‘மக்கள் நாயகன்’ பிக்பாஸ் அசீம் கெட்டவரா.. இல்லை, ரொம்ப கெட்டவரா?

பிக்பாஸ் அசீம் தன்னோட தப்பை நினைச்சு ஒரு இடத்துலகூட ஃபீல் பண்ணி பேசலை. அவர் பண்றது எல்லாமே சரிதான்ற மோட் உள்ள போய்ட்டாரு. 1 min


பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் அசீம்

பிக்பாஸ் 6 முடிஞ்சு அசீம் கப்பு வாங்கிட்டு வெளிய வந்துட்டாரு. சரி, இனிமேலாவது தன்னோட தவறுலாம் உணர்ந்து கொஞ்சம் சென்ஸிபிளா பேசுவாருனு பார்த்தா.. வீட்டுக்குள்ள பேசுனதுக்குலாம் வெளிய முட்டுக்கொடுத்து பேசிட்ருக்காரு. இண்டர்வியூக்கள் எல்லாத்தையும் பார்த்த பிறகு இவரு கெட்டவரா, இல்லை, ரொம்ப கெட்டவரான்ற கேள்விதான் வருது. சரி இந்த கேள்விக்கு விடை என்ன? அவருக்கு செட் ஆகுற 4 வடிவேலு டயலாக்ஸ் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.

முக்கியமான விஷயம்.. நாங்க விக்ரமனுக்கு சப்போர்ட். அசீம்க்கு எதிர்ப்பாளர்னுலாம் இல்லை. அசீம் பண்றது செய்றதுலாம் எவ்வளவு தப்பான விஷயங்கள்னு மட்டும்தான் சொல்றோம். அசீம் மேல தனிப்பட்ட வகையில் வன்மம்லாம் இல்லை.

பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் அசீம்

பாவம் யாரு பெத்த புள்ளையோ?

இண்டர்வியூக்கள்ல இவர் பேசுன விஷயங்களை வைச்சு மட்டும்தான் சொல்றேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ள இவருக்கு பூமருன்ற பட்டத்தைக் கொடுப்பாங்க. ஆனால், அதை ஏற்க மறுத்து மேடையில அந்த டைட்டில்லாம் கொடுக்க வந்தவங்களை அவமானப்படுத்திட்டு வந்துருவாரு. சரி, இண்டர்வியூக்கள்ல என்ன பேசுறாருனா, ஒண்னுல்ல, இவரோட டிரெஸ் கோடுலாம் வைச்சு, டிகோட்லாம் பண்ணி நிறைய போஸ்ட்லாம் போடுறாங்க. அதுக்கு இவரு, “நான்கூட இப்படிலாம் யோசிக்கலங்க. சிரிப்பு வருது அதெல்லாம் பார்க்கும்போது. அப்படியாவது உங்களை யோசிக்க வைச்சு உங்க மூளை செயல்பட தூண்டுறதுக்கு நான் டூலா இருக்கேன்ல” அப்டின்றாரு. கப்பை உடைச்சு எல்லாருக்கும் கொடுக்குறேன்னு வைங்க. கப்பு பத்தாதுன்றாரு. இதெல்லாம் என்ன ஸ்டேட்மெண்ட் லிஸ்ட்ல வைக்கிறதுனு தெரியல. உன்னை நோக்கி வீசப்படும் விமர்சனங்கள் சொற்கள்தானே தவிர, உன்னை தாக்கும் கற்கள் அல்லனு மோட்டிவேஷன் கோட்லாம் சொல்றாரு. ஆக்சுவால இதெல்லாம் மார்னிங்ல வாட்ஸ் அப்ல நம்ம ரிலேஷன் மாமா, சித்தப்பா ஃபார்வேட் பண்ற மெசேஜ். அவங்களை பூமருன்னுதான் நாம சொல்லுவோம். அதேதான் நீங்களும் பண்றீங்க. ஒவ்வொரு தடவையும் மூளைய தூண்டுறேன், கற்கள் எறியுறேன், கப்பை உடைக்கிறேன்னு என்னத்தையாவது உளறிட்டு சுத்துறத பார்த்தா, பாவம் யாரு பெத்த புள்ளையோனுதான் கேட்க தோணுது.

பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் அசீம்

உனக்கு வந்தா ரத்தம்.. எனக்கு வந்தா தக்காளி சட்னியா?

பிக்பாஸ் போட்டிக்குள்ள எதுக்கு கலந்துகிட்டீங்கனு கேள்வி கேட்டதுக்கு நிறைய சொன்னாரு. முக்கியமான விஷயம் 13 வருஷமா சரியான வாய்ப்புகள் வரலை. நல்ல நடிகனா நிலை நிக்கணும் அதுக்காக பிக்பாஸ்ல கலந்துகிட்டேன்னு சொல்றாரு. ஆனால், விக்ரமன் பொலிட்டிகல் சைடுக்காக உள்ள வந்துருக்காரு. அதை எப்படி ஏத்துக்க முடியும்னு மூச்சுப் புடிக்க கத்துறாரு. எதுக்கு இந்த தேவையில்லாத வசனங்கள்? இப்போலா நிறைய படத்துக்கு ஆஃபர்லாம் வருதுனு சந்தோஷபடுறாரு. நல்லா இருந்தா சரி. அப்புறம் உண்மையான அசீம் யாருனு மக்களுக்கு தெரியணும்னு வந்தேன்றாரு. நல்லாவே தெரிஞ்சுது. எனக்கு என்ன பயம்னா, ஷோ நடக்குறப்ப பேசுற மாதிரி, டாக்ஸிக்கா, பிற்போக்குத்தனமா, ஸ்டாக் பண்ணிட்டு படங்கள்லயும் நடிச்சு அதுக்கும் பெருமையா காளர தூக்கிவிட்டுட்டு திரிவாரோனுதான். அதாவது அவர் பக்கம் வந்தா அதெல்லாம் ரத்தம், பக்கத்துல இருக்குறவனுக்கு வந்தா தக்காளி சட்னி டோன்லயே டீல் பண்றது. நியாயமாரே!

நான் எதுக்கு ஒத்துவரமாட்டேன்னு சொல்லிட்டு அடிங்கடா!

பொதுவா இந்த மாதிரி ஷோக்குலாம் போகும்போது குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் டிப்ரஷன் வரும். கோவம் வரும். தவறுதலா எதாவது பண்ணுவோம். மனித இயல்பு இதெல்லாம். ஆனால், வெளிய வந்த பிறகு, மக்கள் பேசுறதெல்லாம் பார்த்து, உண்மையிலேயே தப்புதான் பண்ணிருக்கோம்னு மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிடுவாங்க. இல்லைனா, இன்டர்வியூக்கள்ல சொல்லுவாங்க. ஆனால், உள்ள பண்ண தப்பையெல்லாம் நியாயப்படுத்து இதுவரை யாரும் பேசலை. அந்தக் குறையை அசீம் தீர்க்குறாரு. என்னை விமர்சிக்கிற அளவுக்கு, திட்டுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்னுதான் இன்னைக்கும் கேட்டுட்டு இருக்காரு. “நான் எதுக்கு ஒத்துவராமாட்டேன்னு சொல்லிட்டு அடிங்கடா”னு அசீம் சொல்றதாதான் எப்பவும் தோணும். “இவன் நடிக்கலை. மனசுல இருக்குறதை பட்டுனு பேசிடுறான். இந்த ரூம்ல சண்டை போட்டுட்டு அந்த ரூம்ல போய் மன்னிப்பு கேட்டுர்றானு மக்கள் நினைக்கிறாங்க”னு சொல்றாரு. போடி வாடினுலாம் பெண் போட்டியாளர்களை பேசுறீங்க, சுயமரியாதை சீண்டுறீங்க. ஏன்னு கேட்டா, அவங்க வெளிய போய்ட்டு வந்து என்னை பாராட்டுறாங்கன்றாரு. இப்படி உள்ள தப்பு பண்ண எல்லாத்தையும் என்னென்னமோ சொல்லி நியாயப்படுத்துறாரு. எல்லாருமே செமயா காண்டான விஷயம், பாடிஷேமிங் பண்ணதுதான். அதையும் ஈஸியா ஜஸ்ட் லைக் தேட்னு விளக்குறாரு. நான் அவங்க பண்றதைதான் பண்ணேன். பாடிஷேமிங்லாம் இல்லைன்றார்ய். எதுக்கும் அவர் சொன்னது பதில் இல்லையேனுதான் தோணுது.

