தமிழ் சினிமா மியூசிக் டைக்டர்ஸ்ல இன்னும் இவங்களை அதிகமா கொண்டாடணும்னு ஒரு லிஸ்ட் எடுத்தா அதுல ஜிப்ரான் பெயரும் கண்டிப்பா வரும். வாகை சூடவால தொடங்கி கூகுள் குட்டப்பா வரைக்கும் ஜிப்ரான் மியூசிக் பண்ண பெரும்பாலான படங்கள்லயும் மியூசிக் செமயா இருக்கும். யூனிக்கா இருக்கும். கமல் தேடிப்போய் ஜிப்ரானுக்கு வாய்ப்பு கொடுத்துருக்காரு. அந்தக் கதை தெரியுமா? மனுஷன் 3 நாள் புழல் ஜெயில்ல இருந்துருக்காரு. ஏன்? ஜிப்ரான் ஒரு கட்டத்துல இந்த சினிமாலாம் செட் ஆகாதுனு நினைச்சு, வேற வேலையை பார்க்கலாம்னு நினைச்சிருக்காரு. ஏன்? ஜிப்ரானை ஏன் இன்னும் கொண்டாடணும்? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

கோயம்புத்தூர்ல பிறந்து வளர்ந்தவர்தான், ஜிப்ரான். சின்ன வயசுலயே மியூசிக் மேல செம ஆர்வம். மியூசிக் சம்பந்தமா நிறைய விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சிட்டாரு. பத்தாவது படிக்கும்போது அவங்க அப்பா பிஸினஸ் ஃபெயிலியர் ஆயிடுச்சு. இதனால, ஊர் விட்டு ஊர் வர வேண்டிய ஒரு நிலைமை. நைட்டோட நைட்டா சென்னை போறோம்னு ஃபேமில முடிவு பண்ணி கிளம்பி வந்துட்டாங்க. அதோட படிக்கிறதை ஜிப்ரான் நிறுத்திட்டாரு. மியூசிக் படிக்கிறதாலையும் தெரிஞ்சதாலயும் நிறைய விளம்பரங்களுக்கு மியூசிக் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. அதுல கொஞ்சம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பிச்சு, வீடுலாம் வாங்கிட்டாரு. ஆனால், ஒரு கட்டத்துல படிப்போட தேவை அவருக்கு தெரிஞ்சுருக்கு. ப்ளஸ் டூவை பிரைவேட்டா படிச்சுருக்காரு. அப்புறம், மியூசிக் நல்லா படிக்கணும்னு சிங்கப்பூர் கிளம்பி போய்ட்டாரு. கிளம்பி போகும்போது பேக்ரௌண்ட் ஸ்கோர் படிக்கலாம் யாராவது ஃபாரீன் போவாங்களாம்னுலாம் கமெண்ட் பண்ணியிருக்காங்க. அது எதையும் காதுல வாங்காம படிச்சிருக்காரு.

இந்தியாவுக்கு திரும்ப வந்ததும் என்ன செய்யனு தெரியலை. முன்னாடி விளம்பரங்களுக்கு மியூசிக் போட்டவங்க கான்டாக்ட் எல்லாமே போய்ருக்கு. இருந்தாலும் சின்ன சின்ன கான்டேக்ட்ல இருந்து சிலபட விளம்பர படங்களுக்கு மியூசிக் போட்டுட்டு இருந்துருக்காரு. 13 வருஷம் 800 விளம்பரங்களுக்கு மியூசிக் போட்ருக்காரு. அப்போதான் வாகை சூடவா படத்துல மியூசிக் பண்ண ஜிப்ரானுக்கு வாய்ப்பு வந்துருக்கு. அந்த படத்தோட ஹீரோ விமல், டைரக்டர் சற்குணம், தயாரிப்பாளர் முருகானந்தம்னு எல்லாருமே ஜிப்ரானுக்கு 13 வருஷமா பழக்கம். இன்னும் சொல்லணும்னா நல்ல ஃப்ரெண்ட்ஸ். நிறைய படங்கள் பத்தி விவாதிப்பாங்க. சற்குணமோட விளம்பரப்படங்களுக்கு ஜிப்ரான் மியூசிக் பண்ணியிருக்காரு. அப்பவே, சேர்ந்து படம் பண்ணலாம்னு சொல்லியிருக்காரு. களவானி வெற்றி பெற்றதும் ‘வாகை சூடவா’க்கு நீங்கதான் மியூசிக்னு சொல்லி சேர்ந்து வொர்க் பண்ணியிருக்காங்க.

