விக்ரமன் - அசீம்

விக்ரமன்.. அசீம்.. பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க போறது யாரு?

பிக்பாஸ் சீசன் 6 முடியப்போகுது. சோஷியல் மீடியா முழுக்கவே இந்தப் போட்டில ஜெயிக்கப்போவது யாருன்ற விவாதம்தான் ஓடிட்டு இருக்கு. ஆரம்பத்துல இருந்தே கருத்தா பேசி ட்ரிகர் ஆகாமல் கவனமா விளையாடிய விக்ரமன்தான் வின்னர்னு, வின்னர்க்கு மூணு என் போட்டு அவருக்கு வோட் பண்ணுங்கனு ஒரு பக்கம், தனியா நின்னு மொத்த பேரையும் ஓடவிட்ட அசீம்தான் ரியல் வின்னர்னு இன்னொரு பக்கம், எலேய், அங்கிட்டு போய் விளையாடுங்கடானு ஷிவின் ஃபேன்ஸ் ஆப்போசிட் பக்கம்னு ஆளாளுக்கு ஒருபக்கம் சண்டைய சளைக்காமல் போட்டுட்டு இருக்காங்க. சரி, உண்மையிலேயே பிக்பாஸ்ல 6-ல யார் வின்னர்?

அசீம்தான் வின்னர்னு பெரும்பாலும் நிறைய பேர் முடிவு பண்ணிட்டாங்க. போர் கண்ட சிங்கம்னு பாட்டுலாம் போட்டு எடிட் பண்ணி ஃபயர் விட்டுட்டு இருக்காங்க. உண்மையிலேயே அவர்தான் ஜெயிப்பாரா? விஜய் டிவில பிக்பாஸ் போட்டில அசீம் ஜெயிச்சாதான் அவங்களுக்கு நல்லதுனு சொல்றாங்க. உண்மையா? இதெல்லாம் பத்தி எண்ட்ல பேசுவோம். ஃபஸ்ட் விக்ரமன்..

வி.சி.க தலைவர் திருமாவளவன், “விக்ரமன் முதிர்ச்சியான, பக்குவமான, நேர்மறையான ஒரு ஆளுமை. பொழுதுபோக்கான வணிகமயமான ஆடம்பரமான விளையாட்டுக் களத்தை சமத்துவக் கருத்தியலைப் பரப்புவதற்கான ஒரு களமாக்கிய பொறுப்பு மிக்க ஆளுமை. விக்ரமன் வெற்றி பெற வேண்டும். இது சராசரியான ஒரு நபராய் என் விருப்பம்.”னு ட்விட்டர்ல போஸ்ட் போட்டது மிகப்பெரிய விவாதத்தை இப்போ ஏற்படுத்தியிருக்கு. விக்ரமன் – வி.சி.க – பிக்பாஸ் இதை வைச்சு மிகப்பெரிய அரசியலே வெளிய நடக்குது. இதுக்குலாம் கமல் ஏற்கனவே, “பிக்பாஸ் போட்டின்றது மேடை. இதை அவங்கவங்க சுயத்துக்காக பயன்படுத்த தான் வந்துருக்காங்க. என்னையும் சேர்த்துதான் சொல்றேன்”னு பதில் சொல்லிட்டாரு. வெளிய உள்ள அரசியலை தவிர்த்துட்டு, பிக்பாஸ்ல ஃபைனலிஸ்ட்டா வர்றதுக்கு காரணம் என்ன? விக்ரமன் தான் ஜெயிக்கணும்னு ஏன் பேசுறாங்க?

