மனசை லேசாக்கும் ஃபீல்குட் விளம்பரங்கள்! பார்ட்-2

சில நாட்களுக்கு முன்ன ஃபீல் குட் விளம்பரங்கள் பத்தி பேசிருந்தோம். அதுக்கு ஏகோபித்த ஓஹோபித்த ஆதரவு கொடுத்தீங்க. நன்றிங்க. அதனால இதோ அடுத்த லிஸ்ட் ரெடி.  

Mercedes Benz

ஒரு குட்டிப் பொண்ணு நைட்டு நடுசாமத்துல முழிச்சுக்கும். ஸ்வெட்டர்லாம் போட்டு ரெடியாகி, பேக்லாம் பேக் பண்ணிட்டு, பக்கத்துல இருந்த ஒரு மேப்பை எடுத்துக்கிட்டு அப்படியே ரூமை விட்டு வெளில வரும். யாருக்கும் தெரியாம நைஸா வீட்டை விட்டு கிளம்பிடும். நைட்டு ஃபுல்லா ரோட்டுல தனியா சுத்தும், ஒரு பார்க்ல உக்காந்து சாப்பிடும். கொஞ்சம் நேரம் ஆனதும் மேப்பை எடுத்துட்டு ஒரு இடத்துக்கு போகும். எங்கனு பார்த்தா போலீஸ் ஸ்டேசன். அங்க போய் ‘நான் தொலைஞ்சு போயிட்டேன். என்னை வீட்ல விடுங்க’னு சொல்லும். அந்த போலீஸ் பார்த்துட்டு, ‘இதுதான் கடைசி தடவை’னு சொல்லி கார்ல ஏறச் சொல்வாரு. அது ஹாயா ஏறி நல்லா சாய்ஞ்சு உக்காரும். வண்டியை ஸ்டார்ட் பண்ணினா அது பென்ஸ் கார். அந்த பென்ஸ் கார்ல போறதுக்குதான் தினம் தினம் தொலைஞ்சு போகும் அந்த பொண்ணு.

DIYCAM Ad

வேலைக்கு போற ஒரு அம்மா தன்னோட பையனை பாத்துக்குறதுக்காக ஒரு வேலைக்காரப் பொண்ணு வைப்பாங்க. வேலைக்கு கெளம்புறப்போ, ‘பையனை சாப்பிட வச்சிடு’னு சொல்லிட்டு கெளம்புவாங்க. ஆனா அவங்களுக்கு ஒரு சந்தேகம். இந்த பொண்ணை நம்பி விட்டுப்போலாமானு. வேலைக்கு வந்தாலும் வீட்டு ஞாபகமா இருக்கும். போன் பண்ணி பையன் சாப்பிட்டானானு விசாரிப்பாங்க. இருந்தாலும் பயத்துனால வீட்டுல சிசிடிவி கேமரா இன்ஸ்டால் பண்ணுவாங்க. ஆபிஸ் வந்துட்டு வீட்டுல என்ன நடக்குதுனு கேமரா மூலமா மொபைல்ல பார்த்துட்டே இருப்பாங்க. அந்த பொண்ணு அந்த குட்டிப்பையனுக்கு விளையாட்டு காமிக்கும். ஓடி ஆடி அந்த பையனை எப்பவும் சிரிக்க வைச்சிட்டே இருக்கும். இந்த அம்மாவுக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். பையனை தூங்க வச்சிட்டு சாப்பிட உக்காரும்போது பையன் இறுமுவான். டக்குனு ஓடிப்போய் தண்ணி எடுத்துட்டு வரும். இதெல்லாம் அந்தம்மா கேமரால பாத்துட்டே ஒரு விஷயம் கவனிப்பாங்க. அந்த பொண்ணு சாப்பாடு அப்படியே இருக்கும். உடனே சிசிடிவி மூலமா அந்த பொண்ணை கூப்பிட்டு, ‘சாப்பிட்டாச்சா’னு கேப்பாங்க. அந்த பொண்ணு பதட்டத்தோட ‘பையன் சாப்பிட்டான் மேடம்’னு சொல்வாங்க. இவங்க ‘பையனை கேக்கல. நீ சாப்பிட்டியா.. ஒழுங்கா சாப்பிடு. பையனா நல்லா பாத்துக்குற உன்னையும் பாத்துக்கோ’னு சொல்வாங்க. DIYCAM சிசிடிவியோட விளம்பரம் இது.

