எவர்கிரீன் நாயகி சிம்ரனை ஏன் பிடிக்கும்… 4 `நச்’ காரணங்கள்!

ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை ஒரு நொடிக்கூட மூடவிடாத, இன்னைக்கு வரைக்கும் பலரோட ஃபேவரைட் லிஸ்ட்ல இருக்குற எவர்கிரீன் நாயகி சிம்ரனை ஏன் பிடிக்கும்ன்றதுக்கான 4 நச் காரணங்களைதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.1 min


சிம்ரன்

நார்த் இந்தியால ரொம்பவே ஃபேமஸான பேரு ‘சிம்ரன்’. அப்டினா தியானம்னு அர்த்தம். அந்தப் பேரை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில பிரபலப்படுத்தி பல இளைஞர்களோட தியானத்தை கெடுத்தவங்கதான் சிம்ரன். ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை ஒரு நொடிக்கூட மூடவிடாத, இன்னைக்கு வரைக்கும் பலரோட ஃபேவரைட் லிஸ்ட்ல இருக்குற எவர்கிரீன் நாயகி சிம்ரனை ஏன் பிடிக்கும்ன்றதுக்கான 4 நச் காரணங்களைதான் நாம பார்க்கப்போறோம்.

சிம்ரன்
சிம்ரன்

சிம்ரன்… கனவுக்கன்னி… காதலி… கான்ஃபிடன்ட் வுமன்!

தமிழ் சினிமா வரலாற்றுல சாவித்திரி, சரோஜா தேவி, ரேவதி, ராதிகா, குஷ்பு, மீனா இந்தப் பெயர்களை எப்போதும் மறக்க முடியாது. அன்னைக்கு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், வால் பேப்பர்லாம் கிடையாது. போஸ்டர்ஸ்தான் ஃபேமஸ். அப்படி இவங்களோட ஃபோட்டோவயெல்லாம் பிரிண்ட் போட்டு பொத்திப் பொத்தி பாதுகாத்து பாக்கெட்ல வைச்சுட்டு சுத்துன கதைகள்ல இருந்து கோயில் கட்டுன கதைகள் வரைக்கும் பல ஃபேன் மொமண்ட் கதைகளை நாம கேட்ருப்போம். இந்த வரிசைல நடிக்க வந்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ச்சியாலும் நடிப்பாலும் கட்டிப்போட்ட ஒரு நடிகைதான் சிம்ரன். 90கள்லயும் சரி 2000த்துலயும் சரி இளைஞர்கள்கிட்ட உங்களோட கனவுக்கன்னி’ யாருனு கேட்டாசிம்ரன்’னு டக்னு சொல்லுவாங்க. அதேமாதிரி உங்களுக்கு காதலி எப்படி வேணும்னு கேட்டாலும் சிம்ரன்’ நடித்த கேரக்டர் பேரை சொல்லி அந்த மாதிரி பொண்ணு வேணும்னு சொல்லுவாங்க.‘நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா’ அப்டினு ஆன் ஸ்கிரீன்ல ஹீரோவப் பார்த்து சிம்ரன் பாடும்போது ஆஃப் ஸ்கிரீன்ல சிம்ரனைப் பார்த்து அந்தப் பாட்டை பலர் பாடிக்கிட்டு திரிஞ்சாங்க.

சிம்ரன்
சிம்ரன்

ஒருத்தரை ரொம்ப புடிச்சுதுனா அவங்களோட பெர்சனல் பக்கங்களை தெரிஞ்சுக்கணும்னு ரொம்பவே ரசிகர்கள் ஆசைப்படுவாங்க. அப்படி சிம்ரன்கிட்ட அவரது ரசிகர்கள் கேள்வி கேட்ட இண்டர்வியூயெல்லாம் அன்னைக்கு செம ஃபேமஸ். வேற எந்த நடிகைக்கும் அப்படி ஒரு மொமண்ட் நடந்துச்சானு தெரியலை. ரசிகர்களோட இருக்குற அந்தக் கனெக்‌ஷன் இருக்குல அதுதான் சிம்ரனோட அவ்வளவு ஃபேன்ஸ்க்கு காரணம். சாதாரண இளைஞர்கள் மட்டுமல்ல பொண்ணுங்க, சினிமா துறைல இருக்குற பல செலிபிரிட்டிகள்கூட சிம்ரனோட ஃபேன்தான். எக்ஸாம்பிள் சொல்லணும்னா விஜய், ஜி.வி.எம், ஜோதிகா, மஞ்சு வாரியர் அப்டினு லிஸ்ட் பெருசா போகும். கனவுக்கன்னியாகவும் காதலியாகவும் இருந்த சிம்ரன் இன்னைக்கு பலபேரோட இன்ஸ்பிரேஷனா இருக்காங்க. குறிப்பா இன்னைக்கு வர்ற யங் ஹீரோயின்களுக்கு. அவங்க மேடைல பேசுற விஷயங்கள், இண்டர்வியூல பேசுற விஷயங்கள் எல்லாமே `தான் எவ்வளவு போல்டான லேடியா இருக்கேன்றதை வெளிப்படுத்திட்டே இருக்கும். சமூகத்துல வேறலெவல் சிம்ரன் நீங்க!

