டேய், எலும்பெடுத்து கடிடா.. எளந்தாரிபுள்ள. சும்மா நக்கி நக்கி கீழ போட்டுகிட்டு. விடிஞ்சு எழுந்துருச்சு, நல்லா எண்ணெய் தேச்சி குளிச்சுட்டு, விடக்கோழி அடிச்சு, மிதக்க மிதக்க நல்லெண்ணெயை ஊத்தி சுடச்சுட ஒரு சட்டி குழம்பை குடிச்சுட்டு தூக்கம் போட்டு எந்திரிச்சம்னா, எவனடா தூக்கிப்போட்டு மிதிக்கலாம்னு இருக்கும். அதாண்டா எளந்தாரிபுள்ளைக்கு அர்த்தம்னு வேலராமமூர்த்தி பேசுறதப் பார்த்தாலே நாலு பேரை தூக்கிப்போட்டு மிதிக்கலாம்னு தோணும். படத்துல மட்டுமில்ல நிஜத்துலயும் மனுஷன் பண்ற அட்ராசிட்டீஸ்கு அளவே கிடையாது. பாலாவும் பாரதிராஜாவும் இவர் புத்தகத்தை எடுக்க அடுச்சுக்கிட்டதுல தொடங்கி ஆட்டுக்கறிக்கு இவர் பண்ற அலப்பறை வரைக்கும் எல்லாத்தையும் இந்த வீடியோல பார்ப்போம்.
கடைசியா நடந்த சென்னை புத்தகக்கண்காட்சில பளபளனு ஜிப்பா, ஸ்டைலான கண்ணாடி போட்டுட்டு போற வேகத்தாலயே கூட்டத்தை தள்ளிட்டு கம்பீரமா நடந்து போய்ட்டு இருந்தாரு. அவரோட அஸிஸ்டெண்ட் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னாடி ஓடி போய்கிட்டு இருந்தாரு. டேய், எதோ பிரச்னை போலடா, இங்கப்பாரு யாரையோ அடிக்கப்போறாரு, வா போய் சண்டையை பார்த்துட்டு வருவோம்னு அவர் பின்னாடி போனோம். போனால், கூலா போய் ஒரு கடைல நின்னு புத்தகத்தை பிரட்டிட்டு இருந்தாரு. அவர் வேற யாரும் இல்லை. நம்மாளு வேலராமமூர்த்திதான். இப்படி, இருக்குற சூழலையே கம்பீரமா மாத்துற சக்தி அவருக்கு இருக்கு. எப்படி சார் இப்படி இருக்கீங்கனு கேட்டா, சின்ன வயசுல கிராமத்துல வாழ்ந்த வாழ்க்கை அப்படினு சொல்லுவாரு.
பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டு வந்து ரெஸ்ட்டே விடாமல் விளையாடுவாராம். கம்பஞ்ச்சோறு, கருவாடு, அரைக்கீரை, காட்டுப் பயிர்னு எல்லாத்தையும் சாப்பிடுவாராம். காட்டுக்கிணறுல இருந்து கம்மாய் வரைக்கும் எல்லாத்துலயும் டயர்டே ஆகாமல் நீச்சலடிப்பாராம். அப்படி பார்த்து பார்த்து வளர்த்த உடம்புதான் இதுனு சொல்லுவாரு. அதுமட்டுமில்ல ராணுவத்துல இருந்து வந்த பிறகு உணவுக்கு அதிகமான முக்கியத்தும் கொடுப்பாரு. தமிழ் எழுத்தாளர்கள்ல நிறைய பேர் தவறவிடுற விஷயம் உடம்பை பாதுகாக்குறது. அதை வேலராமமூர்த்தி எப்பவும் பெஸ்ட். பெருனாளின்ற கிராமம்தான் இவரோடது. அந்த ஊர்ல ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெயர் இருக்குமாம். இவர் வீட்டுப் பெயர் காவக்கார வீடு. கம்மாய், காடு, ஆடு, மாடுனு எல்லாத்தையும் காக்குற பொறுப்பு இவங்க வீட்டுக்கு இருந்ததுனால, அந்தப் பெயர். என்ன பஞ்சாயத்துனாலும் இவங்க வீட்டுக்கு தான் வருவாங்களாம். அதுக்கு ஏத்த ஆள்தான இவரும்.
வேலராமமூர்த்தி 16, 17 வயசுல ராணுவத்துல சேர்ந்துட்டாரு. ராணுவத்து சேர்ந்ததே செம அட்ராசிட்டிதான். வீட்டுக்கு சொல்லாமல்தான் ஓடி போய்ருக்காரு. அதுவும் எந்த சண்டையும் இல்லை. இவரோட சேக்காளி ஒருத்தர் வீட்டுல சண்டை போட்டுட்டு போய்ருக்காரு. அவர் போகும்போது இவரையும் சேர்த்து கூட்டிட்டு போய்ருக்காரு. அப்படிதான் மெட்ராஸ் வந்துருக்காரு. ஊரே இவரை தேடுது. அப்புறம், தெரிஞ்ச இடம்லாம் போகும்போது, படிப்பகம் ஒண்ணுல தங்கியிருக்காரு. நல்லா சாப்பிடுறது, நடந்தே ஊர சுத்துறது அப்படிதான் ஒரு போர்ட்ல ராணுவத்துல ஆள் எடுக்குறதை தெரிஞ்சுகிட்ருக்காரு. ராணுவத்துக்குப் போனால், செத்துப்போவான்னு இருந்த சமயத்துல, படிச்ச பையன் வந்ததும் இவனை எப்படியாவது எடுக்கணும்னு ட்ரை பண்ணியிருக்காங்க. 48 கிலோ செலக்ஷனுக்கு இருக்கணுமாம். இவரு 46 கிலோ தான். அதுக்கு வாழைப்பழம், தண்ணிலாம் குடிச்சிட்டு வர சொல்லியிருக்காங்க. அங்க செலக்ட் ஆகி ஒரு 5 வருஷம் வேலை பார்த்துட்டு, அதுக்கப்புறம் தபால் துறைல வேலை பார்த்துருக்காரு.
Also Read – வாடிவாசல் படத்தின் மாஸ் சீன்.. ஓப்பனிங் சீன்.. இண்டர்வெல் சீன்.. இப்படித்தான் இருக்கும்!
தொழிற் சங்கத்துலலாம் போஸ்டிங்க்ல இருந்துருக்காரு. இடதுசாரி தத்துவங்களால அதிகமா ஈர்க்கப்பட்டவர். நல்ல வாசிப்பாளர். மாணவர் பருவத்துலயே நிறைய கண்ணாபின்னானு படிப்பாராம். ஸ்கூல் லைப்ரரிதான் அதுக்கு விதை போட்ருக்கு. படிக்கும்போது இந்தி திணிப்பு போராட்டம் நாடு முழுக்க நடந்துட்டு இருந்துருக்கு. அப்போ, பக்கத்து ஸ்கூல்க்குலாம் லீவ் விட்ருக்காங்க. இவங்க ஸ்கூல்க்கு லீவ் விடல. அந்த நேரத்துல ஸ்கூல் கட் பண்ணி, பசங்க எல்லாரும் கூட்டம் போட்டு, பஸ்ஸை நிப்பாட்டி, மரத்தையெல்லாம் வெட்டி போட்டு ஸ்ட்ரைக் பண்ணியிருக்காங்க. இந்தி திணிப்பு பெயர்ல பள்ளிக்கூடத்துக்கு லீவ் விடணும்னு பண்ணியிருக்காரு. ஆனால், கொஞ்சம் விஷயங்கள் எல்லாம் தெரிஞ்ச பிறகு மொழிப்பற்று அதிகமாவே இவருக்கு வந்துருக்கு.
ஸ்கூல் லைப்ரரி வழியா ஜெயகாந்தன், மலையாள இலக்கியம், ரஷ்ய இலக்கியங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிக்கிறாரு. பணில சேர்ந்து படிப்பையும் விடலை, எழுதுறதையும் விடலை. முதல் சிறுகதையே உண்மையான சம்பவத்தை அடிப்படையா வைச்சுதான் எழுதுனாரு. பெயர்கூட மாத்தாமல் எழுதிருக்காரு. அதைப் பார்த்துட்டு அந்த மனிதர்கள்லாம் அவனை வெட்டாமல் விடமாட்டேன்னு தேடியிருக்காங்க. அப்புறம், அந்த மக்களையும் மண் சார்ந்த கதைகளையும் நிறைய எழுத ஆரம்பிச்சதும், நம்ம பயதான எழுதிட்டு போறான்னு விட்ருக்காங்க. சின்ன வயசுல இருந்த்ற் குற்றப்பரம்பரை கதைகளை கேட்டுதான் வளர்ந்துருக்காரு. அதை பதிவு பண்ணனும்னு எந்த பிளானும் இல்லாமல் எழுத தொடங்கியிருக்காரு. புத்தகம் நல்லாவே வந்துருக்கு. தமிழ்நாடு முழுக்க அவரைக் கொண்டு போய் சேர்த்த புத்தகத்துல குற்றப்பரம்பரை நாவல் முக்கியமானது. பாலாவும் பாரதி ராஜாவும் மாத்தி மாத்தி அந்தக் கதையை படமா எடுக்கத்தான் சண்டை போடுறாங்க. அப்புறம், நாடகங்கள்லாம் பயங்கரமா எழுதி அதுல பிளேலாம் பண்ணியிருக்காரு.
