ரக்‌ஷன்

ரக்‌ஷன்… குக் வித் கோமாளியின் டார்லிங் ஆனது எப்படி?

குக் வித் கோமாளியில் எல்லாருக்கும் டார்லிங் ரக்‌ஷன்தான். வேறொரு டிவி சேனலில் யாருக்கும் தெரியாத ஆங்கராக இருந்த ரக்‌ஷன், விஜய் டிவிக்கு ஆடிசன் வந்தார். கிட்டத்தட்ட அவரை செலக்ட் பண்ணிட்டாங்க. ஆனா அடுத்த நாள் அவருக்கு ஒரு போன் வருது. ‘சாரி ப்ரோ நீங்க பண்றதா இருந்த அந்த ஷோவுல வேற ஒரு ஹீரோவை ஆங்கரா போட்ருக்காங்க’ அப்படினு சொல்லிடுறாங்க. ரொம்ப வருத்தமான ரக்‌ஷன் அடுத்து ஒரு முடிவு எடுக்கிறார். அந்த முடிவுதான் அவரை குக் வித் கோமாளி வரை கொண்டு வந்து விட்டது. அது என்ன முடிவு? பத்தாம் வகுப்புக்கு மேல படிக்காத  ரக்‌ஷன் ஆங்கரா ஆகுறதுக்கு முன்னாடி 9 வருசம் ஏகப்பட்ட வேலைகள் பண்ணிருக்காரு. ரக்‌ஷனோட அந்த ஜர்னியையும், ரக்‌ஷன் எப்படி எல்லாருக்கும் டார்லிங் ஆனாருங்குற ரகசியத்தையும்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

குக்கு வித் கோமாளி ரக்‌ஷன்

ரக்‌ஷன் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை கே.கே நகர்லதான். அவங்க அப்பா ஒரு சின்ன டிராவல்ஸ் வச்சு நடந்திட்டு இருந்தவர். ஒரு அக்கா இருக்காங்க. ரக்‌ஷன் பத்தாம் வகுப்பு படிக்கிறதுக்குள்ள எட்டு ஸ்கூல் மாறியிருந்தார். காரணம் சின்ன வயசுல அவருக்கு டிஸ்லெக்சியா பிரச்னை இருந்தது. எழுத்துகளை பார்த்தாலே சுத்துற மாதிரி இருக்கும். ஒண்ணுமே புரியாது அதனால படிப்பே வராது. இப்பவரைக்கும் தமிழ் படிக்கிறதுல தகராறுதான். ஆனால் தலைவன் இங்கிலீஸ் பிச்சுவிடுவாரு. ஏன்னா நிறைய கார்ட்டூன் பார்ப்பாராம். இப்படி போயிட்டு இருந்தப்போ திடீர்னு அவங்க அப்பா இறந்திடுறாரு. குடும்பமே ஸ்தம்பிச்சு போகுது. மிடில் கிளாஸ் குடும்பம் வேற வழியில்லாம பத்தாம் வகுப்போட டிராப் அவுட் ஆகுறாரு. கிடைக்கிற சின்ன சின்ன வேலைகள்லாம் பார்க்க ஆரம்பிக்குறாரு.

அம்மாவோட சேர்ந்து வீட்டுலயே சின்னதா ஒரு மெஸ் வச்சி நடத்துறாங்க. அப்பறம் கொஞ்ச நாள் சேல்ஸ் பெர்சனா வீட்டுவீட்டுக்கு போய் சேலை விக்குறாரு. பெட் ஷாப் வச்சி நடத்துறாரு. செகண்ட் ஹேண்ட் கார் வாங்கி விக்குற வேலை பார்க்குறாருனு கிடைச்ச வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி சம்பாதிக்குறாரு. கையில ஒரு லட்ச ரூபா கிடைச்சா அதை வச்சு என்ன பிசினஸ் பண்ணலாம்ங்குறதுதான் மைண்ட்ல வருமாம். இந்த டைம்லதான் சினிமால நடிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஒரு டைரக்டர் இவரை வச்சி படம் எடுக்குறேனு சொல்லி ஏமாத்திடுறாரு. சரி சினிமாவுக்கு போறதுக்கு வேற என்ன வழி இருக்குனு தேடுனப்போதான் டிவில ஆங்கர் ஆகலாம்னு முயற்சி பண்றாரு.