சிம்ரன் ஃபிட்னஸ் சீக்ரெட்

சிம்ரன் நடிக்க வந்த காலத்துல அவங்களுக்கு செம போட்டியா பார்க்கப்பட்டது, ஜோதிகா. ஜோதிகா ஷூட்டிங் ஸ்பாட்ல ஆறு மணி ஆனதும் பசிக்குது போண்டா கொடுங்கனு கேப்பாங்களாம். அப்போ, ஒரு தடவை சிம்ரனோட பாட்டு டி.வி-ல ஓடுறத பார்த்து ஜோதிகாவோட அம்மா ஜோதிகாக்கிட்ட ‘அங்கப் பாரு எப்படி உடம்ப மெயிண்டெயின் பண்றாங்க பாரு. அப்படி இருக்கணும்’னு சொன்னாங்களாம். சிம்ரன் ஸ்லிம்மா பார்க்குறதுக்கு குட் லுக்கிங்ல இருக்குறதுக்கு ரொம்பவே மெனக்கெடுவாங்க. இதை அவங்களோட அம்மாக்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டாங்களாம். வொர்க் அவுட் பண்றது, டயட் மெயிண்டெயின் பண்றதுனு தன்னோட ஸ்லிம் விஷயத்துல ஸ்ட்ரிக்டான ஆஃபீஸரா இருப்பாங்க. வெளிய எங்கயாவது போகும்போதுகூட எங்கப்போறோம்… அந்த இடத்துக்கு என்ன ட்ரெஸ் செட் ஆகும்… பார்க்குறதுக்கு ஃபீல் குட்டா இருக்கோமா… அப்டின்றதயெல்லாம்கூட கவனமா பார்த்துப்பாங்க. அதேமாதிரி எப்பவும் ஹேப்பியா ஜாலியா இருக்கணும்னு நினைப்பாங்க. எந்தப் பிர்ஷரையும் மைண்ட்ல ஏத்திக்கமாட்டாங்களாம். இதெல்லாம்தான் ஸ்லிம் சிம்ரன் ஸ்லிம்மாவே இருக்குறதுக்கான சீக்ரெட்.

விஜய் - சிம்ரன்
விஜய் – சிம்ரன்

நடிப்புல கெத்து நடனத்துக்கு சொத்து!

தன்னோட கரியர் தொடங்கும்போது கவர்ச்சிக் கதாபாத்திரங்கள்ல நடிச்ச சிம்ரன், போகப்போக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்குற கதாபாத்திரங்கள நடிக்க ஆரம்பிச்சாங்க. அப்போலாம் ஹீரோ செண்ட்ரிக் மூவீஸ்தான் அதிகமாக வந்துட்டு இருந்தது. அப்போ ஹீரோயின்கள் எல்லாம் கவர்ச்சிக்காகவும் உப்புக்குச் சப்பானி கேரக்டராகவும்தான் நடிக்கவைக்கப்பட்டாங்க. இதனால, மனசுல நிறைய ஹீரோயின்களோட பெயர் பதியவே இல்லை. ஆனால், சிம்ரன் செலக்ட் பண்ண கேரக்டர்கள் எல்லாம் ஹீரோக்கு சமமா ஹீரோயினுக்கும் ஸ்கோப் உள்ள படங்கள்தான். தூர்தர்ஷனின் மெட்ரோ சேனலில் புகழ்பெற்ற ‘சூப்பர் ஹிட் முகாபுலா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமா பாலிவுட்ல பலரது கவனத்தையும் ஈர்த்தாங்க. அதுக்கப்புறம் இவங்களோட நடிப்புல வெளியான முதல் படம் என்னனே தெரியாம அட்டர் ஃப்ளாப் ஆச்சு. ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் ஸ்ட்ரக்கிள் அனுபவிச்ச சிம்ரனோட `தேரே மேரே சப்னே’ ரசிகர்கள் மத்தியில வேறலெவல் ரெஸ்பான்சைப் பெற்றிச்சு.

