தெலுங்கு சினிமாவோட சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபு. அவர் நடிப்புல கடைசியா வந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டான ‘சர்காரு வாரி பாட்டா’ படம் பார்த்தேன். அதுல வந்த டயலாக்கை கேட்டேன். மனசு நொந்து போனதுதான் மிச்சம். ஏன் திமிங்கலம், இந்தப் படம் எப்படி இவ்வளவு ஹிட்டாச்சுனு யோசிச்சுட்டு இருந்தேன். சரி கில்லி, போக்கிரி மாதிரி படம்லாம் கொடுத்துருக்காரு இந்தப் படம்தான் மிஸ் ஆயிடுச்சுனு அதுக்கு முன்னாடி வந்த ‘சரிலேரு நீக்கெவரு’ படம் பார்த்தேன். இதுக்கு அதுவே பரவால்லனு தோணிச்சு. நான் விடுறதா இல்லை, கண்டிப்பா நல்ல படம் கொடுத்துருப்பாருனு, ‘மகரிஷி’ பார்த்தேன். ‘யோவ், மகேஷ் பாபு, ஏன்யா இப்படி?’னு கேக்க தோணிச்சு. அப்பயாவது நான் திருந்தியிருக்கணும். வீரமா போய், ‘பரத் எனும் நான்’ படம் பார்த்தேன். ‘சுகர் பேஷண்ட்ரா நான்’ இதுக்கு மேல தாங்காதுனு விட்டுட்டேன். ஆச்சரியமான விஷயம் என்னனா எல்லாமே கோடிக்கணக்குல வசூல் பண்ண ப்ளாக்பஸ்டர் படங்கள். மகேஷ் பாபுவின்… பாலைய்யாவுக்கு டஃப் கொடுக்குற ஃபைட் சீக்குவன்ஸ், மோகன் லாலுக்கு டஃப் கொடுக்குற நவரசங்கள், ரஜினிக்கு டஃப் கொடுக்குற பஞ்ச்கள் இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
அகாடம்மி அவார்ட்ஸ்
மகேஷ்பாபு தொடர்பான இந்த டைட்டில்லாம் பார்த்தா அவரை கலாய்க்கிறேன்னு தோனும். ஆனால், அவரை கலாய்க்கிறதுலாம் சாதாரண விஷயம் இல்லை. அதுனால, நாம இந்த வீடியோல அவரைக் கலாய்க்கப் போறதில்லை. சீரியஸாதான் பேசப்போறோம். மேல நான் சொன்ன டாபிக்லாம் கேட்டு நீங்க சிரிச்சா அதுக்கு சமூகம் பொறுப்பில்லை. இதுக்கு முன்னாடி ஸ்டாண்டப் காமெடியன் மனோஜ் பிரபாகர், ஸ்பைடர் படம் வந்தப்போ மகேஷ் பாபுவோட ரியாக்ஷன்லாம் வைச்சு கலாய்ச்சு ‘அகாடம்மி அவார்ட்ஸ்’னு ஒரு ஷோல பேசுனாரு. அந்த ஸ்டான்டப் காமெடியன் கல்லுக்கூட மகேஷ் பாபுவை கம்பேர் பண்ணி பேசுறது, ஒரே மாதிரி ஸ்மைலியை கம்பேர் பண்ணி பேசுறதுனு ரொம்பவே கொடூரமா கலாய்ச்சிருப்பாரு. இதெல்லாம் தப்புங்க. அதுக்கு நம்மளோட கண்டனங்களை இப்போ பதிவு பண்ணிப்போம். அதுக்கு மகேஷ் பாபு ரசிகர்கள் அவரை வைச்சு செய்தாங்க. நான் அந்த ரிஸ்க் எடுக்க விரும்பலை. அந்த காமெடியன் மன்னிப்பு கேட்டு வீடியோலாம் வெளியிட்டாரு. அப்புறோம்தான் மகேஷ் பாபு ரசிகர்கள் அவரை விட்டாங்க. சவுத் இந்திய அளவுல மிகப்பெரிய பிரச்னையா சினிமா உலகத்துல இந்த விஷயம் பேசப்பட்டுச்சு.