குக்கு வித் கோமாளி ரக்‌ஷன்

முதன் முதல்ல ராஜ் டிவில ஆங்கர் சான்ஸ் கிடைக்குது. அப்பறம் கொஞ்ச நாள்ல கலைஞர் டிவில வாய்ப்பு வருது. ஆனாலும் இவர் முகம் பரிச்சயமில்லாமலே இருந்தது. விஜய் டிவிக்கு போனாதான் நம்ம முகம் எல்லாருக்கும் தெரியும்னு நினைச்சு அங்க அங்க பண்றாரு. அப்போ அவருக்கு ஒரு ஆடிசன் வருதுனு சொல்லி கலந்துக்குறாரு. கிட்டத்தட்ட இவர் செலக்ட்தான் ஆனா அடுத்த நாள் விஜய் டிவில இருந்து கால் பண்ணி அந்த ஷோவை வேற ஒரு ஹீரோ பண்றாருனு சொல்லிடுறாங்க. ரொம்ப வெறுத்து போயிடுறாரு. அப்போதான் டக்குனு அவருக்கு ஒரு யோசனை தோணுது. ஆங்கர் ஆகலைனு பரவாயில்லை. முதல்ல விஜய் டிவிக்குள்ள எப்படியாவது சேர்ந்துடுவோம்னு நினைக்குறாரு. அப்படித்தான் KPY, அது இது எது நிகழ்ச்சிகள்ல அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்றாரு. பாலா, தீனா இவங்களோட சேர்ந்து சின்ன சின்ன ஸ்கிரிப்ட் எழுதுறதெல்லாம் பண்றாரு. இவங்கள்லாம் ஸ்டேஜ்ல பெர்பார்ம் பண்றப்போ அப்பப்போ குட்டி ரோல்ல தலையை காட்டி ஸ்கிரீன்ல வர ஆரம்பிக்குறாரு. கொஞ்ச நாள் இப்படியே வேலை பார்த்தபிறகுதான் அவருக்கு விஜய் டிவில ஆங்கர் சான்ஸ் கிடைக்குது. அந்த வாய்ப்பை நல்லா யூஸ் பண்ணி ஆங்கரா இருந்தாலும் வேற வேற கெட்டப்ல வர்றது, மத்தவங்களோட பெர்பாமன்ஸ்ல ரோல் எடுத்து சின்னதா ஹெல்ப் பண்றதுனு நல்லா பண்றாரு. கடைசியாதான் குக் வித் கோமாளி வாய்ப்பு வருது. சமையல் நிகழ்ச்சில நாம என்ன பண்ணப்போறோம்னு நினைச்சு வந்தவரு. இன்னைக்கு அந்த ஷோல இருக்குற எல்லாருக்குமே டார்லிங் ஆகிட்டாரு.

அதுக்கு முக்கியமான காரணம், அங்க இருக்குற எல்லாருமே ஜெயிக்கணும்னு நினைச்சு எல்லாருக்கும் ஏதாவது ஹெல்ப் பண்ணிக்கிட்டே இருப்பாரு. அது கோமாளியா இருந்தாலும் சரி, குக்கா இருந்தாலும் சரி. அந்த செட்ல யாருக்காவது எதாவது பிரச்னைனா முதல் ஆளா ஓடுறது ரக்‌ஷனாதான் இருக்கும். இப்போ இந்த சீசன்லகூட ஒரு வீடியோ வைரல் ஆனது. சிருஷ்டிக்கு ஏதோ நெகடிவ் கமெண்ட் சொல்லும்போது அவங்க கண் கலங்குனதை யாருமே நோட் பண்ணல, அதை ரக்‌ஷன்  நோட் பண்ணி டிஸ்யூ பேப்பர் எடுத்து கொடுத்தது நெகிழ்ச்சியா இருந்தது.

Also Read – “இதெல்லாம் யோசிக்கவே முடியாத காம்போ…” – கோக் ஸ்டுடியோ ஸ்டோரீஸ்!

ரக்‌ஷனுக்கு மீடியாவுக்கு வருவதற்கு முன்பே திருமணமாகிவிட்டது. ஸ்கூல் படிக்கும்போது பக்கத்து ஸ்கூலில் படித்த சில கேர்ள்ஸ் இவருக்கு நண்பர்களாக இருந்தனர். அந்த க்ரூப்பில் இரண்டு பெண்கள் இவருக்கு ப்ரொப்போஸ் செய்ய, கண்டுகொள்ளாமல் இருந்த ஒரு பெண்ணை இவர் லவ் பண்ணினார். எட்டு வருடம் தொடர்ந்த அந்த காதல் இவருடைய 21 வயதில் திருமணத்தில் முடிந்தது. ரக்‌ஷனுக்கு இப்போ 8 வயதில் ‘இனியா’ என்றொரு மகள் இருக்கிறாள்.

குக்கு வித் கோமாளி

ஸ்கூல் படிக்கும்போது சில பெண்கள் ப்ரொப்போஸ் செய்தபோது அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னதால்தான் அவருடைய நல்ல தோழியே மனைவியாக கிடைத்தார். பார்த்த குட்டி குட்டி வேலைகளையெல்லாம் வேண்டாம் என்று சொன்னதால்தான் ஆங்கர் வேலை கிடைத்தது. அதே போல ஆங்கரான பிறகு 50 படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். எல்லாவற்றையும் தவிர்த்த பிறகுதான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கிடைத்தது. அது அவருக்கு ஒரு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. ரக்‌ஷன் சக்ஸஸ் சீக்ரெட் ஒன்றே ஒன்றுதான் கிடைக்கிறதேனு எல்லாத்தையும் அக்சப்ட் பண்ணிக்கத் தேவையில்லை. பிடிச்சது கிடைக்கிற வரைக்கும் தேடிக்கிட்டே இருக்கணும் என்பதுதான் அது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top