பிக்பாஸ்ல அசல் கோளாறு போனதுக்கு அப்புறம் காதல் கன்டன்ட்னா ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாதான். அசீம் ஒருபக்கம் எல்லாரையும் கத்திட்டு சுத்திட்டு இருப்பாரு. இன்னொருபக்கம் எவன் எப்படி போனாம் நமக்கு என்ன, காதல்தான் நம்மை வாழ வைக்கும்னு ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவைப் பார்த்து தொடர்ந்து நிறைய காதல் அம்புகளை விட்டுட்டு இருக்காரு. ஷிவின், “எல்லா தெரிஞ்சுக்கணும்ல, என்ன குடிக்கிறா, எங்க போறா, செருப்பை மறந்துட்டாளா, செருப்பை வைச்சிட்டாளா, என்ன டிரஸ் போடுறா, மூக்குத்தி போட்டாளா, பொட்டு வைச்சாளா, அவளே அவளைப் பத்தி இவ்ளோ யோசிச்சிருக்கமாட்டா”னு ராபர்ட் மாஸ்டரை பார்த்து செமயா கலாய்ச்சுவிட்ருப்பாங்க. ராபர்ட் மாஸ்டர் பண்ற ரொமாண்டிக் அட்ராசிட்டீஸ்லாம் என்ன?
ராபர்ட் மாஸ்டர் உள்ள வந்ததுல இருந்தே ரக்ஷிதாவை தனியா கவனிச்சுட்டுதான் இருப்பாரு. அவங்க போற இடத்துக்குலாம் பின்னாலயே போய் பேச ட்ரை பண்ணுவாரு. அப்போ, ஒருநாள் டீம் எல்லார் முன்னாடியும் உட்கார்ந்து பேசும்போது, “எனக்கு சீரியல்னாலே ஆகாது. ரொம்ப இழுப்பாங்க. எதார்த்தமா ஒருநாள் சீரியல் பார்க்கும்போது, உங்களைப் பார்த்தேன். பார்த்த உடனே ஃப்ளாட். வெளிய போனப்பிறகும் நம்ம நட்பு தொடரணும்னு ஆசை”னு தன்னோட க்ரஷ்ஷை வெளிப்படுத்துவாரு. ரக்ஷிதா உட்கார்ந்து சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க. உடனே சக போட்டியாளர்கள், “நீங்க எப்படி நடந்துக்குறீங்கன்றதைப் பொருத்துதான் இருக்கு”னு கவுண்டர் கொடுப்பாங்க. ரெண்டு பேரும் சிரிச்சிட்டு கடந்து போய்ருவாங்க. அதுக்கப்புறம், மாஸ்டர் ரொம்ப கேர் பண்ண ஆரம்பிச்சாரு. நிறைய குட்டி குட்டி சேட்டைகள் பண்ண ஆரம்பிச்சாரு. அதுலாம் கடைசி சொல்றேன். ஒருக்கட்டத்துக்கு மேல அவரைப் பார்த்தாலே அப்நார்மலா இருக்குற மாதிரி இருக்கும். கடைசியா ரக்ஷிதா பக்கமே போகமாட்டேனுலாம் சொல்லிட்டு சுத்துனாரு. அப்போ, ரக்ஷிதாவே, ராபர்ட் மாஸ்டரை கூப்பிட்டு, “உங்களுக்கு என்ன பிரச்னை? ஏன் இப்படிலாம் பண்றீங்க. நார்மலா இருங்க. எல்லார்கூடயும் பேசுற மாதிரி எங்கிட்டயும் பேசுங்க”னு அட்வைஸ் பண்ணுவாங்க. அதுக்கு ராபர்ட் மாஸ்டர், “புடிச்சவங்ககிட்ட எப்படி நார்மலா இருக்க முடியும்?”னு சொல்லி, காதுல வாங்காத மாதிரியே ரக்ஷிதாவைப் பார்த்துட்டு இருப்பாரு. வயசு பையன்னாகூட, வயசு கோளாறுனு சொல்லலாம். ஆனால், இதை என்ன சொல்லனு தெரியல. காதல் ஒருவனை பயித்தியமாக்கும்னு சும்மாவா சொன்னாங்க.
