`உனக்கு கோழி வாங்கத் தெரியாது… ஆடு வாங்கத் தெரியாது… ஜோடா மட்டும் வாங்கத் தெரியுமோன்’னு ஜீன்ஸ் படத்தில் தன்னுடைய கணவரிடம் சுந்தராம்பா பேசுன டயலாக்குக்கு, ராதிகா கேரக்டரைத் திட்டித் தீர்க்காத தாய்மார்களே இல்லைன்னு சொல்லலாம். ஹீரோயின் தொடங்கி கேரக்டர் ஆர்டிஸ்ட்னு சினிமாலயும், டிவில நடிகை, தயாரிப்பாளர்னும் டிராவல் பண்றவங்க தமிழ் சினிமால 45 வருஷங்களை கம்ப்ளீட் பண்ணீருக்காங்க. அவங்க பண்ண சில, பல தரமான சம்பவங்களைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
1992-ம் வருஷம் அது. டெலிவரிக்காக நடிகை ராதிகா ஆஸ்பத்திரில அட்மிட் ஆகியிருக்காங்க. அவங்களுக்குக் குழந்தை பிறந்து சில நாட்களே ஆன நிலையில் சினிமாவுல அவங்களை அறிமுகப்படுத்துடுன டைரக்டர் பாரதிராஜா, உனக்கு ஒரு கதை ரெடி பண்ணிருக்கேன். அதுல நீ நடிக்கணும்’னு பாரதி ராஜா சொல்லிருக்கார். இதைக்கேட்டுட்டு சிரித்த ராதிகா, இப்போதான் டெலிவரி முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள நடிக்கணும்னு சொல்றீங்க’னு கேட்டிருக்காங்க. ஆனா, பாரதிராஜா,
நீகண்டிப்பா நடிக்கணும்’னு சொல்லிருக்கார். குழந்தை பிறந்த இரண்டாவது மாதம், ஷூட்டிங் போயிருக்காங்க. அந்தப் படம்தான் கிழக்குச் சீமையிலே. ராதிகாவோட விருமாயி கேரக்டர், இன்னிக்கும் தமிழ் சினிமாவுல ஒன் ஆஃப் தி பெஸ்ட் வுமன் கேரக்டர்ஸ்னு கொண்டாடப்படுற கேரக்டர்.
கிழக்கு சீமையிலே படத்தின் வெற்றி ராதிகாவை ரொம்பவே யோசிக்க வைச்சிருக்கு. சிங்கிள் மதரா ஷூட்டிங்குக்காக நிறையவே டிராவல் பண்ண வேண்டிய நிலைமை. நம்ம கரியர் நம்ம கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைச்சு டிவி பக்கம், தன்னோட கவனத்தைத் திருப்பிருக்காங்க. அது அப்போ பெரிய விமர்சனத்துக்கு உள்ளாச்சு. ஆனா, அது எதுவுமே அவங்களைத் தடுக்கல. அத்தோட சீரியல் இண்டஸ்ட்ரிலயும் தன்னோட ராடான் நிறுவனம் மூலம் புதிய ஒளி பாய்ச்சி, ஒரு வேவை கிளப்பி விமர்சனம் பண்ணவங்க வாயை அடைச்சாங்க. அவங்களோட சித்தி, அண்ணாமலை மாதிரியான சீரியல்ஸ் இன்னிக்கும் சீரியல் எடுக்கணும்ங்குறவங்களுக்கு ஒரு சிலபஸ்தான்னு சொல்லலாம்.
டப்பிங் ஆர்டிஸ்ட் ராதிகா
சினிமா, சீரியல்ல நடிகை என்பதைத் தாண்டி ராதிகா மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. சீரியல், சினிமானு எதுனாலும் அவங்க டப்பிங்குக்கு வந்துட்டா பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்குற ஆள். தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் சில பேருக்கும் அவங்க குரல் கொடுத்திருக்காங்க. முதல் மரியாதை குயிலாக ராதா நடித்திருந்த கேரக்டருக்குத் தனது குரல் மூலம் உயிரோட்டம் கொடுத்திருப்பாங்க. இதேமாதிரி, 1986ல ரிலீஸான விக்ரம் படத்தில் லிஸி நடிச்சிருந்த ப்ரீத்தி கேரக்டருக்கும் ராதிகாதான் வாய்ஸ் கொடுத்திருப்பாங்க. ராதிகாவோட குரலின் யுனீக்னஸ் தன்னோட படத்துல இருந்தே ஆகணும்னு புரடியூஸர் கமலே நேரடியாகக் கேட்டுக்கிட்டதால இந்தப் படத்துக்கும் டப்பிங் பேசிருப்பாங்க. கடலோரக் கவிதைகள்ல ரஞ்சனி, கருத்தம்மால ராஜஸ்ரீக்கும் டப்பிங் பேசுனது ராதிகாதான். இதத்தாண்டி தன்னோட சிஸ்டர் நிரோஷாவோட குரலா ஒலிச்சிருக்காங்க. செந்தூரப்பூவே, இணைந்த கைகள்னு நிரோஷோவோட கரியர்ல முக்கியமான 2 சூப்பர் ஹிட் படங்கள்லயும் ராதிகாதான் டப்பிங் கொடுத்திருப்பாங்க.
நடிக்க வந்த இரண்டு ஆண்டுகளில் நடிப்பை விட்டுவிட்டுத் தனக்குப் பிடித்த போட்டோகிராஃபராக வேண்டும் என்று நினைத்திருக்கிறார். நடிப்புத் துறைக்கு வந்ததே, ஆக்ஸிடண்டல்தான் என்பார். இன்னொரு வினோதமான பழக்கமும் அவரிடம் இருந்திருக்கிறது. பின்னாட்களில் ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் 31-ம் தேதியோடு நடிப்பையே விட்டுவிட வேண்டும்னு நினைப்பாராம். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தால் அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை.
Also Read – ‘ஹாலிவுட் கலைஞன்’ ஆர்.எஸ்.சிவாஜி-யின் அறியாத பக்கங்கள்!
அவங்களோட ஃபர்ஸ்ட் டிவி சீரியல் தமிழ்ல இல்ல. ஈடிவில ஒளிபரப்பான Idhi Kadha Kadu-தான் முதல் சீரியல். அதுக்குப் பிறகு ஜேஜே டிவி (ஜெயா டிவி) சீரியல், அதற்குப் பிறகுதான், 1999-ல சித்தினு மிகப்பெரிய பிரேக் கொடுத்தாங்க. வலுவான பெண் கேரக்டர்களை லீடாகக் கொண்ட சீரியல்கள் தமிழ் சூழலில் உருவாக சித்தி சீரியல் ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்தது.
நடிகை ராதிகா அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. ஷோலே ரிலீஸ் சமயத்தில் சத்யம் தியேட்டரில் க்யூவில் நின்று டிக்கெட் கிடைக்காமல் ஏமாந்த சம்பவமும் நடந்திருக்கிறது. அவரே பின்னாட்களில் `ஆஜ் கா அர்ஜுன்’ படத்தில் அமிதாப்புடன் நடித்திருந்தார்.நீங்க யார் மாதிரி ஆகணும்னு ஆசை?’ என்று கேட்டால், அமிதாப் பெயரைத்தான் சொல்வாராம். `ஒரு சிறந்த நடிகர்; நான் அவரது ரசிகைங்கிறது எல்லாத்தையும் கடந்து, அவரோட அணுகுமுறை, பழகுற விதம், பேச்சு, இயல்பு, எளிமைன்னு எல்லாத்தையுமே வியப்பாத்தான் பார்ப்பேன் என்பார் ராதிகா.