மிஸ்டர் பீன் பற்றிய நீங்க நம்ப முடியாத… நம்பலைனாலும் நெசமான சில விசஷயங்களை பார்க்கலாம்.
30 வருசங்களுக்கும் அதிகமாக டிவியில் கொண்டாடப்படும் MR.Bean கதாபாத்திரத்தை உருவாக்க Rowan Atkinson எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா?
மிஸ்டர்.பீன் மொத்தம் எத்தனை எபிஸோட்கள் தயாரிக்கப்பட்டன தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள்…
காமிக்கலான, ஒரு அரை மண்டையா நடிக்கும் பீன் என்ன படிச்சிருக்காரு, அதுவும் எவ்வளவு பெரிய யுனிவர்சிட்டியில் தெரியுமா?
நாலு சக்கர கார் மட்டுமில்ல… ஒரு முறை நிஜமாவே பெரிய விபத்தைத் தடுக்க அவர் என்ன வாகனத்தை ஓட்டினார் தெரியுமா?
ரோவன் அட்கின்சன் படிப்பு

சின்ன சின்ன விஷயங்களைக் கூடப் புரிஞ்சுக்க முடியாத, ஒரு அரை மண்டையான ‘பீன்’ கேரக்டர்ல நடிக்குற ரோவன் அட்கின்ஸன் உண்மையில் Electrical and electronical Engineering-ல் மாஸ்டர்ஸ் டிகிரி முடிச்சவரு… அதுவும் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் எல்லாம் ரோவனுடன் பள்ளியில் உடன்படித்தவர்தான்.
மிஸ்டர் பீன் கதாபாத்திரம் எப்படி உருவானது?

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, Oxford Playhouse-ல் ஒரு நாடகம் எழுத வேண்டிய கட்டாயம் அட்கின்ஸனுக்கு வருகிறது. டெட்லைனுக்கு இரண்டு நாள்கள் முன்பு வரைகூட ஒரு வார்த்தையையும் எழுதவேயில்லை ரோவன். என்னதான் செய்வது என கண்ணாடி முன்பு நின்று யோசித்துகொண்டே அவர் செய்த கோண சேஷ்டைகளைப் பார்த்ததும். இந்த சேஷ்டைகளையே கதாபாத்திரமாக்கிவிடுவது என முடிவெடுத்திருக்கிறார் ரோவன். இந்தக் கதாபாத்திரத்துக்கு பெரிதாக எதுவும் எழுதவே தேவையில்லை என்ற சோம்பேறித்தனமும் ஒரு காரணம். கதாபாத்திரத்தின் பெயருக்கு First Name யோசிக்கவும் சோம்பேறித்தனப்பட்டு வெறுமெனே MR என விட்டுவிட்டார். பீன் கதாபாத்திரத்தின் பிறந்த நாளுக்கும் அவருடைய பிறந்தநாளையே எழுதிவிட்டார்.
மிஸ்டர் பீன் மொத்தம் எத்தனை எபிசோட்கள்?

இதுவரை மொத்தமே 14 எபிஸோட்கள் மட்டுமே மிஸ்டர் பீன் தொலைக்காட்சி தொடராக தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த 14 எபிஸோடுகளை மட்டும்தான் 90ஸ் கிட்ஸ் மீண்டும் மீண்டும் பார்த்து அப்போதே வைரலாக்கினார்கள். அனிமேஷன் ஷோக்கள் எல்லாம் பின்னால் வந்தவை…
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மிஸ்டர் பீன்

James Bond கதாபாத்திரத்தை கிண்டல் செய்து அதே போல ஒரு உளவாளி கதாபாத்திரத்தில் ரோவன் நடித்த படங்கள் தான் Johny English. ஆனால், ஒரு சம்பவம் தெரியுமா? 1983-ம் ஆண்டு வெளியான “Never Say Never Again” என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஒரு கோக்குமாக்கான கோமாளி அலுவலராக நடித்திருக்கிறார்.
Also Read : ஜேம்ஸ் பாண்ட் 007: `கிளைமேக்ஸ் எப்போதும் ஒண்ணுதான்… ஆனா..!’ James Bond படங்கள் – ஒரு பார்வை
மிஸ்டர் பீன் கார் கலெக்ஷன்
குட்டியான மஞ்சள் கலர் பொம்மை கார்ல பீன் சுத்துவாரு. ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு கார் பிரியர். கார் ஓட்டுவதற்கான லைசன்ஸ் மட்டுமல்லாமல் லாரி ஓட்டுவதற்கான லைசன்ஸும் வைத்திருக்கிறார். Renault 5 GT Turbo, McLaren F1, Aston Martin V8 Zagato மாதிரியான அட்டகாச ஹை எண்ட் கார்களை அனாயசமா ஓட்டுவார். மோட்டார் ரேசிங் பெஸ்டிவல்களில் கலந்துகொண்டு கலக்கியவர் ரோவன் அட்கின்ஸன்.
விமான விபத்தை தவிர்த்த ரோவன் அட்கின்சன்

ரோவன் அட்கின்ஸன் ஒரு முறை கென்யாவிற்கு விமானத்தில் சுற்றுலா செல்லும் போது, அந்த விமானத்தின் பைலட் நடுவானில் மயக்கமடைந்துவிட்டார். பைலட் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை விமானத்தை இயக்கியது ரோவன் தான். கார் மட்டுமல்ல நான் விமானம் ஓட்டுறதுலயும் கெத்துனு காமிச்சார்.
உங்க வாழ்க்கையில் மிஸ்டர்.பீன் மாதிரியான ஒரு நபர் உங்களுடைய க்ளோஸ் பிரெண்டா இருந்தா… அவர் சேட்டைக்கெல்லாம் உங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க.
0 Comments