Azeem

க்ரிஞ்ச் அசீம் ஏன் பிக்பாஸ்ல இருந்து வெளியேற்றப்படணும்?

* ஆரம்பத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் கத்துனா ஜெயிச்சிடலாம்ன்ற நம்பிக்கைல மட்டுமே அசீம் விளையாடிட்டு இருக்காரு. எப்போலாம் போட்டி நடக்குதோ, அப்போலாம் அவர் அப்படிதான் பேசுவாரு. அந்த எல்லா சம்பவங்களையும் இதுக்கு எடுத்துக்காட்டா சொல்லலாம்.

* சக போட்டியாளர்கள்கிட்ட கொஞ்சம்கூட ரெஸ்பெக்டா நடந்துக்க மாட்டாரு. விக்ரமன் உள்பட பல போட்டியாளர்களையும் வாடா போடானு பேசுனதுல இருந்து ஷிவின், அமுதவாணன்கிட்ட பாடி லேங்குவேஜ் காமிச்சு பேசுன வரைக்கும் இதையேதான் பண்ணிருக்காரு.

அசீம்
அசீம்

* அசீம் ஆரம்பத்துல வெளிய இன்டர்வியூலாம் கொடுக்கும்போது, எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான், அயலானேனு செமயா டயலாக்லாம் பேசியிருக்காரு. ஆனால், பிக்பாஸ்ல ஒரு டாஸ்க்ல ஓடிவிளையாடு பாப்பா சொல்ல சொன்னதுக்கு தெரியாதுன்றாரு. அதாவது, போலியா இருக்குறது.

* பிக்பாஸ் உட்பட யாரு என்ன விஷயம் அவருக்கு எதிரா சொன்னாலும், அவரோட தப்பை பாயிண்ட் பண்ணி சுட்டி காட்டுனாலும், ஏத்துக்காமல், அவருக்கு என்ன தோணுதோ அதை பண்றது. தப்பை சுட்டிக்காட்றவங்க மேலயே அதை திருப்பி விட்டு அவங்களை குற்றவாளியா மாத்துறது.

* பெர்சனல் வெஞ்சென்ஸோடவே ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுறது. யாரா இருந்தாலும் அவரோட கருத்தை ஒருதடவை எதிர்த்து பேசிட்டாங்கனா போதும். அதுக்கப்புறம் அவங்க எதாவது நல்ல விஷயங்கள் பண்ணாக்கூட, அவருக்கு ஆதரவா பேசுனாக்கூட அவங்களை எதிரியாவே பார்க்குறது.

* எல்லாருக்குமே ட்ரிகர் பாயிண்ட் இருக்கும். விக்ரமன்கிட்ட ஐடியாலஜி பேசுறேன் அப்டினு அவரை ட்ரிகர் பண்றது, தனலட்சுமி டக்னு கோவப்படுவாங்கனா, அதுக்கு ஏற்ற மாதிரி அவங்களை ட்ரிகர் பண்றது, அமுதவாணன் பிளஸ் நகைச்சுவைனா அதை வீக் பண்றமாதிரி பேசுறதுனு எக்கச்சக்கமா பண்ணுவாரு.  

* கமல் சொன்னாக்கூட அதை அந்த நேரத்துக்கு மட்டும் கேட்டுட்டு, அப்படியே மறு காது வழியா வெளிய விடுறது. எக்ஸாம்பிள்க்கு கமல் சொல்லுவாரு, “உங்ககிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன், அசீம். உங்களை நான் கண்டிக்கிறேன்”னு கடுப்புல பேசுவாரு. அதுக்கப்புறமும் அவர் திருந்தல.

* போட்டினு வரும்போது ஆக்ரோஷத்துல எதையாவது பண்ணிடுவாரு. எக்ஸாம்பிள்க்கு தனலட்சுமியை தள்ளி விட்டது. அதுக்கப்புறம், அதை பண்ணவே இல்லைனு சாதிக்கிறது. குறும்படம் போட்டு அவர் பண்ணத சொன்னாலு, சிரிச்சுக்கிட்டு காதுல வாங்காத மாதிரியே நிக்கிறது.

