சன் டிவியின் அந்தக் குரல் யாருடையது தெரியுமா?!

சன் டிவி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி கலாநிதி மாறன் ஒரு ஹிந்தி சேனல்கிட்ட எங்களோட தமிழ்  நிகழ்ச்சிகள் போடமுடியுமானு கேட்டிருக்காரு. ஆனா அவங்க தமிழ்ல ஆடியன்ஸ் இல்லைனு ரிஜெக்ட் பண்ணிடுறாங்க. இன்னைக்கு சன் டிவி தமிழர்கள் ஒவ்வொருத்தரோட வாழ்க்கைலயும் ஒரு பகுதினு சொல்லலாம்.  எத்தனையோ சேனல்ஸ் வந்தாலும் சன் டிவிதான் இன்னைக்கும் டாப்ல இருக்கு. கலாநிதி மாறனுக்கு நோ சொன்ன அந்த சேனல் தமிழ்ல ஆரம்பிச்சாலும் சன் டிவி டி.ஆர்.பி கிட்ட கூட வரமுடியல.  அப்படிப்பட்ட சன் டிவி எப்படி ஆரம்பிச்சதுங்குற வரலாறு தெரியுமா? அதுமட்டுமில்ல சன் டிவினாலே நமக்கு ஞாபகம் வர்ற ரெண்டு விஷயங்கள் பத்தின சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.  

Sun TV
Sun TV

கலாநிதி மாறன் சென்னை லயோலா காலேஜ்ல படிச்சுட்டு அமெரிக்கால பென்சில்வேனியால இருக்குற ஸ்க்ராண்டன் யுனிவர்சிட்டில எம்.பி.ஏ படிக்கிறாரு. அப்போ அமெரிக்கால அத்தனை டிவி சேனல்ஸ் இருந்திருக்கு. நிறைய டிவி சீரியல் பிரபலமா இருந்திருக்கு. கலாநிதி மாறன் படிச்சு முடிச்சு சென்னை வந்தா இந்தியால ஒரே ஒரு டிவி சேனல் கவர்மெண்டோட தூர்தர்ஷன் மட்டும்தான். அதுலயும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரம் மட்டும்தான் ஒலிபரப்புவாங்க. தமிழுக்கு ஒரு சேட்டிலைட் சேனல் ஆரம்பிச்சா எப்படி இருக்கும்னு கலாநிதி மாறன் நினைக்கிறாரு. ஆனா அதுக்கெல்லாம் நிறைய இன்வெஸ்ட் பண்ணனும், எப்படி பண்றதுங்குற டெக்னாலஜியும் நம்மகிட்ட இல்லைனு நிறைய தடங்கல்கள்.

அதுனால சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்ல சர்க்குலேசன் க்ளர்க்கா வேலை பார்க்குறாரு. அடுத்து குங்குமம் மேகசீன்லயும் கொஞ்ச நாள் வேலை பார்க்குறாரு. அந்த டைம்ல இந்தியா டுடே ‘நியூஸ் ட்ராக்’ அப்படினு ஒரு வீடியோ மேகசீன் நடத்துறாங்க. உலக செய்திகளை வீடியோகேசட்டா கொடுக்கிறது. அவருக்கு ஒரு ஐடியா தோணுது. நாம ஏன் இந்த மாதிரி வீடியோக்களுக்கு மக்களை பழக்கப்படுத்தக்கூடாதுனு ‘பூமாலை’ அப்படினு ஒரு வீடியோ மேகசீன் ஆரம்பிக்குறாரு. மாதம் ஒரு கேசட் அதுல அந்த மாசத்துல நடந்த ஹைலைட்டான விஷயங்களை சொல்ற மாதிரி ப்ரோக்ராம்னு சுவாரஸ்யமா கொடுக்கிறாங்க. கொஞ்சம் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி நிறைய கேசட்டுகளை விக்குறாங்க. நல்லா போயிட்டு இருந்த அந்த வீடியோ மேகசீனுக்கு ஒரு பிரச்னை வருது. அதான் பைரசி. திருட்டு விசிடில படம் விக்குற மாதிரி இவங்க கேசட்டையும் டூப்ளிகேட் போட்டு விற்க வியாபாரம் படுத்துவிட்டது.