ஒரு எபிசோடுல விக்ரமன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் எல்லாரும் பேசிட்டு இருப்பாங்க. ரக்ஷிதா சிரிச்சு சிரிச்சு ஜாலியா என்னமோ பண்ணிட்டு இருப்பாங்க. அப்போ, ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா வைச்சு கண்ணு வாங்காமல் அப்படி பார்த்துட்டு இருப்பாரு. டக்னு ரக்ஷிதா பார்த்ததும், அப்படியே திரும்பிடுவாரு. அதுக்கு வைபஸ்லாம் எடிட் பண்ணி போட்டு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல பிக்பாஸ் ஃபேன்ஸ் வைச்சிட்டு இருக்காங்க. அல்டிமேட் கிரிஞ்ச் என்ன தெரியுமா? கிச்சன்ல ரக்ஷிதா சோறு வடிச்சிட்டு இருப்பாங்க. அப்போ, ராபர்ட் மாஸ்டர் அவங்க மேல புகை எதோ படக்கூடாதுனு, கைய வைச்சு மறைச்சிட்டு நிப்பாரு. நான் உன்னைக் காப்பாத்துறேன்னுலாம் சொல்லுவாரு. அதேமாதிரி, பசிக்குதுனு சொல்லுவாரு. அதுக்கு, இன்னும் ரெடியாகலை, “வேணும்னா கஞ்சி குடிங்க”னு ரக்ஷிதா சொல்லுவாங்க. அவர் கோச்சிக்கிட்டு போய் உட்கார்ந்து நான் சாப்பிடமாட்டேன்னு சொல்லுவாரு. உடனே, இவங்களும், அவர் சாப்பிடலையா? அப்போ, நானும் சாப்பிட மாட்டேன்னு சொல்லி சுத்துவாங்க. ஒருவழியா சமாதானம் பண்ணி சாப்ட வைச்சிருவாங்க. சாப்பிட்டுட்டு இருக்கும்போது ஷிவின் கிட்ட போய் முத்தம் கொடுப்பாரு. இதை அப்படியே ரக்ஷிதாக்கு கொடுத்துருனு சொல்லுவாரு. ரக்ஷிதா தலைல அடிச்சுட்டு உட்கார்ந்து சாப்பிடுவாங்க. சிங்கிள்ஸ்லாம் பாவம்டா. இதுக்கு முன்னாடியும் காதல்லாம் நடந்துருக்கு. ஆனால், இதான் ஃபஸ்ட் டைம்.
இன்னைக்கு சோஷியல் மீடியால அதிகமா சுத்துறது ரெண்டு குரூப்புதான். ஒண்ணு, மரத்தை சுத்து டூயட் பாடி எனக்கும்தான் லவ் பண்ண ஆசை இருக்கு குரூப். இன்னொன்னு, அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல குரூப். ஒண்ணு, ஆளே கிடைக்காம சுத்துறது, இன்னொன்னு ஆள் விட்டுட்டு போனது. சோறு திங்கும்போதுதான் பிக்பாஸ்லாம் பெரும்பாலும் பார்ப்பாங்க, அப்போ, இவங்கலாம் இவங்க லவ் பண்றத பார்த்தா, வெக்ஸ் ஆகி விக்கியே செத்துருவாங்களேடா. ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா, ரெண்டு பேருமே ஒருமாதிரிதான் வீட்டுக்குள்ள சுத்துனாங்க. ஏன்னா, சாப்பாடு சண்டைலாம் முடிஞ்ச பிறகு, “இனிமேல் இந்த சின்னக்குழந்தை மாதிரி சாப்பிடாமல்லாம் இருந்தா சூடு வைச்சு விட்ருவேன்”னு ரக்ஷிதா கோபமா ராபர்ட் மாஸ்டர்கிட்ட சொல்லுவாங்க. டேய், என்னடா பண்றீங்க. என் வயிறு எரியுதுலேனுதான் நிறைய பேர் போஸ்ட் போட்டு கத்துனாங்க. ஆனால், சிலர் “என்னம்மா கேர் பண்ணிக்கிறாரு பாருங்க. இப்படியொருத்தர் நம்மள லவ் பண்ணனும், ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா பண்றதைலாம் பார்த்தா, நம்மளும் யாரயாவது லவ் பண்ணனும்போல இருக்கே”னு அந்த ஜோடிக்கு ஹார்ட்டின்களையும் அள்ளி கொடுத்தாங்க. கொஞ்சம் இடம் கொடுத்தா தலை மேல ஏறி உட்காருவாங்களேனு சில பெண்ணியவாதிகள் அவரை திட்டவும் செய்தாங்க. ஆனாலு, அவங்க பண்ற சில சேட்டைகள் ரசிக்கும்படியாதான் இருக்கு.
Also Read – `பெரிய பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்…’ -`ரக்கர்ட் பாய்’ அசீம் அலப்பறைகள்!