* விக்ரமன் மாதிரியான ஆள்கள்லாம் எப்பவுமே விவாதம் பண்ண தயாரா இருப்பாங்க. எதிர்ல பேசுறவங்க கருத்தை காதுகொடுத்து கேட்பாங்க. ஆனால், அசீம்க்கு அந்த பொறுமை சுத்தமா கிடையாது. எதிர்ல பேசுறவங்களை பயங்கரான் கடிக்கிற மாதிரி, நான் பண்றது மட்டும்தான் கரெக்ட்ன்ற தொணில பேசுவாரு.

* எல்லாமே பெர்சனல் பாயின்டா இருக்கேனு நீங்க நினைக்கலாம். எல்லாமே அவர் விளையாடுற மைண்ட் கேம் அடிப்படையா வைச்சுதான் சொல்றேன். பிஸிக்கலா சொல்லணும்னா, கடைசியா அவர் பிஸிக்கலா விளையாடுற டாஸ்க்லலாம்கூட அவ்ளோ நல்லாலாம் அவர் விளையாடலன்றதுதான் உண்மை.

அசீம்
அசீம்

பழைய கதைகள் எல்லாத்தையும் விடுவோம். லேட்டஸ்ட்டா எடுத்துப்போம். பிக்பாஸ் கிரிடிக்ஸ் அவார்ட்னு ஒண்ணு கொடுத்தாங்க. உங்கிட்ட ஓப்பனிங்லாம் நல்லா இருக்கு. ஆனால், ஃபினிஷிங் சரியில்லையேன்ற அவார்டை அசீம்க்கு ஏ.டி.கே கொடுப்பாரு. “எனக்கு அந்த அவார்ட் புடிக்கலை. நான் ஏத்துக்கமாட்டேன்”னு ஏ.டி.கேவை அவமானப்படுத்துற மாதிரி பேசி, கழட்டி தூக்கி எறிஞ்சுட்டு போவாரு. நமக்கே ஒருகட்டத்துல, அவரைப் பார்த்து இரிட்டேட்டிங் ஆகி போர் அடிக்குது. அதான் முடிஞ்சுதுல சும்மா இருக்க வேண்டியதான. அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைச்சு ‘எல்லாம் எனக்கு மட்டும் தான் தெரியும்’னு என்னலாமோ சொல்லுவாரு. பன்னிக்குட்டிலாம் பஞ்ச் டயலாக் பேசுதுன்றது, பூமருன்றதுலாம் விக்ரமனுக்கு செட் ஆகாது. ஆனால், அந்த பட்டத்தை ஏத்துக்காமல், அவங்க கொடுத்த மரியாதையை ஏத்துப்பாரு. இந்த அடிப்படை நாகரீகம்கூட இல்லாமல்தான் அசீம் அந்த எபிசோட் முழுக்கவே பேசுவாரு. திரும்பவும் சொல்றேன், ஒருத்தர பார்த்தாலே அடிக்கணும்னு தோணுமா? பிக்பாஸ்ல அசீம் பண்ற வேலைகளை பாருங்க. தேவையில்லாத பழமொழிகள், தற்பெருமை, மட்டம் தட்டுறதுனு பத்து பொருத்தமும் பக்காவா இருக்குனு சொல்லி கிரிஞ்ச் அவார்டை விக்ரமன் அசீம்க்கு கொடுப்பாரு. அதெல்லாம் நான் பண்ணவே மாட்டேன்னு, அந்த ஸ்டேஜ்லயே விக்ரமன் சொன்ன எல்லாத்தையும் பண்ணுவாரு. கிரிஞ்ச்னு சொன்னதுக்கு கிரிஞ்சுத்தனமா, மரியாதை இல்லாமல் அவ்வளவு பேசுவாரு. விக்ரமன் அசால்ட்டா நின்னு தட்டி விட்டுட்டு போய்கிட்டே இருப்பாரு. ட்விஸ்ட்லாம் அடிச்சு அவர் கிரிஞ்ச் ஆகணும்னு அவசியமில்லை. ஆல்ரெடி எப்பவுமே கிரிஞ்ச்தான்.

