சினிமா செலிபிரிட்டீஸ் கலந்துக்குற ரௌண்ட் டேபிள்ஸ்லாம் செம ஜாலியா இருக்கு. அதே நேரத்துல நிறைய புது விஷயங்களும் சொல்லியிருப்பாங்க. அப்படி இந்த வருஷம் முடியுற டைம்ல ரெண்டு ரௌண்ட் டேபிள் நடந்துருக்கு. கலாட்டா பிளஸ்ல கரன் ஜோஹர், துல்கர் சல்மான், அனுராக் காஷ்யப், கார்த்தி, ஹேமந்த் ராவ், ஸ்ரீநிதி, பூஜா ஹெக்டே, வருண் தவான், நிபுன் தர்மாதிகாரினு பல இண்டஸ்ட்ரீல இருந்தும் செலிபிரிட்டீஸ் கலந்துகிட்டாங்க. ஃபிலிம் கம்பானியன்ல கமல், ராஜமௌலி, கௌதம், லோகேஷ், பிரித்வி, ஸ்வப்னா தத் கலந்துகிட்டாங்க. ரெண்டுமே நல்லாருந்துச்சு. ரெண்டு ரௌண்ட் டேபிள்லயும் இண்ட்ரஸ்டிங்கா பேசுன 13 பாயிண்ட்ஸ்களை இந்த வீடியோல பார்க்கலாம்.
* பெங்களூர்ல எல்லா பக்கம் இருந்தும் வர்ற படங்கள் ரிலீஸ் ஆகும். நல்ல வரவேற்பு பெறும். கன்னட படங்கள் ரிலீஸ் ஆனால்கூட, மற்ற பகுதி மக்கள் அதை கன்னட் சினிமானுதான் சொல்லுவாங்க. பிரஷாந்த், ரிஷப்னு எல்லாருமே, அட்லீஸ்ட் மக்களை கன்னட சினிமானு சொல்ல வைக்கணும்னு நினைச்சோம். எல்லாருக்கும் நாங்க திருப்பி கொடுக்குற நேரம் இதுனு ஹேமந்த ராவ் சொல்லுவாரு. உடனே, கரண் “என்ன மாதிரி திருப்பி கொடுத்துட்டு இருக்கீங்க”னு ரிப்ளை பண்ணுவாரு. அப்படியே வருண் தவான் பேசும்போது கன்னட் சினிமானு குறிப்பிட்டு பேசுவாரு, டக்னு துல்கர் “அது கன்னட சினிமா”னு மென்ஷன் பண்ணுவாரு. ஆக்சுவலா செம மாஸா இருக்கும், அந்த மொமண்ட்.
* ஷாருக்கான், சல்மான்கானைவிட இப்போ நார்த் இந்தியா முழுக்க ராக்கி பாய்தான் ஃபேமஸ். அவங்களுக்கு யஷ் பேருகூட தெரியாது. அவ்வளவு தூரம் ரீமேக் ஃபிலிம்ஸ் அவங்களுக்கு புடிச்சிருக்குனு அனுராக் காஷ்யப் சொல்லுவாரு.
* வருண் தவான், கைதி என்ன மாதிரி படம். லோகேஷ், கார்த்தி வொர்க்லாம் செமயா இருக்கும்னு பேசிட்டு இருக்கும்போது, பரத்வாஜ் ரங்கன், “நான் கடைசியா அனுராக்கை மீட் பண்ணும்போது விக்ரம் பார்த்தாச்சானு கேட்டேன். அதுக்கு அவரு, விக்ரம் இன்னும் பார்க்கலை. ஃபஸ்ட் அதுக்கு கைதி பார்க்கணும்”னு சொன்னதா குறிப்பிடுவாரு. அந்த அளவுக்கு கைதி, விக்ரம் படங்கள் நார்த் இந்தியால தடம் பதிச்சிருக்கு.
* பாலிவுட்ல வெளியான எந்த சினிமாவும் இந்த வருஷம் எந்த மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகலை. லால் சிங் சத்தா மாதிரியான படங்கள் நல்லா இருந்தாகூட மக்கள் அதை பெரிய அளவில் பார்க்கலை. அங்க ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது பாய்காட் பாலிவுட் ஹேஷ்டேக் தான் சோஷியல் மீடியால டிரெண்ட் ஆச்சு. இதை கரண் ஜோகர் அக்சப் பண்ணிட்டு பேசுனாரு. பாலிவுட்ல நல்ல படங்கள் எப்பவும் 70 கோடி வசூல் பண்ணும். ஆனால், இன்னைக்கு அந்த 70 கோடி, 30 கோடியா குறைஞ்சிருக்கு. சவுத் இந்தியால இருந்து வந்த திருஷ்யம், கே.ஜி.எஃப் படங்கள் எல்லாம் இந்தில அதிகளவில் வரவேற்பு பெற்றிச்சுனு கரண் ஜோகர் பேசுனாரு. இவ்வளவு நாள் நாங்கதான் இந்தியன் சினிமாவை நிலை நிறுத்துறோம்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க வாய்ல இருந்து இப்படியான விஷயங்கள் வர்றதை நெட்டிசன்கள் கலாய்க்கிற நேரத்துல, அக்சப்ட் பண்ணதுக்கு பாராட்டும் தெரிவிச்சிருந்தாங்க.
