சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் போன்ற மாஸ் படங்களுக்குப் பிறகு வாரிசு படம் மூலம் மீண்டும் விஜய் ஃபேமிலி சப்ஜெக்ட் கதையை கையில் எடுத்திருக்கிறார். விஜய்க்கு இருக்கும் மாஸ் ஃபேமிலி ஆடியன்ஸ் அவர் நடிக்கும் ஆக்ஷன் படங்களையை வெறித்தனமாக பார்க்கிறார்கள் என்றால், அவர் நடிக்கும் ஃபேமிலி கதை படங்களுக்கு எப்படி ஆதரவு கொடுப்பார்கள் என்று சொல்லவா வேண்டும். விஜய்க்கு எப்படி இவ்வளவு ஃபேமிலி ஆடியன்ஸ் வந்தார்கள்; அவர்களுக்கு விருந்தாக விஜய் என்னென்ன படங்கள் கொடுத்திருக்கார் என்பதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
பூவே உனக்காக
விஜய்யின் கெரியரில் முதல் ப்ளாக்பஸ்டர் ஹிட் என்றால் அது பூவே உனக்காகதான். அதுவரைக்கும் தனது தந்தையின் இயக்கத்தில் விஜய் நடித்த படங்கள் எல்லாம், இளைஞர்களை குறிவைத்தே எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படம்தான் விஜய்யை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்தது. கதையும் பிரித்துப்போன இரு குடும்பத்தை ஒன்று சேர்த்துவைப்பதாக இருந்ததால், ஃபேமிலி ஆடியன்ஸை இந்தப் படத்தை இன்று வரை மறக்காமல் இருக்கிறார்கள்.
பிரியமானவளே
தமிழ் சினிமாவில் வந்த குடும்பப்படங்களிலேயே சற்று வித்தியாசமான படமாக பிரியமானவளே இருக்கும். ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு திருமணம் செய்துகொள்ளும் கான்செப்ட் புதியதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தாலும், திரைக்கதையிலும், நடிகர் – நடிகைகளின் நடிப்பினாலும் இந்தப் படத்தை ஒரு நல்ல சினிமாவாக கொடுக்க முடிந்தது. அதுவரைக்கும் ஒரு லவ்வர் பாய் இமேஜிலேயே படம் நடித்துக்கொண்டிருந்த விஜய்க்கு, அதிலிருந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல இது ஒரு முக்கியமான படமாக இருந்தது.
திருப்பாச்சி
திருமலை படத்தில் இருந்து விஜய் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறியதற்குப் பிறகு அவர் நடித்த ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படம்தான் திருப்பாச்சி. அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து அதில் ஆக்ஷனையும் சரியாக வைத்து படத்தை ஹிட் செய்திருப்பார்கள். அதுவும் ‘என்ன தவம் செஞ்சுப்புட்டோம்; அண்ணன், தங்கை ஆகிப்புட்டோம்’ பாட்டு படத்தில் வரும்போதெல்லாம் தன் அண்ணன், தங்கையை நினைத்து அழாத ஆட்கள் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு செண்டிமெண்ட்டை செம ஸ்டாங்காக போட்டிருப்பார்கள். விஜய்யின் பெண் ரசிகைகள் மத்தியில் அவருக்கு ஒரு அண்ணன் இமேஜ் இருந்ததும் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
சிவகாசி
திருப்பாச்சி படத்திற்குப் பிறகு விஜய் – பேரரசு கூட்டணியில் உருவான சிவகாசி படத்திலும் அண்ணன் – தங்கை, அம்மா – பையன் என இரண்டு முக்கியமான எமோஷனல் ஏரியாக்களை டச் செய்திருப்பார்கள். அதிலும் சொந்த அண்ணனையே வில்லன் ஆக்கி, கடைசியில் திருந்த வைத்து என படம் முழுக்கவே ஒரு குடும்பத்தை சுற்றியே இருக்கும். திருப்பாச்சி படத்தில் முதல் பாதி வரைக்கும் செண்டிமெண்ட் இருக்கும் என்றால், சிவகாசியில் இரண்டாவது பாதியில்தான் செண்டிமெண்ட் ஆரம்பமாகும், அதுவும் பல வருடங்கள் கழித்து தனது அம்மா, தங்கையைப் பார்க்கும் காட்சி ரொம்பவே உருக்கமாக இருக்கும். திருப்பாச்சி படத்தைப் போலவே இதிலும் ‘என் தெய்வத்துக்கே மாறுவேஷமா’ பாடலும் பலரை அழவைத்திருக்கும்.
ஜில்லா
ஜில்லா படத்தில் மோகன் லாலுக்கு விஜய் வளர்ப்பு மகனாக இருந்தாலும், இந்த அப்பா – மகன் காம்போ பயங்கரமாக வொர்க் ஆகியிருக்கும். இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரியும் ஆடியன்ஸை ஈர்த்தது என்றே சொல்லலாம். முதல் பாதியில் அப்பாவும் மகனும் சேர்ந்து ரெளடியிசம் செய்வதும், இரண்டாவது பாதியில் அது தவறு என உணர்ந்த மகன் அப்பாவையும் திருத்துவது என கதை முழுக்கவே ஒரு குடும்பத்தைச் சார்ந்தே இருக்கும். அதில் ஆக்ஷனும் அதிகமாகவே இருக்கும். கமர்ஷியல் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் ஒரு மார்டன் ஃபேமிலி சப்கெஜ்ட்டாக இது விஜய்க்கு கைகொடுத்தது என்றே சொல்லலாம்.
மெர்சல்
ஆதி, குருவி, வில்லு, தலைவா என ஃபேமிலிக்காக ரிவெஞ்ச் எடுக்கும் படங்களில் விஜய் நடித்திருந்தாலும், அதில் மெர்சல் மிக முக்கியமான படம். அப்பாவை கொன்றவர்களைப் பழிவாங்கும் மகன் என்கிற பழைய கதை என்றாலும், அதை இன்றைய ஆடியன்ஸுக்கு ஏற்ற மாதிரி மாத்திக்கொடுத்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திபடுத்தும்படியான படமாகவும் இது இருந்தது. மூன்று கதாபாத்திரத்தில் நடித்து விஜய்யும் வித்தியாசம் காட்டியிருப்பார்.
விஜய் நடித்த ஃபேமிலி படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என கமெண்ட் பண்ணுங்க.