போடியம்ல எல்லாரும் வந்து நின்னு பேசுவாங்க. அப்புறம் கேள்வி கேப்பாங்க. இப்படியொரு டாஸ்க் போச்சு. அதுல எல்லாரையும் வம்பிக்கிழுத்து நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமானு, மணிக்கு மூணு தடவை கூவு கூவுனு கூவுனது நம்ம அண்ணன்தான். ஷிவின் வந்து நின்னு பேசுவாங்க. “போடியம்ல வந்து நிண்ணு லெஃப்ட் சைட் மட்டுமே பார்த்து பேசுறீங்க. நீங்க எப்படி ரைட்டா இருக்க முடியும்?”னு கேள்வி எழுப்புறாரு. என்ன எழவுயா இதெல்லாம்?னுதான் கேட்க தோணுது. எப்படியும் இந்த டாஸ்க்ல விக்ரமனுக்கும் அசீமுக்கும் பஞ்சாயத்து வரும்னு தெரியும். ஆனால், என்ன சொல்லி பஞ்சாயத்து வரப்போகுதுன்றதுதான் ட்விஸ்ட்டு. அமுதவாணனுக்கும் விக்ரமனுக்கும் இடைல ஆர்கியூமெண்ட் ஸ்டார்ட் ஆகும். இடையில அசீம் வந்து, தட்டுல எச்சித்துப்பிக் கொடுத்தா சாப்பிடுவீங்களானுதான் கேட்டேன்னு சொல்ல, எச்சி துப்பி தறேன் சாப்பிடுனு நீங்க சொன்னீங்கனு விக்ரமன் சொல்ல கூத்தா இருந்துச்சு. அந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துறதே தப்பு, அது அவர் சொல்ற மாதிரி கேள்விக்குறியா இருந்தாலும், முற்றுப் புள்ளியா இருந்தாலும் தப்பு தப்புதான். இதுல முற்றுப்புள்ளி, கேள்விக்குறினு கிறுக்குத்தனமா என்னத்தையாவது சொல்றது. “நான் பேசுறதுலாம் கரெக்ட்தான். என்னோட கோவத்தை தவிர்த்துட்டுப் பார்த்தா, நான் பண்றதுலாம் பெஸ்ட்தான். எனக்கும் விக்ரமனுக்கும் கருத்தியல் ரீதியாதான் பிரச்னைகள் இருக்கு”னு சொல்லுவாரு. டக்னு விக்ரமன் கருத்தியல்னா ஐடியாலஜி, உங்களுக்கு எனக்கும் அப்படிலாம் ஒண்ணும் இல்லைனு தக் லைஃப் பதில் கொடுப்பாரு. மனுஷன் திணறுவாரு. பஞ்சாயத்துனு பார்த்தாலே விக்ரமன் – அசீம்தான். விக்ரமனை அப்படியே கட் பண்ணிட்டு பார்த்தாலும் அவ்வளவு பண்ணியிருக்காரு.

அசீம்
அசீம்

நான் விளையாட்டு, பேச்சுனு எல்லாத்துலயும் சிறப்பா பண்ணியிருக்கேன்னு சொல்லுவாருல. பிஸிக்கலா டாஸ்க் வந்தா மனுஷன் திணறுவாரு. சமீபத்துல பால் டாஸ்க் ஒண்ணு வரும். அதுல அவர் விளையாடி முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு. அதை ஏத்துக்கமாட்டாரு. பெர்சனல் வெஞ்சன்ஸ் எந்த அளவுக்கு எடுத்துப்பாருனு, சைக்கிள் டாஸ்க்ல இருந்து பார்க்கலாம். அசீம் சைக்கிள்ல இருந்து இறங்கி ஏறுறதுக்குள்ள பத்து செகண்ட் முடிஞ்சிரும். அப்போ, அதிர்ச்சியான அசீமைப் பார்த்து ஷிவினும் ரச்சிதாவும் லைட்டா சிரிப்பாங்க. உடனே காண்டாகி, “உங்களுக்காகதான் நான் இடம் மாறுனேன். இல்லைனா, தோத்துருக்க மாட்டேன்”ன்ற ரேஞ்ச்ல பேச ஆரம்பிச்சுடுவாரு. “உங்களை அடுத்த ஆட்டத்துல வைச்சு செய்றேன்”னு ரஜினி ரேஞ்சுக்கு சவால்லாம் விடுவாரு. தேவையேயில்லாத விஷயம் அதெல்லாம். ஆனால், அண்ணன் சூடாதான் டீல் பண்ணுவாரு. அப்புறம், சும்மா ஒருநாள் பேசிட்டு இருக்கும்போது மயக்கம் போட்டு விழுவாரு. அப்போ, ஜூலி வயித்து வலில அழுத சம்பவம்தான் நியாபகம் வந்துச்சுனு நிறைய பேர் சோஷியல் மீடியால போஸ்ட் போட்ருந்தாங்க. அவ்வளவு ஃபேக்கான விஷயமா இருந்துச்சு, இப்படிலாம் அனுதாபம் வாங்கி உள்ள இருக்க நினைக்கிறாருனு கடுமையா அவரை விமர்சனம் பண்ணாங்க. அதை பிக்பாஸ் கருத்தில் எடுத்துக்கலாம்.