* இன்ஸ்டாகிராம், சோஷியல் மீடியாலாம் பத்தி செமயான கான்வெர்சேஷன் ஒண்ணு போகும். ஹேமந்த் ராவ், “என் மனைவிகூட பேசிகிட்டு இருந்தேன். அடுத்தநாள் அந்த விஷயம் தொடர்பான விளம்பரம் என்னோட சோஷியல் மீடியால வருது. இன்னொன்னு, பொலிடிக்கலி இல்லைனா கருத்து ரீதியா யார்கூடலாம் முரண்பாடு எனக்கு இருக்கோ, அவங்களை என்னை அறியாமல் நான் சோஷியல் மீடியால ஃபாலோ பண்ண வேண்டிய கட்டாயம் இருக்கு. அவங்க என்ன பண்றாங்கனு எனக்கு தெரியணும்”னு சொல்லுவாரு. சினிமாலயும் இந்த சோஷியல் மீடியா எப்படி பிளே ஆகுது, எப்படியான பெர்ஸ்பெக்டிப் வருதுனும் குறிப்பிடுவாங்க.
* வித்தியாசமான கேரக்டராக மராத்திய இயக்குநர் ‘நிபுன் தர்மாதிகாரி’ இருந்தார். பல வருஷ முயற்சிக்குப் பின்னால வெளியாகி இருக்கும் ‘மே வஸந்தராவ்’ படத்தோட இயக்குநர் அவர். பல போராட்டத்துக்குக் காரணமாக அவர் சொன்ன விஷயம் ‘பட்ஜெட்’. KGF, பொன்னியின் செல்வன், பிரம்மாஸ்திரா போல பிரம்மாண்டமோ இந்த படத்துல கிடையாது. வெறும் 4 கோடி ரூபாய்தான் செலவு. மலையாள சினிமாக்களின் பட்ஜெட்டை விடவும் மிகக் குறைவு. ஆனால், அதுக்கே மராத்தி சினிமா உலகத்தில் கஷ்டப்பட்ட கதையைச் சொன்ன போது கரன் ஜோஹர் முகத்தில் வந்து போன அதிர்ச்சிதான் பார்க்குற நமக்கும். மராத்தில இன்னும் நாடகங்கள் உயிர்ப்போட இருக்கு. மராத்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் இன்றும் மேடை நாடகங்களில் நடிக்கிறாங்க. டெலிவிஷன்ல நடிக்கிறாங்க. அங்க உள்ள ஸ்டார்ஸை மக்கள் அவ்வளவு ஈஸியா பார்க்க முடியும். ஒரு வகையில் அந்த மேடை நாடகங்கள் கலாச்சாரம் தான் மராத்தி திரை உலகை பேன் இந்தியாவை நோக்கி நகராமல் தங்கள் மண் சார்ந்த படங்களை மட்டுமே எடுக்க வைக்குதுனு சொல்லலாம்.
* லோகேஷ் ஆக்ஷன் பத்தி பேசும்போது ரொம்ப அழகா ஒரு விஷயம் சொல்லுவாரு. ஒரு படத்துல ஃபைட் சீன் ஒண்ணு இருக்குனா, அது எதுக்காக இருக்கணும்ன்ற காரணம் ஸ்ட்ராங்கா இருக்கணும். அப்போதான், அந்த ஃபைட் கனெக்ட் ஆகும். அதுமட்டுமில்ல, நான் எழுதும்போதே ஆக்ஷனையும் சேர்த்து எழுதிருவேன்னு சொல்லுவாரு. கமல், லோகேஷ் கருத்தை அக்சப்ட் பண்ணி, இல்லைனா, அது WWE ஃபைட் மாதிரி இருக்கும்னு சொல்லுவாரு. லோகேஷ் படங்கள் எல்லாத்துலயும் ஆக்ஷனுக்கு பின்னாடி ஸ்ட்ராங்கான எமோஷன் இருக்கும்.