ஃபேஸ்புக், டிவிட்டர்லலாம் இந்த ஜோடிக்கு ஆர்.ஆர்.ஆர், ராபிதா – இப்டிலாம் பேரு வைச்சிருக்காங்க. RRR – Robert, Rakshitha, Romance, ராபர்ட் + ரக்ஷிதா = ராபிதா. என்னவொரு புத்திசாலித்தனம் பாருங்க. அவங்களும் சும்மா இல்லை. ரக்ஷிதா மழைல நனைஞ்சிட்டு இருப்பாங்க. ராபர்ட் மாஸ்டர் போய், “கோல்ட் வந்துரும், 5 நிமிஷம்னு சொல்லி, சொல்லி அரை மணி நேரம் ஆகுது. கமல் சாரை பார்க்கணும். கிளம்பி வா, கிளம்பி வா”னு மனுஷன் ரக்ஷிதாவைப் பார்த்து கதறிட்டு இருந்தாரு. ஆனால், அவங்க ஹாயா படுத்து காலாட்டிட்டு இருந்தாங்க. இந்த பொண்ணுங்களே இப்படித்தான். ரக்ஷிதா சேர் உட்கார்ந்து ஒரு எபிசோடுல பேசிட்டு இருப்பாங்க. ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா பின்னால போய், அப்படியே முத்தம் கொடுக்குற மாதிரி சைகைலாம் பண்ணுவாரு. ம்ம்ம், என்ன பண்ண மனுஷனைப் பார்க்க பாவமாதான் இருக்கு. ஆனால், இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதுனு தெரியலையே. ஒருதடவை ராபர்ட் மாஸ்டர் பேசும்போது லவ்யூனு சொல்லுவாரு. ரக்ஷிதா முகமே மாறிடும். “நான் எப்பவும் சொல்றதுதான். டார்லிங்னு எல்லாரையும் கூப்பிடுறதுதான்”ன்னு சொல்லி சமாளிச்சுட்டு போய்டுவாரு. அல்ட்டிமேட்டான விஷயத்தை கமல் முன்னாடியே பண்ணுவாரு. தலைக்கு எவ்வளவு கட்ஸ் பார்த்தீங்களானு அப்போதான் தோணும்.
கமல் முன்னாடி ரக்ஷிதாவும் ராபர் மாஸ்டரும் உட்கார்ந்திருப்பாங்க. “ராபர்ட் மாஸ்டர் பத்தி என்ன நினைக்கிறீங்க?”னு ராபர்ட் மாஸ்டரே கேப்பாரு. அப்போ, ரக்ஷிதா, “ராபர்ட் மாஸ்டர் குழந்தை மனசுள்ள மனுஷன். அவங்க பண்ற எல்லா விஷயமும் ரசிக்கக்கூடியதாதான் இருக்கும். உங்க டான்ஸிங்கும் எனக்கு புடிச்சிருக்கு. ராபர்ட் ரொம்ப நல்ல மனுஷன்”னு சொல்லுவாங்க. உடனே, “ராபர் உங்கக்கிட்ட எதோ சொல்ல வறாருனு உங்களுக்கு தெரியுதா?”னு கேப்பாரு. ரக்ஷிதா பதில் சொல்ல முடியாமல் தவிப்பாங்க. கரெக்டா அப்போ, கமல் பஸ்ஸர் அழுத்தி கான்வர்சேஷனை முடிச்சி விடுவாரு, ரக்ஷிதாவும் ரொம்ப நன்றினு சொல்லிட்டு போய்டுவாங்க. ஆக்சுவலா பார்க்க கியூட்டா இருக்கும். ஆனால், அப்போ, கமல் முகத்தைப் பார்க்கணுமே, “எங்கிட்டியேவா, நான் பார்க்காத காதலா?”ன்ற ரேஞ்ச்லதான் இருக்கும். நக்கலா சிரிப்பு வேற சிரிப்பாரு. அல்ட்டிமேட் அதெல்லாம். இதெல்லாம் தவிர்த்து சோறு ஊட்டி விடுறது, குளிச்சிட்டு வரும்போது வழில நின்னு கிண்டல் பண்றதுனு ராபர்ட் மாஸ்டர் அட்டகாசம் அதிகமாவே பண்ணுவாரு. ஆனால், எடுத்து பார்த்தோம்னா ஃபுல்லா ஸ்டாக்கிங்தான் மனுஷன் பண்ணுவாரு. இதைப் பார்த்து காதல் இதுதான்னு யாரும் முடிவு பண்ணாமல் இருந்தா சரிதான். எதுக்காக சொல்றேன்னா, அதுக்காக சொல்றேன்.
வீட்டை விட்டு வெளிய போனதும் நான் கான்டக்டலலாம் இருக்க மாட்டேன்ற ரேஞ்ச்லதான் ரக்ஷிதா எப்பவும் பேசுவாங்க. வெளிய வந்து அவங்கவங்க வாழ்க்கையை பார்த்துட்டுதான் மேக்ஸிமம் போவாங்க. எதுவும் அவங்க பெர்சனல வாழ்க்கையை, மனநிலையை பாதிக்காமல் இருந்தா சரிதான். அவங்க பண்ற இந்த சேட்டைகளைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!