கமலையும் பிக்பாஸையுமே டயர்டாக்கி அசீம் வைச்சு சம்பவங்கள் எல்லாம் இருக்கு. ஆஃபீஸ் ரூம்குள்ள கூப்பிட்டு என்னலாம் இண்ட்ரஸ்டிங்கா பண்ணீங்கனு ஒவ்வொருத்தரையா பிக்பாஸ் கேப்பாரு. எல்லாரையும் பிக்பாஸ் வைச்சு செய்து அனுப்பி விடுவாரு. ஆனால், அவரையே அசீம் அலற வைச்சிட்டாரு. எனக்கு தெரிஞ்சு பிக்பாஸ், இவர்கிட்ட பேசுன பிறகு, நான் மெண்டல்தான், மெண்டல்தான்ற மோடுகுள்ள போய்ருப்பாருனு நினைக்கிறேன். நான் சிரிக்க வைச்சிருக்கேன். அவரை கிண்டல் பண்ணேன். இவரை மாதிரி பேசுனேன். அப்படி பண்ணேன். இப்படி பண்ணேன்னு திணற திணற அவருக்கு ஈக்குவலா வைச்சு செய்தாரு. வாய் மட்டும் இல்லைனு வைங்க.. மீதியை நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க. இப்படி சிலபல நாள் கழிச்சு அந்த ரூம்குள்ள இருந்து வெளிய வந்தாரு. அதேமாதிரி, கமல் கடுப்பாகி ஸ்டார்ட்டிங்ல அசீமை கத்திருப்பாரு. ஏன் தெரியுமா? கமல் என்னக்கேட்டாலும் அதை மழுப்புற மாதிரி எதையாவது சொல்லி அன்னைக்கு எஸ்கேப் ஆயிடுவாரு. அதுனாலதான், கமல், “நான் உங்கக்கிட்ட எதுவும் கேட்கப்போறதில்லை. என்ன சொல்லுவீங்கனு எனக்கு தெரியும். நான் உங்களை கண்டிக்கிறேன்”னு சொல்லிடுவாரு. அதுக்கு அப்புறமும் அவர் கமலை வைச்சுலாம் செய்துருக்காரு. இவ்வளவு முட்டாள்தனமா யாராலயும் விளையாட முடியாதுன்ற மாதிரி விளையாடுற அசீம்க்கு இன்னைக்கு வரைக்கும் ஏன் ஃபயர் விடுறாங்கனுதான் சுத்தமா புரியலை. பிக்பாஸுக்கும் புரிய வாய்ப்பில்லை. இதெல்லாமே சமீபத்துல நடந்த விஷயங்கள்.

பிக்பாஸ்ல இவ்வளவு சீசன்ல அசீமை மாதிரி ஸ்ட்ரேட்டஜினு சொல்லி அவ்வளவு மோசமா விளையாடுற ஆளை மக்கள் யாரும் பார்த்ததில்லை. சின்ன குழந்தைங்கலாம் அவர் செயல்களைப் பார்த்தா அடிப்படை மனிதத்தன்மைக்கே எதிரா மாறிடிவாங்க. அவ்வளவு அரகன்டா இருக்காரு. அவர் பண்ணதுல உங்களை ரொம்பவே கடுப்பேத்துன செயல்னா என்ன சொல்லுவீங்க?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top