* ராஜமௌலி அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும்போது அவரோட டைரக்டர்ஸ், தமிழ்ல உள்ள அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ பாருங்க, சீன்ஸ்லாம் எப்படி சொல்லிக்கொடுக்குறாங்கனு ரொம்ப கேவலமா திட்டுவாங்களாம். கமல்ஹாஸனும் இந்த மாதிரி நிறைய திட்டு வாங்கியிருக்காராம். கமல் தன்னோட அஸிஸ்டெண்டை மலையாளம் இண்டஸ்ட்ரியை வைச்சு திட்டுவாராம். கொடுமை என்னனா, இண்டஸ்ட்ரி பத்தி பேசும்போது, ராஜமௌலி கன்னட் சினிமானு தப்பாதான் சொல்லுவாரு. மலையாளத்துல பிரித்வி அப்பாவோட முதல் படம் நிர்மல்யம். எம்.டி வாசுதேவன் நாயர் டைரக்ட் பண்ணது. அந்தப் படத்தை 4 தடவை கமல் பார்த்தாராம். அதேமாதிரி கிரிஷ் கர்னாடோட காடு சினிமாவைப் பார்த்துதான் தேவர்மகன் எடுக்கணும்னு இன்ஸ்பைர் ஆகியிருக்காரு.
Also Read : தமிழ் சினிமாவின் பெஸ்ட் இண்டர்வெல் சீன்கள்!
* கமல் ஈஸ்ட் இந்தியா சினிமா மிகப்பெரிய அளவில் வரப்போகுதுனு சொல்லுவாரு. ரத்தன் தியம் மாதிரியான ஆள்கள்லாம் இருக்காங்கனு சொல்லுவாரு. அப்புறம் அவரை தேடிப்பார்த்தா மிகப்பெரிய ஆளா இருக்காரு. பிரபாஸ், பிரசாந்த், பிரித்விலாம் சினிமா பத்தி பேசும்போது “நாம தமிழ், தெலுங்கு, இந்து சினிமா பத்திலாம் பேசுறோம். அடுத்த 500 கோடி சினிமா ஒடிசா, அஸ்ஸாம்ல இருந்து வரப்போகுது”னு பேசுவாங்களாம்.
* தங்களுக்கு பிடிச்ச படங்கள் பத்தி பேசும்போது கௌதம் வாசுதேவ் மேனன் திருச்சிற்றம்பலம் படத்தை சொல்லுவாரு. ஸ்வப்னா தத் காந்தாரா படத்தை சொல்லுவாங்க. லோகேஷ் கனகராஜ், மலையாளத்துல வந்த தள்ளுமாலா படத்தைக் குறிப்பிடுவாரு. ராஜமௌலி ஜன கன மன படத்தை சொல்லுவாரு. அதேமாதிரி விக்ரம் கிளைமாக்ஸ்ல கமல் கண்ணாடி போடுற சீனையும் குறிப்பிட்டு சில்லறைய சிதற விடுவாரு. பிருத்விராஜும் காந்தாராவைதான் சொல்லுவாரு.
* கமல் செமயா இன்னொரு விஷயமும் சொல்லுவாரு. மும்பை இந்தி ஃபிலிம் மேக்கிங் செண்டர். ஆனால், சென்னை நேஷனல் ஃபிலிம் மேக்கிங் செண்டர்னு. சென்னைல வந்து சினிமா கத்துகிட்டவங்க இன்னைக்கு இந்தியா முழுக்கவே இருக்காங்க. நிறைய நடிகர்கள் இங்க படிச்சிருக்காங்க. ஏ.வி.எம், ஜெமினிலாம் எல்லா மொழிலயும் படங்கள் வெளியிட்ருக்காங்க. அதனால, கமல் அந்த பாயிண்டை குறிப்பிட்டது செம.
* எனக்கு தெரிஞ்சு மலையாளத்துல எல்லா துறைலயும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆள்னா, பிரித்விராஜ் பெயரை சொல்லலாம். ராஜமௌலி தெலுங்கு சினிமாக்கு என்ன பண்ணாரோ, அதை மலையாளம் சினிமாக்கு நான் பண்ணனும்னு சொல்லுவாரு. ஆக்சுவலா, லூசிஃபர் மூலமா அவர் பண்ணது இண்டஸ்ட்ரி சாதனைதான். அதை நிறைய மொழிகள்ல ரீமேக்லாம் பண்ணியிருக்காங்க.
இந்திய சினிமாவைப் பத்தின நல்ல உரையாடலா ரெண்டுமே இருந்துச்சு. கரண் ஜோஹரையெல்லாம் வைச்சு செய்து எல்லாரும் விளையாட்டிட்டு இருந்தாங்க. அந்த மாதிரிதான் நிறைய ஜாலியான விஷயங்களை ஷேர் பண்ணாங்க. அந்த வீடியோல நீங்க கவனிச்ச முக்கியமான பாயிண்டா எதை பார்க்குறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க.