விருது விழாவில் ஹிட்டடித்தது இப்படி ஒரு கொரில்லா மார்க்கெட்டிங்கில் இறங்கிய Fiji Water-ம் Kelleth Cuthbert-ம் தான். 

Kelleth Cuthbert
Kelleth Cuthbert

Fiji Water நிறுவனம் அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்கள். இரண்டு முறை தன்னுடைய பணியாளர்களை ஆயிரக்கணக்கில் பணி நீக்கம் செய்தார்கள். உள்ளூர் மக்களுடன் சில முட்டல் மோதல்களில் சிக்கினார்கள். இப்படி கடைசி 15 ஆண்டுகளாகவே Fiji Water பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தார்கள். ஆனால், #FijiGirl அவர்களுடைய Brand Image-யை பெரிதாக மாற்றியமைத்தது. கூடவே, Fiji Water பிரபலங்களின் விருப்பத்துக்குரிய பிராண்ட் என்ற மாதிரியான ஒரு தோற்றத்தையும் கொண்டுவந்தார்கள். உள்ளூர் சர்ச்சைகளில் சிக்கித்தவித்தவர்களை உலக ட்ரெண்டுக்கு இந்த சம்பவம் கொண்டுவந்துவிட்டது. 

இது போல நீங்கள் பார்த்து “அட, செமல்ல…” என உங்களுக்குத் தோன்றிய ஒரு விளம்பரத்தை கமெண்ட் செய்யுங்கள். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top