விக்ரமன் - அசீம்
விக்ரமன் – அசீம்

ஆரம்பத்துல இருந்தே எதுக்காக விளையாட வந்துருக்கோம். இந்த மேடையை எதுக்காக நான் யூஸ் பண்ணப் போறேன்ற தெளிவு விக்ரமனுக்கு இருக்கு. மறந்தும்கூட யாரையும் தவறாக பேசவோ, தன்னோட நிலைல இருந்து, கருத்துல இருந்து வெளிய வரவோ, விட்டுக்கொடுக்கவோ இல்லை. ஆரம்பத்துல ஷிவின்ல இருந்து அமுதவாணன் வரைக்கும் எல்லாரையும் பாடி லாங்குவேஜ் வைச்சு அசிங்கமா அசீம் பேசுனாரு. யாரையும் பேச விடாமல் கத்துவாரு. இதுக்கு எதிரா முதல்ல இருந்து குரல் கொடுத்துட்டு இருக்குறது விக்ரமன்தான். விக்ரமன் யார் சைட்ல தப்பு இருந்தாலும் அவங்களுக்கு எதிரா நின்னு, அவங்களோட தப்பை சுட்டிக்காட்டி புரிய வைக்க விரும்புவாரு. தனக்கு எல்லாம் தெரியும்னு தன்னை நிரூபிக்க விரும்ப மாட்டாரு. பிக்பாஸ் வீட்டுல விக்ரமன் பண்ண 4 விஷங்களை காரணமா சொல்லி, அவர் ஜெயிக்க ஏன் வாய்ப்பிருக்குனு நம்ம சொல்லலாம்.

1) மலக்குழி நாடகம்!

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடிய அவலங்கள் இன்னும் இந்தியால நடந்துட்டுதான் இருக்கு. சமீபத்துலகூட ரோகினி நடிப்புல விட்னஸ்ன்ற படம் வெளியாகி விவாதங்களை கிரியேட் பண்ணிச்சு. இதை எதிர்த்து பலரும் தொடர்ந்து குரல் கொடுத்துட்டுதான் இருக்காங்க. ஆனால், அதை மெயின்ஸ்ட்ரீம் மீடியால யாரும் பெருசா பேசுனது இல்லை. அதை எளிமையான நாடகம் போட்டு விக்ரமன் நடிச்சு புரிய வைச்சது ரொம்பவே உணர்ச்சிகரமா இருந்துச்சு. அதைப் பார்த்துட்டு நிறைய பேர் பதிவுகள் போட்ருந்தாங்க. மனசு மட்டும்தான் இந்த பிரச்னை தீராமல் இருக்க காரணமா இருக்குனு போல்டா கருத்தையும் அந்த பிக்பாஸ்ல பதிவு பண்ணாரு.

2) டைமிங்கில் வந்த தமிழ்நாடு ஸ்டோரி!

டிடி சொன்ன மாதிரிதான், இதை தெரிஞ்சு பேசுனாரா? தெரியாமா பேசுனாரா?னு நமக்கு தெரியலை. ஆனால், டைமிங்ல அவர் பேசுனது செமயா இருந்துச்சு. பொங்கல் கொண்டாடும்போது, “இன்னைக்கு பொங்கல்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்நாடுனு பெயர் வைச்ச நாளும்கூட. சங்கரலிங்கனாருன்ற அறிஞர் தமிழ்நாடுனு பெயர் வைக்கணும்னு பல நாள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தாரு. அப்போ நிறைவேறல. அதுக்கப்புறம் வந்த அறிஞர் அண்ணா பெயரை மாத்துனாரு”னு சொல்லுவாரு. ஆக்சுவலா செம கிளாப்ஸ் வீட்டுல இருந்து நிறைய பேர். பெரியார் நாடு, அண்ணா நாடு, அம்பேத்கர் நாடுனு சொல்ற எல்லாருக்கும் பொதுவான நாடு தமிழ்நாடுதான்னும் டக்னு சொல்லுவாரு.

3) ஜெய் பீம்.. அம்பேத்கர் கடிதம்!