தமிழ்ல அறிமுகமான முதல் வருஷத்துலயே 4 படம் நடிச்சாங்க. தொடர்ந்து வருஷாவருஷம் இவங்க நடிக்கிற படங்களோட எண்ணிக்கை கூடிட்டே போச்சு. குறிப்பா சொல்லணும்னா பார்வை திறன் இல்லாத மாற்றுத்திறனாளியாகவும் ரொம்பவே எமோஷனலாகவும் நடிச்ச ‘துள்ளாத மனமும் துள்ளும்’, லவ் பண்ணி ஜாலியாகவும் அதன்பிறகு கணவனுக்கும் அவரது அண்ணனுக்கும் இசையில் சிக்கிக்கிடக்கும் பெண்ணாகவும் நடித்த ‘வாலி’, வில்லத்தனம் பண்ண ‘ஒன்ஸ் மோர்’, இப்படி ஒரு மனைவி வேணும்னு நினைக்க வைச்ச ‘பிரியமானவளே’, காமெடியில கலக்கி எடுத்த ‘பம்மல் கே சம்பந்தம்’,’பஞ்சதந்திரம்’, ரொம்பவே எமோஷனலான பாசம்மிக்க அம்மாவா ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ஆக்‌ஷன் நிறைந்த போல்டான லேடியா ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ – இப்படி வெரைட்டியான ஸ்கிரிப்டா சூஸ் பண்ணி கெத்து காட்டுனாங்க. சிம்ரன் வில்லியா நடிச்சா படம் ஹிட்டாகும்னு ஒரு செண்டிமெண்ட்லாம்கூட இருந்துச்சு. இன்னொரு இண்ட்ரஸ்டிங்கான தகவல் என்னனா… ப்ரியான்ற பேர் இன்னைக்கு ஃபேக் ஐடிக்குனு மாறிடுச்சு. ஆனால். அன்னைக்கு சிம்ரன் ஃபேன்ஸ் மத்தியில பிரபலமான பெயர் ப்ரியாதான். கிட்டத்தட்ட 7 படங்கள்ல பிரியான்ற பெயரோட நடிச்சிருக்காங்க.

சிம்ரனோட சினிமா வாழ்க்கையில அவங்களோட பெஸ்ட் ஜோ யாருனு கேட்டாலும் சரி, பெஸ்ட் டேன்ஸ் பேர் யார்னு கேட்டாலும் சரி ஒரே பெயர்தான் வரும். அது தளபதி விஜய்தான். விஜய்யோட ஃபேன்ஸ்க்கும் ரொம்ப புடிச்ச நடிகை, சிம்ரன். டான்ஸ்க்கு பெயர்போன விஜய்க்கு டஃப் கொடுத்து டான்ஸ் ஆடுற ஒரு நடிகைனு அவரே வாயால சொன்ன பேரு சிம்ரன்தான். சின்ன வயசுல இருந்தே சிம்ரனுக்கு டான்ஸ் ஆடுறது ரொம்ப புடிக்கும். ஆனால், சிம்ரன் அதிகமா டான்ஸ் கத்துக்கிட்டதுலாம் இல்லை. அதுனாலதான் அவங்களோட டான்ஸக் குறிப்பிட்டு சொல்லும்போது ரத்தத்துல ஊறியிருக்கு அவங்களுக்கு டான்ஸ் அப்படினு சொல்லுவாங்க. யாராவது நல்ல இடுப்பை வளைச்சு டான்ஸ் ஆடுறத பார்த்தா `ஆமா இவ பெரிய சிம்ரன்’ அப்டினு இன்னைக்கும் கலாய்ப்பாங்க. அப்படிப்பட்ட சிம்ரன் தன்னோட கரியர்ல ரொம்பவே கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுனது பிதாமகன்ல வர்ற லாஸ்ட் போர்ஷனாம். நினைச்சுப் பாருங்க செமயா அந்த டான்ஸ்லாம் ஆடியிருப்பாங்க. சந்திரமுகி படத்துல இவங்க நடிக்க வேண்டியது. அப்படி ஒருவேளை நடிச்சிருந்தா அந்த பரதநாட்டியம் டான்ஸ்லாம் நினைச்சுப் பாருங்க. தியேட்டர் கிழிஞ்சிருக்கும். கிளாசிக்கல் டான்ஸ்ல இருந்து குத்துப்பாட்டு வரைக்கும் கேஸூவல்லா ஆடுவாங்க. ஆல்தோட்ட பூபதி பாட்டுல இவங்க ஆடுன ஸ்டெப்ஸ்லாம் அப்படியே நியாபகத்துல இருக்கும். பட்டி தொட்டிலாம் இந்தப் பாட்டு போனதுக்கு இவங்க டான்ஸூம் ஒரு காரணம்.

