தீவுல 32 ஆண்டுகள் தனிமையா வாழ்ந்துருக்காரு! – எப்படினு பாருங்களேன்

தனிமை பற்றி அதிகமான புலம்பல்களை இந்த லாக்டௌன் நேரத்தில் கேட்கிறோம். அந்த தனிமையை வெறுப்பதாகவும் தனிமையை சமாளிக்க முடியாமல் தவிப்பதாகவும் சோஷியல் மீடியாக்களில் பலரும் புலம்பி தள்ளினர். ஆனால், மறுபக்கம் இன்ட்ரோவர்ட்ஸ் இந்த தனிமை வாழ்வை ரசிச்சு வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக தனிமை வாழ்வை கொண்டாடி இருக்காங்க.

இத்தாலியைச் சேர்ந்த ஒருத்தர் 32 ஆண்டுகளாக ஒரு தீவுல தனிமையை ரசிச்சு வாழ்ந்துட்டு இருந்துருக்காருனு சொன்னா உங்களால நம்ப முடியுதா? அவரைப் பத்தி தான் நாம தெரிஞ்சுக்க போறோம்.. வாங்க..!

மவுரோ மொராண்டி

இத்தாலியைச் சேர்ந்த 81 வயதான மவுரோ மொராண்டி (Mauro Morandi) என்ற நபர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சர்தினியா மற்றும் கோர்சிகா தீவுக்கு இடையில் பிங்க் சேண்டல் உடன் இருக்கும் புடேலி எனும் தீவுல வாழ்ந்துட்டு வந்துருக்காரு. 1989-ம் ஆண்டில் சிறிய படகில் கடலில் மொராண்டி சென்று கொண்டிருக்கும்போது படகு பிரச்னையாகியுள்ளது. அப்போதுதான், புடேலி தீவில் மொராண்டி தஞ்சம் புகுந்துருக்காரு. புடேலி தீவின் பராமரிப்பாளரைச் சந்தித்து அவர் ஓய்வு பெற இருப்பதைப் பத்தி தெரிஞ்சுருக்காரு. அந்த வேலையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

Also Read : தனியொருவரால் திவாலான நூற்றாண்டு வங்கி… இந்தக் கதை தெரியுமா?

இரண்டாம் உலகப்போர் நடந்தபோது வீரர்கள் தங்கியிருந்த இடத்துல தன்னுடைய தீவு வாழ்க்கையை தொடங்கியிருக்காரு. மூன்று தசாப்தங்களாக அதாவது முப்பது ஆண்டுகளாக தீவை மொராண்டி பராமரிச்சுட்டு வந்துருக்காரு. பொதுவா அவர் யார்கிட்டயும் பேசுறதில்லையாம், சுற்றுலாவுக்காக போறவங்க கிட்ட மட்டும் மிகக் குறைவான வார்த்தைகளைப் பேசிட்டு வந்துருக்காரு. ஆனால், இப்போ அவர் அந்த தீவுல இருந்து கனத்த மனதுடன் வெளியேறி இருக்காரு. புடேலி தீவை சுற்றுசூழல் கல்விக்காக பயன்படுத்தப் போவதால் அதிகாரிகள் அவரை வேறு இடத்துக்கு மாத்தியிருக்குறதா தகவல்கள் வெளியாகியிருக்கு.

புடேலி தீவுல இருந்து மொராண்டி வெளியேறுவதால சோகமா இருக்காராம். இருந்தாலும், அதிகாரிகளின் பேச்சுக்கு கீழ் படிவதாக முடிவு செய்திருக்காரு. அவர் நகரத்துக்கு வெளியே இருக்குற சிறிய அப்பார்ட்மென்ட்ல குடியேற உள்ளார்.

“நான் 32 ஆண்டுகளா பாதுகாத்துட்டு வந்த புடேலி தீவை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையோட இந்த தீவை விட்டு வெளியே போறேன். என்னுடைய வாழ்க்கை பெரிதாக மாறப்போவது இல்லை. நான் இன்னும் கடலைப் பார்ப்பேன்”

மொராண்டி
தீவுல 32 ஆண்டுகள் தனிமையா வாழ்ந்த மனிதர்
மவுரோ மொராண்டி

1990-களில் இருந்து புடேலி தீவில் சுற்றுலாப் பயணிகள் நடப்பதற்கும் அப்பகுதியில் உள்ள கடலில் நீந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், படகு வழியாக பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். மொராண்டியை தீவில் இருந்து வெளியேற்றக் கூடாது என அவருக்கு ஆதரவாக பலரும் கையெழுத்து இயக்கங்களை நடத்தினர். சோஷியல் மீடியாக்களின் வழியாக தங்களது கோபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

“சொர்க்கத்தின் அழிவு தொடங்குகிறது; மொராண்டி இல்லாமல் என்னால் புடேலி தீவை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அவருடைய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Reference

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top