மூக்கு வெடப்பா இருந்தா இப்படிலாம் யோசிக்க தோணும்.

விக்ரமன்கூடலாம் எதுக்கு சண்டை வருதுனு சொன்னதுக்கு ஒரு விளக்கம் கொடுப்பாரு பாருங்க. எனக்கே தலை வலிக்குது. எனக்கு பியூர் திராவிடன் ஐடியாலஜி, அவரோட ஐடியாலஜி வேறனு சொல்றாரு. இந்த ஸ்டேட்மெண்டுக்கு என்ன கவுண்டர் கொடுத்தாலும் சம்பவம்தான் ஆகும். அதுனால இதை தவிர்த்திடலாம். ஆனால், கோட்பாடு பிரச்னை, கருத்தியல் பிரச்னைனு எங்களுக்குள்ள எதுவும் கிடையாதுன்றாரு. வீட்டுல சில போட்டிகள் நடக்கும். அதுல என்னென்ன முரண்பாடுகள் வருதுன்றதுதான் பிரச்னைன்றாரு. உண்மைய சொல்லணும்னா, அசீம்க்கு ஐடியாலஜினு ஒண்ணுமே கிடையாது. தமிழ் மக்கள், தமிழ் பெருங்குடி, தமிழ் எங்கள் உயிர்னுலாம் நிறைய சொல்றாரு. ஆனால், ஓடி விளையாடு பாப்பா பாட்டைக் கேட்டா சொல்லல. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான், அயலானேனுலாம் கண்டதுக்கு எதாவது பேசுறாரு. எல்லாத்தையும் கேட்கும்போது மூக்கு வெடப்பா இருந்தா இப்படிலாம்தான் யோசிக்க தோணும்னு அசீமைப் பார்த்து கேட்க தோணுது.

பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் அசீம்

அடி வாங்குனது நானு, கப்பு எனக்குதான்!

மூச்சுக்கு முந்நூறு தடவை கப்பு ஜெயிச்சிட்டேன். மக்கள் என்னை ஜெயிக்க வைச்சாங்க. 106 நாள் உள்ள இருந்தேன், எல்லா விளையாட்டையும் விளையாடுனேன், ஆனால், சப்போட் பண்ணது மக்கள்தான்னு கூவி கூவி சொல்றாரு. என்ன பிரச்னைனா, அதே மக்கள்ல சிலர்தான் நியாயமான கேள்விகளையும் வைக்கிறாங்க. அதை நெகட்டிவிட்டிக்காக பரப்புறாங்க. பெர்சனல் வெஞ்சன்ஸ்க்காக செய்றாங்க, அவங்க வேலையை பாருங்கனு சொல்றாரு. இதுக்கிடைல மக்கள் நாயகன்னு பட்டம் கொடுத்துருக்காங்களே அதப் பத்தி என்ன நினைக்கிறீங்கனு கேட்டா, பொதுவா அதெல்லாம் அன்புல செய்றாங்கனு கடந்து போவாங்க. ஆனால், நம்மாளு அப்டி இல்லை. விளம்பர விரும்பி. மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு அந்தப் பட்டம் ஏன் கொடுத்தாங்க? பக்கத்துவீட்டு பையன் மாதிரி இருக்குறதாலதான? அதேமாதிரிதான், எனக்கும் அவங்கள்ல ஒருத்தரா நினைச்சு அதை கொடுத்தாங்கனு சொல்லியிருக்காரு. எதே.. இன்னொன்னு, பெஸ்ட் ஆக்டர்னு அவார்ட்லாம் வாங்கியிருக்கேன். எனக்கு நடிக்க எவ்வளவு நேரம் ஆகும். நான் நானா இருக்கணும்னுதான் இப்படி இருந்தேன்றாரு.