விஜய் – மகேஷ் பாபு
இந்திய அளவுலயும் மகேஷ் பாபு ஒரு தடவை டிரெண்ட் ஆனாரு. அதுல நம்ம தளபதி விஜய்க்கும் பங்கு இருக்கு. விஜய்யையும் மகேஷ் பாபுவையும் கம்பேர் பண்ணி பேசுவாங்க. அதுக்கு காரணம், மகேஷ் பாபுவோட பல படங்களை விஜய் ரீமேக் பண்ணதுதான். அதுமட்டுமில்ல, ரெண்டு பேரோட ரசிகர்கள் பலம், செலக்ட் பண்ற ஸ்கிரிப்ட், படத்தோட பேட்டர்ன் எல்லாமே கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும். இப்படி இருக்கும்போது , அசுரன் படம் வந்த டைம்ல அவங்க ரசிகர்களே மோதிகிட்டாங்க. #DummyStarMaheshBabuனு விஜய் ரசிகர்களும் #RemakeStarVijayனு மகேஷ் பாபு ரசிகர்களும் ட்விட்டர்ல பயங்கரமா ஹேஷ்டேஜ் டிரெண்ட் பண்ணாங்க. வேற ஒண்ணுமில்ல, நிறைய ரீமேக் படம் நடிச்சது விஜய்னு, மகேஷ் பாபு ரசிகர்கள் சொல்ல, மகேஷ் பாபுவுக்கு நடிக்கவே தெரியாது விஜய் ரசிகர்கள் சொல்ல ட்விட்டரே போர்க்களமா இருந்துச்சு. அப்புறம் ஒரு வழியா பேசி சமாதானத்துக்கு வந்துட்டாங்க.
பாலைய்யாவுக்கு டஃப் கொடுக்குற ஃபைட் சீக்குவன்ஸ்
டோலிவுட் சினிமானு சொன்னாலே நமக்கு டக்னு நியாபகம் வர்றது தலைவன் பாலைய்யாதான். முகமூடி போட்ட ஒருத்தனோட முகமூடியை கழட்டணும்னா, இன்னொரு முகமூடி போட்டவனாலதான் முடியும். அதே மாதிரி, அவருக்கே டஃப் கொடுக்குற ஃபைட் சீன் வேணும்னா, அவர் இண்டஸ்ட்ரீகுள்ள இருந்துதான் ஆள் வரணும். அப்படி வந்த ஒருத்தர்தான் மகேஷ் பாபு. சர்காரு வாரி பாட்டா படத்தோட ஓப்பனிங்கே ஃபைட் சீன்தான். ஒரு அடி கொடுப்பாரு அடியாள் அப்படியே 360 டிகிரி சுத்திட்டு காத்துல பறப்பாரு, அப்போ மகேஷ் பாபு ஏர்ல பறந்து ஒரு மிதி விடுவாரு பைக்ல போய் இடிச்சு, பைக் ஏர்ல ரொட்டேட் ஆகும். இன்னொரு பக்கம் ரௌடி ரொட்டேட் ஆவான். சரி இதாவது பரவால்ல, கடற்கரைல ஒரு ஃபைட் சீன் வரும். வலையெல்லாம் பிச்சி எறிந்து போட்டை பறக்க விடுவாரு. அப்படியே மகேஷ் பாபு ஃபேன்ஸ்க்கு கூஸ்பம்ப்ஸ் வரும். பாலய்யா சிசியனா மகேஷ் பாபு மாறுன மொமண்ட் அதுதான்.
சர்காரு வாரி பட்டாலதான் இப்படி இருக்கும்னு பார்த்தா, ‘சரிலேரு நீக்கெவரு’ படத்துல, அதாவது ‘இவனுக்கு சரியான ஆளு இல்லை’ன்ற படத்துல வில்லன் வீட்டுக்குப் போய் ஒரு ஃபைட் போடுவாரு. சுத்து 100 பேர் நிப்பாங்க. தலைவன் அசால்ட்டா ஒவ்வொருத்தரையா அடிச்சு பறக்க விடுவாரு. அப்புறம் பாதிபேரை அடிச்சு முடிச்சதும், மத்த ரௌடிங்க எல்லாம் பயந்துருவாங்க. எப்படி? செம சீன்ல. அதே படத்துல டீக்கடை முன்னாடி நடக்குற ஃபைட் சீன், காட்டுல நடக்குற ஃபைட் சீன், மகரிஷில காலேஜ்ல நடக்குற ஃபைட் சீன், ஃப்ரெண்ட காப்பாத்தும்போது நடக்குற ஃபைட் சீன், இப்படி எல்லாமே ஒண்ணுக்கொண்ணு சளைச்சது இல்லை. ஆனால், எனக்கு ரொம்ப புடிச்சது ‘பரத் எனும் நான்’ல தியேட்டர்ல வர்ற ஃபைட் சீன்தான். அப்படியே ஆஃபீஸர்கிட்ட பெர்மிஷன்லாம் வாங்கி வில்லன்களை போட்டு பொளப்பாரு. தலைவானு கத்தணும்போல இருந்துச்சு. பக்கத்துல இருந்தவங்க ரவி தேஜா ஃபேன் அதனால நான் கத்தல. இப்படி தலைவன் ஃபைட் சீக்குவன்ஸ் பத்தி பேசிட்டே போகலாம்.