வாகை சூடவா-ல ஒவ்வொரு பாட்டும் செமயா இருக்கும். பேக்ரௌண்ட் ஸ்கோர் அவர் படிச்சது எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்குனு அவரோட முதல் படத்தைப் பார்த்தாலே புரியும். மியூசிக்கலா அவ்வளவு நல்லா இருக்கும். குறிப்பா பாடல்கள் செங்க சூளைக்காரா, போரானே போரானே, ஆனா ஆவன்னா இந்தப் பாட்டு எல்லாத்தையும் கேக்கும்போது சிலிர்க்கும். போரானே பாட்டு பத்து வருஷத்துக்கு முன்னாடியே ஒரு பேண்ட்ல இருக்கும்போது ஜிப்ரான் கம்போஸ் பண்ணியிருக்காரு. அந்தப் பாட்டைக் கேட்டு சற்குணம் இந்த பாட்டு எனக்கு வேணும். வைச்சிக்கோங்கனு சொல்லியிருக்காரு. வாகை சூடவா கம்போஸ் பண்ணும்போது ஃபஸ்ட் பண்ணது அந்தப் பாட்டைதான். ஆன்னா ஆவண்னா பாட்டுலாம் வேறலெவல் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும். ஜிப்ரானுக்கும் இந்தப் பாட்டு ஆல்பத்துல ரொம்பவே புடிச்ச பாட்டு. எனக்கு ரொம்ப ஃபேவரைட் பாட்டுனா, ரெண்டு கோடு போட்ட நோட்டு வாங்கிட்டு வாங்கனு சொல்லும்போது வர்ற பாட்டு. கண்டிப்பா அழ வைச்சிரும். இந்தப் படத்துக்கு மனுஷன் நிறைய அவார்ட்ஸும் வாங்கினாரு.

வத்திக்குச்சி, குட்டிப்புலி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், அமரகாவியம் இப்படி அடுத்தடுத்து பல படங்கள் ஜிப்ரான் மியூசிக்ல வெளியாச்சு. இதுல பல படங்கள் சரியா ஓடலை. ஆனால், பாட்டுலாம் சும்மா ஜம்முனு இருக்கும். அமரகாவியம் ஆல்பம்லாம் எனக்கு அவ்வளவு ஃபேவரைட். இன்னைக்கும் அந்தப் பாட்டுலாம் கேட்டா, ஸ்கூல் டேஸ் காதல் நியாபகம் வரும். எதோ ஒரு வலி வந்த மாதிரி இருக்கும். இதுக்கு முக்கியமான காரணம் நிறைய விஷயங்களை மனுஷன் பெர்சனலா ஃபீல் பண்ணி மியூசிக் போடுறதுதான். அவருக்கு மிகப்பெரிய பேர் வாங்கிக்கொடுத்தது கமல்கூட சேர்ந்து பண்ண படங்கள்தான். ஆனால், அதுக்கு முன்னாடி அதாவது குட்டிப்புலி ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் நமக்கு இந்த சினிமாலாம் செட் ஆகாதுனு அதை விட்டு போடலாம்னு நினைச்சிருக்காரு. வாகை சூடவா படம் பார்த்துட்டு அந்தப் பாட்டைப் பாராட்டி கமல்கிட்ட கௌதமி பேசியிருக்காங்க. ஆண்ட்ரியாவும் ஜிப்ரானை குறிப்பிட்டு பேசியிருக்காங்க. அப்புறம், கமல் நேரடியாவே ஜிப்ரானுக்கு ஃபோன் பண்ணி பேசியிருக்காரு.

விஸ்வரூபம் ஷூட்டிங் அப்போ பேசியிருக்காரு. அடுத்து உத்தம வில்லன் படத்துக்கு ஜிப்ரானை மியூசிக் பண்ண கூப்பிட்ருக்காரு. அதுல வில்லுப்பாட்டு, கிராம கலைகள் தொடர்பான பாட்டுலாம் வரும். சின்ன வயசுல அவர் கூத்துலாம் பார்த்துருக்காரு. அதனால, திரும்ப அதுதொடர்பா ரிசர்ச்லாம் பண்ணி உத்தம வில்லன் படத்துக்கு மியூசிக் போட்ருக்காரு. அதுக்கும் இன்டர்நேஷனல் லெவல்ல அங்கீகாரம் கிடைச்சுது. ஒவ்வொரு பாட்டும், மியூசிக்கும் தரமான சம்பவம்தான். அப்புறம் பாபநாசம், தூங்காவனம், அதே கண்கள் அப்டினு தொடர்ந்து த்ரில்லர் டைப் படங்களா பண்ணாரு. அதுவும் பேக்ரௌண்ட் மியூசிக்குக்கு முக்கியத்துவம் உள்ள படங்களா பார்த்து பண்னாரு. எல்லாமே வேறலெவல்ல இருக்கு. அதே கண்கள் தீம் எல்லாம் இன்னைக்கும் நிறைய பேர் ரிங்டோனா கேக்க முடியும். தீரன் அதிகாரன் ஒன்று – ஜிப்ரான் பண்ண மாஸ் சம்பவம். ஒவ்வொரு பாட்டும் தீமும் ப்பா அப்டி இருக்கும்.