Also Read – தொடக்கமே அதிரிபுதிரிதான்… செஃப் தாமு-வின் பயணம்

கடைசியா என்ன சொல்ல வறேன்னா, அவர் தன்னோட தப்பை நினைச்சு ஒரு இடத்துலகூட ஃபீல் பண்ணி பேசலை. மக்கள் அதிகமா ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சதால, அவர் பண்றது எல்லாமே சரிதான்ற மோட் உள்ள போய்ட்டாரு. அதைப் பார்க்கும்போது, நீங்க வெறும் கெட்டர்வர்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், ரொம்ப கெட்டவரா இருக்கீங்கனுதான் சொல்ல தோணிச்சு. ஒருவேளை அறியாமைலகூட அவர் இதெல்லாம் பேசலாம்னும் எண்ணம் வந்துச்சு.

சரி, அசீமோட இந்த செயல்கள்லாம் பார்த்து உங்களுக்கு என்ன தோணிச்சுனு கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே, அவருக்கு நீங்க ஒரு டயலாக் டெடிகேட் பண்ணனும்னா, அது என்னவா இருக்கும்னும் சொல்லுங்க. 

Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos


Like it? Share with your friends!

495

What's Your Reaction?

lol lol
22
lol
love love
28
love
omg omg
56
omg
hate hate
49
hate
Ram Sankar

9 Comments

Leave a Reply

  1. Azeem is good compared to 20 contestants. He will use disrespectful words but that means people portray him as abuser. Most of the so called good people they portrayed in this country are worst people. Good people never boast the good qualities like I am very dignified person and very honest to the society. I treat everyone equally without any inequalities and we see day today as example.

  2. Ok. Why you not addressing shivin abusing words nd Vikram double standard they are also doing same mistake inside of the house pls Your justification is not for others If you judge, make it equal for all

  3. Sir yaarume Inga Nallavanga illa…yellarume Inga nallavangalaa kaamichchu title win panni 50 lakhs yeduththuttu poradhula dhaan gavanamaaha irundharhal…yellarume suyaroobathai maraithu game villayada muyarchchi seidhaargal…azeem andha madhiri muyarchi seiyavillai….idhu dhaan avarukkum matravarhalukkum Ulla vidhiyaasam….thappaana sila vaarthaikalai avar avoid panni irukkalaam….adhukkaha ippadiya oruvarai avamadhippadhu…aarav Gayatri Julie Balaji Mahath ivarhallaiyum karuthil vaiththu padhividungal…mental state big boss veetil irundhal dhaan puriyum

  4. பிக்பாஸ் சீசன்6 அஸீமை வைத்து தான் இத்தனை வாரங்களும் இளுத்தார்கள்.உங்களைப் போன்ற வர்களுக்கும் அஸீமால்தான் பிழைப்பு நடக்கிறது போல.
    வெலங்கிரும்!

  5. மக்கள் நினைத்ததையெல்லாம் அப்படியே சரியாக சொல்லயிருக்கிறது இந்தக்கட்டுரை. அசீம் கண்டிப்பாக ஒரு மிக மிக கெட்டவர்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவருக்கு சப்போர்ட் பண்ணுகிறார்களே லட்சக்கணக்கானவர்கள் அவர்களும் அசீமைப்போன்றவர்கள்தானே. அப்போ இத்தனை அஸீம்களா. அதுதான் என் கவலை.

  6. Visha poocho illai vishame uruvana vikraman than yokkiyan polaum matravarghal particularly Azeem keytavan pollavum portry pannaparkirar
    Ithutha Aram ma
    Unmayana Aram venrathu
    Arasiyal very intha game veryu Azeem oruvan eppadi niru win pannan makkal enne muttalghala
    Still people are Barking

  7. “துப்பினா துடைச்சுக்குவோம்”ஒரு டிரைனிங் செண்டர் ஆரம்பிக்கலாம்

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
`பிறவிக் கலைஞன்’ நாசரின் மறக்க முடியாத ரோல்கள்! ஸ்டீரியோடைப்பை உடைத்த தமிழ் சினிமா ஹீரோயின்களின் ரோல்கள்! தனுஷ் முதல் சரத்குமார் வரை… கோலிவுட்டின் ஃபுட்பால் லவ்வர்ஸ்! உடல் எடைக்குறைப்பில் உதவும் கோடைகால உணவுகள்! தினசரி உணவில் மீன் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா?!
%d bloggers like this: