மாரிமுத்து

`நான் தெளிவான ஆளு… பயங்கரமா பேசுவேன்’ – மாரிமுத்து அட்ராசிட்டீஸ்!

இங்கப்பாரும்மா இஸ் எ வேர்ட். ஏய், இந்தாம்மா இஸ் எ எமோஷன். சோஷியல் மீடியால இளந்தாரி பய வேல ராம மூர்த்தி, லவ்லி ஃபெல்லோ மாரி முத்து டெம்ப்ளேட்டுகள்தான் தாறுமாறா சுத்திட்டு இருக்கு. எதிர் நீச்சல் சீரியல் வில்லன், நிறைய படத்துல கருத்து சொல்ற.. ஷார்ட்டா சொல்லணும்னா பூமர்தனமா பேசுற எதாவது கேரக்டர்ல வருவாரு. நிஜத்துலயும் இவர் இன்டர்வியூக்கள்லாம் பார்த்தா, உண்மையாவே இவர் பூமர் தானானு சந்தேகம் வருது. இதுவரை என்னென்ன தத்துவங்கள்லாம் நிஜமா சொல்லியிருக்காருனு பார்ப்போமா?

டிஸ்க்ளைமர்: நல்ல நடிகர், நல்ல டைரக்டர் அவரை இப்படிலாம் சொல்லலாமானு கேக்காதீங்க. அவர் தன் வாயால சொன்ன கருத்துகளை மட்டும்தான் இங்க பதிவு பண்ணியிருக்கோம்.

மாரிமுத்து
மாரிமுத்து

இன்னைக்கு இருக்குற இளைஞர்கள்கிட்ட அடிப்படையான ஒழுக்கம் இல்லை. நான் சொல்லல, பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட மாரிமுத்து சொன்னது. ரைட்டா, நிறைய இருக்கு.. “2’கே கிட்ஸ் ஒரு இடத்துக்குப் போனால், செப்பலை ஒழுங்கா விட மாட்றாங்க, பைக்ல இன்டிகேட்டர் உடைஞ்சு தொங்குனா, அதை சரி பண்ண மாட்றாங்க, பார்க்கிங் ஒழுங்கா பண்ண மாட்றாங்க, இருக்குற இடத்தை சுத்தமா வைச்சுக்க மாட்டாங்க, எல்லா பயலுகளும் ரெண்டு கையிலயும் நகத்தை பாச்சு பாச்சா வளர்ந்து வைச்சிருக்காங்க. பயலுக கையில நகம் இருக்குற பார்த்தாலே எனக்கு அவ்வளவு கோவம் வரும். எவ்வளவு பெரிய ஆரோக்கிய கேடு?” – என்னடா சரியா தான மனுஷன் சொல்றாருனு நீங்க யோசிக்கலாம், இந்த இடம்தான் த்ரில்லிங்கான இடம், “பொண்ணுங்க தான் நகம் வளர்க்கனும், பசங்க மீசைதான் வளர்க்கணும். ஏங்க பேரன்பு சார், அப்போ பொண்ணுங்களுக்கு ஆரோக்கியம் முக்கியம் இல்லையா? குறை சொல்லணும்னு இறங்கிட்டா சின்ராசை கையிலயே புடிக்க முடியாது. வளர்க்கக்கூடாதுனா.. ஆரோக்கியம் இல்லைனா.. ரெண்டு பேரும் கைல நகம் வளர்க்காதீங்கனு சொல்லுங்க. அதென்னா, அவங்க வளர்க்கலாம்.. இவங்க வளர்க்கக்கூடாதுனு.. 1980-கள்ல மாரிமுத்து வளர்ந்த காலத்துல ஸ்டெப் கட்டிங், டிஸ்கோ கட்டிங்லாம் இருந்துச்சாம். அது அவ்வளவு அழகா இருக்குமாம். ஆனால், இன்னைக்கு முடி வெட்டுற பழக்கம் மிஷன்ல மண்டைய விட்டுட்டு வந்த மாதிரி, பாதில சலூன்ல இருந்து ஓடி வந்த மாதிரி இருக்குனு கலாய்க்கிறாரு. அவங்க பண்ணது ஃபேஷனாம், நம்ம பண்றது அசிங்கமாம், ஒழுக்கமின்மையாம்.. எனக்கு தெரிஞ்சு திருவள்ளுவர் இவர் பேச்சுல இன்ஸ்பைர் ஆகிதான் ஒழுக்கம் பத்தி எழுதியிருப்பாருனு நினைக்கிறேன்.

மாரிமுத்து
மாரிமுத்து

பொண்ணுங்கனு சொன்னா போதும்.. மனுஷன் கலாசாரம்.. பெண் உடல்.. அழகு.. அப்படி இப்படினு ஆயிரம் விஷயங்களை தூக்கிட்டு வருவாரு. ஷார்ட்டா சொல்லணும்னா, மோகன் ஜிக்கு சரியான ஹீரோ மெட்டீரியல். உடைங்குறது அவங்கவங்க விருப்பம். எது சுலபமா இருக்கோ, அந்த உடையை அவங்க போட்டுட்டு போகப்போறாங்க. இதுல கமெண்ட் பண்ண என்ன இருக்கு? ஆனால், நம்ம கலாசாரம், பண்பாடுலாம் அப்படியா.. அதுனால அதை சொல்லியே ஆகணும்னு மனுஷன் எல்லா இன்டர்வியூலயும் குறைஞ்சது 45 பொன்மொழி சொல்லிடுவாரு. “பசங்க கிழஞ்சது போட்டா பரவால்ல, பொண்ணுங்கலாம் கிழிஞ்ச துணி போடுறாங்க.. பெண்கள் தங்களோட அங்கங்களை லட்சணத்தோட காட்டும் அழகான உடையை அணியனும்”னு சொல்றாரு. ஏய், இந்தாம்மா கேட்டுச்சா? இன்னைக்கு நிறைய கல்யாணத்துல மணப்பெண்கள் ஜாலியா டான்ஸ்லாம் ஆடுவாங்க. அதெப்படி ஆடலாம்? நான் கேக்கல.. ஆதி குணசேகரன் என்கிற நம்ம மாரிமுத்து ஐயா கேக்குறாப்புல. “கொஞ்ச நேரத்துல தாலி வாங்கி இல்லத்தரசி ஆகப்போற பொண்ணு எப்படி ஆடலாம்? ப்ரீ வெட்டிங் ஃபோட்டோகிராபிலாம் கலாசார சீர்கேட்டின் உச்சம்னு மென்ஷன் பண்றாரு.  உங்களுக்கென்ன.. நீங்க சீமான் அண்ணே.. என்ன வேணும்னாலும் பேசலாம்.

கல்யாணத்துக்கு ஒரு பெண் டான்ஸ் ஆடிட்டு வர்றது தப்பானு கேட்டா, “அப்புறம் எதுக்கு டிரஸ் போட்டுட்டு வர்றீங்க. அது இல்லாமல் வர வேண்டியதான? ஆண் நடந்து போனால், அவனுக்கு அரையடி பின்னால நடந்து போரதுதான் பெண்ணுக்கு அழகு. ஒரு அடி முன்னால போனால், பார்க்கவே அழகா இருக்காது. அவன் நிழலில் இவன் நடந்து போகணும். அதுதான் அவளுக்கு கம்பீரம், அழகு. எதுக்கு அப்புறம் தாலி கட்றீங்க. தூக்கி போட வேண்டியதான?” – இவங்க இப்படிலாம் பண்ணா, வருங்காலத்துல கல்யாணமே இல்லாமல் போய்டும். அதாவது நீங்க சொன்ன இந்த வாக்கியத்தை தஞ்சாவூர் கல்வெட்டுல.. அவ்வளவுதான் சொல்ல முடியும். கலாசாரம் மட்டுமில்ல சயின்ஸ், டெக்னாலஜி எல்லாத்துக்கும் டஃப் கொடுப்பாரு. “செல்ஃபோன் வளர்ச்சி என்ன தெரியுமா? எல்லாருக்கும் இஞ்செக்‌ஷன் போட்டு மூளைல நம்பர் ஏத்திடுவாங்க. நானோ டெக்னாலஜி அதுதான். தடுப்பூசி மாதிரி மூளைக்கு நம்பர் கொடுப்பாங்க. நீங்க நம்பரை நினைச்சால், அவன் லைன்ல வருவான். அப்படியே பேசிட்டு போகவேண்டியதான்”ன்றாரு. சிரிக்காதீங்க, சாமி கண்ண குத்திடும். உண்மை என்னனா, நம்ம மஸ்க் ப்ரோஸ்கி உண்மையிலேயே இதைத்தான் பண்ணிகிட்டு இருக்காராம். நீங்க ஏன் Neuralink கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணக்கூடாது? முதல்ல கல்யாணத்துக்கு உடல் பொருத்தம் பார்க்கணும், அப்புறம்.. அவன் ஆண், பெண் என்பதற்கு மருத்து அறிக்கை வாங்கணும். அப்புறம்தான் கல்யாணம் பண்ணனும்ன்றாரு. கரெக்ட்டுதான் இனிமேல் இப்படிதான் நடக்கும்போல. சார், நான் தெளிவான ஆளு சார்.. பயங்கரமா பேசுவேன்னு மனுஷன் சும்மா சொல்லல.. நிஜமாதான்.

மாரிமுத்து
மாரிமுத்து

ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு வைச்சிருக்காப்புல.. நிறைய அரைவேக்காட்டுத்தனமா பேசுறவங்க, சாதி சான்றிதழை ஒழிக்கணும். அப்போதான் சாதி ஒழியும்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனால், நம்மாளு வேற மாதிரில.. ஜாதகத்தை ஒழிச்சுட்டா சாதி ஒழிஞ்சுரும்னு நம்புறாப்புல. சாதகம்லா பார்த்து கல்யாணம் பண்றவங்கதான் இன்னும் அதெல்லாம் வைச்சுட்டு சுத்துறாங்க. சாதி இல்லை.. சாமி இல்லை.. சாதகம் தேவையில்லை. எதுவும் இல்லைனா உலகம் சுபிட்சமா இருக்கும். ரொம்ப ஆச்சரியமான ஆளா இருப்பேன் உங்களுக்கு. நான்லாம் ஜப்பான்ல பிறந்துருக்க வேண்டிய ஆள். தமிழ்நாட்டுல தவறி பிறந்துட்டேன். இங்க இருக்குற எல்லாரையும் பார்த்தா அடிச்சுக்கொன்றணும்னு தோனுதுன்றாரு. இதெல்லாம்கூட பரவால்ல, மீ டூ பிரச்னை வந்தப்போ, இந்திய அளவில் டிரெண்ட் ஆச்சு. பலர் தங்களுக்கு நடந்த கொடுமைகளையெல்லாம் ஷேர் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ, இவர் ஒரு இன்டர்வியூல பேசும்போது, “வைரமுத்து ஒரு பொம்பளை பிள்ளைய ரூமுக்கு வானு கூப்பிட்டாரு. ஆமா, கூப்பிட்டுட்டு போறாரு. ஆம்பளதான அவரு. இஷ்டமிருந்தா போட்டும். இல்லைனா, எங்கயாவது போய் சொல்லணும்னா சொல்லட்டும். என்ன தப்பு? ஆம்பளைதாங்க அவரு. அவருக்கும் ஹார்மோன்ஸ் இருக்கும்லயா? ஆம்பளைய கூப்பிட்ருந்தாதான் அசிங்கம். பொண்ணை கூப்பிட்டா தப்பில்லை”னு சொல்றாரு. இதெல்லாம் பார்த்துட்டு, யம்மோ.. என்ன காப்பாத்துங்கமா.. இவங்க கலாசாரத்தை காப்பாத்துறேன்ற பேருல என்னலாமோ சொல்றாருமானுதான் தோணுச்சு.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் டிஜிட்டல் இந்தியாவா ஆக்குவேன்னு சொன்னாரு, சொன்ன மாதிரி பண்ணாரா இல்லையா? டிமானிட்டைசேஷன் கொண்டு வந்ததுக்குலாம் அவருக்கு சல்யூட் பண்ணனும். அந்த ஒரு அறிவிப்பால பூமியே ஆடிச்சு தெரியுமா? – இப்படி கலாசாரம், பெண்கள் விஷயத்துல மட்டுமில்ல அரசியல்லயும் அப்படி கருத்து சொல்லுவாப்புல.. ஏங்க, எத்தனை பேரு வயசானவங்க நோட்டை மாத்த லைன்ல நின்னு மயங்கி விழுந்து செத்தாங்கனு கேட்டா.. வயசானவன் லைன்ல போய் நின்னா மயங்கி விழுந்து சாவதான் செய்வான். அவங்க வீட்டுல பேரன், பேத்தி யாரும் இல்லையானு கேக்குறாப்புல. பரம்பரை பரம்பரையா அந்தக் கட்சில இருக்குறவன்கூட இப்படி முட்டுக்கொடுக்க மாட்டான்.  இடைல, இடைல.. “நான் பா.ஜ.க காரன் இல்லை, ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஓட்டுப்போடுவேன். உங்களுக்கு தெரியுமா? இல்லையா?”னு கேக்குறாரு. நீங்க ஓட்டுப்போறது எங்களுக்கு எப்படியா தெரியும். நல்லா வந்து சிக்கியிருக்கோம் பாருங்க.

Also Read – தி ரியல் ரக்கர்ட் பாய்.. வேலராமமூர்த்தி அட்ராசிட்டீஸ்!

நீங்க பூமர் அங்கிளானு கேட்டா.. நான் ரொம்ப மார்டனான ஆள். சாமியே கும்பிடமாட்டேன் தெரியுமா? சாமி கும்பிடலைனா மார்டன்னு உங்க இன்டர்வியூ பார்த்துதான் தெரிஞ்சுகிட்டோம். இதெல்லாம்கூட பரவால்ல ஐபோன் யூஸ் பண்றேன்.. ஜாதகத்தைப் போட்டு எரிச்சுருக்கேன். நவீன ஆள் இல்லாமல், நான் வேற யாருனு கேக்குறாரு. அதுமட்டுமில்ல, நான் ரொம்ப லவ்லி ஃபெல்லோனும் சொல்லியிருக்காரு.  வேறமாறி.. வேறமாறி..! 

3 thoughts on “`நான் தெளிவான ஆளு… பயங்கரமா பேசுவேன்’ – மாரிமுத்து அட்ராசிட்டீஸ்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top