கனா காணும் காலங்கள் டாஸ்க்ல கடிதங்களை போட்டியாளர்கள் எழுதுனாங்க. ரொம்பவே உணர்வுபூர்வமான டாஸ்க்கா இருந்துச்சு. விக்ரமன் அந்த டாஸ்க்ல அம்பேத்கருக்கு கடிதம் எழுதுனாரு. கமல் கூட அதை பார்த்து கண்ணீர் விட்டுட்டாரு. “அன்புள்ள புரட்சியாளார் அம்பேத்கர் அவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மனிதர்களாய் தலைநிமிர செய்தவர் நீங்கள் GIVE BACK TO SOCIETY என்ற முழக்கத்துடன் கடின முயற்சியால் நீங்கள் வெளிநாடுகளுக்கு போய் படித்து கல்வி, அறிவு அனைத்தையும் சுயநலனுக்காக துளியும் பயன்படுத்திக்கொள்ளாமல் கேட்க நாதியில்லாத மக்களுக்கு உழைப்பதற்காக திரும்பி வந்தீர்கள். உங்கள் அளவுக்கு என்னால் செய்ய முடியுமா என தெரியாது. ஆனால், முயற்சி செய்வேன்”னு எழுதியிருப்பாரு. இந்தக் கடிதத்தை விஜய் டிவி முதல்ல கட் பண்ணிட்டாங்க. அப்புறம் பல விமர்சனங்கள் வந்த பிறகு அதை பப்ளிஷ் பண்ணாங்க.

4) கமலுக்கே பாடமா?

வார்த்தைகளை யூஸ் பண்றதுல விக்ரமன் ரொம்ப கவனமா இருப்பாரு. தப்பித்தவறி வார்த்தைகள் வாய்ல இருந்து வந்தாலும் மன்னிப்பு கேப்பாரு. இப்படி கமல் ஒரு தடவை ஜால்ரான்ற வார்த்தையை யூஸ் பண்ணதும், விக்ரமன் கமல்கிட்ட “சார், அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாமே”னு சொல்லுவாரு. கமல் அதை புரிஞ்சுக்கிட்டு அதுக்கு வேற வார்த்தையை பயன்படுத்துவாரு.

விக்ரமன் - அசீம்
விக்ரமன் – அசீம்

விக்ரமனை தவிர்த்து வேற யாரும் இந்த மாதிரியான விஷயங்களை இதுவரைக்கும் பிக்பாஸ்ல பண்ணதில்ல. ஆரிகூட அறம்லாம் பேசுனாரு. ஆனால், செயல்ல இப்படிலாம் காமிச்சது விக்ரமன்தான். அதுனால, அவர் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். என்னடா, பாஸிட்டிவாவே சொல்ற, விக்ரமன் தப்பே பண்ணலையானுலாம் கேக்கலாம். கண்டிப்பா நிறைய தப்பு பண்ணியிருக்காரு. அதையும் நாம் இதுக்கு முன்னாடி பிக்பாஸ் தொடர்பா போட்ட வீடியோக்கள்ல சுட்டுகாட்டியிருக்கோம். இப்போ, அவருக்கு மிகப்பெரிய ட்ராபேக்கா இருக்குறது திருமாவளவன் பொட்ட ட்வீட்தான். கட்சி அவருக்கு சப்போர்ட் பண்ணுது நிறைய பேர் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதுனால, அவர் ஜெயிச்சாலும் இந்த விமர்சனம் வைப்பாங்க. தோத்தாலும் கட்சி சப்போர்ட் இருந்தே தோத்துட்டாருனு சொல்லுவாங்க.