இந்த நேரத்தில்தான் சேட்டிலைட் சேனல் தொடங்க 1992-ல தனியாருக்கு கதவைத் திறந்துவிடுகிறது இந்திய அரசு. அப்போ இந்திய முதல்ல ஆரம்பிச்ச இந்தி சேனல் ஜீ டிவி. அதை ஆரம்பிச்சவர் சுபாஷ் சந்திரா. இது ஒரு நல்ல வாய்ப்பா இருக்கு ஜீல இவரோட கண்டண்ட் போடுறதுக்கு ஒரு ஸ்லாட் கேக்கலாம்னு நினைக்குறாரு. சுபாஷ் சந்திராவை மீட் பண்ண முடியல. ஆனா அந்த டீம்ல இருந்தவங்க தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்குறதுக்கு ஆடியன்ஸ் இல்லைனு ரிஜெக்ட் பண்ணிடுறாங்க. இதனால நம்மளே ஒரு சேனல் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்றாரு. கொஞ்சம் அவரோட சேமிப்பு, பேங்க்ல லோன் இதெல்லாம் வாங்கி தன்னோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் 25 பேரை வச்சு 1993-ல ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியை ஆரம்பிக்குறாரு.

Kalanidhi Maran
Kalanidhi Maran

ஒரு பக்கம் வேற எந்த டிவி சேனலும் இல்லை இது மட்டும்தான் ஆப்சன்ங்குறதாலும் இன்னொரு பக்கம் சப்தஸ்வரங்கள், கை அளவு மனசுனு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் கொடுத்ததும் சன் டிவி மக்கள் மத்தில பயங்கர பிரபலமாகுது. நிறைய பேர்கிட்ட சேனல் ரீச் ஆகனும்னா நிறைய கேபிள் கனெக்சன் வேணும்னு புரிஞ்சுகிட்டு அந்த பிசினஸையும் கைல எடுத்து சக்ஸஸ்ஃபுல்லா பண்றாரு கலாநிதி மாறன். எல்லா மக்களும் குடும்பத்தோட ரசிக்குற மாதிரியான கண்டண்ட் மட்டும்தான் கொடுக்கணும். அதே நேரத்தில் தி.மு.க குடும்பத்துல இருந்து வந்தாலும் இது கட்சி சேனல்னு மக்கள் நினைக்கக்கூடாது, சேனலோட நம்பகத்தன்மையை பாதிக்குற எந்த விஷயத்தையும் செய்யக்கூடாதுங்குறதுல அப்போ இருந்து இப்போ வரை தெளிவா இருந்தாரு கலாநிதி மாறன். சன் டிவியோட ரீச்சுக்கு அப்பறம் சூர்யா, ஜெமினி, உதயானு மத்த மொழிகள்லயும் சேனல் ஆரம்பிக்குறாரு. 24 மணி நேரம் செய்தி கொடுக்குற சன் நியூஸ், படம் மட்டுமே பார்க்க கே டிவி, மியூசிக் மட்டும் கேட்க சன் மியூசிக், குழந்தைகளுக்கு சுட்டி டிவி, இந்தியாவுலயே முதல் முறையா காமெடிக்கு தனி சேனல் ஆதித்யானு ஒண்ணொன்னா ஆரம்பிச்சு இன்னைக்கு சன் நெட்வொர்க்ல மொத்தம் 33 சேனல்ஸ் இருக்கு.

டாப் 10 மூவீஸ், பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல், அசத்தப்போவது யாரு இப்படி நிறைய நிகழ்ச்சிகள் இன்னைக்கும் பல பேரோட நாஸ்டால்ஜியால இருக்கும். சித்தி, ஆனந்தம், கோலங்கள், மெட்டி ஒலி, திருமதி செல்வம்ல இவங்களோட நிறைய நாடகங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். 1000 எபிசோடு தாண்டின சீரியல்களே 20க்கு மேல இருக்கும். சந்திரலேகா சீரியல் 2000 எபிசோடு தாண்டிருக்கு. 8 வருசம் ஓடின இந்த சீரியல் போன 2014 ல ஆரம்பிச்சு போன மாசம்தான் முடிஞ்சது.

சன் டிவி அப்படினு சொன்னதும் நமக்கு ஞாபகம் வர்ற ரெண்டு விஷயங்கள் பத்தின சுவாரஸ்யமான தகவல் சொல்லட்டுமா?

Sun TV
Sun TV

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக அப்படிங்குற இந்த வாய்ஸை நாம சின்ன வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கோம். இன்னைக்கு நெட்ஃபிளிக்ஸ் வரைக்கும் அந்த ஃபார்முலாவை ட்ரை பண்றாங்க. இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தூரன் கந்தசாமி. சன் டிவில ப்ரொடக்‌ஷன் ஹெட்டா இருக்காரு.

சின்ன வயசுல சன் டிவியின் தமிழ் மாலை அப்படிங்குற பேக்ரவுண்ட் மியூசிக் கேட்காத நாட்களே இருக்காது. இந்த இசைக்கு சொந்தக்காரர் வேற யாருமில்ல இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

சன் டிவில நீங்க ரசிச்சுப் பார்த்த ஷோ என்ன அப்படிங்குறதை கமெண்ட்ல சொல்லுங்க!

1 thought on “சன் டிவியின் அந்தக் குரல் யாருடையது தெரியுமா?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top