மோகன் லாலுக்கு டஃப் கொடுக்குற நவரசங்கள்
கேரளால மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மோகன்லால். கண்ணு நடிக்கும் பார்க்குறியா? கண்ணம் நடிக்கும் பார்க்குறியா?னு அவரோட ரசிகர்கள் பயங்கரமா அவரைப் பத்தி பேசுவாங்க. நீங்க என்னடா சொல்றது, நாங்க இப்போ சொல்றோம் பாருனு அவருக்கே டஃப் கொடுக்குற மாதிரி மகேஷ் பாபு ரசிகர்கள் மகேஷ் பாபு நடிச்ச காதல், காமெடி, களிப்பு, கோபம் உள்ளிட்ட நவரச காட்சிகளையும் தனித்தனியா செதுக்கி வீடியோ அப்பப்போ போடுவாங்க. மகேஷ் பாபு பெஸ்ட் லவ் சீன், மகேஷ் பாபு ஹேப்பி சீன், மகேஷ் பாபு ஆங்க்ரி சீன் இப்படிலாம் நீங்க யூடியூப்ல தேடுனீங்கனா தனித்தனியா அவரோட நவரசங்களையும் ரசிக்கலாம். ஒரு சின்ன பிரச்னை, எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாதான் இருக்கும். கலாய்க்கலங்க அவ்வளவு இன்டன்ஸா நடிப்பாப்புல. இதுக்கு முன்னாடி நான் சொன்ன 4 படங்கள்லயும் இந்த நவரசங்களை நீங்க பார்க்கலாம். குறிப்பா, ரொமான்ஸ் பாட்டுல வர்ற ரொமான்ஸ்லாம் பின்னிருப்பாரு. பிரின்ஸ் சிவகார்த்திகேயன், கத்துக்கோங்க.
ரஜினிக்கு டஃப் கொடுக்குற பஞ்ச்கள்
மகேஷ் பாபுகிட்ட எனக்கு புடிச்ச விஷயம் அவர் பஞ்ச் பேசுறதுதான். இந்திய சினிமாலயே பஞ்ச் பேசுறதுக்கு எக்ஸாம்பிள் ரஜினிகாந்த்தான். ஆனால், அவருக்கே மகேஷ் பாபு இப்போலாம் டஃப் கொடுக்குறாரு. எக்ஸாம்பிள்க்கு சில பஞ்ச் சொல்றேன். ‘சர்காடு வாரி பாட்டா’ படத்துல வில்லன்கள் எல்லாம் கதவை உடைச்சுட்டு பேங்குக்குள்ள மகேஷ் பாபுவை அடிக்க வருவாங்க. அப்போ இவரு, “ஒரு 100 வயகரா போட்டு ஃபஸ்ட் நைட்டுக்கு வெயிட் பண்ற மாப்பிள்ளை ரூம்க்கு வந்த மாதிரி வந்துருக்கீங்க”னு சொல்லிட்டு வில்லன்களை போட்டு பொளப்பாரு. இண்ட்ரோ ஃபைட்ல, “ஒரு டாலர், 72 இந்திய ரூபாய்க்கு சமம். அதாவது நீங்க ஒரு அடி கொடுத்தால் நான் 72 அடி திரும்ப கொடுப்பேன்”னு சொல்லுவாரு. எப்படி மாஸா இருக்கா? மகரிஷி படத்துல மோட்டிவேட்டா, “எனக்குனு ஒரு பலம் இருந்தா உனக்குனு ஒரு பலம் இருக்கும்டா’னு ஃப்ரெண்ட மோட்டிவேட் பண்ணுவாரு. அது முடிஞ்சதும் யூடியூப்ல ஒரு கிலோ ஆரஞ்சு பழம் கொடுங்கனு விளம்பரம் வருது. அடேய் யூடியூப், என்னடா சந்தானம் காமெடிலாம் பண்ற?
பரத் எனும் நான், இவனுக்கு சரியான ஆளு இல்லை படத்துலலாம் இதேமாதிரிதான் டயலாக் வரும். ஆனால், இந்தப் படங்களையெல்லாம்விட மகேஷ் பாபு நடிச்ச மத்தப் படங்கள்ல மகேஷ் பாபு பேசுன டயலாக்ஸ் வேற லெவல்ல இருக்கும். இதுதான்டா போலீஸ்னு ஒரு படம். அதுல மகேஷ் பாபு, “வேலையை காட்றேன்னு வாலை நீட்டுனனு வைச்சிக்கோ. பிக்னிக் கூட்டிட்டுப் போய் ஃப்ரீயா உட்ருவேன்”னு சொல்லுவாரு. எப்படி யோசிச்சு எழுதியிருக்காங்க பாருங்க. இப்படிலாம் தமிழ்ல்ல ஒரு டயலாக் காட்டுங்க பார்ப்போம். முடியாது. அவரைத் தவிர வேற யாரு பேசுனாலும் நல்லாவும் இருக்காது. அதுனால தான் மகேஷ் பாபுக்கு அவ்வளவு ஃபேன்ஸ். எதாவது தப்பா பேசுனீங்க, அவ்வளவுதான்.
சரி… மகேஷ் பாபு நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: 5 மாஸ் மொமென்ட்ஸ் ஆஃப் விக்ரம்!