விக்ரம் சுகுமாரன் இவரையும் இவரோட கதைகளையும் கவனிச்சிட்டே இருந்துருக்காரு. மதயானைக் கூட்டம் படத்தோட கதைல அவரோட கேரக்டரை சொல்லி, நீங்க நடிக்கணும்னு சொன்னதும். ஆரம்பத்துல முடியவே முடியாதுனு மறுத்துருக்காரு. ஒருநாள் சென்னை வந்ததும், அந்தக் கதையையும் கேரக்டரையும் சொன்னதும் இவருக்கு புடிச்சுப்போய் நடிக்க அக்சப்ட் பண்ணியிருக்காரு. அப்படிதான் சினிமாக்குள்ள நடிக்க வந்துருக்காரு. அந்த மதயானைக்கூட்டம் கேரக்டரை இவரைத் தவிர வேற யாரு பண்ணாலும், இவ்வளவு சரியா, துல்லியமா இருந்துருக்குமானு சந்தேகம்தான். கொம்பம், பாயும் புலி, ரஜினி முருகன்னு தொடர்ந்து நிறைய படங்கள் நடிக்க ஆரம்பிச்சாரு. இவரை ரொம்ப ஃபேமஸ் ஆக்குனது, சேதுபதி படம்னு சொல்லலாம். அதுக்கப்புறம் இவர் என்ன கேரக்டர் பண்ணாலும் அதுல வேலராமமூர்த்தி சாயல் அப்படி இருக்கும்.
மதயானைக்கூட்டம் அவ்வளவு கெத்து எப்படி வந்ததுனுலாம் கேட்டா, “நான் வேணும்னு இப்படி பண்ணலை. என்னோட இயல்பே அப்படி வாச்சிருக்கு. பார்க்கும்போது காட்டுல சிறுத்தை எப்படி பார்க்குமோ அப்படி தான் நினைப்பேன். கிடாரில வேல் கம்போட வர்ற சீன்னா, காட்டுல மிருகம் கம்பீரமா வருவதா நினைச்சு தான் நடப்பேன்”னு சொல்லுவாரு. கிடாரிலாம் இவரை மையமா வைச்சுதான் நகரும். இப்படி நடிப்புலயே அவ்வளவு சேட்டைகள் பண்ணுவாரு. இவரு ஹோட்டல் போனால் எவ்வளவு அலப்பறை பண்ணுவாரு? ஒரு இன்டர்வியூல போய் உட்கார்ந்து, நான் ஆட்டுக்கறி திங்கிற ஆளு, பிராய்லர் வேணாம், சுறாப்புட்டு வேணும், மட்டன் சுக்கா பிரியாணி, எலும்பு கறியோட வேணும்னு சர்வரையே அலற விடுவாரு. ராஜ்கிரணுக்கு அடுத்து ஆட்டுக்கறிக்கு அம்பாசிடரனா, நம்ம வேலா மட்டும்தான். மீன் மண்டையைப் புடிச்சு உறிஞ்சு சாப்பிடுறதெல்லாம் எக்ஸ்பிளைன் பண்ணுவாரு பாருங்க. நேரா நல்ல ஹோட்டல் போறோம். அடி பிரிக்கிறோம்னு தோணும்.
ராமநாதபுரத்துல இருந்து வேலா கிளம்பி வந்து 50 வருஷம் ஆச்சு. ஆனால், இன்னும் அவர் பேச்சுல மண் வாசனை இருக்கும். என்னதான் இருந்தாலும், அவர்மேல சாதி ரீதியிலான விமர்சனங்கள் வைக்கப்படும். அதுக்கு இவர், “ஆக்டோபஸ் மாதிரி மதவாதம் இந்தியால வளந்திருக்கு. மதத்தின் அடிப்படை சாதிதான். அதை சொல்லாமல் எப்படி இலக்கியத்தஒ எழுத முடியும்? எனது எழுத்துக்களின் வழியாக சுயசாதியை விமர்சனத்தை என்னைப்போல வேற யாருமே செய்தது கிடையாது. சுயசாதி பெருமை பேசுறவன் எழுத்தாளன் கிடையாது. அந்தந்த சாதியில் உள்ள நல்லது கெட்டதை எழுதினால்தான் அது எழுத்து”னு அழுத்தமாவே சொல்லுவாரு. இவ்வளவு அட்ராசிட்டீஸ்லாம் பண்றாரே, இந்த மனுஷனோட வயசு என்னனு தெரியுமா? 71. ஆனால், இன்னும் மனுஷன் இளந்தாரிப்பயதான்.