Turkey Airlines

போன வீடியோல துருக்கி ஏர்லைன்ஸ் விளம்பரத்தை பார்க்கச் சொல்லி சரவண சந்திரன்னு நம்ம ஃபாலோயர் நமக்கு சஜஸ்ட் பண்ணியிருந்தாரு. துருக்கில நாலு சின்ன பசங்க ஃப்ளைட்ட பக்கத்துல பார்க்கணும்னு ஆசைப்படுவாங்க. வானத்துல போற ஃப்ளைட்டை வேடிக்கை பார்த்துட்டே இருப்பாங்க. உடனே அவங்களுக்கு ஒரு ஐடியா வரும். கிரவுண்ட்ல ஃப்ளைட் இறங்குற ரன்வே மாதிரி ரெடி பண்ணி ‘இஜ்டிர் கவலானி’ அப்படினு எழுதி வைப்பாங்க. அப்படினா இஜ்டிர்ங்குற ஊரோட ஏர்போர்ட்னு அர்த்தம். இதைப் பார்த்துட்டு அதான் ஏர்போர்ட்னு ஏமாந்து ஃப்ளைட் அங்க இறங்கும்ல நினைப்பாங்க. ஆனா ஃப்ளைட் இறங்காது. இன்னொரு ஐடியா பண்ணுவாங்க. இருட்டுல லைட்லாம் போட்டு காமிப்போம் வருதானு பார்க்கலாம்னு ட்ரை பண்ணுவாங்க அப்பவும் ஃப்ளைட் லேண்ட் ஆகாது. ஒருநாள் மலைக்கு நடுவுல அப்படியே ஃப்ளைட் கீழாக அப்படியே பறந்துவரும். இவங்களுக்கு ரொம்ப பக்கத்துல வந்து போகும். ஒரு குட்டி பையன் சல்யூட் வைப்பான். அப்படியே பக்கத்துல இருக்குற புது ஏர்போர்ட்ல லேண்ட் ஆகும். இவங்களும் ஓடிப்போய் அந்த ஏர்போர்ட்ல ஃப்ளைட்ட ரொம்ப பக்கத்துல பார்ப்பாங்க. ஃப்ளைட்ல இருந்து அந்த பைலட் இறங்கி வரும்போது இந்த பசங்களை பார்த்துட்டு சல்யூட் வைப்பாரு.

Samsung Technical School

ஒருத்தர் மூணாவதும் ஒரு பையன் பிறக்கும்னு வெயிட் பண்ணிட்டு இருக்குறப்போ அவருக்கு பொண்ணு பிறந்திடும். அந்தப் பொண்ணையும் பையனை மாதிரி வளர்க்கணும்னு நினைப்பாரு. மகனை கூப்பிடுற மாதிரிதான் கூப்பிடுவாரு. ஒருநாள் அந்த பொண்ணு ஸ்விட்ச் போர்டு சரி பண்ணிட்டு இருக்குற பார்த்த சொந்தக்காரர் ஒருத்தர், ‘இதெல்லாம் பொண்ணுங்களுக்கு எதுக்கு. ஷாக் அடிக்கப்போகுது’னு திட்டுவாரு. பக்கத்து ஊர்ல இருக்குற சாம்சங் டெக்னிகல் ஸ்கூல்ல பொண்ணு படிக்கணும்னு நினைக்குறானு சொன்னா அதுக்கும் சொந்தக்காரங்க, ‘பொம்பளை பிள்ளை அவ்ளோ தூரம் போய் படிக்கணுமா?’னு கேப்பாங்க. இருந்தாலும் நல்லா பையன் மாதிரி டிரெஸ் பண்ணி அந்த ஸ்கூல்ல போய் சேர்ப்பாரு அந்த அப்பா. மகனை வழியனுப்புறதா சொல்லி அனுப்புவாரு. அந்த பொண்ணு நல்லா படிக்கும். ஒருநாள் அவங்க வீட்ல ஒரு கல்யாணம் நடக்கும். அப்போ திடீர்னு கரண்ட் கட் ஆகிடும். ஜெனரேட்டர் ரிப்பேர்னு சொல்லிடுவாங்க. டக்குனு இந்த பொண்ணு உள்ள பூந்து சரி பண்ணும். அந்த சொந்தக்காரர் அந்த அப்பாகிட்ட ‘கரெக்டா சொன்னா உனக்கு மூணாவது பிறந்ததும் பையன்தான்’னு சொல்வார். அதுக்கு அந்த அப்பா, ‘இல்ல எனக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு. மக எப்பவுமே மகதான்’னு சொல்வார்.

ஏன்ப்பா தமிழ் விளம்பரங்கள் எதுவும் இல்லையானு உங்களுக்குத் தோணலாம். தமிழ் விளம்பரங்கள் நிறைய பேரு பார்த்திருப்பாங்க. அதனாலதான் நிறைய பேருக்கு தெரியாத விளம்பரங்களா சொல்றோம். நீங்க பார்த்த ஃபீல் குட் விளம்பரங்களை கமெண்ட்ல சொல்லுங்க. 

Also Read – இந்தி சினிமால விஷால் பக்கா மாஸ்…நம்ப முடியலையா?! இதோ ஆதாரம்! #VERIFIED

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top