பேட்ட
ரஜினிகாந்த் – சிம்ரன்

இன்னிங்ஸ் இன்னும் முடியலை!

ரொம்பவே பிரபல ஹீரோயினா மாறுனதுக்கு அப்புறம் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஒரு நல்ல மனைவியா, அம்மாவா இருக்கணும்ன்றதும் சிம்ரனோட ஒரு கனவுதான். அதையும் சிறப்பாவே பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா அதை எஞ்சாயும் பண்றாங்க. தன்னோட இரண்டாவது இன்னிங்ஸை சேவல் படம் மூலமா தொடங்குனாங்க. அப்புறம் வந்த படம்தான் ‘வாரணம் ஆயிரம்’. ஒரே நேரத்துல வயதால சூர்யாவுக்கு ஜோடியாவும் இளமையான சூர்யாவுக்கு ஜோடியாவும் கலக்கியிருப்பாங்க. அப்புறம் வந்த படங்கள்லாம் பெருசா சிம்ரனுக்கு பெயர் வாங்கிக்கொடுக்கல. ஆனால், பேட்டப்படத்துல அவங்க நடிச்சது அந்த 90’ஸ் சிம்ரனை திரும்பவும் பார்த்தது மாதிரி ஃபீல் ஆச்சு. அதுவும் பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடுற சீன்லாம் ஃபேன் பாய் மொமண்ட் சீன். சமீபத்துல வந்த மகான்லகூட கொள்கைமிக்க மனைவியா, அம்மாவா பெஸ்ட் ஆக்டிங் கொடுத்துருப்பாங்க. தெருவுல உட்கார்ந்து இவங்க அழுற சீன்லாம் மீம் டெம்ப்ளேட்டா இன்னும் சுத்திட்டு இருக்கு. நிறைய படங்கள் சிம்ரனோட லைன் அப்ல வர இருக்கு. அதுலயும் கலக்குவாங்கனு எதிர்பார்ப்போம். இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் நம்மக்கிட்ட இருக்காங்க. அவங்களை நம்ம கோலிவுட் டைரக்டர்கள் எப்படி நடிக்க வைக்கிறாங்கனு பொருத்திருந்து பார்ப்போம்.

உங்களுக்கு சிம்ரனை ஏன் புடிக்கும்ன்றதுக்கான காரணத்தை கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: `இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனை ஏன் எல்லாருக்கும் புடிக்கும்?’ – அட்டகாசமான 5 காரணங்கள்!


Like it? Share with your friends!

478

What's Your Reaction?

lol lol
12
lol
love love
8
love
omg omg
40
omg
hate hate
8
hate
Ram Sankar

Ram Sankar

0 Comments

Leave a Reply

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
ரஹ்மானின் நம்பிக்கைக்கு தேசிய விருதை பரிசளித்த நரேஷ் ஐயர்! ஃபேவரைட் பவி டீச்சர்… பிரிகிடாவின் இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி! ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிச்ச படங்கள் என்னென்ன தெரியுமா? கமலின் பஞ்சதந்திரம் படத்தை ஏன் மிஸ் பண்ணக் கூடாது?! விமல் சொல்லிக்கொடுத்த 9 களவாணித்தனங்கள்!