பிக்பாஸ் 6-ல மோஸ்ட் இரிட்டேட்டிங் கேரக்டர் 2 பேர் இருக்காங்க. ஒண்ணு அசீம். அந்த இடத்தை யாராலும் அடிச்சுக்க முடியாது. ரெண்டாவது மணிகண்டன். கிரிஞ்ச அவார்ட் கொடுப்பாங்கள்ல. அசீம்கும் மணிக்கும் அந்த அவார்ட்க்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கும். மணிகண்டனை விட்ருவோம். அனாவசியம். அசீம் பத்தி கருத்து ரீதியா, பொலிட்டிகலா, அவ்வளவு ஏன் பேஸிக் ஹியூமன் சென்ஸ் பத்திலாம் அவர்கிட்ட பேச அவ்வளவு விஷயம் இருக்கு. மேனஸ் பத்தி பேசாதீங்க அதைப்பத்தி பேச உங்களுக்கு எந்தவிதமான தகுதியும் இல்லைனு அசீம், மகேஷ்வரிக்கிட்ட சொல்றாரு. நமக்குலாம் வெயிட் வாட்ன்ற டயலாக்தான் டக்னு நியாபகம் வந்துச்சு. சிம்பிளா சொல்லணும்னா, ஒரு சூப்பர் பவர் ஒண்ணு கிடைக்குதுனு வைங்க. பிக்பாஸ் வீட்டுல இருக்குற எல்லாருமே, நான் ஜெயிக்கணும்னு வேண்டிப்பாங்க. ஆனால், அசீம் மட்டும் இந்த வீட்டுல வேற யாரும் ஜெயிக்கக்கூடாதுனு வேண்டிப்பாரு.

Also Read – க்ரிஞ்ச் அசீம் ஏன் பிக்பாஸ்ல இருந்து வெளியேற்றப்படணும்?

அசீம் பண்ண எல்லா விஷயங்களையும் சுட்டிக்காட்டி, “அசீமை ஏன் பிக்பாஸ் வீட்டுல இருந்து உடனே, வெளியேற்றணும்”னு இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ போட்ருக்கோம். அதைப் பாருங்க. உங்களுக்கே புரியும். பாயிண்டா அவரைப் பத்தி பேச ஒண்ணுமே இல்லை. “அதுல ஒண்ணுல்ல கீழ போட்ரு”ன்றதுதான் அவரை நினைக்கும்போது தோணுது. இருந்தாலும் அவருக்கு வெளிய இருக்குற ஆதரவு இன்னும் பிரம்மிக்க வைக்குது. எப்படினுதான் சுத்தமா புரியல. அதனால, அவர் ஜெயிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர் ஜெயிச்சா ஆச்சரியப்படவும் ஒண்ணுமில்ல. பார்ட் ஆஃப் தி கேம்தான்! அவர் ஜெயிச்சா அடுத்து வர்ற போட்டியாளர்களுக்கு நிச்சயம் தப்பான உதாரணமாகதான் இருக்கும்.

விக்ரமன், அசீம் இவங்களை மாதிரி இன்னொரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் ஷிவின். உடல்ரீதியாவும் மன ரீதியாவும் அவ்வளவு பலமா நின்னு எல்லாரையும் சொல்லியடிச்சு விளையாடுனாங்க. அவங்க ஓவரா கத்துராங்கனு விமர்சனம் வைக்கிறாங்க். ஆனால், அசீம் மாதிரி கத்துற ஆட்கள் இருக்கும்போது ஷிவின் மாதிரியான ஆள்கள் கண்டிப்பா தேவை. இன்னொன்னு விக்ரமன் அரசியல் ரீதியா பேசுறாரு, அசீம் கத்து கத்துனு ஜெயிக்க போராடுறாரு. ஆனால், சைலண்டா எல்லா டாஸ்க்லயும் ஸ்கோர் பண்ணி, அல்டிமேட்டா கேம்ல மட்டும் ஃபோகஸா இருக்குறது ஷிவின்தான். அவங்க ஜெயிச்சா அவங்களை மாதிரி இருக்குற ஒரு கூட்டமே வெளிய வருவாங்க. இதை கணக்கு பண்ணா, ஷிவின் ஜெயிக்கவும் வாய்ப்புகள் இருக்கு.

சரி, யாரு ஜெயிப்பாங்கனு நீங்க நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top