சென்னை டு சிங்கப்பூர், விஸ்வரூபம் பாடல்களும் பலரோட பிளே லிஸ்டை ரூல் பண்ணிச்சு. அப்புறம் அவர் பண்ண தரமான சம்பவம் ‘ராட்சசன்’. பியானோ பி.ஜி.எம் ஒண்ணைப் போட்டு சீட் நுனில உட்கார வைச்சு மிரட்டி எடுத்துட்டாரு. ஏகப்பட்ட அவார்டும் வாங்கியிருக்காரு. இந்தப் படத்துக்கு அவருக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணது, சைக்காலஜி ஸ்டுடண்ட்ஸ்க்கு அவர் மியூசிக் வாசிச்ச மொமண்ட்தான். அதேமாதிரி, வயசானவங்க இல்லங்கள்லயும் போய் மியூசிக் வாசிப்பாராம். மியூசிக் சரியான ஹீலிங்னு ஜிப்ரான் எப்பவும் நம்புவாரு. இதுக்கப்புறம் அவர் பண்ண பல படங்கள் சரியா வொர்க் அவுட் ஆகலை. அதுக்கப்புறம் மாறா படத்துல வந்த எல்லா பாட்டுமே செமயா இருக்கும். குறிப்பா, யார் அழைப்பது, தீராநதி, ஓ அழகே பாட்டுலா, செம ஃபீல் கொடுக்கும். மனுஷன் எல்லா படத்துக்கும் செமயான ரிசர்ச் வொர்க் ஒண்ணைப் போடுவாரு. எக்ஸாம்பிள்க்கு சொல்லணும்னா. இடைல, ஒரு தடவை ஜிப்ரானை அரஸ்ட் பண்ணிட்டாங்கனு நியூஸ் வந்துச்சு. உண்மையிலேயே அவர் ஜெயில்லதான் இருந்துருக்காரு. ஆனால், அரஸ்ட்லாம் பண்ணல.

திருமணம் என்னும் நிக்காஹ் படத்தோட டைரக்டர் அனிஷ் இவருக்கு செம ஃப்ரெண்ட். அவர்கூட சேர்ந்து நிறைய சோஷியல் வொர்க்லாம் பண்ணிட்டு இருக்காரு. புழல்ல இருக்குற சிறைவாசிகளை வைச்சு சில ஆக்டிவிட்டீஸ் பண்ண பிளான் பண்ணியிருக்காங்க. தியேட்டர் பிளே ஒண்ணு பண்ணதான் பிளான் பண்ணியிருக்காங்க. ஜெயில்ல நிறைய மியூசிசியன்ஸ் இருக்காங்கனு கேள்வி பட்டு அதை தெரிஞ்சுக்க போய்ருக்காங்க. அதுக்காக போலீஸ்கிட்ட ப்ராப்பரா அப்ரூவ்லாம் வாங்கி அங்க போய் இருந்துட்டு வந்துருக்காரு. அந்த எக்ஸ்பீரியன்ஸ் வாழ்க்கைல நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்துச்சுனு ஜிப்ரான் சொல்லியிருக்காரு. அந்த அளவுக்கு ரிசர்ச்னு வந்துட்டா வொர்க் பண்ணவும் ஸ்டார்ட் பண்ணிடுவாரு. ஆன்மீக பாடல்கள் மேலயும் ஜிப்ரானுக்கு ரொம்பவே இன்ட்ரஸ்ட். ஆன்மீக பாடல்கள் நிறைய இயக்கி இருக்காரு. இன்னைக்கு மேஜரா இருக்குற கட்சிகளுக்கு கட்சிப் பாடல்களும் பண்ணி கொடுத்துருக்காரு.

ஜிப்ரான் இன்னைக்கு நிறைய படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காரு. ஆனாலும் அவரை சரியா யாரும் கொண்டாடலையோன்ற ஃபீலிங் இருந்துட்டேதான் இருக்கு. அவரோட பாடல்களை எடுத்துக்கிட்டாலும் சரி, பேக்ரௌண்ட் மியூசிக் எடுத்துக்கிட்டாலும் சரி எல்லாத்துலயும் யூனிக்னெஸ் ஒண்ணு இருக்கும். அதை உணரதான் முடியும். எப்பவும் வார்த்தைகள்ல எக்ஸ்பிளெயின் பண்ண முடியாது. அதுதான் ஜிப்ரான்.
ஜிப்ரான் இசையமைத்த பாடல்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: நிலால போய் பியானோ வாசிக்கணும்… லிடியன் நாதஸ்வரம் சக்ஸஸ் ஜர்னி!





It’s amazing in favor of me to have a web site, which is useful designed for my know-how.
thanks admin https://U7Bm8.Mssg.me/
Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.
Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.